Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 12

இலக்கிய ஈற்றடி வெண்பாக்கள்

1) தென்றலே ஏன்வந்தாய் செப்பு!


==========================
கன்னல் மொழியால் கசிந்துருக வைத்தவென்
மன்னவன் என்னை மறந்திடச் - சன்னலோரம்
தன்னந் தனியே தவித்திருக்கும்
வேளையிலே
தென்றலே ஏன்வந்தாய் செப்பு!
- கோவை லிங்கா.

குற்றால நீர்வழ்ச்சி
ீ கொண்டாடித் தீர்க்கையில்
வற்றாக் குளிரெனை வாட்டிட - வுற்றுநான்
அன்றிலென வாட, அனலைக் குளிர்விக்கும்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு!
- ஜனனி

உள்ளம் நிறைந்த உலகாமென் காதலி


முள்ளாய் மனதில் முடங்கிட - வள்ளலாய்
என்னைத் தழுவியவள் இல்லாள வந்திடாது
தென்றலே ஏன்வந்தாய் செப்பு!
- வே.செந்தில்குமரன்

உலகமே போற்றிடும் உன்னத வெற்றி!


நிலவும் நமதாய் நிமிர்ந்தோம்! - நலமுடன்
வென்றதைக் காட்டிட வெண்ணிலா இன்றியே
தென்றலே ஏன்வந்தாய் செப்பு!
- இரா.சத்தியநாராயணன்

முன்றிலில் முந்தி முகமொற்றி முத்தமிட


அன்றி லிணையென அன்றவள் - என்னுடன்
ஒன்றாய் இருக்க ஒழிந்தாயே! இப்போது
தென்றலே என்வந்தாய் செப்பு!
-ஆனந்த் சுந்தரராமன்

அன்றில் பறவை யகத்தினால் நாமாவோம்


என்றெம்மைத் தேற்றியே ஏதிலார்போல் - சென்றாரின்
புன்மையுறும் செய்கையால் புண்பட் டிருக்கையிலே
தென்றலே ஏன்வந்தாய் செப்பு!
- ந.இரா.இராசகுமாரன்.

இன்றுவந்த அந்த இனிய நிலவுடன்


இன்பமுடன் பேச இசைந்திடும் - மன்றத்தில்
என்றழைத் தாலுமே எட்டியே பார்க்காத
தென்றலே ஏன்வந்தாய் செப்பு!
- மலர்மைந்தன்.

கண்ணுறக்கம் இல்லாது காத்திருந்த கண்களுக்கு


என்றுதான் இன்பமும் எட்டுமோ? - மன்னவனும்
என்னைவிட் டெங்கோ இருந்திடும் இவ்வேளை
தென்றலே ஏன்வந்தாய் செப்பு !
- நா.பாண்டியராசா.

அன்று புலவர் அரசவை வற்றிருக்க



மன்னர் தமிழில் மகிழ்வுடன் - இன்புற்ற
நன்னெறி யாட்சியும் நானில வாழ்வுமின்றித்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு!
- இரத்தினகுமார்.
========

2) எல்லாம் எழுதலா மென்று!


=======================
அறுதியே காணா அணித்தமிழ் மாண்பில்
சிறுமொழி யுட்புகல் சீரோ? - உறுதிகொள்,
நல்ல தமிழ்பயின்று நாளும் தரமுடன்
எல்லாம் எழுதலா மென்று!
- கோவை லிங்கா

திகட்டா தினிக்குந் தமிழினைக் கொண்டு


பகடி புரிந்திடும் பாக்கள் - அகலாத
அல்லல் களைய அனைவரையுந் தூண்டிடும்
எல்லா மெழுதலா மென்று!
- ஜனனி

அயலார் மொழியை அகிலமா யெண்ணி


மயங்கிக் கிடப்பதை மாற்று! - வியப்பூட்டும்
வெல்லும் தமிழிலின் மேன்மையைப் போற்றியே
எல்லா மெழுதலா மென்று!
- வே.செந்தில்குமரன்.

