Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 6

சமய விளையாட்டுகள்

விளையாட்டு 1: ‘தலைவரை அடையாளம் காணுதல்’


1. மாணவர்கள் குழுவில் பெரிய வட்டமாக அமருதல்.
2. குழுவில் ஒருவர் வெளியேற்றப்படுதல்;மறைவான இடத்தில் நிற்றல்.
3. அதற்குள்ளாக வட்டத்தில் ஒருவரைத் தலைவராக நியமித்தல்.
4. அத்தலைவரைப் பின்பற்றிப் பிற மாணவர்கள் சைகைகளைச் செய்தல்.
-கைதட்டல்
-தலை சொறிதல்
-தொடையைத் தட்டுதல்
-கன்னத்தில் இலேசாக தட்டுதல் போன்றவை
5. மறைவான இடத்தில் இருந்த நபர் திரும்பி வட்டத்திற்குள் வந்து தலைவரைத் தேடுதல்.
6. தலைவரைக் கண்டுப் பிடித்தால் தலைவருக்குத் தண்டனை வழங்கப்படும்; அல்லது கண்டுபிடிக்காவிட்டால் அந்நபருக்கும் தண்டனை வழங்கப்படும்
எடுத்துக் காட்டு-பாடல் படிக்க பணித்தல்.
-ஆடச் சொல்லுதல்.
7.தொடர்ந்து மற்றொருவரை நியமித்து படி 3-லிருந்து விளையாட்டைத் தொடரலாம்.
விளையாட்டு 2: எண்களுக்கு ஏற்ப செயல்படுதல்
1-என்றவுடன் நடத்தல்.
2- என்றவுடன் ஓடுதல்.
3-என்றவுடன் உட்காருதல்
4-என்றவுடன் நிற்றல்
மாணவர்கள் ஆசிரியர் கூறும் எண்களுக்கேற்ப சரியாக இயங்கவில்லையாயின் வட்டத்திலிருந்து வெளியேற்றப்படுதல்.
விளையாட்டு 3: ‘இராணி மங்கம்மா’

1. ஆசிரியர் தம்மை ‘இராணி மங்கம்மா’ என பெயரிட்டுக் கொள்ளுதல்.


2. ஆசிரியர் மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்தல்.
3. இராணி மங்கம்மாவிற்கு வேண்டுவதை இரு குழுவினரிடம் கேட்டல்.
4. இராணி மங்காம்மா கேட்டவற்றை விரைவாக தேடி கொண்டு வரும் குழுவினருக்குப் புள்ளிகள் வழங்கப்படுதல்.
5. நடவடிக்கை 4-ஐ மீண்டும் தொடர்தல்.
6. அதிக புள்ளிகள் பெறும் குழுவினரை வெற்றியாளராக அறிவித்தல்.
விளையாட்டு 4: ‘சரி,தவறு’
1. ஆசிரியர் நேர்மறை எதிர்மறை கூற்றுகளை ஒவ்வொன்றாகக் கூறுதல்.
2. மாணவர்கள் ஆசிரியர் கூறும் ஒவ்வொரு கூற்றிற்கு இறுதியிலும் ‘சரி ,தவறு’ என்ற தமது கருத்தைச் சைகை மூலம் தெரிவுப்படுத்துதல்.
3. ‘சரி’ என்றால் பெருவிரலை மேல்நோக்கியும் ‘தவறு’ என்றால் பெருவிரலைக் கீழ்நோக்கியும் காட்டுதல்.

தவறு
_________________________________________________________________________________________________________________________________________________________
சரி

#மலேசிய இந்துதர்ம மாமன்றம் #மலேசிய இந்து சங்கம்


விளையாட்டு 5 : கிழமைகள் விளையாட்டு
1. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,…….. ஞாயிறு என்று கூற வேண்டும். சனிக்கிழமையைத் தவிர்த்தல் வேண்டும்.
2. சனிக்கிழமையைக் கூறும் மாணவர்கள் விளையாட்டிலிருந்து நிராகரிக்கப்படுதல். இப்படியாக மாணவர்கள் அவ்விளையாட்டை விளையாடி மகிழ்தல்.

