அறிக்கை 2023 பெற்றோர் ஆசிரியர் சங்கம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 12

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

தேசிய வகைத் லனாட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளி

ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை 2023/2024

திகதி:25.06.2023 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:மாலை மணி 2.00

இடம்: பள்ளி மண்டபம்

வருகை: 49 பேர்.

1.இறைவாழ்த்து

1.1 செல்வன் வசீகரன் ரவிசந்திரன் அவர்களின் இறைவாழ்த்தோடு பெற்றோர்

ஆசிரியர் சங்க கூட்டம் தொடங்கியது.

2.வரவேற்புரை (பெ.ஆ.ச.செயளாளர் ஆசிரியர் இரா.செல்வராஜா)

2.1 பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் கூட்டத்தினர் அனைவரையும்

வரவேற்று நன்றி கூறினார். இவ்வாண்டு பள்ளி நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற

பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் நல்கிய ஒத்துழைப்பிற்கு சங்க

செயளாலர் எனும் முறையில் தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர்

தெரிவித்து கொண்டார்.. அவரின் வரவேற்பு உரையோடு கூட்டம் இனிதே

தொடங்கியது.

3 தலைமையுரை.

3.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு குணாளன் அவர்கள் வருகை

புரிந்திருக்கும் அனைவரையும் வரவேற்றார்.


1
3.2 தொடர்ந்து தலைவர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் ஒத்துழைப்பு

வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக்

கொண்டார்.

3.3 பெற்றோரின் வருகை திருப்திகரமாக இல்லை என்று தலைவர்

தம்முடைய கருத்தை முன் வைத்தார். அடுத்த முறை அதிகமான பெற்றோரை

எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

3.4 கடந்த 19.06.2023 அன்று செயலவைக் கூட்டம் நடைப்பெற்றது. பள்ளி

போட்டி விளையாட்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

3.5 பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்லும்

பெற்றோர்களுக்கு நிழலான இடம் வேண்டும் எனும் கோரிக்கை

எழுந்தது.அதனைக் கூடிய விரைவில் நிவர்த்திச் செய்ய தலைவர் உறுதியளித்தார்.

3.6 பள்ளியின் சுற்றுலா பெற்றோர் அனைவரின் இசைவுடன் கூடிய

விரைவில் நடத்தப்படும் என் முடிவெடுக்கப்பட்டது.

3.6 பள்ளி நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக நடந்தேற உறுதுணையாக

நின்ற தலைமையாசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் சங்கத்தினருக்கும்

நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார், மாணவர்களின் நலன் கருதி, அவர்களின்

அடைவுநிலையைப் பற்றித் தெரிந்து கொள்ள உறுதுணையாக இருந்த

ஆசிரியர்களுக்கும் மேலும் பள்ளிக்குப் பல வகையில் உதவிக் கரங்கள் நீட்டிய

பெற்றோர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

2
4. ஆலோசகர் உரை (பெ.ஆ.ச.த. ஆலோசகர் ஐயா திரு இரா.செல்வம்)

4.1 33- வது பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்திற்கு வருகைப்

புரிந்த அனைவரையும் ஆலோசகர் திரு.இரா.செல்வம் அவர்கள்

வணக்கம் கூறி வரவேற்றுப் பேசினார்.

4.2 பெற்றோர் ஆசிரியர் சங்கமானது பள்ளியின் முதுகெலும்பாகும் எனத்

தலைமையாசிரியர் கூறினார். பள்ளியின் வளர்ச்சியும் அதனைத்தான்

நம்பியுள்ளது என்றார் அவர்.2023-ஆம் ஆண்டுக்கான புதிய பெற்றோர்

ஆசிரியர் சங்க செயலைக் குழு தேர்வு இவ்வாண்டு நடைபெருவதோடு

பெற்றோர்களின் உறுப்பியம் அதிகமாக இருக்கும்படி வலியுறுத்தினார்.

4.3 இவ்வருடம் தேர்ந்தெடுக்கப்படும் செயலவை உறுபினர்கள் தத்தம்

பொறுப்புகளைச் செவ்வனே ஆற்ற வேண்டும் என தனது எதிர்பார்ப்பை

முன் வைத்தார்.

4.4 இவ்வாண்டு திட்டமிடப்பட்ட பள்ளி நிகழ்வுகளுக்குப் பெற்றோர்களின்

ஆதரவை பெரிதும் எதிர்பார்ப்பதாக ஆலோசகர் கூறினார்.

