Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 64

மதுரை நாயக்கர்‌ காரக்‌

ஆறுமுகசீதாராமன்‌
்‌ சங்கரன்ராமன்‌

்‌ வெளியீடு
தனலட்சுமி பதிப்பகம்‌
12, ராஜராஜன்‌ நகர்‌,
மானோஜிப்பட்டி (தெற்கு),
தஞ்சாவூர்‌ - 613004.
முதற்பதிப்பு : Gw - 2002
தனலட்சுமி பதிப்பகம்‌
தஞ்சாவூர்‌.

ஆசிரியா்‌ ஆறுமுகசீதாராமன்‌
சங்கரன்ராமன்‌

உரிமை ஆசிரியர்களுக்கு.

MFA Gore விஜய்‌ ஆப்செட்‌ அச்சகம்‌,


61/1௦, டி.பி.ரோடு,
மகப்பூப்பாளையம்‌,
மதுரை - 6245 0/6.
தொலைபேசி : 60.3464

நூல்‌ கிடைக்குமிடம்‌ ஆ.சீதாராமன்‌,


12, ராஜராஜன்‌ நகர்‌,
மானோஜிப்பட்டி தெற்கு,
தஞ்சாவூர்‌ - 673 004,
தொலைபேசி : 246720

விலை : தே. 60
பொருளடக்கம்‌

அணிந்துரை
ஆக்கியோர்‌ உரை
மதுரை நாயக்கர்‌ வரலாறு

மதுரை நாயக்கர்‌ காசுகள்‌


விஸ்வநாத நாயக்கர்‌ காசுகள்‌ 8-1]
முதலாம்‌ கிருஷ்ணப்ப நாயக்கர்‌ காசு 72
வீரப்ப நாயக்கர்‌ காசுகள்‌ 13-14
இரண்டாம்‌ கிருஷ்ணப்ப நாயக்கர்‌ காசு 15
முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர்‌ காசுகள்‌ 16-17
முதலாம்‌ முத்துவீரப்ப நாயக்கர்‌ காசுகள்‌ 18
திருமலை நாயக்கர்‌ காசுகள்‌ 19-21
சொக்கநாத நாயக்கர்‌ காசு 22
முத்து வீரப்ப நாயக்கர்‌ காசுகள்‌
(ரங்ககிருஷ்ண) 23-26
மங்கம்மாள்‌ காசுகள்‌ 27-48
விஜயரங்க சொக்கநாத நாயக்கர்‌ காசு 49
மீனாட்சி காசு 49
. ஸ்ரீவீர காசுகள்‌ 50-51
மதுரைக்‌ காசு 52-58
துணை நூற்பட்டியல்‌ 54-55
அணிந்துரை
முனைவர்‌. வெ.வேதாசலம்‌,
கல்வெட்டாய்வாளர்‌,
தொல்லியல்துறை, மதுரை.
விசயநகரவேந்தரான கிருஷ்ணதேவராயர்‌ காலத்தில்‌
கி.பி.7549-இல்‌ தோன்றிய மதுரை நாயக்க அரசமரபினரால்‌
வெளியிடப்பட்ட எண்பத்தாறு வகை காசுகளைப்‌ 'பற்றிய
இச்சிறுநூல்‌ தமிழக வரலாற்றிற்குக்‌ கிடைத்த அரிய, புதிய
வரவு. தமிழக வரலாற்றில்‌ அதிக அளவில்‌ மேற்கொள்ளப்‌
படாத இதுபோன்ற ஆய்வுகள்‌ மதுரை நாயக்கர்கால அரசியல்‌,
பொருளியல்‌, சமுதாயம்‌, பண்பாடு போன்ற பலநிலைகளை
அறியவுதவும்‌. அரசு நிர்வாகம்‌ எவ்வாறு இருந்தது என்பதைப்‌
புரிந்துகொள்ள துணை செய்யும்‌.