விளையாட்டு 6 : மின்சாரக் கடத்தி’


1. மாணவர்கள் வட்டமாக அமர்தல்.
2. முதல் மாணவர் தனது இடது கையை வலது தோல் பட்டையில் தட்டுதல்.
3. முதல் மாணவரின் வலது பக்கத்தில் உள்ள அடுத்த மாணவர் தொடர்ந்து ஒவ்வொருவராகப் பின்பற்றி வலது தோள்பட்டையைத் தட்டுதல்.
4. இடையே திடீரென ஒருவர் மாற்றி இடது பக்க தோள் பட்டையைத் தட்ட அந்நபருக்கு இடது பக்கத்தில் உள்ள மாணவர் தொடர்ந்து இடது தோளில் தட்ட வேண்டும்.அதை
மற்ற மாணவர்கள் பின்தொடர வேண்டும்.

5. அப்படி தடுமாறினால் அம்மாணவர் வட்டத்தை விட்டு வெளியேறுதல் வேண்டும்.


6. ஆசிரியர் இவ்விளையாட்டையொட்டிய விதிமுறைகளை மாணவர்களுக்கு முன்னரே அறிவித்தல் வேண்டும்.
விளையாட்டு 7: “முருகா காப்பாற்று!”
1) மாணவர்கள் வட்டத்தில் நிற்றல்.
2) பின்னர் குழுவில் ஒருவர் வட்டத்தின் உள்ளேயும் மற்றொருவர் வட்டத்தின் வெளியேயும் இருத்தல்.
3) வெளியே உள்ளவர் வட்டத்திற்குள் உள்ளவரைப் பிடிக்க முயலுதல்.
4) வட்டத்தில் இருக்கும் மற்ற நண்பர்கள் அனைவரும் வட்டத்தினுள் இருப்பவரைப் பிடிபடாமல் தடுத்தல்.
5) வட்டத்தினுள் இருப்பவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வட்டத்தில் உள்ள மற்றொருவரிடம் “முருகா காப்பாற்று!”என்று அபயம் கேட்டு அவரிடத்தில் நிற்றல்.
6) அபயக்கரம் கொடுத்தவர் வட்டத்தில் தனது இடத்தைக் கொடுத்து விட்டு வட்டத்தினுள் நுழைந்து விடுதல்.
7) வெளியில் உள்ளவர் புதிதாக நுழைந்தவரைப் பிடிக்க முயலுதல்.
விளையாட்டு 8: ‘ஆமாம் இல்லை’
1. ஆசிரியர் ‘ஆமாம்’ என்றால் மாணவர்கள் ‘பழம்’ எனவும்;ஆசிரியர் ‘இல்லை’ என்றால் மாணவர்கள் ‘கிளை’ எனவும் கூறுதல்.
2. ஆசிரியர் ‘ஆமாம்’,’இல்லை’ என்பதைத் அதைப் பின்பற்றி துரிதமாகவோ தாமதமாகவோ ‘பழம்’, ‘கிளை’ என்பதைக் கூறுதல்.
3. தவறாகக் கூறிய மாணவர்கள் குழுவிலிருந்து வெளியேற்றப்படுதல்.
4. மாணவர்கள் ‘ஆமாம் இல்லை’ விளையாட்டை விளையாடி மகிழ்தல்
விளையாட்டு 9: ‘கண்ணாடி’
1) ஆசிரியர் மாணவர்களுக்கு விளையாட்டை அறிமுகம் படுத்துதல்.
I. துர்க்கை (வீரம்), குறிக்கும் தோற்றத்தில் சூலம் ஏந்தி கம்பீரமான பாவனையில் நிற்றல்.
II. இலட்சுமி (செல்வம்) புன்னகை ததும்பும் முகம் காட்டி பாவனை செய்தல்.
III. சரஸ்வதி (கல்வி) கரங்களை இணைத்து படிக்கும் பாவணை புரிதல்.
2) ஆசிரியர் தேவியரின் பெயரைக் கூறியவுடன் மாணவர்கள் அந்த தெய்வத்திற்கு ஏற்ற பாவனையைச் செய்தல்.
3) விதிமுறைகளை மாற்றி செய்யும் மாணவர்கள் விளையாட்டை விட்டு வெளியேற்றல்.

