Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

323)ஜோதிட நுணுக்கங்களும்* *பரிகாரங்களும்*

*திருமணத்திற்கு குரு பலம்*

திருமணமாவதற்கு குரு பலம் வந்தால் மட்டுமே திருமணம் ஆகி விடுமா?உண்மை என்ன?

என் மகளுக்கு,( மகனுக்கு) குருபலம் வந்து விட்டதாக குருபெயர்ச்சி பலனில் சொன்னார்கள்.

இந்த வருடம் திருமணம் ஆகி விடுமா?

சாதாரண பொது மக்களின் மனதில் தோன்றும் கேள்வி இது.

குரு வருட கோள்.

2,5,7,9,11 ல கோட்சார குரு வரும் போது நல்ல பலனுன்டு .பொருளாதார வளமுண்டு அதில்

மாற்மில்லை.

30 வயது தாண்டியும், 35 வயதை தாண்டியும் பலருக்கு திருமணமாகாமல் இருக்கும் நிலையில்,

குரு பலம் மட்டுமே வைத்து பலன் சொல்லுவது நிச்சயமாக சரிப்பட்டு வராது.

ஒரு ஜாதகத்தில் கோச்சாரபலன் 15% to 25% மட்டுமே வேலை செய்யும்.

திசை 50 சதவீதமும் ,புத்தி 20 சதவீதமும், அந்தரம் 5 சதவீதமும் மற்ற கோச்சார கிரகங்கள் 25%

பலன் கொடுக்கும்.

இதில் விதிவிலக்காக ஏழரை சனி ,அட்டமச் சனி நடந்தால் 50% பலன் நடைபெறும். சனியின்

தாக்கம் அதிகமிருக்கும்.

அதுமட்டுமல்லாமல் சனியை தாண்டி, குரு பெரிய அளவிற்கு மாற்றத்தை நிகழ்த்த மாட்டார்.

பொதுவாக நான் கோச்சாரத்தை மூன்றாம் பலனாகவே பார்க்கிறேன்.

உங்கள் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா,புத்திகள் முதலில் பலனை செய்யும்.

கோச்சாரம் முக்கியம் என்றாலும் அதற்கு இரண்டாம் ,மூன்றாம் நிலையை அளிப்பதே

சிறந்தது.

30 வயது தாண்டியும் முதிர்கன்னியாக இருக்கும் ஜாதகருக்கு, குரு பலமுறை ,குரு பலத்திற்கு

வந்தே இருப்பார்.
அது போல் இன்றைய காலகட்டங்களில், 12 வயதில் பெண் குழந்தைகள் பூப்பெய்தி

விடுகிறது.

ஒரு பெண் பூப்பெய்தி விட்டாள் என்றால், ஒரு குழந்தையை பெற்றெடுக்க தயாராகி

விட்டாள் என்றுதான் அர்த்தம்.

அரசாங்கமே 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்யக் கூடாது என்ற

சட்டத்தை அறிவித்திருக்கிறது.

கால,தேச,ஸ்ருதி,யுக்தி,வர்த்தமானம்

என்ற அடிப்படைக்கு ஏற்பத்தான் ஜோதிடத்தில் பலனை நிர்ணயிக்க வேண்டும்.

திருமணம் சார்ந்த அமைப்புகள் கோர்வையாக இருக்கும் பொழுது, முக்கியமாக, முறையான

திருமணத்தின் மூலம் தாம்பத்திய சுகம் அனுபவிக்க கூடிய காலம் என்ன, என்பதை அறிந்து

கொண்டுதான், பலனை நிர்ணயிக்க வேண்டும்.

ஆதலால் அவருடைய சுய ஜாதகத்தில் நடக்கும் தசா புத்திகள் பொருத்தும் ,அவருடைய சுய

ஜாதக அமைப்பு களத்திர தோஷம் பெற்றிருந்தால், அது எப்போது நிவர்த்தி ஆகிறது என்பதை

அறிந்து, பலனை நிர்ணயிக்க வேண்டும்.

குரு பலம் மட்டும் வந்தால் திருமணம் ஆகிவிடாது.

குரு பலத்திற்கும், திருமணத்திற்கும் சம்பந்தமே இல்லை. இதை பல ஜாதகங்களில், பல

ஜோதிடர்கள் அனுபவபூர்வமாக பார்த்திருப்பார்கள்.

சுய ஜாதகத்தில் திருமணம் சார்ந்த தசாபுக்திகள், சரியான வயதில் வரும் காலகட்டங்களில்,

குரு பலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நிச்சயமாக திருமணம் நடக்கும்.

குரு பலம் இருந்தால் தேவையான விஷயங்கள், எல்லாம் எளிதில் கைகூடும்.

அவ்வளவுதான்.

தற்போதைய கோட்சார அமைப்பில் ரிஷபம், கடகம்,கன்னி,விருச்சிகம்,கும்பம்,

இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் மட்டுமே குருபலம் உள்ளது.

இந்த 5 ராசிக்காரர்கள் தவிர ,மற்ற எந்த ராசிக்காரர்களுக்கும் குரு மீனத்தில் இருக்கும் போது

திருமணம் ஆகவே இல்லையா? யோசித்துப் பாருங்கள் உண்மை புரியும்.

ஆதலால் குரு பலத்திற்கும், திருமணத்திற்கும் சிறிதளவே புரிகிறதா

You might also like