மதுரை நாயக்க மன்னர்கள்‌ தமிழ்‌, தெலுங்கு, நாகரி


எழுத்துகளில்‌ தங்கள்‌ பெயர்‌ பொறித்த செப்புக்காசுகளையே
பெரும்பாலும்‌ வெளியிட்டுள்ளனர்‌. சில காசுகளில்‌ தங்களது
முழுப்பெயரையும்‌ சில காசுகளில்‌ தங்கள்‌ பெயரின்‌
முதலெழுத்தினை மட்டும்‌ பொறித்தனர்‌. இராணிமங்கம்மாள்‌
நாற்பதிற்கும்‌ மேற்பட்ட வகையான காசுகளை வெளியிட்டு
உள்ளது நாணயங்கள்‌ வெளியிடுவதில்‌ அவருக்கு இருந்த
ஈடுபாட்டைக்‌ காட்டுகிறது. தொடக்ககால நாயக்கமன்னர்‌
காசுகளை வெளியிடும்போது தாங்கள்‌ ஆளும்பகுதி
பாண்டியநாடு என்பதை நினைவில்‌ கொண்டு அவற்றில்‌
பாண்டியரின்‌ சின்னமான இணைக்கயலைச்‌ செண்டுடன்‌
பொறித்து வெளியிட்டுள்ளனர்‌. தங்களது உருவங்களைவிட
அவர்கள்‌ வழிபடும்‌ தெய்வவுருவங்களுக்கு மதிப்பளித்து
அவற்றை அதிக அளவில்‌ காசுகளில்‌ வடித்துள்ளனர்‌.
மதுரை நாயக்கர்‌ காசுகளில்‌ விஷ்ணுவும்‌ அவரது அவதார
கோலங்களைக்‌ காட்டும்‌ பாலகிருஷ்ணன்‌, காளிங்கநர்த்தனன்‌,
நடனகோபாலன்‌, இராமர்‌, இலட்சுமிநரசிம்மா்‌, கூர்மர்‌,
வராகர்‌, மச்சர்‌ உருவங்கள்‌ காணப்படுகின்றன. இராமனின்‌
அடியானான அனுமனுக்கும்‌ திருமாலின்‌ ஆயுதங்களான
சங்கு, சக்கரத்திற்கும்‌ காசுகளில்‌ மதுரை நாயக்கர்‌ இடம்‌
தந்துள்ளனர்‌. சிவவிங்கத்தோடு சிவனது வாகனமான நந்தியும்‌
அவரது ஆயுதமான சூலமும்‌ நாயக்கர்‌ காசுகளில்‌ இடம்‌
பெற்றுள்ளன. கணபதி, மயில்மீது அமர்ந்த முருகன்‌, ஆகியோர்‌
இக்காலத்தில்‌ முக்கிய கடவுளராக விளங்கியதைக்‌ காட்டும்‌
முறையில்‌ அவர்கள்‌ உருவங்கள்‌ காசுகளில்‌ பொறிக்கப்‌
பட்டுள்ளன. கல்விக்கடவுளான சரஸ்வதியும்‌ (மயில்மீது அமர்ந்த
சரஸ்வதி, வீணையுடன்‌ அமர்ந்த சரஸ்வதி) செல்வத்தைத்‌ தரும்‌
கஜலட்சுமியும்‌ காசுகளில்‌ வடிக்கப்பட்டுள்ளனர்‌. மேலும்‌
யானை, காளை, கொக்கு, மீன்‌, தலவிருட்சம்‌, மயில்‌, சூரியன்‌,
சந்திரன்‌ என்று ப்ல உருவங்கள்‌ இக்காலக்‌ காசுகளில்‌ உள்ளன.
மதுரை நாயக்க அரசர்களின்‌ சின்னமான திரிகலத்துடன்‌
அமர்த்த, நின்ற நிலைகளிலுள்ள காளையின்‌ உருவமும்‌ மதுரை
நாயக்கர்‌ காசுகளில்‌ முக்கிய இடத்தைக்‌' காலப்போக்கில்‌
பெற்றுள்ளது. பாண்டியரை அடுத்து மதுரையைச்‌ சிறந்த கலை-
பண்பாட்டு நகரமாக மாற்றிய பெருமை மதுரை
நாயக்கர்களுக்கு உண்டு. இதனை நினைவுதரும்‌ முறையில்‌
“மதுரை” என்று தெலுங்கிலும்‌ தமிழிலும்‌ பெயர்‌ பொறித்த.
காசுகளை மதுரை நாயக்கமன்னர்கள்‌ வெளியிட்டுள்ளது
GOIN FHSS.
வரலாற்றிற்கு உண்மையிலேயே வளம்‌ சேர்க்கும்‌
மேற்கண்ட பல செய்திகளைத்‌ தாங்கி இந்நால்‌ வெளிவருகிறது.
மதுரை நாயக்கர்‌ காசுகளை அஆரும்பாடுபட்டுச்‌ சேகரித்து,
அடையாளங்கண்டு இதனைப்‌ படைத்த . ஆசிரியர்கள்‌
இன்றைய தமிழகத்தில்‌ நல்ல நாணயவியலாளராக மட்டுமின்றி
அறியப்படாத வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்‌ என்ற
துடிப்புமிக்க ஆய்வாளராகவும்‌ விளங்கி வருகின்றனர்‌.
இவர்களை எத்துணையளவு பாராட்டினாலும்‌ தகும்‌.
வரலாற்று உலகம்‌ இந்நாலைப்‌ போற்றி வரவேற்கும்‌.