வெண்பா வகைகள் விரும்பி எழுதிடவே


கொண்டேன் விருப்பம்! குருவைக் - கண்டேனே!
பல்வகைப் பாக்களைப் பைந்தமிழால் போற்றியே
எல்லா மெழுதலா மென்று!
- இரா.சத்தியநாராயணன்.

கல்லா ரிடத்திலும் கற்றவை சேர்த்திட


சொல்லா லிணைந்தோம் சுவைபடப் - பல்துறை
வல்லார் துணையுடன் வண்டமிழ்ப் பாக்களில்
எல்லா மெழுதலா மென்று!
- ஆனந்த் சுந்தரராமன்.

சொல்லும் முறையதனால் சொற்க ளுணர்ந்திடும்


ஒல்லும் பொருளனைத்தும் ஓங்கிட - நில்லுமே
வெல்லு முணர்வினால் வெற்றாகிப் போகாமல்
எல்லாம் எழுதலா மென்று!
- ந.இரா.இராசகுமாரன்.

வல்லார்த் துணையால் வல்லமை பெற்றதால்


ஒல்லையுடன் வெண்பாவி லோங்கினேன் - நல்லோரே!
கல்லெறியு மன்ன கயவர்கள் முன்பாக
எல்லா மெழுதலா மென்று!
- மலர்மைந்தன்.

தற்காலப் பாடலில் தாய்மையுணர் வோங்கிநிற்கும்!


முற்போக்குச் சீரினை முன்நிறுத்தும் - நற்கவிஞன்
எல்லாரும் போற்றுவிதம் ஈர்ப்பான் ! இனிவருவோர்
எல்லாம் எழுதலாம் என்று !
- நா.பாண்டியராசா.

கல்வியாற் பெறுகிறார் காசும் மதிப்புமே


நல்வழி யின்றியதை நாளெல்லாம் - பொல்லாப்பாய்ப்
புல்லர் பதவியிற் போடும் கொடுமைகள்
எல்லாம் எழுதலா மென்று!
- இரத்தினகுமார்.
==========

3)" நீர்மேல் எழுத்துக்கு நேர்"


=======================
ஊர்போற் றிடவே உழைப்பா லுயர்ந்திடும்
ஆர்வமு மின்றி அடுத்தவர் - வேர்வையைச்
சார்ந்தே பிழைத்திடும் சால்பிலார் வாழ்வது
நீர்மே லெழுத்துக்கு நேர்
- ஆனந்த் சுந்தரராமன்.

காட்டிடும் நல்வழியில் கண்திறந்து சென்றிடுவோர்


வாட்டமின்றி நிற்பார் வளம்பெற்றே ! - நாட்டமின்றிப்
பார்ப்பவர் கெட்டொழிவார் பாழடைந்த வடுபோல்
ீ !
நீர்மேல் எழுத்துக்கு நேர் !
- நா.பாண்டியராசா.

பாசமெனப் பேசிப் படுகுழி தோண்டிட


வேசந் தரித்த வெகுளியாய் - நேசமிகு
போர்வை நெகிழப் புகழும் உரைகளோ
நீர்மேல் எழுத்துக்கு நேர்
- ஜனனி

பேசும் கனிவுள்ள பேச்சும் நறுமணத்தை


வசும்
ீ அறவோர்க்கே! வணாகும்ீ - மாசுநிறை
தூர்த்தனுக்(கு) அஃதும் துணைநிற்கா தென்றுமே
நீர்மேல் எழுத்துக்கு நேர்!
- கோவை லிங்கா

நிலையின் றியெவரும் நித்தமும் செய்யும்


விலையில்லா சத்தியமும் வணே ீ - கலையுமே
சீர்கெட்டு வாழும் சிறப்பில்லார் வாக்கது
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
- இரா. சத்தியநாராயணன்.

ஈர்ப்பார் கவனமே ஈனமாய் வேடமிட்டுப்


பார்த்திடார் மானமும் பண்பும் - வார்ப்பாரே
ஊர்தனிற் பொய்யே வுதவி யிவர்க்கெலாம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்
- இரா.இரத்தினகுமார்.

கள்ளுண்டு வணானீ காமுகன் வார்த்தையில்


உள்ளம் கொடுத்த ஒருத்திக்கு - வெள்ளமாய்
ஆர்ப்பரிச் செய்திட்ட அன்பும் விளங்கிடும்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
- வே.செந்தில்குமரன்.

