Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 24

குருவணக்கம்

ஓம் குரு வாழ்க (ஒரு முறை)


ஓம் குருவே துணை
ஓம் குருவே எல்லாம்
ஓம் குருவே போற்றி
ஓம் குருவே சரணம்.
ஓம் குருவே அனைத்திற்கும் விழியாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் வழியாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் வழித்துணையாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் வழிப்பயணாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் வழிகாட்டியாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் எல்லாமாக இருக்கின்றார்
ஓம் குருவே போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்

வேண்டுதல்
ஒம் பேரரு வள்ளல் ஞான வேந்து ஞானாச்சாரியார் குவளைய குருபீடம்
அந்தனல் அண்ணல் எங்களுடைய குருதேவர்
பன்னிரெண்டாவது பதினென் சித்தர் பீடாதிபதி மடாதிபதி
குருமஹாசன்னிதானம் ஞானகுரு அரசயோகி சித்தர் கருவூரார்
அவர்களுடைய குருவுல திருவுல ஒப்புதலும்
குருவாழையும் திருவாளையும் பெற்று
இப்பூசையைக் கூறுகின்றோம்.
குருவருளால் திருவருளால் எங்களையும் எங்கள் குடும்பத்தார்
அனைவரையும், இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தையும்
பாதுகாத்து நல்லருள் புரிந்திடுங்கள்.

எங்களுக்கும் எங்கள் குடும்பத்தார்


அனைவருக்கும், இவ்வுலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உள்ள
நாள், கோள், விண்மீன், ராசிநிலை பாதிப்புகள்
அனைத்தையும் அகற்றி நல்லருள் புரிந்திடுங்கள்
எங்களுக்கும், எங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும், இவ்வுலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உள்ள
உள்ள ஆழ்வினை, ஊழ்வினை, சூழ்வினை, வினை பாதிப்புகள்
எவையாக இருப்பினும் அவற்றையெல்லாம் அகற்றி
குருவருளும், திருவருளும் எங்களுக்கு சித்திக்க
நல்லருள் புரிந்திடுங்கள்…

சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்

தொல்லையிரும் பிறவிச் சூழும் தலைநீக்கி


அல்ல லறுத்து ஆனந்த மாக்கியதே
யெல்லை மருவா நெறிகளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் யெனும் தேன்..

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க


இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க


பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி


தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி


எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்


பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்


மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா


பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்


ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்


சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

மறைந்திட மூடிய மாய இருளை


அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்


கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே


மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே


ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்


சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே


போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்


தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்


மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று


சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)

திருச்சிற்றம்பலம்!!!

தொடக்கம்

கீர்த்தித் திருஅகவல்

தில்லை மூதூர் ஆடிய திருவடி


பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,

எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,

மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,

துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,

என்னுடை இருளை ஏறத் துரந்தும்,

அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்

குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,

மன்னும் மா மலை மயேந்திரம் அதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்;

கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,

நல்லாளோடு நயப்புறவு எய்தியும்;

பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும்,

எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்

விராவு கொங்கை நல் தடம் படிந்தும்;

கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;

மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;

மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து

உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;

நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்,

அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்;

வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்,

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி,

ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி,

குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசை,

சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்;


வேலம்புத்தூர் விட்டேறு அருளி,

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்;

தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர்

வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்;

மொக்கணி அருளிய முழுத் தழல் மேனி

சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்;

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்;

ஆண்டுகொண்டு அருள அழகு உறு திருவடி

பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,

ஈண்டு கனகம் இசையப் பெறாஅது,

ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப,

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்;

அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி,

இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்;

மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து,

குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;

ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;

உத்தரகோசமங்கையுள் இருந்து,

வித்தக வேடம் காட்டிய இயல்பும்;

பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,

தூ வண மேனி காட்டிய தொன்மையும்;

வாதவூரினில் வந்து, இனிது அருளி,

பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;

திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;


பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,

பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;

தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து,

நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;

விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,

குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்;

பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு

அட்ட மா சித்தி அருளிய அதுவும்;

வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,

காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;

மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;

ஓரியூரில் உகந்து, இனிது அருளி,

பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்

கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;

