Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

794)ஜோதிட நுணுக்கங்களும் பரிகாரங்களும்.

ராசி சக்கரமும் பாவக சக்கரமும்


🔳🔲🔳🔲🔳🔲🔳🔲🔳🔲🔳🔲🔳🔲🔳🔲🔳
"ஒரு கிரகம் ஜாதகருக்கு, ராசி கட்டத்தில் இருக்கும் இடத்தின்

பலனை தருமா? அல்லது பாவ கட்டத்தில் தான் இருக்கும் இடத்தின்

பலனை தருமா?

இது மிக மிக முக்கியமான கேள்வி. பெரும்பாலான ஜோதிட

ஆர்வலர்களுக்கு தீராத சந்தேகமாக என்றென்றும் இருக்கும்

கேள்வி.

முதலில் பாவக கட்டம் பற்றி பாப்போம். இந்த பாவ கட்டம்

அமைப்பதற்கு இரண்டு முறைகளை பின்பற்றுகிறார்கள்.

முதல் முறை :

முதல் முறையில் லக்கின புள்ளி இருக்கும் பாகை (டிகிரி ) முதல் 30

பாகைகளாக வரிசையாக அடுக்கிக்கொண்டே போனால்

கிடைப்பது இந்த பாவா சார்ட்.

இது KP சிஸ்டம் என்னும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில்

அமைக்கப்படுகிறது.

உதாரணமாக சிம்மம் லக்கினத்தில் லக்கினம் 23 டிகிரியில்

துவங்கினால் அடுத்து கன்னி 23 டிகிரி வரை இருப்பது 1 ஆம்

பாவம் அல்லது லக்கின பாவம் ஆகும்.


இதில் சிம்மத்தில் 20 டிகிரியில் சுக்கிரன் இருந்தால் ராசிக்கட்டத்தில்

1 ஆம் வீட்டில் உள்ள சுக்கிரன் பாவ கட்டத்தில் 12 ஆம் வீட்டில்

இருப்பார்.

இதுவே கன்னியில் 7 ஆவது டிகிரியில் ராகு இருந்தால்

ராசிக்கட்டத்தில் 2 ஆம் வீட்டில் இருப்பார் ஆனால்

பாவாகட்டத்தில் ராகு லக்கின பாவத்தில் அதாவது 1 ஆம் வீட்டில்

இருப்பார்.

இரண்டாம் முறை :

இந்த முறையில் லக்கின புள்ளிக்கு முன்னும் பின்னும் 15

டிகிரிகளாக பிரித்து பாவ கட்டம் அமைப்பது.

உதாரணமாக சிம்மத்தில் 23 டிகிரியில் லக்கின புள்ளி உள்ளது

என்றால் அதற்கு முன்னும் பின்னும் 15 டிகிரி கூட்டி கழித்து

பார்த்தால் சிம்மத்தில் 8 டிகிரி முதல் கன்னியில் 8 டிகிரி வரை

லக்கின பாவகம் இருக்கும்."

"கன்னியில் 8 டிகிரி வரை லக்கின பாவகம் இருக்கும்.

மேலே குறிப்பிட்ட அதே உதாரணத்தின் படி சுக்கிரனும், ராகுவும்

இப்போது லக்கின பாவகத்திலேயே அதாவது 1 ஆம் வீட்டிலேயே

இருப்பார்கள்.(ஒரே வீட்டில் இருப்பார்கள்).

இப்போது நீங்கள் ஏதாவது ஒரு முறையை எடுத்து கொள்ளுங்கள்.

அடியேன் முதல் முறையை எடுத்துக் கொள்கிறேன்.


இப்போது சுக்கிரன் தசை நடைபெறுவதாக இருப்பின் சுக்கிரன்

லக்கினத்தில் இருக்கும் வலிமையை லக்கினத்திற்கு செய்வதற்கு

பதிலாக 12 ஆம் வீட்டிற்கு செய்வார். எனவே 12 ஆம் வீட்டிற்கு

சுக்கிரனின் சுப / அசுப வலுவை பொறுத்து நல்ல அல்லது கெட்ட

விஷயங்கள் 12 ஆம் வீட்டின் வழியாக ஜாதகருக்கு கிடைக்கும்.

லக்கின பாவத்திற்கு அந்த பலன்கள் கிடைக்காது. ஒரே வரியில்

சொல்வதென்றால் சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்து 12 ஆம் வீட்டை

இயக்குவார்.