மாணவர்களுக்கென பாடப் பிரிவு, மாணவர் நலம் மற்றும் புறப்பாடப்

பிரிவில் ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்களைப் பற்றி விவரித்தார்.

4.5 பள்ளிக்கு ஆதரவும் உதவியும் நல்கிய பெற்றோர்களுக்கு ஆலோசகர்

பள்ளி நிர்வாக சார்பில் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

3
5.0 2022 ஆம் ஆண்டின் 32-வது ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை வாசித்து

ஏற்றல்.

5.1 பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ஆசிரியர்

திரு.இரா.செல்வராஜா 32-அவது ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கையை

வாசித்தார்.

மும்மொழிதல் : திருமதி அல்லிமலர்

வழிமொழிதல் : திருமதி கீதஞ்சலி

5.2 வருகையாளர்கள் அனைவரும் கடந்த ஆண்டறிக்கையை ஏகமனதாக

ஏற்றுக்கொண்டனர்.

6.0 2022/23 ஆம் ஆண்டு கணக்கறிக்கையை வாசித்து ஏற்றல்

6.1 பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் திருமதி.இரா.பவானி

அவர்களைப் பிரதிநிதித்து ஆசிரியர் திரு.இர.செல்வராஜா

கணக்கறிக்கையை வாசித்தார்.

மும்மொழிதல் : திருமதி தெய்வானை

வழிமொழிதல் : திருமதி சந்தியா

6.2 வருகையாளர்கள் அனைவரும் கடந்த 22/23 ஆம் கணக்கறிக்கையை

ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்

7.0 2022 ஆம் ஆண்டு செயலவை அதிகாரப்பூர்வ கலைப்பு/2023 ஆம் ஆண்டின்

புதிய செயலவை தேர்ந்தெடுப்பு.


7.1 2023/2024 நேரிடை தேர்தல் நடைபெற்றது. விவரம் பின்வருமாறு.

4
பதவி வேட்பாளார் முன்மொழிந்தவர் வழிபொழிந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்

டவர்
தலைவர் 1.திருமதி இந்திரா திரு பர்ஹான் திருமதி சாந்தி திருமதி இந்திரா.

துணைத் 1.திருமதி திருமதி அல்லிமலர் திருமதி திவ்யா திருமதி கிதாஞ்சலி


தலைவர்
கீதாஞ்சலி

பொருளால 1.திருமதி பவானி திருமதி அனிதா திரு.ரவி திருமதி பவானி

ர்

1.திரு.குனாலன் 1.ஆசிரியர் 1.ஆசிரியர் 1.திரு.குனாலன்


செயலவை
2.திருமதி சரஸ்வதி மோகனா வரதராசன் 2.திருமதி சரஸ்வதி
உறுப்பினர்
3.திரு பர்ஹான் 2.ஆசிரியர் சஷ்வினி 2.திரு.கிருஷ்னன் 3.திரு பர்ஹான்
கள்
4.திருமதி சாந்தி 3.ஆசிரியர் புஷ்பா 3.ஆசிரியர் 4.திருமதி சாந்தி
(பெற்றோர்)
5.திருமதி அனிதா 4.திரு ராஜா வானீஷ்வரி 5.திருமதிஅனிதா

6.திருமதி 5.திரு.சிவா 4.ஆசிரியர் பத்மா 6.திருமதி அல்லி

அல்லிமலர் 6.திருமதி அனிதா 5.ஆசிரியர் திவ்யா

6.திருமதி கீதாஞ்சலி

செயலவை 1.ஆசிரியர் 1.ஆசிரியர் பத்மா 1.ஆசிரியர் 1.ஆசிரியர் வரதராசன்

உறுப்பினர் வரதராசன் 2.ஆசிரியர் மோகனா 2.ஆசிரியர் புஷ்பா

கள் 2.ஆசிரியர் புஷ்பா வானீஷ்வரி 2.ஆசிரியர் சஷ்வினி 3.ஆசிரியர் பவானி

(ஆசிரியர்) 3.ஆசிரியர் பவானி 3.ஆசிரியர் கல்யானி 3.ஆசிரியர் புஷ்பா 4.ஆசிரியர் சுகுனா