தேன் அமர் சோலைத் திருவாரூரில்

ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;

இடைமருது அதனில் ஈண்ட இருந்து,

படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;

திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,

மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;

சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,

பாவகம் பல பல காட்டிய பரிசும்;


கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;

ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;

ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;

திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்;

கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்;

கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;

புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;

அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,

சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,

இந்திர ஞாலம் போல வந்தருளி,

எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,

தானே ஆகிய தயாபரன், எம் இறை,

சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,

அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்

சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;

மந்திர மா மலை மயேந்திர வெற்பன்,

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,

எம்தமை ஆண்ட பரிசுஅது பகரில்

ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,

நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;

ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்

ஆனந்தம்மே, ஆறா அருளியும்;

மாதில் கூறு உடை மாப் பெரும் கருணையன்

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்;

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன்


கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்;

மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,

தூய மேனி, சுடர்விடு சோதி

காதலன் ஆகி, கழுநீர் மாலை

ஏல்வு உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;

அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்

பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்;

மீண்டு வாரா வழி அருள் புரிபவன்

பாண்டி நாடே பழம் பதி ஆகவும்,

பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்

உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்,

ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய

தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,

இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி

அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி;

நாயினேனை நலம் மலி தில்லையுள், (3)

கோலம் ஆர்தரு பொதுவினில், `வருக' என,

ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி;

அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்(2)

ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்;

எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,

மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்,

பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்,

கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,

`நாத! நாத!' என்று அழுது அரற்றி,


பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;

`பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று

இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;

எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்

பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்

கனிதரு செவ் வாய் உமையொடு, காளிக்கு,

அருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகை,

இறைவன், ஈண்டிய அடியவரோடும்,

பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன் (3)

ஒலிதரு கைலை உயர் கிழவோனே. (2)

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

சிவபெருமான் துதி

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஹர ஹர நமப்பார்வதி நம போற்றி
ஹரஹர மஹாதேவப் பாதமே போற்றி
ஓம் நமச்சிவாய சிவாயநம பராசக்தி போற்றி
ஓம் நமச்சிவாய பராசக்தி சிவாயநம போற்றி
ஓம் சிவாயநம நமச்சிவாய பராசக்தி போற்றி
ஓம் பராசக்தி நமச்சிவாய சிவாயநம போற்றி
ஓம் பராசக்தி சிவாயநம நமச்சிவாய போற்றி
ஓம் சிவா, சிவா, சிவா, சிவா, சிவா..
ஓம் வாசி, வாசி, வாசி, வாசி, வாசி..
ஓம் சிவ, சிவ, சிவ, சிவ, சிவ..
ஓம் வசி, வசி, வசி, வசி, வசி..
ஓம் அகர உகர மகரமே போற்றி

ஓம் அங் உங் மங் போற்றி


அருளாட்சிக்காக அருவ உருவ, அருவுருவ, உருவ அருவமெல்லாம்
பிழைக்கட்டும், தழைக்கட்டும், செழித்தெலட்டும்
அருளாட்சி அமைந்திடுக, வெற்றி பெறுக, ஓங்குக
சித்தநெறிக்கு மாறானவையெல்லாம்
நலியட்டும், மெலியட்டும், அகன்று ஆற்றல் அற்றிடட்டும்
சித்தநெறிக்கு வேறானவையெல்லாம்
நலியட்டும், மெலியட்டும், அகன்று ஆற்றல் அற்றிடட்டும்
சித்தநெறிக்கு முரணானவையெல்லாம்
நலியட்டும், மெலியட்டும், அகன்று ஆற்றல் அற்றிடட்டும்
சித்தநெறிக்கு எதிரானவையெல்லாம்
நலியட்டும், மெலியட்டும், அகன்று ஆற்றல் அற்றிடட்டும்

சித்தநெறிக்கு பகையானவையெல்லாம்
நலியட்டும், மெலியட்டும், அகன்று ஆற்றல் அற்றிடட்டும்
சித்தநெறிக்கு நகையானவையெல்லாம்
நலியட்டும், மெலியட்டும், அகன்று ஆற்றல் அற்றிடட்டும்