தேதி : 6-5-.2002
மதுரை . வே.வேதாசலம்‌.
ஆக்கியோர்‌ உரை
மதுரை நாயக்கர்‌ வரலாற்றுக்கு வளம்‌ சேர்க்கும்‌ வகையில்‌
முதன்மைச்‌ சான்றுகளை அளிக்கும்‌ பொருட்டு, நாங்கள்‌
1988-ஆம்‌ ஆண்டிலிருந்து மதுரை நாயக்க மன்னர்கள்‌
வெளியிட்ட காசுகளைத்‌ தேடி மதுரை, திருநெல்வேலி,
திண்டுக்கல்‌, திருச்சி, கரூர்‌ மாவட்டங்கள்‌ முழுவதும்‌
சுற்றித்திரிந்து சேகரிக்கத்‌ தொடங்கினோம்‌. எல்லா
மன்னர்களுடைய காசுகளும்‌ கிடைத்தன.அவற்றை எல்லாம்‌
ஆய்வு செய்தபின்‌ வரலாற்று அறிஞர்களுக்கும்‌, தொல்லியல்‌
அறிஞர்களுக்கும்‌ பயன்படும்‌ வகையில்‌ இச்சிறிய ஆராய்ச்சி
நாலை வெளியிடுகின்றோம்‌. இந்நாவலில்‌ கூறப்பட்டுள்ள
பெரும்பாலான மதுரை நாயக்க மன்னர்‌ காசுகளும்‌ எங்கள்‌
களப்பணியில்‌ கிடைத்தவையே. எங்கள்‌ களப்பணியில்‌
இரண்டாயிரத்துக்கும்‌ மேற்பட்ட மதுரை நாயக்கர்‌ காசுகள்‌
கிடைத்தன. இதில்‌ முக்கியமான காசுகளை மட்டும்‌
தேர்ந்தெடுத்து தெளிவான ஒளிப்படங்களுடன்‌
வெளியிட்டுள்ளோம்‌.
மதுரை நாயக்கர்‌ காசுகளைப்‌ பாமரமக்களும்‌, நாணய
சேகரிப்பாளர்கள்‌ மற்றும்‌ தொல்லியல்‌ ஆய்வாளர்களும்‌
அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ எளிய நடையில்‌ கூறவேண்டும்‌
என்ற எங்கள்‌ எண்ணத்தின்‌ வெளிப்பாடே இந்தச்‌ சிறு நூல்‌,
பழங்காசுகளைப்‌ பற்றி ஆய்வு செய்யும்போது எங்களுக்கு
எழுந்த ஐயங்களைத்‌ தீர்த்து, ஊக்கமளித்த தொல்லெழுத்து
அறிஞரும்‌, எங்கள்‌ ஆசானுமாகிய திரு.ஐராவதம்‌ மகாதேவன்‌
அவர்களுக்கும்‌ எங்கள்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌
கொள்கிறோம்‌. மேலும்‌ இந்நூலுக்குச்‌ சிறந்ததொரு
அணிந்துரை வழங்கியும்‌, சிரமம்‌ பாராமல்‌ ஒளிப்படங்கள்‌
எடுத்துக்‌ கொடுத்தும்‌, அவ்வப்போது அறிவுரை வழங்கி
ஊக்கமளித்த முனைவர்‌. வெ.வேதாசலம்‌ அவர்களுக்கும்‌
எங்கள்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறோம்‌.
நாணயவியலாளர்‌ சொ.மு.க. ஹமீதுஜலால்‌ தம்‌
தொகுப்பில்‌ வைத்திருந்த இராணிமங்கம்மாள்‌ காசுகளின்‌
நெகடிவகளை எங்களுக்கு அளித்து அதிலிருந்து பிரதிகள்‌
தயாரித்துக்‌ கொள்வதற்கு அனுமதி அளித்தமைக்கும்‌
அவருக்கு நாங்கள்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.
எம்‌.டி. கருணாகரன்‌ அவர்களின்‌ சேகரிப்புகளிலிருந்து
கீழ்கண்ட காசுகளையும்‌, ஒளிப்பா..ங்களையும்‌ எங்கள்‌
ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளோம்‌. (காசு எண்கள்‌: 86, 27, 71,
73, 74, 75) 'ஸ்ரீரங்க' என்று தெலுங்கு மொழியில்‌
பொறிக்கப்பட்ட காசுகளை விஜயநகர மன்னர்களால்‌
வெளியிடப்பட்டது என்று சில நாணயவியலாளர்கள்‌ ஆய்வு
செய்துள்ளனர்‌. ஆனால்‌ எம்‌.டி.கருணாகரன்‌ இவற்றை மறுத்து
'ஸ்ரீரங்க' என்று பொறிக்கப்பட்ட தெலுங்கு காசுகள்‌ எல்லாம்‌
மதுரை நாயக்க மன்னர்‌ வெளியிட்ட காசுகள்‌ என்று ஆய்வு
செய்து ௦௦118% இதழில்‌ விரிவாக வெளியிட்டுள்ளார்கள்‌.
இந்நால்‌ சிறப்பான முறையில்‌ வெளிவரத்துணைபுரிந்த
அமரர்‌ அளக்குடி ஆறுமுகம்‌ மற்றும்‌ சொ.மு.க. ஹமீது ஜலால்‌,
சையது இஸ்மாயில்‌, எம்‌.டி. கருணாகரன்‌, சி. அறம்வளர்த்தான்‌,
ஷீலா ராமன்‌, கயல்விழி சீதாராமன்‌ ஆகியோருக்கும்‌ எங்கள்‌
நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

