வெண்பா வித்தகம்.

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

பஃறொடை வெண்பா

1)
முற்றாய் முடக்குபிணி மூப்புட னாயுளும்
வெற்றாய்க் கழித்தான் விழிகளி லற்றமுறு
குற்றுயிர் தங்கக் குலவிளக் கென்றுவந்து
பெற்றபு தல்வியும் பேரெழில் மங்கையாய்
வற்றாத அன்பினை வார்த்தாள் முகிலவள்
கற்குங்கல் லூரியில் கண்வழிச் சேறலில்
உற்றதொரு காதலில் உள்ளம் மகிழ்ந்திருக்கச்
சற்றுமெதிர் பாராது சாக்காடுந் தந்தையைப்
பற்றிய செய்தியால் பாழென் றுயிர்வருத்தத்
தற்கா லிகவிடுப்பைத் தந்தாள் படிப்புக்கு
நற்றோழி கண்டாள் நலங்கேட்டா ளன்பனை
மற்ற தனைத்தும் மறந்து!
-ஆனந்த் சுந்தரராமன்

2)
கல்லூரி செல்லாமல் காலத்தின் சூழலால்
இல்லத்தில் வேலைகள் எல்லாமும்
செய்தாலும்
தந்தை இறப்பினைத் தாங்காமல் கண்ண ீரைச்
சிந்திக் கடக்கிறேன்! சிந்தனையில் எப்போதும்
முந்தி வருபவர் மோகன புன்னகையால்
தந்தி அடிப்பவர் தந்தை நினைவினை
மீ றியும் உள்ளத்தில் மென்மையை யாக்குபவர்
மாறியும் பேசாத மாண்புடைய என்னவர்
பத்துநாள் காணாத பாசத்தில்
வாட்டமுற்றுச்
சித்தனைப்போல் வந்தரா சேர்ந்திருவர் செல்லுமிடம்
வட்டமிட்டுச் சென்றாரா வாஞ்சையுள்ள தோழியே
எப்படி உள்ளார் இயம்பு!
- மாலதி திரு.

3)
உயிர்கொடுத்த தந்தையுயிர் ஊசலாடி நிற்க
வயிற்றுக் குணவின்றி வாடிக் கிடக்க
அவரின் ஒரேமகள் அந்தோ மனதில்
கவலையற்றுக் கல்லூரிக் காதலனோ டுள்ளபோ
தங்கே தகப்பன் தவறிய செய்திவர
மங்கை விடுப்பிலொரு வாரம் இருந்தனள்
தந்தையைப் பற்றித் தவிப்பேதும் அற்றவளாய்ச்
சிந்தையில் காதல் சிறகை விரித்தனள்
அந்நேரம் தோழியைக்கண்(டு) அஞ்சுகம் ஆகிறாள்
மந்திரக் காதலில் மாய்ந்து கிடந்தவள்
என்னவன் எவ்வா றிருக்கிறான் என்றனள்
முன்புள எல்லாம் மறந்து.
- குளோரி சக்தி.

4)
கனவைச் சுமந்திருந்த கல்லூரி வாழ்வில்
மனதும் சுமந்ததம் மாயம்செய் கள்வனை!
புத்தகத்தை ஓர்நாள் புறக்கண்ணில் மேய்ந்திருந்த
மத்தியான வேளை மதிகலைத்த செய்தியொன்று
அப்பா இறப்பினை அக்கினியாய்த் தூவிட
எப்படியோ வடுவந்(து)
ீ என்னுள்ளம் வெந்தேனே!
உற்ற துயர்பகிர்ந்த உற்றாரைச் சேர்ந்திருக்கக்
கற்றல் விலக்கிவைத்து காரியங்கள் செய்திருந்தேன்!
இந்தாவுன் தோழியென என்தாய் எழினிதர
தந்தானோ சேதியெனச் சட்டென்று கேட்டேன்நான்
சோகத்தை ஆற்றுஞ்சொல் சொல்லவந்த தோழியிடம்
மோகத்தீ என்னுள் முளைத்து!.
- கோவை லிங்கா.