4.ஆசிரியர் சுகுனா 4.ஆசிரியர் பவானி 4.திரு.ராஜா 5.ஆசிரியர் மாலினி

5.ஆசிரியர் 5.திருமதி சுசிலா 5.திரு.சிவா 6.ஆசிரியர் கவிதா

மாலினி 6.திரு.கிருஷ்ன்ன 6.திருமதி.அனிதா

6.ஆசிரியர் கவிதா

1. திரு.சிவா 1.ஆசிரியர் கவிதா 1.ஆசிரியர் ரேவதி 1.திரு.சிவா


கணக்காய்
2.திரு.கதிரேசன் 2.திரு.கதிரேசன்
வாளர்கள்

8.0 பிற தகவல்கள் :

5
8.1 புது செயலவைத் தேர்ந்தெடுத்தமைக்கு தலைமையாசிரியர்

அனைவருக்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

8.2 பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனும்

கருத்தை தலைமையாசிரியர் முன் வைத்தார். குறிப்பாக பாலர் பள்ளியில் 16

மாணவர்கள் இருக்க வேண்டும் என வலியுறித்தினார். மாணவர்கள்

எண்ணிக்கை குறைந்தால் பாலர் பள்ளி வகுப்பு அரசாங்கத்தால்

மீட்டுக்கொள்ளப்படும் என நினைவூட்டினார்.

8.3 மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர் எண்ணிக்கையும்

குறையும் என விளக்கினார்.

8.4 அண்மையில் நிகழ்ந்த வெள்ளப்பேரிடரின் போது கைக்கொடுத்த

பெற்றோர்கள் அனைவருக்கும் தமது நன்றி மலர்களைத்

தெரிவித்துக்கொண்டார்.

8.5 பள்ளியில் நடத்தப்படும் திட்டங்களிலும், போட்டிகளிலும் மாணவர்கள்

பங்கேற்பு அதிகம் இருப்பின் அவர்களுக்கு (PAJSK) மதிப்பெண்கள்

வழங்கப்படுகிறது என விளக்கமளித்தார்.

8.6 கடுமையான பருவ நிலை மாற்றத்தினால் பள்ளி அளவிலான

குறுக்கோட்டப்போட்டி நடத்தப்படவில்லை.

6
8.7 கடுமையான பருவநிலை மாற்றத்தினால் மாணவர்கள் அதிக

வெப்பத்தால் வகுப்பில் பாதிக்கப்படுகின்றனர். இதனை நிவர்த்திச் செய்ய

கூடுதல் மின்விசிரிகள் ஏற்பாடு செய்யப்படும்.

8.8 மாணவர்களுக்குச் சத்துள்ள உணவைக் கொடுத்தனுப்புமாறு

தலைமையாசிரியர் அன்புடன் கேட்டுக்கொண்டார். ஒரு சில மாணவர்கள்

ஓய்வு வேளையில் துரிதா உணவு உண்கிறார்கள். முடிந்தவரை

பெற்றோர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

8.9 பள்ளி அளவிலான கைப்பந்தாட்டப் பயிற்சி நடைப்பெற்று வருகிறது.

மாணவர்களுக்கான மதிய உணவு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள்

ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார்.

8.10 பெற்றோர்களும் உணவுகளை நன்கொடையாக வழங்கலாம்.

இருப்பினும், உணவு வினியோகிப்பவர் @ தயார்செய்பவர் சுகாதார

அமைச்சின் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

8.11 மாணவர்கள் லனாட்ரோன் மற்றும் பழனியப்பா கிளைப்பள்ளிக்குச்

சென்றுவர போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8.12 கற்றல் கற்பித்தலுக்கான ஒவ்வொரு வகுப்பிலும் ஒலிப்பெருக்கு

பொருத்தப்படும் எனத் தெரிவித்தார்.

7
8.13 பழனியப்பா கிளைப்பள்ளியின் திடலை மேம்படுத்த ஒரு சில

நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

8.14 முகக் கவரி அணிவதில் தளர்வு வழங்கப்ப்பட்டுள்ளது. இருப்பினும்

மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக முகக் கவரியைப் பயன்படுத்தலாம்

எனத் தெரிவித்தார்.

8.15 பள்ளியின் அழகிய சூழல் மாணவர்கள் பள்ளிக்கு வர ஈர்க்கும்.

அதனை மேம்படுத்த பள்ளி உறுப்பினர் அனைவரும் கைக்கோர்த்க்ச்

செயல்படுகிறார்கள் எனறார் தலைமையாசிரியர்.