#மலேசிய இந்துதர்ம மாமன்றம் #மலேசிய இந்து சங்கம்


விளையாட்டு 10: ‘வேட்டையாடுதல்’
1. மாணவர்கள் திறந்த வெளியில் இவ்விளையாட்டை விளையாடுதல் நலம்.
2. நான்கு முனைகள் அடையாளமிடப்படுதல்.
3. பின்னர், இரு மாணவர்கள் கைக்கோர்த்து பிற மாணவர்களை வேட்டையாடுதல்.
4. பிடிபட்ட மாணவர்கள் கைகோர்த்த இரு மாணவர்களுடன் இணைந்து ஏனைய மாணவர்களை வேட்டையாடுதல்.
5. கைகோர்த்தவர்கள் கைகளை விடக்கூடாது.
6. மாணவர்கள் நான்கு முனைகளையும் விட்டு வெளியேறக்கூடாது.
7. அது போலவே பிடிபடாதவர்கள் பிடிபட்டவுடன் வேட்டையாடும் வலையைப் பெரியதாக்கி அனைவரையும் சிக்க வைத்தல்.
8. மாணவர்கள் கைகளை அகல விரித்து வலையைப் பெரியதாக்கினால் அனைவரையும் விரைவில் பிடித்து விடலாம்.
விளையாட்டு 11: ‘விரைந்து எடு’
1. மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிதல்.
2. இரு குழுக்களும் ஒருவரை ஒருவரைப் பார்த்தவாறு எதிரெதிரே நிற்றல்.
3. முதல் குழு இடமிருந்து வலம் 1,2,3 என இறுதி நபர் வரை எண்ணுவர். அதுப்போலவே எதிர்மறையாக இரண்டாம் குழு வலமிருந்து இடம் 1,2,3 என இறுதி நபர் வரை
எண்ணுவர்.

4. இரு குழுவினருக்கும் இடையே வட்டமிட்டு அதனுள் ஏதாகினும் ஒரு பொருள் வைக்கப்படும்.


5. எடுத்துக் காட்டாக, ஏழாம் எண் என்றவுடன் இரு குழுவிலும் ஏழாம் எண் கொண்டவர் முன் ஓடி வந்து அப்பொருளை எடுக்க வேண்டும். பொருளை எடுத்தவரை
பொருளை எடுக்காதவர் தொட்டால் அவர் தோற்றார் குழுவினருக்குப் புள்ளியில்லை. அப்படி அவர் தொடும் முன்பே இவர் தன் குழுவை அடைந்து விட்டால்
அக்குழுவுக்குப் புள்ளிகள் வழங்கப்படும்.

6. இவ்விளையாட்டில் இரு குழுவினரும் துரிதமாகச் சாதுரியமாகச் செயல்பட வேண்டும்.


விளையாட்டு 12: ‘எழுத்துகளைச் சரியாக உச்சரித்தல்’
1. மாணவர்கள் ஒரே குழுவில் வட்டமாக அமருதல்.மாணவர்கள் A,B,C,D –Z என்று வரிசைகரமாக ஒவ்வொரு மாணவரும் கூறுதல்.
2. மாணவர்களில் எவரேனும் எழுத்தைப் பிழையாகக் கூறினால்
அவர் வட்டத்திலிருந்து வெளியேற்றப்படுதல்.

பின்னர், பக்கத்திலுள்ளவர் திரும்பவும் A,B,C,D என ஆரம்பிப்பார்

விளையாட்டு 13: ‘சொல்லும் செயலும் மாறானது’


1. மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவரைப் பார்த்தவாறு
நிற்றல்.

