290 களத்திர தோஷத்தின் உபதோஷங்கள்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஜோதிட நுணுக்கங்களும் பரிகாரங்களும் *( 290)*

*களத்திர தோஷத்தின் உபதோஷங்கள்*

*நெருப்பு கிரகமான சூரியனை களத்திர* *காரகன் நெருங்கி வருவதால்*

*களத்திரதோஷம்* *உண்டாகிறது.*

இந்த களத்திர தோஷம் எப்படியாக எல்லாம் செயற்படும் என்று பார்க்கலாம்.

சூரியன் அதிக உஷ்ணமும், தீராத தாபத்தையும் உண்டாக்கும். உயிரணுக்களை

பாதிக்கவல்லது. இந்த சூரியனை நோக்கி வரும் கிரகம் தோஷத்தை

நோக்கியும், விலகி வரும் கிரகம் தோஷத்தில் இருந்து மீண்டு வர

முயற்சிப்பதாகவும் பலன் எடுக்கப்பட வேண்டும்.

ஆண்கள் ஜாதகத்தில்,

களத்திர, காம, சுக்கில காரகன் சுக்கிரன் சூரியனை நோக்கி 8° இடைவெளியில்

நின்றாலும், நவாம்சத்தில் இருவரும் சேர்க்கை பெற்று இருந்தாலும் களத்திர

தோஷ பாதிப்பு அதிகமாகும்.

சுபர் தொடர்பு இல்லாத போது பெண்களின் தொடர்புகள் கூட உண்டாகும்.

தன்னை அழகுபடுத்திக் கொண்டே இருப்பது. தீராத தாபம், விந்தணு

குறைபாடு உண்டாகும்.

இச்சேர்க்கையில் சூரியனை நோக்கி சுக்கிரன் வருவதானது தோஷத்தின்

பாதிப்பால் ஜாதகருக்கு பாதிப்பு உண்டாகும்.

திருமணம் நடைபெறாமலும் போகும். சூரியனை கடந்து சுக்கிரன் வந்தால்

பாதிப்பு இருந்தாலும் அதை கடந்து வந்து விடுவார். பரிகாரம் செய்து நிவர்த்தி

செய்ய வேண்டும்.
*பெண்கள் ஜாதகத்தில்* களத்திர, தைரிய வீரிய (இருவருக்கும்) காரகன்

செவ்வாய் சூரியனை 17°யில் நெருங்கி இருந்தாலும் அம்சத்தில் சூரியன்

செவ்வாய் சேர்ந்து இருந்தாலும் களத்திர தோஷமாகும்.

இந்த கிரக சேர்க்கை பெண்களுக்கு *அமங்கலை தோஷமாக* சில நூல்களில்

சொல்லப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு இச்சேர்க்கை வீரியத்தை கெடுப்பதாக அமையும். உடல்

பலவீனத்தையும், குருதிசோகை, விறைப்படைதலில் தாமதம் போன்ற

பாதிப்பை ஏற்படுத்தும்.

செவ்வாய் சூரியனை நோக்கி இருப்பது பாதிப்பை அதிகப்படுத்தும்.

சூரியனை கடந்து இருந்தால் பாதிப்பில் இருந்து மீண்டு வருவார்.

சூரியனை நோக்கி வரும் போது களத்திர தோஷம் பெரும்பாலும்

திருமணத்திற்கு முன்னர் இருந்தே பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தி விடுகிறது.

சூரியனை கடந்த கிரகம் திருமணத்தின் பின்னரான பிரச்சினையை தருகிறது.

அந்த ஸ்தானத்தில் சூரியனை விட சேர்க்கை பெற்றவன் ஆட்சி

உச்சமடைந்தால் தோஷம் விரைவாக நீங்கி விடுகிறது.

குறித்த கிரகம் பகை நீச ராசியானால் பாதிப்பு நீங்குவதில்லை.

தொடரக்கூடியதாக இருக்கும்.

சூரியன் 20° வரையில் தனித்து 2,4, 7, 8, 12 இல் நின்றால் களத்திர தோஷத்தின்

பாதிப்பை திருமணத்திற்கு முன்னர் இருந்தே தருகிறது.

20°க்கு மேல் 30°க்குள் இருக்கும் போது அந்த பாதிப்பில் இருந்து ஜாதகர்

மீண்டு வசதியாக வாழக்கூடும்.


[7/27, 7:19 AM

You might also like