தஞ்சாவூர்‌ ஆறுமுகசீதாராமன்‌
80-05-2002 . சங்கரன்ராமன்‌
1. மதுரை நாயக்கர்‌ வரலாறு
விஜயந்கரப்‌ பேரரசானது தலைக்கோட்டைப்‌ போரில்‌
(கி:பி. 7565) வீழ்ச்சியுற்றுச்‌ சிதறுண்டு போயிற்று.
விஜயநகரத்துச்‌ செல்வங்களும்‌ சீரழிந்து விட்டன. விஜயநகரப்‌
பேரரசன்‌ இராமராயர்‌ போரில்‌ வீர மரணத்தைத்‌ தழுவினார்‌.
ஆனால்‌ விஜயநகர அரசு மட்டும்‌ மறையாமல்‌ தொடர்ந்து
நடைபெற்று , வந்தது; :: இராமறநாயனின்‌ தம்பி முதலாம்‌:
திருமலைராயன்‌ (கி.ி. 1570-73) நகரத்துக்குப்‌ புத்துயிரட்ட
முயன்றான்‌. அனால்‌ வெற்றி. கிடைக்கவில்லை. விஜயநகரத்தை
விட்டுப்‌ பெனுகொண்டாவைத்‌ தன்‌ தலைநகரமாக்கிக்‌
கொண்டான்‌. அவ்வூரில்‌ தங்கிப்‌ படைகளைச்‌ சீரமைக்கத்‌
தொடங்கினான்‌. "உள்நாட்டுக்‌ கிளர்ச்சிக்காரருடனும்‌,
கொள்ளைக்‌ கூட்டத்தாருடனும்‌, பாளையக்காரருடனும்‌
அவ்ன்‌ - ஆறாண்டுகள்‌ போராட வேண்டியவனானான்‌.
அவனுடைய அவல நிலையைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டு
மதுரை, தஞ்சாவூர்‌, செஞ்சி முதலிய இடங்களில்‌ பாளையங்கள்‌ ,
அமைத்து ஆண்டு வந்த நாயக்கர்கள்‌ விஜயநகரப்‌ பேரரசின்‌
மேலாதிக்கத்தை உதறித்தள்ளிவிட்டு தாமே ., சுதந்தர
மன்னர்க்‌ ளாக அரசாங்க ம்‌ நடத்தலானார்கள்‌.

விஸ்வநாதநாயக்கர்‌: (இ.பி. 1529-64).


கிருஷ்ண தேவராயரால்‌ தோற்றுவிக்கப்பட்ட மதுரை
நாயக்கரின்‌ முதல்‌ ஆட்சித்‌ தலைவன்‌ விஸ்வநாத நாயக்கன்‌.
கிருஷ்ணதேவராயரின்‌ கீழே மதுரை மாகாணத்தின்‌
பொறுப்பதிகாரியாக இருந்த நாகமநாயக்கனின்‌ மகன்‌ இவன்‌...
பாண்டிய .. நாட்டில்‌ உள்நாட்டுக்‌ | கலகத்தையடக்க
அனுப்பப்பட்ட நாகமநாயக்கனிடமே தென்னகத்தின்‌ ஆட்சிப்‌ :
பொறுப்பு ஓப்படைக்கப்பட்டது. ஆனால்‌ அவன்‌ அடங்காத்‌
தன்மையறிந்து திரும்ப: அழைக்கப்பட்டான்‌. இதற்கு முன்பே,
கிருஷ்ணதேவராயனின்‌: நம்பிக்கைக்குரிய . ஊழியனாகிய-
விஸ்வநாத நாயக்கன்‌, மன்னனுடன்‌ பல போர்களில்‌ பங்குப்‌:
பெற்றவன்‌ இவனே. கி.பி. 1589-ல்‌ மதுரையின்‌ நாயக்கனாக
கிருஷ்ணதேவராயரால்‌. தியமிக்கப்பட்டு மதுரை ' நாயக்கர்‌ ':
ஆட்சி தொடங்கிற்று. .
விஸ்வநாதன்‌ மிகுந்த வீரமும்‌, சீரிய பண்பும்‌ படைத்தவன்‌.
இவனது தளவாயும்‌, பிரதானியுமான அரியநாத முதலியார்‌
கருத்தின்படி, பாளையக்காரர்‌ முறை உருவாக்கப்பட்டது.
பழைய இராமநாதபுரம்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி,
திருச்சி, கோயமுத்தூர்‌, சேலம்‌ மாவட்டங்களின்‌ நிலப்பகுதிகள்‌ |
மதுரை நாயக்கராட்சியில்‌ அடங்கியிருந்தன.

முதலாம்‌ கருஷ்ணப்பநாயக்கர்‌: (இ.பி. 1564-72)


விஸ்வநாதனைத்‌ தொடர்ந்து அவன்‌ மகன்‌
கிருஷ்ணப்பநாயக்கன்‌ ஆட்சிப்‌ பொறுப்பேற்றான்‌. இவன்‌
துணிவு மிக்க வீரனும்‌, அறிவு மிக்க ஆட்சியாளனுமாவான்‌.
பரமக்குடியின்‌ பாளையக்காரனாகிய தும்பிச்சி நாயக்கனது
கிளர்ச்சியை இவன்‌ அடக்கினான்‌. இலங்கை அரசனைக்‌
கிருஷ்ணப்பன்‌ வென்றதாகத்‌ தெரிகிறது. இவன்‌ காலத்தில்‌
தான்‌ தலைக்கோட்டைப்‌ போர்‌ (1565) நிகழ்ந்தது.
அரியநாதர்‌ தலைமையில்‌ கிருஷ்ணப்பன்‌ ஒரு படையைப்‌
பேரரசின்‌ படைகளுக்குத்‌ துணையாக அனுப்பினான்‌.
திருநெல்வேலிக்கு அருகில்‌ கிருஷ்ணாபுரம்‌ என்ற ஊரை
ஏற்படுத்தினான்‌. அங்கு ஒரு மண்டபமும்‌, தெப்பக்‌ குளத்தோடு .
கூடிய திருவேங்கடநாதன்‌ கோவிலையும்‌ இவன்‌ கட்டினான்‌.