#மலேசிய இந்துதர்ம மாமன்றம் #மலேசிய இந்து சங்கம்


2. மாணவர்கள் சின்ன விநாயகர் என்றவுடன் கையை அகலமாகக் காட்டுதல்;பெரிய விநாயகர் என்றவுடன் கைகளைச் சிறியதாக்கிக் காட்டுதல்.
3. கட்டளைக்கு ஏற்ப செயல்படாதவர் குழுவிலிருந்து விலக்கப்படுவர்.
விளையாட்டு 14: ‘விழித்திரு’
1. ஒருவர் ராணி ராணி என இருமுறை தன் பெயரைத் தொடையைத் தட்டியவாரே உரைத்தப் பின் அடுத்தவரின் பெயரைக் கூறுதல். ‘ராணி, ராணி;தேவா,தேவா’
2. தொடர்ந்து பெயரை அழைத்தவர் மூன்றாமவரின் பெயரை தன் பெயரை இரு முறைக் கூறியபின் அவரின் பெயரை இரு முறைக் கூற வேண்டும்.
3. அவ்வாறு அடுத்தவர் பெயரை ஒருமுறை அழைத்தாலோ,அடுத்தவரின் பெயரை அழைக்க மறந்தாலோ ; தொடையில் தட்ட பறந்தாலோ அவர் வட்டத்தில் இருந்து
வெளியேற்றப்படுவார். பின் அடுத்தவர் விளௌயாட்டைத் தொடருதல்.

விளையாட்டு 15: ‘இராமர்,சீதா,அனுமன்’


1. மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவரைப் பார்த்தவாறு நிற்றல்.
2. சீதா என்றால் தலையிலும் இடுப்பிலும் கைகளை வைத்துக் கொண்டு ஆடுதல்.
3. இராமர் என்றால் மீசையை முருக்கி விட்டு கம்பீரமாக நிற்றல்.
4. அனுமன் என்றால் உடலைக் குரங்கைப் போல் சொறிந்துக் கொண்டு ஆடுதல்.
5. கொடுக்கப்பட்ட நேரத்தில் இரு குழுவினரும்,குழுவில் கலந்தாலோசித்தல்.ஊதல் ஊதியவுடன் குழுவிலுள்ள அனைவரும் ஒரே மாதிரி சைகைச் செய்தல்.
6. அவ்வாறு ஒரே மாதிரி சைகைச் செய்யாத குழுவினருக்குப் புள்ளிகள் வழங்கப்படாது; அடுத்தக் குழுவினருக்குப் புள்ளிகள் வழங்கப்படும்.
7. இரு குழுவினரும் ஒரே மாதிரி சைகை செய்தால் இரு குழுவினருக்கும் புள்ளிகளில்லை.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் விதிமுறை அட்டவணை:
குழு 1 குழு 2 வெற்றியாளர்
சீதா (பெண்) ராமர் (ஆண்) சீதா (பெண்)
ராமர்(ஆண்) அனுமன் (குரங்கு) ராமர் (ஆண்)

விளையாட்டு 16: ‘இறங்கு வரிசையில் எண்கள்”


1. மாணவர்கள் குழுவாக நின்று ஒவ்வொருவரும் எண்களை உதாரணமாக 20 முதல்-1 வரை இறங்கு வரிசையில் கூறுதல்.
2. அவ்வகையில் பிழையாகக் கூறும் மாணவர் குழுவிலிருந்து வெளியேற்றப்படுதல். மறுபடியும் எண்களை இறங்கு வரிசையில் எண்ணுவதை வெளியேறிய
மாணவரின் பக்கத்தில் உள்ளவரிடமிருந்து தொடங்குதல்.