நன்றியை நெஞ்சில் நினையாக் கயவர்கள்


வன்மை குணத்தினால் வஞ்சிப்பர் - நன்றல்லாச்
சேர்க்கை சரியாகாச் சென்மங் களுக்கீ தல்
நீர்மேல் எழுத்துக்கு நேர்
- ந.இரா. இராசகுமாரன்.

பார்வியக்க வேண்டி பசப்பும் மொழிகளைச்


சீர்தூக்கிப் பார்த்தல் சிறப்பாகும் - கூர்ந்தாய்க
ஊர்முழுதும் பொய்யை உளருவர் சொற்களோ
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
- மலர்மைந்தன்.
===============

4) " கல்லாதான் கற்ற கவி"


======================
கல்வியும் கேள்வியும் கண்ணெனக் கொண்டாரைச்
செல்வமும் சேரும் சிறப்புடன் - அல்லாரைப்
புல்லராய்க் காணும் புவிதனில் வணாமே

கல்லாதான் கற்ற கவி.
-ஆனந்த் சுந்தரராமன்.

செல்வம் பலபெற்ற சீமான்கள் செல்வார்கள்


பல்லாக்கு மேலமர்ந்து பாரினில் ! - இல்லாதோர்
இவ்வழியைப் பின்பற்ற இல்லத்துள் துன்பமாம்!
கல்லாதான் கற்ற கவி!
- நா.பாண்டியராசா.

அடுத்தவர் பாதை தமதென வெண்ணி


உடுத்தியே நாளு முலவி- எடுத்திட
நல்வழி யற்று நலிந்தவ ரென்றுமே
கல்லாதார் கற்ற கவி
- ஜனனி.

போற்றும் நெறியில் பொலிந்த கவிதனில்


ஊற்றாய்ச் சுரக்கும் உவப்புமே! - ஆற்றுநீர்
நில்லா தொழிவதுபோல் நெஞ்சில் நிலைக்காது
கல்லாதான் கற்ற கவி.
- கோவை லிங்கா

சொல்வதை நம்பி சுயமாய் நினையாது


வல்லவனா யெண்ணி வகுத்திட - இல்லாளை
இல்லாம லாக்கும் இடர்போல் பிரசவமாம்
கல்லாதான் கற்ற கவி.
- இரா.சத்தியநாராயணன்.

பொல்லார் சிலரிடம் போதை புகழிலே


வல்லா ரெனவும் வலிமையால் - நல்லாரும்
சொல்லிடத் தூண்டியே சொல்கிறார் மேதையாய்
கல்லாதான் கற்ற கவி.
- இரா.இரத்தினகுமார்.

வல்லமை செய்யும் வலியவன் போலவே


பொல்லாங்கு கொண்ட பொடியனும் - நல்லவை
சொல்லிட வந்திடும் சோதனை காட்டிடும்
கல்லாதான் கற்ற கவி
- வே.செந்தில்குமரன்.

கானக் குயிலினைக் கண்டிங்கு காகமும்


கான மெடுக்கக் கருதுவதோ - மானந்தான்
கொல்லு மிழுக்கில் கொலுவற்றல்
ீ போலுமே
கல்லாதான் கற்ற கவி
- ந.இரா.இராசகுமாரன்.

எல்லாப் புகழும் எனையே அடையுமென


நில்லா உலகில் நினைத்தலே - நில்லாது
புல்நுனிமேல் நீராய்ப் புணையும் அனைத்துமே
கல்லாதான் கற்ற கவி
- மலர்மைந்தன்.
=============

5. "ஆளுமே பெண்மை அரசு"


=========================
வாளுந்தான் தோற்குமே வாஞ்சைமிகும் கண்களுக்கே
தோளும் விரிந்த தொகையழகும் - நாளுமே
மூளும் வினைபோல் முடித்தெம்மை வழ்த்தியே

ஆளுமே பெண்மை அரசு
- ந.இரா.இராசகுமாரன்.