5)
பலகாலம் நோயில் படுத்திருந்த எந்தை
உலகைவிட்டுச் சென்றார் உயிர்வலி தாளாது
விண்ணில் பறந்தேனும் வேதனை தீரட்டும்
கண்ண ீர் வழிந்தாலும் காலத்தின் கட்டாயம்
மாரில் அடித்தழும் மாதாவைத் தேற்றியபின்
காரியம் ஆனதும் கல்லூரி செல்லென்று
கூடிய சொந்தம் குறுக்குச்சால் ஓட்டியும்
தேடியது என்னவோ தென்றல் முகத்தையே
ஓடிப்போய் சொல்லேன் ஒருமுறை பாரென
வாடிய என்னிடம் வாஞ்சையுடன் துக்கத்தை
நாடியவன் கேட்டால் நலமாகும் சூழ்நிலை
சேடியே செப்பேன் செறிந்து.
- கவிதா ராமசந்திரன்.

6)
பாயிலே வாழ்வென்ற பாழ்நிலையில் தந்தையவர்
நோயி(ல்) உழன்று நொடிபொழுதில் மாண்டாரா(ம்)
என்றொரு செய்தி இவளிடம் சொன்னதும்
நின்றழுதாள், கண்கலங்கி நிம்மதியி ழந்திட
ஆனதெலாம் ஆச்சென்று ஆகிறதைப் பாரென்றுப்
போனவரைப் தூக்கிப் புதைத்துவந்த சொந்தங்கள்
காரிய மானதும் கல்லூரி செல்லென
ஊரினர் கூறியதும் உள்ளடங்கிப் போனாவள்
பல்வேலை யில்மூழ்கிப் பாதங்கள் ஓடிட
நல்வேளை சந்தித்தாள் நற்தோழி யைத்தெருவில்
கண்டதும் கேட்டாளே காதலவன் எப்படியென்
றெண்ணமே முந்தி யெழ.
- மலர்மைந்தன்.

7)
அன்றிலாய் உள்ளமதில் அன்பனை எண்ணியே
ஈன்றவரும் சாய்ந்திட இன்னல்கள் சூழ
பதியமிட்ட காதலைப் பண்பாய்ச் சுமந்தாள்
விதியெனக் கற்க விடாது படிக்க
இடியாய் இறங்கியது ஈன்றவர் நீங்க
விடியுமோ வாழ்வென வட்டில்
ீ முடங்க
பயிரோடு சேர்ந்த களைபோல காதல்
உயிரோடு சேர்ந்திட்ட ஊன்போல ஆகிடவே
ஆற்றவருஞ் சேடியிடம் ஆவலாய் கேட்டினள்
காற்றில் கலைந்திட்ட கார்முகிலாய் துன்பமறந்
தன்பனைக் ஆய்தனள் அங்கு....
- ஐனனி.

8)
படுத்தப் படுக்கை பகலவனென் தந்தை
படுத்திய நோயால் பரவிப் படுக்க
உடுத்தும் துணியும் உறவென ஒற்றி
கடுப்பேற்ற கண்ண ீர் கரைய துடித்தாய்
அடுக்களைப் போதும் அறிவை வளர்க்க
எடுத்திடு கைகளில் ஏடுதனை என்றாய்
நெடுந்தொலைவு கல்லூரி நெஞ்சமெலாம் காதல்
அடுக்கிய நூல்களில் அத்தனையும் மோதல்
வடுவென நீமறைய வற்றா அழுகை
சடுதியில் வந்திட சட்டென தாங்கித்
தடுத்திட்ட காதலன் தன்நெஞ்சில் சாய்த்து
தடுப்பணைப் போட்டான் துளிக்கு.!!
- கி.மணிவாசகன்
9)
ஆடியில் வசும்ீ அடங்காதக் காற்றுடன்
கூடிக் கிழிந்து குலைந்திட்ட வாழைபோல்
நாடி உடலில் நலிந்த தகப்பனும்
வாடிச் சரிந்தார் வருகென்ற செய்திவர
கோடியொளி மின்னலாய்க் கோதையின் சிந்தைதாக்க
ஓடினாள்: பள்ளம்கண் டோடும் அருவியாய்!
காரியம் ஆற்றிக் கடமையைச் செய்தனள்.
மாரி வரும்முன் மழைமுகில் மூட்டம்போல்
பாவையின் நெஞ்சம் படர்ந்த அழகனைத்
தேவை அவனது தோளென்ற தூளியென்றே
அன்பனை எண்ணி அலைபாய்ந்தாள் கண்முன்னால்
மென்மனத் தோழி மெதுவாக வந்துநிற்க
என்மனம் வென்றவன் என்னுயிர் போன்றவன்
என்னை நினையாமல் எப்படி வாழ்வனோ
பெண்மயிலின் தோற்றம் பெருமை குலைந்நாலும்
கண்ணிலுயிர் தேக்கினேன் காண்
- சு.விஜயலட்சுமி.