ஓம் நசி, நசி, நசி, நசி, நசி


ஓம் மசி, மசி, மசி, மசி, மசி..
ஓம் கருக்களே போற்றி
ஓம் குருக்களே போற்றி
ஓம் தருக்களே போற்றி
ஓம் திருக்களே போற்றி
ஓம் தாத்தாக்களே போற்றி
ஓம் ஆத்தாக்களே போற்றி
ஓம் அம்மையப்பங்களே போற்றி
ஓம் பிண்டத்தவர்களே போற்றி
ஓம் அண்டத்தவர்களே போற்றி
ஓம் பேரண்டத்தவர்களே போற்றி
ஓம் அண்ட பேரண்டத்தவர்களே போற்றி
ஓம் மானுட உணர்வு பிழைக்கட்டும்
ஓம் மனித பற்றும், ஒற்றுமையும் பொழிவுரட்டும்
ஓம் பக்தி, சக்தி, சித்தி எழுச்சியுரட்டும்
ஓம் சமத்துவ, சகோதரத்துவ தத்துவம் செழுச்சியுரட்டும்
ஓம் பொதுவுடைமை, ஞானம் விழிச்சியுரட்டும்
ஓம் ஆவி, ஆன்மா, ஆருயிர் வளமாகட்டும்
ஓம் அன்பும், அமைதியும் நன்மையாகட்டும்
ஓம் நிறைவும், நிம்மதியும் நிறைவாகட்டும்
ஓம் ஆன்மநேய ஒருமைப்பாடு வலிமையாகட்டும்
ஓம் அருளாட்சி தழைத்தெலட்டும்
ஓம் அருளாட்சி செழித்தோங்கட்டும்
ஓம் அருளாட்சி பயன் நல்கட்டும்

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்.

வேண்டுகோள் வாசகம்

ஓம் நமச்சிவாய பராசக்தி சிவாயநம


ஓம் சிவாயநம பராசக்தி நமச்சிவாய
ஓம் சிவா வாசி, ஓம் சிவா வாசி, ஓம் சிவா வாசி,
ஓம் சிவா வாசி, ஓம் சிவா வாசி
ஓம் சிவ வசி, ஓம் சிவ வசி, ஓம் சிவ வசி,
ஓம் சிவ வசி, ஓம் சிவ வசி
ஓம் முண்டங்களே, பிண்டங்களே, உயிரினங்களே, பயிரினங்களே
ஓம் அண்டங்களே, பேரண்டங்களே, அண்டபேரண்டங்களே
விழிச்சிகொள்க, எழுச்சிகொள்க, செழுச்சிபெறுக
யாமே அனைத்துமாக உதவுக..
காயந்திரி மந்திரம் கூறுகிறேன்
பயனாகட்டும், சுவையாகட்டும்
முப்பிறப்பும், மறுபிறப்பும்
இப்பிறப்பிலேயே நிறைவாகட்டும்.

ஆவி ஆன்மா ஆருயிர் மூன்றும் ஒன்றாகட்டும்


அனைத்திற்கும் தாயாக, ஆயாவாக, அப்பனாக, தாத்தாவாக இருப்பவர்களே
ஏற்றிடுக, ஏற்றிடுக, ஏற்றிடுக, ஏற்றிடுக,
காத்திடுக, காத்திடுக, காத்திடுக, காத்திடுக..

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

நந்திதேவர் காயந்திரி மந்திரம் (48 முறை)

ஓம் நந்தியே நந்திதேவரே அதிகாரநந்தியே


நந்தியெம்பேருமானே..
நந்தீசுவரரே மோனப்பொருளே ஞானபீடமே
தேவரன்றி பிறரும் உய்ய
பிரதோசத் திருநடனம் நிகழச்
செய்த மேலோனே
அன்பின் வடிவமே வாழ்க..

