Lease Agreemnet

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

லீஸ் ஒப்பந்தப் பத்திரம்

2024-ம் வருடம் மே மாதம் 30-ந் தேதி, சென்னை-600 118, முத்தமிழ் நகர் II பிரதான

சாலை 5 வது பிளாக், எண் 285 என்ற முகவரியில் வசிக்கும் திருமதி. M. வெங்கடரத்தினம்
w/O திரு.மணி அவர்கள் 1-வது பார்ட்டியும் வீட்டு உரிமையாளரும் ஆவார்.

சென்னை 600118, கொடுங்கையூர் காவேரி நகர் 16 வது தெரு எண் 2/2 என்ற

முகவரியில் வசித்து வரும் திரு. P. விநாயக மூர்த்தி S/O V.K.பெரியசாமி அவர்கள் 2-


வது பார்ட்டியும், குத்தகைக்கு வருபவரும் ஆவார்.

ஆகிய நாம் இருவரும் சம்மதித்து எழுதி கொண்ட லீஸ் ஒப்பந்தப் பத்திரம்

என்னவென்றால்,

2-வது பார்ட்டி 1-வது பார்ட்டி


(குத்தகைதாரர்) (உரிமையாளர்)

2
மேற் சொன்ன 1-வது பார்ட்டிக்குச் சொந்தமான 2024-ம் வருடம் மே மாதம் 30-ந் தேதி,

சென்னை-600 118, முத்தமிழ் நகர் II பிரதான சாலை 5 வது பிளாக் எண் 285 (II FLOOR)

என்ற முகவரியில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2-வது பார்ட்டி குடியிருப்பதற்காக வேண்டி

1-வது பார்ட்டியினை அணுகி லீஸ்க்கு கேட்க அதற்கு 1-வது பார்ட்டி 2-வது பார்ட்டிக்கு லீசுக்கு
விடுவதற்க்கு ஒப்பு கொண்டு கீழ்க்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை
எழுதிக் கொண்டுள்ளனர்.

நிபந்தனைகள்:-

1. நம்மில் 2-து பார்ட்டி மேற்படி வீட்டிற்கு லீஸ் தொகையான ரூ. 3,60,000/- (ரூபாய்
மூன்று லட்சத்து அறுபதாயிரம் மட்டும்) 1-வது பார்ட்டி வசம் கொடுத்து விட
சம்மதித்துள்ளார்.

2. 1-வது பார்ட்டியிடம் 2-வது பார்ட்டி ரூபாய் மூன்று லட்சத்து அறுபதாயிரம் மட்டும்

ரொக்கமாக செலுத்தியுள்ளார். மேற்படி தொகையை நம்மில் 2-வது பார்ட்டி வீட்டினை காலி

செய்து கொண்டு போகும் போது 1-வது பார்ட்டி வட்டியின்றி தொகையை திருப்பிக் கொடுத்து
விட வேண்டியது.

3. 2-ம் பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகப்படுத்தும் மின்சாரக் கட்டணத்தை மீட்டார்

அளவுப்படி மின்சார அலுவலகத்திற்கு தானே செலுத்த வேண்டும். 2-வது பார்ட்டி குடியிருக்கும்

சமயத்தில் மின் கட்டணம் இருந்தால் அதையும் 2-வது பார்ட்டியே செலுத்த வேண்டும்.

4. 1-வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2-வது


பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் அனைத்து
உபகரணங்களையும் மின் இணைப்புகளையும் பழுதற்ற நிலையில் ஒப்படைக்க வேண்டும்.

2-வது பார்ட்டி 1-வது பார்ட்டி


(குத்தகைதாரர்) (உரிமையாளர்)

5. இரண்டாவது பார்ட்டி மேற்படி வீட்டை காலி செய்யும் போது ஒயிட் வாஷ் (பெயிண்ட்)
அடித்து தர சம்மதிக்கிறார். அப்படி இல்லையெனில் அதற்காக தொகையை லீஸ்

தொகையிலிருந்து கழித்து மீதி தொகை 1- வது பார்ட்டி 2-வது பார்ட்டியிடம் கொடுக்க


வேண்டும்.
6. மேலும் வீட்டிற்கு தண்ணீர் கட்டணமாக மாதம் ரூபாய் 400/- (எழுத்தால் ரூபாய்

நானூறு மட்டும்)-ஐ 2-வது பார்ட்டி 1-வது பார்ட்டி வசம் செலுத்த சம்மதிக்கிறார்.

7. இந்த லீஸ் ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 24 மாத காலக் கெடுவிற்கு உட்பட்டது.


அதாவது 30.05.2024 தேதி முதல் 29.05.2026 தேதி வரையிலான 24 மாத காலத்திற்கு
உட்பட்டது.

8. 24 மாதத்திற்குள் 1-வது பார்ட்டிற்கு வீடு தேவைப்பட்டால் 2-வது பார்ட்டிக்கு 3 மாத


முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2-வது பார்ட்டி வீட்டை காலி செய்ய

விரும்பினால் 3 மாத முன்னறிவிப்பு கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

9. மேற்படி லீஸ் ஒப்பந்தப் பத்திரத்தை லீஸ் காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின்
பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

10. 2-வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைக் தவிர வேறு எந்த விதமான
உபயோகத்திற்கும் பயன்படுத்தக்கூடாது.

11. 2-வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ லீசுக்கோ
அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

12. மேற்படி 2-வது பார்ட்டி வீட்டு உரிமையாளருக்கோ, குடியிருப்போருக்கோ அல்லது அக்கம்


பக்கத்தினருக்கோ பிரச்சனையைத் தரும் விதத்தில் நடந்து கொள்ளும் பட்சத்தில் மேற்படி 2-
வது பார்ட்டி வீட்டை காலி செய்ய 1-வது பார்ட்டிக்கு முழு உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சோர்த்து மனப்பூர்வமாய் சம்மதித்து கீழ்கண்ட

சாட்சிகள் முன்னிலையில் எழுதி கொண்ட லீஸ் ஒப்பந்தப் பத்திரம்.

2-வது பார்ட்டி 1-வது பார்ட்டி


(குத்தகைதாரர்) (உரிமையாளர்)

சாட்சிகள்: 1. சாட்சிகள்: 2.

You might also like