காந்த விழிகளெனும் கண்ணியிலே தூண்டுமெழிற்


பூந்தேன் இதழ்காட்டும் பூம்பாவை - கூந்தலென
மூளும் கருமுகிலால் மோகவலை வசியெனை ீ
ஆளுமே பெண்மை அரசு.
- கோவை லிங்கா.

அன்பெனும் ஆயுதத்தால் ஆழ்மனத்தை கட்டிவைப்பாள்


இன்முகத்தைக் காட்டி இனிதிடுவாள் ! என்னருகில்
நாளுமிவள் தங்கி நலஞ்சேர்ப்பாள் ! என்வாழ்வை
ஆளுமே பெண்மை அரசு.
- நா.பாண்டியராசா.

மங்களம் தந்திடும் மங்கையர் மென்முகம்


தங்கிடும் செல்வமும் தங்கமாய் - பொங்கிடும்
நாளுமே வந்தனை நாதனைச் செய்திட
ஆளுமே பெண்மை அரசு.
- இரா.சத்தியநாராயணன்.

மாளுதே பெண்மை மகாகவி நொந்தானே!


மீ ளுதே மாதரின் மேன்மையும் - நாளுமே
நீளுக நங்கையே நித்தம் புரட்சியே
ஆளுமே பெண்மை அரசு!
- இரா.இரத்தினகுமார்.

அறிவ தறிந்தே அதன்படி வாழ்ந்து


நெறியாய் நடப்பது நன்றென் - றறிந்தவள்
நாளும் நமக்கு நலனைக் அளித்திங்கே
ஆளுமே பெண்மை யரசு.
- மலர்மைந்தன்.

பெண்னின் விழிகளில் பேரின்பம் தோன்றிட


விண்ணு மிறங்கி வியந்திடு - மெண்ணும்
புதுமையால் மெய்யில் புணருதே காமம்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது!
- வே.செந்தில்குமரன்.

அடுக்களை சார்ந்தே அவிந்தவப் பெண்மை


எடுத்தகலை யாவுமே வென்றே - வுடுத்திட
நாளும் பலகற்று நாடு சிறந்திட
ஆளுமே பெண்மை அரசு
- ஜனனி

நாளும் பொழுதும் நகரா துறைந்திட


நீளும் நினைவினின்று நெஞ்சமது - மீ ளுமோ
தோளுயர்ந் தவனைத் துரும்பாக்கும் பார்வையால்
ஆளுமே பெண்மை அரசு
- ஆனந்த் சுந்தரராமன்.
===========
6."பொதுநோக் கெதிர்நோக்கும் போது"
================================
நுதலி லெழுதிய நூதனப் பொட்டால்
இதயம் கவர்ந்தா ளிவளே - மதர்க்கும்
மதுரவிழிப் பாவை மறைப்பா ளகத்தைப்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது
- ந.இரா.இராசகுமாரன்.

நுணங்கிச் சிறுத்தநன் னூலிடை யாட்டி


அணங்கவள் வந்தெதிர் ஆளும் - கணத்தில்
மெதுவா யெழுமே மிதமான மின்னல்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது!
- கோவை லிங்கா.

இதழினில் தேனை எடுக்கையில் உள்ளம்


இதமென ஆகி இனிக்கும் ! - நிதமும்
இதுவொன்றே வேண்டுமென என்றும் நினைக்கும்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது!
- நா.பாண்டியராசா.

காதலில் கட்டுண்டு காண்கின்ற இன்பத்தில்


மாதக் கணக்கும் மாயமாய் - மீ த
மெதுவாய் விரியும் மென்மையாய் நாணம்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது.
- இரா.சத்தியநாராயணன்.

பிணைந்த களைப்பும் பிரியாக் களிப்பும்


துணையா யுறவிற் துளைத்தே - இணையாய்
விதும்பியே தந்த விழியாள் இவளா?
பொதுநோக் கெதிர்நோக்கும் போது
- இரா.இரத்தினகுமார்.

எழில்வதன மங்கை எதிரில் வரவே


வழியும் மறைந்து வந்து விழிக்க
மதுவுண்ட வண்டாய் மனமும் மயங்கும்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது
- மலர்மைந்தன்.