சிவ (சீவ) காயந்திரி மந்திரம் (8 முறை)


ஓம் நமச்சிவாய சிவாயநம போற்றி
ஓம் பராசக்தி சித்திமுத்தி முத்தி போற்றி
தத்துவப்பிறப்பாய வித்தே மகேஷா
மகாதேவே நீ தீயே ஆகி
தன்னோடு உருத்திர பிறப்பை சாதித்தாய்
தழைத்தெழு நீ, தழைத்தெழு நீ, தழைத்தெழு நீ
அடியேன் பிழைக்க
அருளுவீர், அருளுவீர், அருளுவீர்
ஓம் அகர, உகர, மகரமே சுவையாகுக.
ஈசுவரி காயந்திரி மந்திரம் (8 முறை)

ஓம் ஈசுவரி நாயகி நாதம்


சித்திரக்கோளப் பாதம்
ஓம் சர்வேசுவரி நாயகி சித்தம்
முத்திரைக் கோளவடிவம்
ஓம் பரமேசுவரி நாயகிப் போதம்
ஞானக் கோளத்தோற்றம்
ஓம் மகேசுவரி நாயகி ஓதம்
பேரின்பக் கோளம்
ஓம் மஈசுவரி நாயகி வேதம்
சித்தி மூலத்தளம்
நாமாகுக நமக, சுவையாகுக சுவாகா
தாதாட்சுது, ததாசுத்துஊ

பிரணவ ஓங்கார தேவகுமார காயந்திரி மந்திரம் (8 முறை)

ஓம் காயந்திரிந்து ஆவி ஆன்மா ஆருயிர் ஒன்றாகிடுக


பிள்ளையார் கணபதி விநாயகர் மனைவியோரோடு ஏந்தருளுக
ஓம் ஓக, யாக யக்ஞ வேல் வித்தியே மூலாதாரப் பிரணவமாகுக
சித்தி முத்தி, அத்தி முத்தி வல்லவையாம் தீமைத் தீக்கும் தீயே
இருள் அகற்றிடுக, இன்னல் தவிர்த்திடுக, அருள் நலம் வழங்கிடுக..

முருகன் காயந்திரி மந்திரம் (8 முறை)

ஒம் நாதாந்த வித்தாந்த ஓதங்கள் செயலாகுக


ஓம் சித்தாந்த வித்துக்கள் பயிராகிப் பயனாகுக
ஓம் ஆலமர்க் கடவுற் புதல்வர் முருகர் காத்திடுக
ஓம் வடிவேல வாழ்வியல் பேரின்பம் நல்கிடுக
ஓம் சரவணபவா குகா வேலா முருகா கந்தா
நாமாகிடுக நமக..

வேண்டுகோள் வாசகம்

ஓம் நமச்சிவாய பராசக்தி சிவாயநம


ஓம் சிவாயநம பராசக்தி நமச்சிவாய
ஓம் சிவா வாசி, ஓம் சிவா வாசி, ஓம் சிவா வாசி,
ஓம் சிவா வாசி, ஓம் சிவா வாசி
ஓம் சிவ வசி, ஓம் சிவ வசி, ஓம் சிவ வசி,
ஓம் சிவ வசி, ஓம் சிவ வசி
ஓம் முண்டங்களே, பிண்டங்களே, உயிரினங்களே, பயிரினங்களே
ஓம் அண்டங்களே, பேரண்டங்களே, அண்டபேரண்டங்களே
விழிச்சிகொள்க, எழுச்சிகொள்க, செழுச்சிபெறுக
யாமே அனைத்துமாக உதவுக..
காயந்திரி மந்திரம் கூறுகிறேன்
பயனாகட்டும், சுவையாகட்டும்
முப்பிறப்பும், மறுபிறப்பும்
இப்பிறப்பிலேயே நிறைவாகட்டும்.

ஆவி ஆன்மா ஆருயிர் மூன்றும் ஒன்றாகட்டும்


அனைத்திற்கும் தாயாக, ஆயாவாக, அப்பனாக, தாத்தாவாக இருப்பவர்களே
ஏற்றிடுக, ஏற்றிடுக, ஏற்றிடுக, ஏற்றிடுக,
காத்திடுக, காத்திடுக, காத்திடுக, காத்திடுக..

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்


கோளறு பதிகம் முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள்
ஏதும் புரியாது.
கோளறு பதிகம் இரண்டாவது பாடல்:
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும்
புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
கோளறு பதிகம் மூன்றாம் பாடல்:
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும்
சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.
கோளறு பதிகம் நான்காம் பாடல்:
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும்
சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
கோளறு பதிகம் ஐந்தாம் பாடல்:
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின்
அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

கோளறு பதிகம் ஆறாம் பாடல்:


வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை
ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

கோளறு பதிகம் ஏழாம் பாடல்:


செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை
ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் எட்டாம் பாடல்:


வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை
ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

கோளறு பதிகம் ஒன்பதாம் பாடல்:


பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும்
சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும்
நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் பத்தாம் பாடல்:


கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு.
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின்
திருநீறு.