விளையாட்டு 17: ‘சிதம்பர இரகசியம்’


1. மாணவர்கள் வட்டம் பிடித்து அமருதல்.
2. ஆசிரியர் முதல் மாணவரின் காதில் ஒரு இரகசியத்தைக் கூறுதல்.
3. முதல் மாணவர் அந்த இரகசியத்தை அடுத்த மாணவரிடம் கூறுதல்.
4. ஆசிரியர் கடைசி மாணவரிடம் தான் கூறிய இரகசியத்தைக் கேட்டல்.
எடுத்துக்காட்டு;
1.கொக்கு நெட்டக் கொக்கு கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
2. அண்ணாமலை உண்ணாமலை; அவர்கள் இருக்கும் மலை திருவண்ணாமலை

விளையாட்டு 18: ‘ஒரே மூச்சில் ஓம் சொல்லி ஓடுதல்’


1. மாணவர்கள் குழுவில் வட்டமாக நிற்றல்.
#மலேசிய இந்துதர்ம மாமன்றம் #மலேசிய இந்து சங்கம்
2. -ஒவ்வொரு மாணவரும் குழுவினரைச் சுற்றி ஒரே மூச்சில் ஓம் சொல்லி ஓடுதல்.
3. -அப்படி ஒரே மூச்சில் ஓம் சொல்லி ஓடாதவர்கள் குழுவிலிருந்து வெளியேற்றப்படுதல்.

விளையாட்டு 19: ‘விநாயகர் பந்து’


1. ஆசிரியர் மாணவர்களுக்கு விளையாட்டை அறிமுக படுத்துதல்.
2. மாணவர் வலது கையைத் யானையின் தும்பிக்கையைப் போலும், இடது கையைக் கொண்டு அவர்களின் மூக்கை பிடித்துக் கொள்ளுதல். பின்னர் பிற மாணவர்களை
விரட்டி தொடுதல்.

3. பிடிபட்ட மாணவர் மீண்டும் வலது கையைத் யானையின் தும்பிக்கையைப் போலும், இடது கையைக் கொண்டு அவர்களின் மூக்கை பிடித்துக் கொண்டு மற்ற
மாணவர்களை விரட்டி தொடுதல்.

விளையாட்டு 20: சைகை விளையாட்டு.


1. மாணவர்கள் இரு குழுவாகப் பிரிதல்.
2. ஆசிரியர் சை கை விளையாட்டை மாணவரிகளுக்கு அறிமுகப்படுத்துதல்.
3. ‘காந்திஜி’ என்றால் கூனி காட்டுதல்.
‘நேத்தாஜி’ என்றால் ‘சலுய்ட்’ அடித்தல்.
‘குருஜி’ என்றால் கரம் குவித்து வணங்குதல்.
4. ஆசிரியர் மாற்றி மாற்றி கூற மாணவர்கள் சரியாகச் செய்தல்.
5. சரியாகச் செய்த குழுவினரே வெற்றியாளராக அறிவிக்கப்படுதல்.

தொடர்ச்சி..

விளையாட்டு 21: கந்தன் &கண்ணன்


1. மாணவர்கள் குழுவில் வட்டமாக அமர்தல்.
2. -ஒவ்வொரு மாணவரும் இரு கைகளையும் (palm) தரையில் வைத்தல்.
3. கந்தன் என்றவுடன் கைகளை மேல்நோக்கியும் கண்ணன் என்றவுடன் கைகளைக் கீழ்நோக்கியும் விரைந்து காட்டப்பணித்தல்.
4. ஆசிரியர் மாற்றி மாற்றி கூற மாணவர்கள் சரியாகச் செய்தல்.
5. அப்படி தவறாக திருப்பியவர்களைக் குழுவிலிருந்து வெளியேற்றப்படுதல்.
6. சரியாகச் செய்த தனிநபரே வெற்றியாளராக அறிவிக்கப்படுதல்.

விளையாட்டு 22: குளம் & கரை


1. மாணவர்கள் குழுவில் வட்டமாக நிற்றல்.
2. குளம் என்றவுடன் ஒரு அடி முன் குதித்து நிற்றல்.
3. கரை என்றவுடன் ஒரு அடி பின் குதித்து நிற்றல்.
4. ஆசிரியர் மாற்றி மாற்றி கூற மாணவர்கள் சரியாகச் செய்தல்.
5. அப்படி தவறாக குதித்தவர்களைக்/அசைந்தவர்களைக் குழுவிலிருந்து வெளியேற்றப்படுதல்.
6. சரியாகச் செய்த தனிநபரே வெற்றியாளராக அறிவிக்கப்படுதல்.