வீரப்ப நாயக்கர்‌: (இ.பி. 1572-95)


முதலாம்‌ கிருஷ்ணப்பனைத்‌ தொடர்ந்து அவன்‌ மகன்‌
வீரப்ப நாயக்கன்‌ ஆட்சியேற்றான்‌. மாவலிச்சக்கரவர்த்தியின்‌
வழித்தோன்றல்கள்‌ என்று கூறிக்கொள்ளும்‌ வாணாதிராயர்கள்‌
கலகத்தை வீரப்பர்‌ அடக்கினார்‌. வாணாதிராயர்கள்‌ கி.பி. 12-
ஆம்‌ நூற்றாண்டில்‌ சோழப்பகுதியிலிருந்து பாண்டிய நாட்டில்‌
புகுந்து சிற்றரசர்கள்‌ ஆயினர்‌. விஜயநகர ஆட்சிக்கு அடங்கிய
சிற்றரசர்களாய்‌ வாழ்ந்தனர்‌. விஸ்வநாதன்‌ காலத்தில்‌
பாளையக்காரர்களாக அமர்த்தப்‌ பெற்றனர்‌. , திருச்சிக்‌
கோட்டைச்‌ சீர்திருத்தமும்‌, அருப்புக்கோட்டையில்‌ அரண்‌
அமைத்தலும்‌ செய்த இவ்வீரப்பர்‌ ஆட்சியில்தான்‌ மதுரை
நாட்டில்‌ ஏசு கழகத்துப்‌ பாதிரிமார்கள்‌ முதன்‌ முதலாக 1592-ல்‌
சமயப்‌ பணிக்கழகத்தைப்‌ பொரணான்டசு என்ற போர்த்துக்கீசியப்‌
பாதிரியாரின்‌ தலைமையில்‌ ஏற்படுத்தினார்‌.
இரண்டாம்‌ கிருஷ்ணப்ப நாயக்கர்‌:(இ.பி.1595-1601)'
இரண்டாம்‌ கிருஷ்ணப்பர்‌ காலத்தில்‌ குறிப்பிடத்தகக
நிகழ்ச்சி ஏதுமில்லை. முதலாம்‌ வேங்கடனுக்குத்‌ திறை
செலுத்துவதை இவன்‌ நிறுத்தியதாகவும்‌ அதனால்‌
இவனையடக்க ஒரு படை அனுப்பப்பட்டது என்றும்‌ ஹீராஸ்‌
பாதிரியார்‌. கருதுகிறார்‌. திறைப்‌ பொருளைப்‌ பெறவே
படையனுப்பப்பட்டதாயும்‌, எந்தக்‌ கிளர்ச்சியும்‌ அடக்க ப்பட-
வில்லையென்றும்‌ வாதிடப்படுகிறது.

முத்துக்‌ கிருஷ்ணப்ப நாயக்கர்‌: (இ.பி. 1601-1609)


இரண்டாம்‌ கிருஷ்ணப்பனைத்‌ தொடர்ந்து முத்து
கிருஷ்ணப்ப நாயக்கன்‌ பட்டம்‌ பெற்றான்‌. கிருஷ்ணப்பனின்‌
தம்பி விஸ்வப்பனின்‌ மகன்‌ இவன்‌. முத்துக்‌ கிருஷ்ணப்பன்‌
ஆட்சியில்‌ நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சி சேதுபதிகள்‌
தலைமையில்‌ மறவர்‌ நாடு ஒழுங்காக அமைக்கப்பட்டதே
ஆகும்‌. சடைக்கத்தேவன்‌ என்பவன்‌ சேதுபதி ஆக்கப்பட்டான்‌.
இராமேஸ்வரம்‌ போகும்‌ யாத்திரிகர்களைக்‌ காப்பதே இவனது
தலையாயக்கடமை. இவன்‌ காலத்தில்‌ தத்துவ போதகர்‌
என்றழைக்கப்பட்ட பாதிரியார்‌ தமது சமயப்பிரச்சாரப்‌
பணியை ஓரளவு வெற்றிகரமாக நடத்தி வந்தார்‌.

முதலாம்‌ முத்து வீரப்பநாயக்கர்‌: (இ.பி. 1609-1623)


முத்துக்‌ கிருஷ்ணப்பனைத்‌ தொடர்ந்து அவன்‌ மூத்த
மகன்‌ முதலாம்‌ முத்து வீரப்ப நாயக்கன்‌ பதவியேற்றான்‌.
ஐக்கராயனுக்கும்‌, இராமதேவனுக்குமிடையிலான உள்நாட்டுப்‌
போரில்‌ இவன்‌ முன்னவனை ஆதரித்தான்‌. தலைநகரை
மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினான்‌. தஞ்சை
நாயக்க்ருடன்‌ அக்காலத்தில்‌ போர்‌ நடந்துவந்தது. அதை
வெற்றிகரமாக முடிக்கவே தலைநகரம்‌ திருச்சிக்கு
மாற்றப்பட்டது. இச்செயலில்‌ மதுரை நாயக்கருக்குத்‌
தென்காசிப்‌ பாண்டியர்‌ உதவிபுரிந்தனர்‌.