கோளறு பதிகம் பதினோறாம் பாடல்:


தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும்.
இது நம் ஆணை.

பன்னிரு திருமுறை - மூன்றாம் திருமுறை ; திருஞானசம்பந்தர்

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :
திருப்பாற்கடலில் , அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித்
தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை
நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன்திரு வடிகளைத்
தொழுது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில்
வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் )
தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 2
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும் , பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே !


இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால்
துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப்
பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப்
பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ?
திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய
விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 3
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கங்கையையும் , நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி
யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும் , கனவிலும் , மனம்
ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு
வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே !
( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற
வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில் , அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 4
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :
கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி
செய்தவனே ! தும்மல் , அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர்
போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது . திருவாவடுதுறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ
? ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத்
தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 5
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும் , மை போன்ற கருநிறக்


கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும் , பிறரால்
இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் , உன்னுடைய செம்மை
வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல் , வேறெதனையும் நான் சிந்தை செய்யேன் .
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும்
முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான
பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 6
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி , நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத்


திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும் , எம் தந்தையே !
உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது . அங்ஙனமிருக்க
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ . (
உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத்
தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
பாடல் எண் : 7
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை , அவனுடைய
வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும் ,
அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும்
நவிலாது . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார்
செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு
அழகாகுமா ?

பாடல் எண் : 8
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :
அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ்
அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம்
தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை
செய்ததில்லை . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத்
தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது
உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 9
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :
திருமாலும் , மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே !
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும் , பசியால்
களைத்திருக்கும் நிலையிலும் , உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப்
போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது . அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை
இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத்
தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 10
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்


அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு


அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் , தலைவா ! உன் திரு வடிகளைப்
போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத்
தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது
உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 11
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

பொழிப்புரை :
அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற
நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய
ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள்
வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர் . துன்பம் தரும் இம்மண்ணுலகில்
மீண்டும் வந்து பிறவார் .

முழு அர்ச்சினை மந்திரம்

ஓம் பராசக்தி நமச்சிவாய போற்றி


ஓம் சித்தர்களே போற்றி
ஓம் அருவ, உருவ, அருவுருவ சித்தியாளர்களே போற்றி
வானாகி, மண்ணாகி,
வழியாகி, ஒளியாகி
ஊனாகி, உயிராகி
உண்மையுமாய், இன்மையுமாய்..
கோணாகி ஆன் எனதன்று
அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயே
உனை வாழ்த்தி வணங்குகிறேன்
ஏனோவாகி இன்னல் பல்லாற்றானும் உழல்பவர்க்கு
நானாகி அடியேன் நலம் வேண்டுகிறேன்
தானாகவேத் தழல் தரு
கொடுமைமிகு துயரமெல்லாம்
வீணாகி, விலகி ஓடி ஒழியட்டும்..
ஓம் நசி நசி, ஓம் நசி நசி, ஓம் நசி நசி, ஓம் நசி நசி
ஓம் மசி மசி, ஓம் மசி மசி, ஓம் மசி மசி, ஓம் மசி மசி
ஓம் வசி வசி, ஓம் வசி வசி, ஓம் வசி வசி, ஓம் வசி வசி
ஓம் சிவ சிவ, ஓம் சிவ சிவ, ஓம் சிவ சிவ, ஓம் சிவ சிவ
ஓம் வாசி வாசி, ஓம் வாசி வாசி, ஓம் வாசி வாசி, ஓம் வாசி வாசி
ஒம் சிவா சிவா, ஓம் சிவா சிவா, ஓம் சிவா சிவா, ஓம் சிவா சிவா
ஓம் அம்மையப்பனே போற்றி
ஓம் அருட்குருவே போற்றி
ஓம் அன்புரு ஊற்றே போற்றி
ஓம் இன்பச்சோலையே போற்றி
ஓம் சித்திச்சாலையே போற்றி
ஓம் முத்திமன்றே போற்றி

