Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

ஜோதிட நுணுக்கங்களும் பரிகாரங்களும்(203)

மந்திர சாஸ்திரம் பகுதி 43

நவக்கிரக வழிபாடுகள் புதன் வழிபாடு

நவகிரக வழிபாடு - புதன்

1. அறிமுகம் :

விதியா காரகன் என புகழப்படுபவர் புதன்.

சுப்ரோடு சேர்ந்தால் சுபராகவும்,

அசுபர் கூட இருக்கையில் அசுபராகவும் இருப்பவர்.

சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர என புராணங்கள்

கூறும்.

மனம் என்பது சந்திரன். மனதின் புத்திரன் மனோபாவம், MENTALITY


.

புதன். அழகும், அறிவும் ஒருங்கே அமைந்த புதன் கல்வி,

பேச்சுத்திறன், வணிகத்திறன், கணித ஆற்றல், தகவல் தொடர்பு,

ஜோதிட ஞானம், கலைப்புலமை, என பல்வேறு காரகங்களை

உடையவர்.

பச்சை நிறத்தினர். வைவஸ்த மனுவின் மகளாகிய இளா

என்பவளை மணந்து, புரூரவன் என்ற மகனை உடையவர். புதன்

திசை ஆண்டுகள் 17.

2 பொதுக் கருத்துகள் :

கிரஹங்களின் அதிபதி என புதனைக் கூறுவர்.

நமது அறிவு, பகுத்தறியும் உணர்வு இவை புதனுடையது .


பராசரர் புதனை வசீகரமானவர். பல பொருள் தரும் சொற்களை

பேசுபவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர் என வர்ணிக்கிறார்.

ஒரே வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் யாவும் பெறுபவர்

புதன் மட்டுமே.

32 வயதில் முழு பக்குவம் பெறுபவர் .புதன். புதனுக்கு சந்திரனிடம்

பகை உண்டு என புராணம் கூறுகிறது.

சந்திரன் பார்வை வெகுளியானது. புதனின் நோக்கு சீர்தூக்கிப்

பார்த்து,

நல்லது கெட்டதை ஆராய்வது.

மிதுன, கன்னி ராசிகளின் அதிபதி. கன்னியிலேயே உச்சமும்,

மூலதிரி கோணமும் அடைபவன்.

மீனத்தில் நீசம் பெறுபவன். ஆயில்பம், கேட்டை, ரேவதி

நட்சத்திரங்களுக்கு உரியவன் என புதன் பற்றிய ஜோதிட

தகவல்கள்

புதன் தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்தவன்.

அவனை வளர்த்தவள் சந்திரனின் மனைவி ரோகிணி என மத்ஸ்ய

புராணம் போன்றவை சொல்கின்றன.

புதன் பூமியில் தோன்றியவன் என சூரிய சித்தாந்தம் 12-ம்

அத்தியாயம் தெரிவிக்கிறது.
மகாபாரதத்தில் வைவஸ்த மனுவின் மகன் சுட்யுமனன் என்பவன்

ஒரு ஏரியில் மூழ்கி குளித்தபோது பெண்ணாக மாறிவிட்டான்.

இளா எனும் பெயருடன் பேரழகுடன் விளங்கிய அவளை புதன்

மணந்தான். அவர்களின் மகன் புரூரவன்.

பின் பிரம்மனை வேண்டித் தவமியற்றி கிரகங்களில் ஒருவனான்

புதன் என்கிறது.

பிரம்ம வைவாத புராணம் குபேரன் மகள் சித்ரா என்பவளை

மணந்து சைத்ரன்

என்ற மகனைப் பெற்றவன் புதன் என்கிறது.

புராணத்தில் புதன்

விஷ்ணு தாமோதர புராணம்

காசியபன் என்ற அரசனுக்கு அதிதி திதி தனவு என்ற மூன்று

மனைவிகள்.

இவர்களின் தனவுக்கு பிறந்த மகனாகிய ராஜா என்பவன்

வருணனின் மகன் வாருணி என்பவளை நேசித்தான்.

ராஜா அன்பின் வெளிப்படையாக தன்னுடைய சக்தி

அனைத்தையும் வருணனிடம் அளித்தார் .

இதனைப் பெற்ற வாருணி நீரில் கரைந்து மறைந்துவிட

ராஜாவும் அவளை அங்கும் தொடர்ந்தான்.

அப்போது மகப்பேறு வேண்டிய சந்திரன் நீரைக் கடைந்து

தேடினார் .
அப்பொழுது மகாவிஷ்ணுவின் அருளால் அந்த நீரில் பிரகாசம்

கொண்ட ஒரு தெய்வீக ஒளி தோன்றியது.

அதனை கையில் எடுத்து தாரை என்ற பிரகஸ்பதியின் மனைவி

இடமும் அவன் மனைவி ரோகினி இடமும் வழங்கினான்.

அந்த ஒளியிலிருந்து தோன்றியவரே புதன் எனப்படுகிறது.

