Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

சாலை வசதி வேண்டி விண்ணப்பம்..

அனுப்புனர் ‍‍‍:-
ரஹுமானியபுரம் 7 வது தெரு மேற்க்கு பகுதி பொதுமக்கள்,
கடையநல்லூர்.627751

பெறுநர் :-
வார்டு கவுன்சிலர் அவர்கள்,
11'வது வார்டு,
கடையநல்லூர் நகரசபை,
கடையநல்லூர்.627751

ஐயா :-

நாங்கள் ரஹுமானிய புறம் 7 வது தெருவில் மேற்க்கு பகுதியில் வசித்து வருகிறோம் நாங்கள்
வசிக்கும் தெருவின் முக்கால் வாசி தூரம் சாலை வசதி செய்து கொடுத்துள்ளார்கள் ஆனால்
நாங்கள் இருக்கும் கடைசி பகுதியில் இதுவரையிலும் எந்த சாலை வசதியும் செய்து
தரவில்லை. மழை நேரங்களில் கடுமையான துயரத்திற்கு நாங்கள் தள்ளப்படுகிறோம்.
குறிப்பாக, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் அன்றாடம் வேலை பார்த்து சாப்பிடும் தின
கூலிகளும் இந்த வழியாக செல்லும்போது கடும் துயரத்திற்கு ஆளாகிறார்கள் ஆதலால்
தங்காள் உடனடியாக சாலை வசதி செய்து தருமாறு ரஹுமானியபுரம் 7 வது தெரு மேற்க்கு
பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இத்துடன் நாங்கள் இருக்கும் தெருவின்
புகைப்படத்தையும் இணைத்துள்ளோம் தாங்கள் விரைவில் எங்கள் குறைகளை தீர்ப்பீர்கள்
என்று முழுமையாக நம்புகிறோம்.

இப்படிக்கு,
ரஹுமானியபுரம் 7 வது தெரு மேற்க்கு பகுதி பொதுமக்கள்

You might also like