வான்முகில் காட்டும் வசந்த மென்றுதா


னென்னவ ளன்பி னினிமையு- மென்னுள்ளே
நாளும் வளர்ந்திட நல்வழிக் காட்டுதே
ஆளுமே பெண்மை அரசு
- வே.செந்தில்குமரன்.

அடவிதனை யாளு மரியா யதிர்ந்து


கடந்திட மெய்மறக்கக் கண்டு - படரும்
எதுவும் பனியாய் இளகுமே காணப்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது
- ஜனனி.

ஒதுக்கும் குழலெழுந் தோயா தலைய


மதுவாய் மணக்கும் மலராள் - செதுக்காப்
பதுமையாய் நின்றிடப் பாதமிடும் கோலம்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது
- ஆனந்த் சுந்தரராமன்.
==============

7. கூத்தியர்க்கு நேராங் குரங்கு


==========================
முவ்வை குளிப்பாட்டி முக்கியம் செய்தாலும்
கவ்வி வருமே கருமத்தை - இவ்வாறு
சத்தியம் கொன்றிடும் சந்தர்ப்ப மானிடரும்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு
- வே.செந்தில்குமரன்.

பார்ப்பதெல்லாம் வேண்டிப் பறித்திடு மாசையுடன்


கூர்மை வழியுடன் கூர்நோக்கி - ஈர்த்திடவே
காத்திருந்(து) ஏமாற்றிக் கண்மயக்கும் மாயமது
கூத்தியர்க்கு நேராங் குரங்கு.
- மலர்மைந்தன்.

வேண்டிய வைதனை வேண்டுங் கணத்திலே


வேண்டியே நின்றிடு வேளையோ - உண்ணாம
லாத்திரங் கொண்டே அடம்பிடிக்க அவ்விடங்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு
- ஜனனி.

தாவும் மனமே தனத்தினைத் தேடியே


மேவுமே ஆசையும் மென்மேலும் - நாவுமே
ஏத்தும் நடிப்பிலே ஊறிய உள்ளமாம்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு.
- இரா.இரத்தினகுமார்.

ஊத்திடும் கள்ளிலே ஊறிடும் போதையும்


மாத்திடும் மொத்தமாய் மந்தியாய் - ஏத்திடும்
சாத்திய மில்லாத சங்கதி பேசியே
கூத்தியர்க்கு நேராங் குரங்கு
- இரா.சத்தியநாராயணன்.

நிலைமறந் தாடும் நிலையா வுளத்தோ


டலையெனத் துள்ளி யடங்குங் - குலைந்திடப்
பூத்த துதிர்த்துப் புரியும் விளையாட்டில்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு
- ஆனந்த் சுந்தரராமன்.

தாவிடும் சிந்தையால் தாழ்ந்திட லாகுமால்


பூவினைச் சிந்தியே புன்மையில் - மேவிடும்
மோகமே கொண்டிட மொத்தமும் போக்கிடும்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு
- ந.இரா.இராசகுமாரன்.

ஆசையால் உள்ளமும் ஆடித்தான் பார்க்குமே


பாசை மறந்தே பழகுமே ! - ஓசையின்
சத்தத்தால் தேகமும் சாயுமே காசுக்காக
கூத்தியார்க்கு நேராங் குரங்கு !
- நா.பாண்டியராசா

மாலை வருகை மதிக்காத் திருந்திடும்


தோலைப் பகுத்தாளத் தோதாகும் - காலைவிழி
பார்த்ததைப் பற்றிப் பறந்தோடும் பாங்கிலே
கூத்தியர்க்கு நேராங் குரங்கு.
- கோவை லிங்கா
---------------

8. கண்டதுண்டு கேட்டதில்லை காண்


===============================
பருகும் அமுதும் பணிசெய்யும் பூதம்
உருவில் பெரியடை நோசர் - மிருகமும்
பண்டிங்(கு) இருந்ததென பார்த்ததிரைக் காட்சியிலே
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
- கோவை லிங்கா

உதிர்ந்திடும் வாழ்வை உணராமல் நானும்


புதிராக நாளும் புரண்டு - சதிராடும்
எண்ணத்தை கந்தனிடம் இட்டதால் இன்பமுள்
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
- வே.செந்தில்குமரன்.