விளையாட்டு 23: காசு பணம் துட்டு மணி2


1. மாணவர்கள் களைந்து ஆங்காங்கே நிற்றல்.
#மலேசிய இந்துதர்ம மாமன்றம் #மலேசிய இந்து சங்கம்
2. (தனிநபர்)10 முழுமையாக அமர்தல், 50 சென் கைகளை இடுப்பில் வைத்தல், 1 வெள்ளி கைகளைக் கீழ்நோக்கி இயல்பாய் நீட்டுதல்.
3. ஆசிரியர் மொத்த தொகையை அறிவித்தல்.
4. மாணவர்கள் தொகைக்கேற்ப நண்பர்களைச் சேர்த்து செய்து காட்டுதல்.
5. ஆசிரியர் மாற்றி மாற்றி தொகையைக் கூற மாணவர்கள் சரியாகச் செய்தல்.
6. அப்படி தொகைகேற்ப இயங்க/ செய்து காட்ட தவறியவர்களை வெளியேற்றப்படுதல்.
7. சரியாகச் செய்த தனிநபரே/ குழுவினரே வெற்றியாளராக அறிவிக்கப்படுதல்.

விளையாட்டு 24: பூ , காய், பழம்


1. மாணவர்கள் குழுவில் வட்டமாக அமர்தல்.
2. ஒரு மாணவர் மட்டும் வட்டத்தினுள்ளே தலைமேல் கூடையைச் சுமப்ப்பது போல சைகை செய்து கெண்டே பூ, காய், பழம் என்று கூவியபடியே நடத்தல்.
3. திடிரென குழுவில் உள்ள யாராவது முன் நின்று பூ என்று கேட்டல்.
4. கூடைசுமந்தவர் முன் நிற்பவர் ஏதாவது பூவை சற்றேன கூற வேண்டும்.
5. கூடை சுமப்பவர் மாற்றி மாற்றி (பூ/காய்/பழம்) ஆங்காங்கே நிறுத்தி கேட்டல் .
6. அப்படி தவறாக / சட்டென கூற தவறிய (தனிநபரை) குழுவிலிருந்து வெளியேற்றப்படுதல்.
7. சரியாகச் செய்த தனிநபரே வெற்றியாளராக அறிவிக்கப்படுதல்.

விளையாட்டு 19: ‘விநாயகர் பந்து’

விளையாட்டு 25: ‘சிதம்பர இரகசியம்’ செயல் முறை


5. மாணவர்கள் குழுவில் சுவரை நோக்கி நேர்கோட்டில் வரிசையாக நிற்றல் .
6. ஆசிரியர் பின்னாளிலிருந்து முதல் மாணவரிடம் ஒரு சைகையை / சிறு சூழலை செய்து காட்டுதல்.
7. முதல் மாணவர் அந்த சைகையை திரும்பி முன் நிற்கும் மாணவரிடம் செய்து காட்டுதல்.
8. ஆசிரியர் கடைசி மாணவரிடம் செய்து காட்டப் பணித்தல்.
9. சிறிதும் மாறாமல் சரியாக செய்த குழுவினரே வெற்றியாளர்.

விளையாட்டு 26: நா பிரல் பயிற்சி


1. ஆசிரியர் வரியைக் கூறுதல்.
2. மாணவர் பிழையில்லாமல் அவ்வரிகளை விரைவாக 3 முறை கூறுதல்.
3. அப்படி தவறாக / சட்டென கூற தவறிய (தனிநபரை) குழுவிலிருந்து வெளியேற்றப்படுதல்.
4. சரியாகச் செய்த தனிநபரே வெற்றியாளராக அறிவிக்கப்படுதல்.

#மலேசிய இந்துதர்ம மாமன்றம் #மலேசிய இந்து சங்கம்

You might also like