திருமலைநாயக்கர்‌: (இ.பி.1623-1659)
திருமலைநாயக்கர்‌ முத்துகிருஷ்ணப்பரின்‌ இரண்டாவது
மகனாவார்‌. மதுரைப்‌ பெருநாடு இவர்‌ ஆட்சிக்காலத்தில்‌

3
கன்னியகுமரி மாவட்டத்தின்‌ ஒரு பகுதி, திருநெல்வேலி,
திண்டுக்கல்‌, மதுரை, இராமநாதபுரம்‌, சிவகங்கை,
புதுக்கோட்டை, திருச்சி, சேலம்‌, கோவை முதலிய
மாவட்டங்களின்‌ பகுதிகளைக்‌ கொண்ட. பெரும்பரப்புடைய
நாடாக விளங்கியது. திருச்சியில்‌ ஆறு அல்லது ஏழு ஆண்டுகள்‌
ஆட்சி செலுத்திய திருமலை அதன்பின்‌ மதுரையைத்‌ தம்‌
தலைநகராகக்‌ கொண்டார்‌. மதுரை நாட்டைப்‌ பாதுகாத்தற்‌
பொருட்டு இரண்டு கோட்டைகளைக்‌ கட்டினார்‌. ஐந்து பெரும்‌
போர்களை நிகழ்த்தினார்‌. முதன்‌ முதலில்‌ நடத்திய போர்‌
மைதர்‌ சாமராஜ உடையாருக்கு எதிரானது ஆகும்‌.
திருவாங்கூர்‌ மீது திருமலை மேற்கொண்ட படையெடுப்பு
இரண்டாவது படையெடுப்பாகும்‌. கி.பி.1687-ல்‌ திருமலை
இராமநாதபுரம்‌ சேதுபதியுடன்‌ போர்புரிந்தார்‌. விஜயநகர
அரசர்‌ மூன்றாம்‌ வேங்கடருடன்‌ கி.பி.7637-ல்‌ போர்‌ செய்தார்‌.
மைதருக்கு எதிராக மீண்டும்‌ இவர்‌ நிகழ்த்திய போர்‌
மூக்கறுப்புப்போர்‌ என வரலாற்றில்‌ பேசப்படுகிறது. திருமலை
மதுரைக்‌ கோயிலைப்‌ புதுப்பித்ததோடு, திருப்பரங்குன்றம்‌
கோயில்‌, அழகர்கோயில்‌, திருவில்லிப்புத்தார்‌, ஆண்டாள்‌
கோயில்‌, திருவரங்கம்‌ பெரியகோயில்‌ ஆகியவற்றிலும்‌
திருப்பணிகள்‌ பல செய்தார்‌. ஆலயத்திருவிழாக்கள்‌ 'நடத்தினார்‌;
மதுரையில்‌ கலையழகு மிக்க திருமலைநாயக்கர்‌ மகாலைக்‌
கட்டினார்‌. சமயப்‌ பொறையுணர்வு உடையவராகத்‌ திகழ்ந்தார்‌.

சொக்கநாதநாயக்கர்‌: (இ.பி.1659-1682)
முத்துவீரப்ப நாயக்கர்‌ இறந்த பிறகு அவரதுமகன்‌
சொக்கநாதன்‌ தனது பதினாறாவது வயதில்‌ மதுரை மன்னராகி
24 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தார்‌. இவர்‌ ஆட்சிக்கு வந்த
உடனேயே இவரது இளவயதைப்‌ பயன்படுத்திக்கொண்டு,
இவரது பிரதானியும்‌, தளவாயும்‌, இராயசமும்‌ கூடி சதித்திட்டம்‌.
தீட்டி தங்கள்‌ திட்டத்திற்குத்‌ தடையாக இருப்பவர்களை -'
ஒழித்துக்‌ கட்டத்‌ துணிந்தார்கள்‌. தக்க சமயத்தில்‌ இத்திட்டத்தை
அறிந்த சொக்கநாதநாயக்கர்‌ அதை முறியடித்தார்‌.
துரோகம்‌ நினைத்த இராயசம்‌ கொல்லப்பட்டார்‌. பிரதானி
பிராமணரானதால்‌, கொல்லப்படாமல்‌, அவரது கண்கள்‌
குருடாக்கப்பட்டன. தளவாய்‌ லிங்கமநாயக்கர்‌ செஞ்சிக்குத்‌
தப்பியோடி, செஞ்சிமன்னர்‌ ஷாஜியுடனும்‌, தஞ்சை மன்னர்‌
விஜயராகவ நாயக்கருடனும்‌ கூட்டுச்‌ சேர்ந்து மதுரை
நாயக்கரைத்‌ தாக்க வந்தார்‌. புதிதாக அமர்த்தப்பட்ட
தளவாயும்‌ நம்பிக்கைக்குரியவராக இல்லாததால்‌, சொக்கநாத
நாயக்கரே, மதுரைப்‌ படைகளுக்குத்‌ தலைமை தாங்கித்‌
திருச்சியைக்‌ காக்கச்‌ சென்றார்‌. இவரது படையெடுப்பு
வெற்றியாய்‌ முடிந்தது. தஞ்சை மன்னர்‌ விஜயராகவ நாயக்கர்‌
சொக்கநாதநாயக்கரிடம்‌ சரணடைந்தார்‌. லிங்கமநாயக்கரும்‌,
ஷாஜியும்‌ செஞ்சிக்குத்‌ தப்பியோடினார்கள்‌.