ஊக்கித்தாம் கொண்ட உளத்தில் விரதங்கள்


தாக்கருந் துன்பங்கள் தாம்தலை - நீக்கிடும்
வேண்டியவை யாவையும் வேதனைத் தீர்க்குமெனக்
கண்டதுண்டு கேட்டதில்லை காண்
- மலர்மைந்தன்.

குருவியின் கூட்டில் குயில்களின் முட்டை


மருவியசொல் லென்றே மறுக்கா - துருவாக்க
எண்ண மதனை யெதிர்க்காம லேற்றிட
கண்டதுண்டு கேட்பதில்லை காண்
- ஜனனி

புண்ணியம் தேடியே போகிறார் கோவிலுக்கு


கண்ணிய மின்றியே காசினை - எண்ணியே
மண்ணிலே வாழும் மடையர் பலரையும்
கண்டதுண்டு கேட்டதில்லைக் காண்
- இரா.இரத்தினகுமார்.

காதலொன்றைக் கப்பலில் கண்டதாம் ஆழ்கடல்


நூதனமாய் நீரும் நுழையவே - சோதனை
உண்ட கடலுமே ஊமையாய் காட்சியாய்
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
- இரா.சத்தியநாராயணன்.

விவரிக்கும் காட்சியிலே விஞ்ஞானம் விரியக்


கவரும் வரைகலையாய்க் கண்முன் - துவங்கிட
வண்ணத் திரையினில் வாய்பிளந்து விந்தையெனக்
கண்டதுண்டு கேட்டதில்லை காண்
-ஆனந்த் சுந்தரராமன்.

அண்டங்க ளேழினை யாண்டிடு மாவலால்


விண்வெளி வோடங்கள் வறுடன்
ீ - கீ ண்டெழும்
நண்ணிய வெற்றியை நன்றென நானுற்றுக்
கண்டதுண்டு கேட்டதில்லை காண்
- ந.இரா.இராசகுமாரன்.

எல்லாமும் இங்கேதான் எல்லோர்க்கும் கிட்டிட


வல்லமைக் கொண்டோர் வருவாராம் - சொல்லாலே
எண்ணத்தைச் சீர்செய்வார் என்றேதான் சொல்வாராம்
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
- நா.பாண்டியராசா.
-----------------

9. "எப்பிறப்பில் காண்பேன் இனி"


============================
ஒப்பில்லா ஒன்றாய் உலகின் உயர்வாகி
இப்பூ வுலகில் இனிதாகி - துப்பாய
முப்பாலாய் மெய்யுரை முப்பொருள் வள்ளுவனை
எப்பிறப்பில் காண்பேன் இனி.
- இரா.சத்தியநாராயணன்.

தப்பான பாதை தவறியும் போகாது


முப்பொழுதும் காத்தாயே முன்னின்று - சிப்பாயாய்
எப்பொழுதும் துன்பத்தை எத்திடும் நண்பனே
எப்பிறப்பில் காண்பேன் இனி.
- மலர்மைந்தன்.

உன்போலே அன்பிடுவோர் ஊரினில் இல்லையே


என்மனத்தை நீயறிந்தே ஏற்றினாய் நன்முறையில்
முப்போதும் நீங்கா முழுமதியே அம்மாவே
எப்போது காண்பேன் இனி !
- நா.பாண்டியராசா

முப்பொழுது மெந்தன் முழுநலனே யெண்ணமாய்த்


தப்பா திருந்து தகவுடன் - செப்புவாய்
எப்பா லகன்றாயோ என்னிதயம் மீ ட்புற
எப்பிறப்பில் காண்பேன் இனி
- ந.இரா.இராசகுமாரன்.

ஒப்பிலா உத்தமரை ஓய்வற் றுழைத்தவரை


முப்பொழுது மெம்மை முடங்காது - தப்பாமல்
செப்புதற் கொண்ணாது சீர்மையுடன் காத்தவரை
எப்பிறப்பில் காண்பேன் இனி
- ஆனந்த் சுந்தரராமன்.