கற்பூரம் பாக்கு வெற்றிலை பழம் தேங்காய்


பக்குவமாய் பண்ணிய பலகாரங்கள் பலவும் படைத்தேன்
ஏற்றிடுக, ஏற்றிடுக, ஏற்றிடுக

அனைத்தையும் காத்திடுக, காத்திடுக, காத்திடுக


அருள் செழித்திடுக, செழித்திடுக, செழித்திடுக
எங்கும் நலம் விளைக, நலம் விளைக, நலம் விளைக
நான்மறையே, நான்முறையே, நான் நெறியே, நான் வேதமே
வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க
ஓம்.

பூசை முடிவு மந்திரம்

ஓம் அருட்கலைகள் நாமாகுக


ஓம் ஆயக்கலைகள் நாமாகுக
ஓம் கடவுட்கலைகள் நாமாகுக
ஓம் தெய்வீகக்கலைகள் நாமாகுக
ஓம் பேய்க்கலைகள் நாமாகுக
ஓம் நோய்க்கலைகள் நாமாகுக
ஓம் தேய்க்கலைகள் நாமாகுக
ஓம் நான்மறைகள் நாமாகுக
ஓம் நான்முறைகள் நாமாகுக
ஓம் நான்நெறிகள் நாமாகுக
ஓம் நான் வேதங்கள் நாமாகுக
ஓம் நான்வேதங்கள் நாமாகுக
ஓம் ஞான்ங்கள் நாமாகுக

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்


இரண்டாம் திருமுறை – திருநீற்றுப் பதிகம் – திருஞானசம்பந்தர்.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு


சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு


போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு


சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு


பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு


பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு


வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு


பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு


பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட


கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்


போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)

Thiruneetru Pathigam Lyrics Meaning

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது
திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது.
எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து
ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப்
போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது.
தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும்
தரவல்லது.

திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை
கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம்


செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத்
தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.

கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச்


செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது.
உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.

பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது.
நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது.
மெய்ப்பொருளை உணர்த்துவது.
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது.
வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான
இன்பம் அளிப்பது.

மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை (கமண்டலத்தை) ஏந்திய
கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத்
திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளை அடைந்தவரும் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப்
புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில்
பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

தென்னாடுடைய சிவனே போற்றி


என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கயிலைமலையானே போற்றி போற்றி!!!

சிவவாக்கியம் – சிவ வாக்கியர்

ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய


ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய
சரியை விலக்கல்
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
ஞான நிலை
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே ( ஓம் )
இதுவுமது
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமே ( ஓம் )
யோக நிலை
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ( ஓம்)
விராட்சொரூபம்
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமான மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல் கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ ( ஓம்)
தெய்வ சொரூபம்
உருவுமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்ற நேர்மையாவர் காணவல்லரோ ( ஓம் )
தேகநிலை கூறல்
மண்கலங்கவிழ்ந்தபோதுவைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நம்கலங்கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயமென்ன மாய மீசனே ( ஓம் )
அக்ஷர நிலை
ஆனவ ஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவ ஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவ ஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவ ஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே ( ஓம்)
இதுவுமதி
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே ( ஓம்)
ஞானநிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை( ஓம்)
ஞானம்
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம் பொன்னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ( ஓம்)
அக்ஷர நிலை
அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)
பிரணவம்
மூன்று மண்டலத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே (ஓம்)
பஞ்சாட்சர மகிமை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய் நாதனே (ஓம்)
கடவுளின் உண்மை கூறல்
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகான
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை யல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டோரினிப் பிறப்பதிங்கில்லையே (ஓம்)
இராம நாம மகிமை
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த சீர்
ராம ராம ராம ராம என்னும் நாமமே( ஓம் )
அத்துவிதம்
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ( ஓம் )
அம்பலம்
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே ( ஓம் )
பஞ்சாட்சரம்
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)
பஞ்சாட்சர மகிமை
ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம் நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம் நம சிவாயமே உட்கலந்து நிற்குமே ( ஓம் )

திருவருட்பா – இராமலிங்க அடிகளார்

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்


என் எண்ணில் கல்ந்தே இருக்கின்றான்..

You might also like