முத்து வீரப்ப நாயக்கர்‌: (இ.பி.1682-89)


சொக்கநாத நாயக்கர்‌ இறந்த பிறகு, அவரது மகன்‌
முத்துவீரப்ப நாயக்கர்‌ (இரங்ககிருஷ்ண) மதுரை
மன்னரானார்‌. சொக்கநாதநாயக்கரின்‌ மனைவி மங்கம்மாள்‌,
முத்து வீரப்பநாயக்கரைப்‌ பெற்றத்தாயா அல்லது
மாற்றான்தாயா என்பதில்‌ சிறிய குழப்பம்‌ உள்ளது. முத்து
வீரப்பநாயக்கர்‌ ஏழு ஆண்டுகள்‌ அமைதியாக ஆட்சி செய்த
பிறகு அம்மை நோய்க்கு ஆளாகி 1689-ல்‌ இறந்து விட்டார்‌. அது
சமயம்‌ தாய்மை அடைந்திருந்த இவரது மனைவி, முத்தம்மாள்‌,
7690-ல்‌ விஜயரங்க சொக்கநாதர்‌ என்னும்‌ ஆண்‌ மகவைப்‌
பெற்றெடுத்த பிறகு மங்கம்மாள்‌, தனது பேரக்‌ குழந்தைக்குக்‌
காப்பாளராக மாறி 78 ஆண்டுகள்‌ மதுரையை ஆண்ட
பெண்ணரசி ஆயார்‌.

இராணி மங்கம்மாள்‌: (இ.பி.1689-1706)


மதுரையில்‌ மங்கம்மாளின்‌ பாதுகாவல்‌ ஆட்சி நடைபெற்று
வரும்பொழுது, தக்காணத்தில்‌ மொகலாயப்‌ பேரரசர்‌
ஒளரங்கசீப்‌ தனது மேலாண்மையை இந்தியாவின்‌ தென்‌
பகுதிகளிலும்‌ விரிவாக்கும்‌ நடவடிக்கைகளில்‌ எஈடுபட்டிருந்தார்‌.
மைசூர்‌. மன்னரும்‌, தஞ்சை மன்னரும்‌, ஏற்கனவே
மொகலாயர்களின்‌ மேலாண்மையை ஏற்றுக்‌ கொண்டு
இருந்தார்கள்‌. எனவே இராணி மங்கம்மாளும்‌, மொகலாயர்‌

5
தளபதிகளிடம்‌ பணிவாகப்‌ பேசி, பல வெகுமதிகளால்‌
அவர்களை மகிழ்வித்து, பேரரசர்‌ ஓளரங்கசீப்பிற்குக்‌
கப்பமாகப்‌ பெரும்‌ பொருள்‌ அனுப்பி வைத்தார்‌.
மொகலாயர்களிடம்‌ எந்தளவிற்குத்‌ திறமையோடு பணிந்து
மீபானாரோ அந்தளவிற்கு, உள்நாட்டுச்‌ சக்திகளிடம்‌ மிகக்‌
கடுமையாக, மங்கம்மாள்‌ நடந்து கொண்டாள்‌.
மதுரை வரலாற்றில்‌, மக்கள்‌ நலம்‌ பேணிய பல பொதுத்‌
தொண்டுகளால்‌ இராணிமங்கம்மாள்‌ மங்காத ஓர்‌ இடத்தைப்‌
பெற்றுத்‌ திகழ்கிறார்‌. இவரது திறமையும்‌, செயல்வேகமும்‌,
மதுரை அரசிற்குப்‌ புதிய வாழ்வைத்‌ தந்தது. இவர்‌ கிறித்துவ
மதம்‌. இசுலாமிய மதம்‌ உள்பட அனைத்து மதங்களுக்கும்‌
உரிய மதிப்பினைத்‌ தந்தார்‌. கோவில்களுக்கும்‌, பொதுத்‌
தர்மங்களுக்கும்‌ பல மானியங்களை நல்கினார்‌. பல
சாலைகளையும்‌, பல சத்திரங்களையும்‌ அமைத்து மதுரை
மக்களின்‌ அன்பிற்குப்‌ பாத்திரமானார்‌.