இதுவே இரண்டாம் முறையை இப்போது எடுத்து கொள்ளுங்கள்.

சுக்கிரன் ராசி மற்றும் பாவா சார்ட் இரண்டிலும் லக்னத்திலேயே

இருப்பதால் ஒன்றாம் பாவகத்தை தான் இயக்குவார்.

இங்கே அடுத்த கேள்வி வரும். சுக்கிரன் எப்படி இயக்குவார்?

சிம்மத்தில் மகம், பூரம் மற்றும் உத்திரம் என்னும் 3 கிரக

நட்சத்திரங்கள் உள்ளன. இதில் சுக்கிரன் மகம் நட்சத்திரம் பெற்று

இருப்பின் கேதுவின் கரகத்துவம் வழியாக பலன் தருவார்.

பூரம் நட்சத்திரம் பெற்று இருந்தால் சிம்ம லக்கினத்திற்கு 3 க்கும் 10

க்கும் உடைய சுக்கிரன் தன் இரு ஆதிபத்திய பலன்களையும்

தன்னுடைய 20 ஆண்டுகள் முழுவதும் தருவார்.

இதுவே சுக்கிரன் லக்கின அதிபன் சூரியனின் உத்திரம் சாரம்

பெற்றால் சூரியனின் அமைப்பை பொறுத்து சூரியனின் காரகத்துவ

பலன்களை லக்கினத்திற்கு வழங்குவார்.


"இறுதியாக ராசிகட்டத்தில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் தனது

திசையில் ராசி கட்டத்தில் தான் பெற்று இருக்கும் வலுவை

பாவகட்டத்தின் வழியாக செயலாற்றும் என்பதே இங்கு சரியாக

இருக்கும்.

மேலும் ஐந்து பங்கு நட்புறவு அட்டவணை (five fold strength ) என்ற

ஒன்று உள்ளது. இந்த அட்டவணையை வைத்து திசைநடத்தும்

கிரகதின் புத்தி நாதன் (மற்ற ஒரு கிரகம்) நன்மையை தருமா

அல்லது தீமையை தருமா என்பதை எளிதில் கண்டுபிடித்து

விடலாம்.

இதற்கு தற்காலிக நட்பு - பகை அட்டவணை மற்றும் நிரந்தர நட்பு -

பகை அட்டவணை தயாரித்து அதன் பின்னர் இந்த இரண்டையும்

சேர்த்து ஐந்து பங்கு நட்புறவு அட்டவணையை தயாரிக்க

வேண்டும்.

ஆரம்ப காலத்தில் அடியேனுக்கும் இந்த சந்தேகம் வெகு

வருடங்களாக இருந்தது. ஆனால் குருநாதர்களிடம் கேட்டு

அவர்கள் கூறிய வழிமுறை படி ராசி கட்டம் மற்றும் நட்சத்திர பாத

சாரம் இரண்டையும் வைத்து மட்டுமே பலன்கள் கூறும் முறையை

பின்பற்றியதால் பலன்கள் அனைவருக்கும் முழுமையாக

பொருந்தி வருவதை கன்கூடாக பார்த்து வருகிறேன்.

எனவே ஜோதிடர்கள் பொதுவாக ராசிக்கட்டம் மற்றும் நட்சத்திர

பாத சாரம் வைத்து மட்டுமே பலன் கூறுகிறார்கள்


ராசிக் கட்டத்தில் மிகவும் மோசமான அமைப்பு இருந்தால்

அப்பொழுது சரி பார்ப்பதற்கு அதாவது அதுதான் கதியா அல்லது

விமோசனம் இருக்கா என்பதை பார்ப்பதற்கு பாவக கட்டம்

பயன்படுத்தப்படுகிறது.

அதாவது ராசி சக்கர பலன்கள் பாவக சக்கரத்தின் மூலம் உறுதி

செய்து கொள்ளப்படுகிறது.

ஆகவே எப்பொழுதும் ராசி சக்கரத்தை ஆய்வு செய்தாலும் பாவகச்

சக்கரத்தைக் கொண்டும் ஆய்வு செய்ய வேண்டியது

ஜோதிடர்களின் கடமையாகும்.

நன்றி வணக்கம் 💥🙏🏻

You might also like