புதனின் தோற்றமும் தன்மையும் மஞ்சள் நிறத்துடன் மஞ்சள் நிற

மாலைகள் அணிந்து கத்தி கேடயம் செங்கோல் மற்றும் வரம்

அளிக்கும் முத்திரை என நான்கு கைகளுடன் தங்க கிரீடம்

தலையில் அணிந்து சிங்கத்தை வாகனமாகக் கொண்டு புதன்

காட்சியளித்தார்.

எல்லாவித கலை மற்றும் விஞ்ஞானத்தில் ஆழ்ந்த புலமை உடைய

புதன்

சுக்கிரனிடம் இருந்து ஒரு லட்சம் யோஜனை தூரத்தில் இருப்பதாக

பாகவத நூல் தெரிவிக்கிறது

ஒரு யோஜனை என்பது 11 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

சுவேதன் சாரங்கன் நீலன் பீதன் விலோஹிதன் கிருஷ்ணன் ஹரி

தன் புருஷன் மற்றும் புருஷினி என பெயர்கள் உடைய

காற்றிலும் வேகமாக செல்லக்கூடிய பத்து குதிரைகள் புதனின்

வெண்மை நிற ரதத்தை இழுத்துச் செல்கின்றன.

புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார்

ஜோதிடத்தில் புதன்
மிதுன கன்னி ராசிகளின் அதிபதி வடகிழக்கில் வில்வடிவ

இருக்கையில் வீற்றிருக்கும் புதன்

ஆத்திரேலிய கோத்திரத்தில் சுக்லபட்ச சப்தமி திதியில் மார்கழி மாத

புதன்கிழமையில் ஆங்கீரச வருடத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில்

பிறந்தவன்

நாடு மகதம் .

புதனை வழிபடும் முறை

விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் வழிபடுவது வழிபாட்டில்

சொல்லப்படுகிறது

மேலும் அமாவாசை நாளில் ஒரு அந்தணனுக்கு பொருட்களை

தானம் செய்வதும்

யானைத்தந்தம் பச்சைநிற ஆடை பச்சைப்பயிறு சூடம்

ஒரு ஆயுதம் மற்றும் சுவையான உணவும், பழங்களும் அளித்தல்

நன்மை தரும்.

புதன் காயத்ரி:

கஜ த்வாஜய வித்மஹே

சக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புதப் பிரசோதயாத்

புதன் காயத்ரி
வியாசர் அருளிய புதன் துதி:

பிரியங்கு கலிகாஷியாமம் ரூபேனா பிரதிமம் புதம்

செளம்யம் சௌம்ய குணோர் பேதம் தம் புதம் பிரணமாம்யஹம்

சந்திரனின் மகனும், சுபமான இனிமையான குணங்கள்

நிரம்பியவனும், கருந்தாமரை போன்றவனும், ஈடற்ற இனிய

தோற்றம் உடையவனும், மிகவும் புத்திமானுமாகிய புதனை

வணங்குகிறேன். என்பது பொருள்.

கோச்சாரரீதியாக 1,3,5,7,9,12-ல் புதன் பாதிப்பு ஏற்படுத்துவார்.

அப்போது கூற வேண்டிய துதி.

உத்பாத ரூபோ ஜகதம்

சந்திர புத்ர மஹாத்யுதி

சூர்ய பிரியகாரோ வித்வான்

பீடாம் ஹரது மே புதா

புதனிடம் வேண்டுவது

: "சந்திரனின் மகனும், மிகுந்த புத்திசாலியான புதனே, நீ

சூரியனுக்கும் பிரியமானவன். நீ என் துன்பங்களை நீக்குவாய்

என்பதே.

பீஜ மந்திரம்
ஓம் ப்ரம் ப்ரிம் ப்ரெளம் ச புதாய நமஹ

சாமான்ய மந்திரம்

ஓம் புக் புதாய நமஹ

புதனை வழிபடும் இன்னும் சில முறை :

1.புத பீஜ மந்திரத்தை 40 நாட்களில் 17000 முறை துதிக்கவும்.

2.விஷ்ணுவை வழிபடவும். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜெபிக்கவும்.

3.பிர புத துதிகளைத் கூறி வழிபடவும்,

சூரிய உதயத்துக்கு 2 மணி நேரம் கழித்து கூறவும்

4. பச்சைப் பயிறு, பூசணிக்காய், ஆடு, பச்சைநிற ஆடை

போன்றவற்றை புதன் மதியவேளையில் ஏழை மாணவனுக்கு

தானம் செய்யவும்,

5.விரதம் புதன்கிழமை மேற்கொள்ளவும்,

6. 10-முக ருத்ராட்சம் அணியவும்,

7. குருவாயூர் சென்று தரிசனம் செய்தலும் மதுரை மீனாட்சி

அம்மனை தரிசனம் செய்தலும் நன்மை தரும்.

எளிய பரிகார முறைகள்:


1. பச்சைநிற ஆடைகள் அணியவும்,

2 பச்சை நிற கைக்குட்டை வைத்திருக்கவும்.

3. தந்தத்தினால் ஆன பொருள்கள், பாத்திரங்களை

பயன்படுத்தவும்.

புதன் வழிபாடு நாளைய பகுதியில் தொடரும்

You might also like