விஜயரங்க சொக்கநாத நாயக்கர்‌: (இ.பி.1706-1732)


இவரது ஆட்சியில்‌ மதுரை அரசின்‌ வீழ்ச்சியும்‌, துயரமுமே
முக்கிய இடத்தைப்‌ பெற்றிருந்தன. மன்னர்‌ ஆட்சிப்‌
பொறுப்பில்‌ கவனம்‌ செலுத்தாமல்‌ வேறு அலுவல்களில்‌
கவனம்‌ கொண்டதினால்‌, அமைச்சர்கள்‌ தன்னிச்சையாகச்‌
செயல்பட்டார்கள்‌. இந்த அமைச்சர்கள்‌ மக்கள்‌ நலம்‌
பேணாமல்‌ அவர்களை அடக்கிக்‌ கொடுமைப்படுத்தி
வந்தார்கள்‌. இவர்களில்‌, தளவாய்‌ கஸ்தூரி ரங்கையாவும்‌,
பிரதானி வெங்கட கிருஷ்ணய்யாவும்‌ குறிப்பிடத்‌ தகுந்தவர்கள்‌.

மீனாட்டு : (இி.பி.1732-173௦)
ஆண்‌ வாரிசு இன்றி கி.பி.1731-ல்‌ மரணமடைந்த விஜயரங்க
சொக்கநாத நாயக்கருக்குப்பின்‌ அவரது மனைவி மீனாட்சி
மதுரை ஆரசியானார்‌. இவரது ஆட்சியில்‌ உள்நாட்டுக்‌
குழப்பமும்‌, அதன்‌ பயனாய்‌ வெளியாரின்‌ படையெடுப்பும்‌
ஏற்பட்டு, மதுரை நாயக்கர்‌ ஆரசு அழிந்துவிட்டது.
பேராசை பிடித்த மீனாட்சி, பங்காரு திருமலை என்பவர்‌ மகன்‌
விஜயகுமாரனைத்‌ தத்து எடுத்து தனது வாரிசாக, வளர்த்து

6
வந்தார்‌. பங்காரு திருமலை, திருமலைநாயக்கரின்‌ தம்பி
குமாரமுத்துவின்‌ வழி வந்தவர்‌. இந்நிலையில்‌ பங்காரு
திருமலை அவசரப்பட்டு, ஆட்சியை மீனாட்சியிடமிருந்து
பறித்துக்கொள்ள கலகம்‌ விளைவித்தார்‌. இக்‌ குழப்பத்தை
அறிந்த ஆர்காடு நவாபு தனது மகன்‌ சப்தர்‌ அலியையும்‌,
மருமகன்‌ சந்தா சாகிப்பையும்‌ மதுரைக்கு அனுப்பி வைத்தார்‌.
கி.பி. 7798-ல்‌ சந்தாசாயபு தனது வாக்குறுதிகளால்‌
மீனாட்சியைக்‌ காப்பதாக நம்பவைத்து, மதுரை ஆரசின்‌
ஆட்சியை கைப்பற்றிக்‌ கொண்டார்‌. மீனாட்சியை சிறையில்‌
அடைத்தார்‌. மீனாட்சி விஷம்‌ குடித்து உயிர்‌ துறந்தார்‌. மனம்‌
உடைந்த பங்காரு திருமலை சிவகங்கையில்‌ தஞ்சம்‌ புகுந்தார்‌.
இவ்வாறு மதுரை நாயக்கர்‌ ஆட்சி முடிவிற்கு வந்தது.
துணை நூற்பட்டியல்‌

தமிழ்‌ நூற்கள்‌
[. அளக்குடி ஆறுமுகசீதாராமன்‌ : தமிழகத்‌ தொல்லியல்‌
சான்றுகள்‌, (அண்மைக்காலக்‌ கண்டுபிடிப்புகள்‌)
தொகுதி-!1, தஞ்சை, 2002.
கணபதி, ௮. : தமிழக வரலாறு (1565-1995), மல்விகை
பதிப்பகம்‌, மதுரை, 1992.

சுப்ரமணியன்‌, ந. : தமிழக வரலாறு (1565-1967), என்னெஸ்‌


பப்ளிகேஷன்ஸ்‌, மதுரை, 1980.
பரந்தாமனார்‌, அ.கி. : மதுரை நாயக்கர்‌ வரலாறு, பாரி
நிலையம்‌, சென்னை, 1981.
பிள்ளை, கே.கே. : தமிழக வரலாறு மக்களும்‌ பண்பாடும்‌,
தமிழ்நாட்டு பாடநூல்‌ நிறுவனம்‌, சென்னை, 1981.

ஆங்கில நூல்கள்‌
1. Desikachari. T., South Indian Coins, (Reprint), Asian
Educational Services, New Delhi, 1984.
Elliot Walter, Coins of Southern India, (Reprint), The
International Numismata Orientalia, Cosmo publications,
Dethi, 1975.
Hultzsch,E. South Indian Copper Coins, The Indian
Antiquary, 1892.
Loventhal, E. The Coins of Tinnevelly, Higginbotham and
Co. Madras. 1888.
Michael Mitchiner, Coin Circulation in Southern most
India, Indian Institute of Research in Numismatic Studies,
Nasik, 1995.
Nagasamy, R. Tamil Coins - a study, Tamilnadu State
Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai,
1981.

54
இதழ்கள்‌
ஆவணம்‌ (இதழ்‌ - 9, 12)
வரலாறு (இதழ்‌ - 9, 7)
தினமணி 12-22-1998, 25.7.1990,
Coinex - 1997, 1998, 1999, 2000 Madras Coin Society

95

You might also like