10)
தந்தை தவிக்கிறார் தானசையா நோய்தனில்
முந்தை வினையோ முழுநாளும் பாயில்
எழிலாள் மகளவள் ஏற்ற படிப்பை
பொழியும் படிப்பகத்தில் பூத்தது நெஞ்சில்
செழிக்கின்ற கல்வியுடன் சீரான காதல்
விழிதனை ஈரமாக்கி விண்ணுலகில் தந்தை
எட்டிய செய்தியால் ஏகினள் இல்லத்தே
சுட்டினர் வேண்டினர் சூழ்ந்த கடமைக்காய்
செல்லா திருப்பாய் சிலநாட்கள் கல்லூரி
வில்விழியாள் நெஞ்சை விரும்பிய காதலன்
நற்சுகம் ஆவலாய் நாடி அறிந்திட
கற்கின்ற தோழியரைக் காண்கிறாள் செல்வழியில்
கற்கை வினாவில்லைக் காண்
- இரா இரத்தினகுமார்.

11)
படிப்பைத் தொடரும் பருவ நகர்வில்
இடியாய் விழுந்த இழப்பினில் சாய்ந்தேன்
அடியேன் தவித்திட அப்பனும் மாண்டார்
பிடியெனச் சாம்பலில் பின்னுள்ள தாகும்
சடங்கொடு காரியம் சற்றே முடிய
மடங்கொண்ட பெண்மை மனத்தினால் வாட
தடங்கொண்ட காதலனைத் தன்னுணர்வால் சிந்தை
வடங்கொண்ட தேர்போல வந்திழுக்க லானேன்
துயரினை வென்று துலங்கிடும் வாழ்வின்
பயனைக் கருதிப் படரும் கொடிபோல்
திரிந்திடும் என்னைத் திடுக்கிட வைத்தாள்
புரிந்திடும் அன்பால் புலம்பிடக் கேட்டேன்
அருமையாம் தோழி அகத்தைக் கவர்ந்த
உருவினான் ஏதும் உரைத்தானோ சொல்வாய்
அருவிபோ லென்றாள் அழிந்து
- ந. இரா. இராசகுமாரன்.

12).
பாதிஉயிர் பாடையிலும் பக்கத்தில் யாருமிலா
மீ திஉயிர் கட்டிலிலும் மீ ண்டுவர பாதியிலே
ஏழைத் தகப்பன் இடரில் தவித்திட
வாழை மரமாய் வழுக்கிக் கரைசேர்ந்தார்
அள்ளியணைத் தத்தந்தை ஆற்றோரம் போய்விட
பள்ளிக்குச் சென்றமகள் பாதியில் வந்துவிட்டாள்...
காரியம் தீர்ந்துத்தான் கல்லூரிக் குள்நுழையும்
சீரி யமுடிவில் சீற்றங்கொள் தாயிருந்தாள்...
உம்மென் றமர்ந்தவளோ ஊனுழைப்பை நல்கிவிட
அம்மணியின் தோழியன்று அவ்வழி சென்றாள்...
அவளை யழைத்தே அவனின்நலம் கேட்டுக்
கவலைக் கடலினில் கண்ண ீர்த் துளியில்
குவளை நிரம்பியதைக் காண்...!!!
- மாரி. வசந்த குமார்.

You might also like