8.16 திரு ப.சிவலிங்கம் பெற்றோர்கள் உணவு நன்கொடை வழங்கும்

பொழுது இரு பள்ளிக்கும் சேர்த்தே உணவளிக்க வேண்டும் என்று

கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். அவரின்

வேண்டுகோள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என தலைமையாசிரியர்

தெரிவித்தார்.

8.17. முக்கிய விழா/விஷேச கொண்டாட்ட நாள்களின் போது மாணவர்கள்

பாரம்பரிய உடைகளை அணிய அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என

திரு.குணலன் வேண்டுகோள் விடுத்தார். கல்வி இலாகா அனுமதியுடன் இது

பற்றிய விபரம் தரப்படும் என தலைமையாசிரியர் தெரிவித்தார்.

8.18 அரசாங்க சத்துணவு திட்டம் தற்போதைய உணவு விநியோகிப்பாளரின்

உணவகம் சுத்தத்தைப் பேணவில்லை என திரு பர்ஹான் அப்துல்லா

தெரிவித்தார். இதற்கான விளக்கம் விரைவில் வழங்கப்படும் எனவும், கல்வி


8
இலாகாவுடனும், தற்போதைய விநியோகிப்பாளருடனும் இதனைப் பற்றி

பேசுவதாக தலைமையாசிரியர் கூறினார்.

8.19 நீலாம் வாசிப்புத் திட்ட தரவுகளைத் பதிவேற்றும் முறைகளைப் பற்றி

ஆசிரியர் கல்யாணி விளக்கமளித்தார்.

8.20 மாணவர்கள் அதிகமாக வாசிப்பதையும்,நீலாம் திட்டத்தில் தரவுகளைப்

பதிவேற்றம் செய்வதைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் எனக்

கேட்டுக்கொண்டார் நூலகம் மற்றும் நீலாம் பொறுப்பாசிரியர் கல்யாணி.

9.0 பெற்றோர் ஆசிரியர் சங்க வருடாந்திர நன்கொடை வசூலிப்பு.

9.1 ஒவ்வொரு குடும்பமும் தலா 30 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்க

ஏகமனதாக நிர்ணயம் செய்யப்பட்டது

மும்மொழிதல் : திரு பர்ஹான் அப்துல்லா

வழிமொழிதல் : திருமதி ஷர்மிளா

செயலவை உறுப்பினர்கள் அனைவரும் நன்கொடை தொகையை ஏகமனதாக

ஏற்றுக்கொண்டனர்.

10. 2023 ஆம் ஆண்டின் பொற்றோர் ஆசிரியர் பொதுக்கூட்டம் மாலை 5.30

மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

9
தயாரித்தவர்,

-------------------------
செல்வராஜா இராமன்

செயலாளார்

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி லனாட்ரோன் தோட்டம், பஞ்சூர், மூவார்.

10
பள்ளி பெயர் : பெற்றோர் ஆசிரியர் சங்கம்

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி லனாட்ரோன் தோட்டம், பஞ்சூர், மூவார்

பதிவு எண் : பழைய எண்:JPJ/PIBG/(T)0866 புதிய எண்:PIBG/SJKT/5100

2023/2024 - ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்

எ பெயர் பொறுப்பு

ண்
1. ஆசிரியர் இரா.செல்வம்( ஆலோசகர்

த.ஆசிரியர் )
2. திருமதி இந்திரா தலைவர்
3. திமதி கீதாஞ்சலி துணைத்தலைவர்
4. ஆசிரியர் இரா.செல்வராஜா செயலாளர்
5. திருமதி பவானி பொருளாளர்
6. திரு.குனாலன் உறுப்பினர்
7. திருமதி சரஸ்வதி உறுப்பினர்
8. திரு பர்ஹான் உறுப்பினர்
9. திருமதி சாந்தி உறுப்பினர்
10. திருமதி அனிதா உறுப்பினர்
11. திருமதி அல்லிமலர் உறுப்பினர்
12 ஆசிரியர் வரதராசன் உறுப்பினர்

11
13 ஆசிரியர் புஷ்பா உறுப்பினர்
14. திரு.சிவா கணக்காய்வாளர்
15. திரு.கதிரேசன் கணக்காய்வாளர்
தயாரித்தவர், உறுதிபடுத்தியவர்,

................................. .....................................
(இரா.செல்வராஜா) (திருமதி இந்திரா)

செயலாளார் தலைவர்

பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்றோர் ஆசிரியர் சங்கம்

லனாட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளி லனாட்ரோன் தோட்டத்

தமிழ்ப்பள்ளி

12

You might also like