சேய்நல மொன்றையே சிந்தையாய் வாழ்ந்தவென்


சாய்ந்திடும் தூணும் சரிந்திட - வாய்நிறைய
அப்பா எனநான் அழைத்த திருமுகத்தை
எப்பிறப்பில் காண்பேன் இனி!
- கோவை லிங்கா.

எப்பிறப்பின் ஊழினால் இப்பிறவி யெய்தினேன்


முப்பொழுதும் மெய்யுருகி மூழ்கிறேன் - அப்பனே
இப்போ திரங்கி யிணைதாளைக் காட்டாயின்
எப்பிறப்பில் காண்பேன் இனி
- இரா.இரத்தினகுமார்.

குடமெனத் தாங்கிக் குருதியிட் டென்னை


கடவும் முகம்காட்டி காத்தாள் - திடமாக
செப்பிய வாழ்க்கையும் செவ்விது தாயன்பை
எப்பிறப்பில் காண்பேன் இனி
- வே.செந்தில்குமரன்.

மாலனாய் நாளும் மறவா மலர்ந்திட


ஆலமென அன்பூட்டி அன்னையின் - காலமதை
இப்பிறவி கண்டு இனிப்புறா வேறுன்னை
எப்பிறப்பில் காண்பேன் இனி
- ஜனனி.
------------

10. "மனமே உனக்கென்ன மாண்பு"


=============================
தவறென் றறிந்திட தர்க்கம் புரியாச்
சுவரென் றறிந்தே உரைக்குஞ் - சவமாய்
இனமதைக் கண்டே இழிக்குங் கயமை
மனமே உனக்கென்ன மாண்பு.
- ஜனனி.

எல்லையு மில்லாம லெண்ண மடங்காமல்


தொல்லைக் கொடுக்கும் தொடக்கத்தில் - வல்ல
தனமெல்லாம் வணென்று
ீ தள்ளாடிச் சொல்லும்
மனமே உனக்கென்ன மாண்பு.
- வே.செந்தில்குமரன்.

வதைத்தாய் பிறவுயிர் வாழ்வினைப் பாழாய்ச்


சிதைத்தாய்ச் செருக்கினைச் சேர்த்தே- எதையும்
தனதாய் நினைத்தாய்த் தரத்தினில் தாழ்ந்தாய்
மனமே உனக்கென்ன மாண்பு.
- ஆனந்த் சுந்தரராமன்.

குருவா யிருந்து குணத்தினைக் காத்தாய்


இருளின் கருமையை இல்லா - திருக்கத்
தினமும் எனக்குத் திடத்தை யளித்தாய்
மனமே உனக்கென்ன மாண்பு !
- நா.பாண்டியராசா.

தனக்கென மட்டுமே தன்னலங்கொண் டோரை


கனங்கொண் டுரைத்ததைக் காண்க - சனமே
தனக்கின்னா மற்றவர்க்கும் தாக்குமென் றெண்ணா
மனமே உனக்கென்ன மாண்பு.
- மலர்மைந்தன்.

தனதாய் எனதாய் தவிக்கும் தவிப்பும்


கனவாய் நினைவாய் களிக்கும் - இனமாய்
சுனக்கம் வருத்தி சுயநலம் காக்கும்
மனமே உனக்கென்ன மாண்பு.
- இரா.சத்தியநாராயணன்.

சினத்தை விருப்பாய்ச் சிதைத்திட யேற்பாய்


இனத்தி னருமை இயம்பாய் - தினமும்
தனத்தின் வரவைத் தவிப்புட னேற்றும்
மனமே உனக்கென்ன மாண்பு.
- ந.இரா.இராசகுமாரன்.

பிறப்பும் நிகழாப் பிறர்துணை யின்றி


இறப்பிலும் வேண்டும் இடுவோர் - மறந்து
தனமே உறவெனத் தன்னலம் பேணும்
மனமே உனக்கென்ன மாண்பு!.
- கோவை லிங்கா.

வஞ்சகம் சூது வருத்துகின்ற பேராசை


மிஞ்சும் பொறாமையில் மீ ளாயோ - நெஞ்சே
தனத்தினைத் தேடியே தாவித் திரியும்
மனமே உனக்கென்ன மாண்பு.
- இரா.இரத்தினகுமார்.
----------------

You might also like