Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 108

யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.

நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

12 வகுப்பு
. தமிழ் உரைநூல்

பெயர் :
வகுப்பு :

பள்ளி :

.
யா. ப்ரீடா M. A, M. A, M. Ed.M. Phil.
முதுகலை தமிழாசிரியை,
பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையானூர்
தென்காசி மாவட்டம்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
1
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

பா.ஆ.பொ.நா.அரசு மேல்நிலைப்பள்ளி
ஆவுடையானூர்
வகுப்பு 12

மனப்பாடப் பகுதி

தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்


ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் !

தண்டி
பாவகை : நேரிசை வெண்பா

நெடுநல்வாடை
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

பாவகை : நேரிசை ஆசிரியப்பா. நக்கீ ரர்

கம்பராமாயணம்

துன்பு உளதுஎனின் அன்றோ


சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல் :
முன்பு உளெம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்.

பாவகை : கலி விருத்தம்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
2
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

குகனோடும் ஐவர் ஆனேம்


முன்பு : பின் குன்று சூழ்வான்
மக னொடும் அறுவர் ஆனேம் :
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய !
நின்னொடும் எழுவர் ஆனேம் :
புகல் அருங் கானம் தந்து,
புதல்வரால் பொலிந்தான் நுந்தை.

கம்பர்

பாவகை : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருக்குறள்

இயல் - 3

1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை


. பண்பும் பயனும் அது.

2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்


தெய்வத்துள் வைக்கப் படும்.

3. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்


வானகமும் ஆற்ற லரிது.

4. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது


அன்றே மறப்பது நன்று.

5. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை


செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

6.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை .


வேண்டும் பிறன்கைப் பொருள்.

15, மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய


பிறத்தல் அதனான் வரும்.

17. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்


தன்னையே கொல்லும் சினம்.

18. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்


ஏமப் புணையைச் சுடும்.
15. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
3
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

20. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்


கழகத்துக் காலை புகின்.

புறநானூறு

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே :


மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும் :
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்.

பிசிராந்தையார்.
பாவகை : நேரிசை ஆசிரியப்பா

இரட்சணிய யாத்திரிகம்

பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி


ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்
நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி.
. -எச்.ஏ. கிருட்டிணனார்

பாவகை : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

சிறுபாணாற்றுப்படை

எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள்


எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்.

பாவகை : நேரிசை ஆசிரியப்பா. நத்தத்தனார்


இயல் 1
செய்யுள் : இளந்தமிழே!
உரைநடை : தமிழ்மொழியின் நடை அழகியல்
செய்யுள் : தன்னேர் இலாத தமிழ்
துணைப்பாடம் : தம்பி நெல்லையப்பருக்கு
இலக்கணம் : தமிழாய் எழுதுவோம்.

மனப்பாடம் செய்ய வேண்டிய முக்கிய புணர்ச்சி விதிகள்


1. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
4
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

2. உயிர்வரின் உ.க்குறள் மெய் விட்டு ஓடும்.


3. இ ஈ ஐ வழி யவ்வும்
4.இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் தச தப மிகும்
5. ஈறு போதல்
6.முன் நின்ற மெய் திரிதல்
7. இனமிகல்
8. தனி குறில் முன் உயிர் வரின் இரட்டும்
9.பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்
10.மவ்வறுீ ஒற்றழிந்து உயிர் ஈறு ஒப்பவும்.

இயல் ஒன்று

உயிரினும் ஓம்பப்படும்

இலக்கணத் தேர்ச்சிகொள்

1. பிழையான தொடரைக் கண்டறிக


அ)காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீ து ஏறி கல்வெட்டுகளை கண்டறிந்தனர்
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வசியது

ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின

விடை:) காளையில் பூத்த மல்லிகை மனம் வசியது


2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத்தேர்க


அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன

விடை:) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

3. முடிந்தால் தரலாம் முடித்தால் தரலாம் இவ்விரு சொற்றொடர்கள்


உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.
முடிந்தால் தரலாம்: நான் கேட்ட பொருளை உன்னால் கொடுக்க முடிந்தால்
தரலாம்.
முடித்தால் தரலாம் :என் புத்தகத்தை உனக்கு நான் தேர்வை எழுதி
முடித்தால் தரலாம்.

4) தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்


யாவை?
● எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்க பழக வேண்டும் ந ன, ண,/ற, ர/ல,ள,
ழ ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
● வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழி கோலும்.
● கெ,கே,கொ,கோ கொம்பு உடைய குறில் நெடில் வேறுபாட்டினைப்
புரிந்து எழுத வேண்டும்.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
5
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

பலவுள் தெரிக

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல்


அ) யாப்பெருங்கலக் காரிகை ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்

விடை :இ) தொல்காப்பியம்

2. “மீ ண்டுமந்த பழமை நலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது
அ க மற்றும் சரி ஆ)க,உஇரண்டும் சரி
இ) ங மட்டும் சரி ஈ) க,ங இரண்டும் சரி

விடை :ஈ) க,ங இரண்டும் சரி

3. “மின்னேர் தனியாழி வெண்கதிர் ஒன்று ஏனையது தன்னேரிலாத தமிழ்


!”இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்
அ) அடிமோனை, அடி எதுகை. ஆ) சீர்மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர்மோனை. ஈ) சீர் எதுகை, அடிமோனை

விடை:இ) அடி எதுகை, சீர்மோனை

4.கருத்து 1:இயல்பு வழக்கில் தொடர் அமைப்பு என்பது எழுவாய் பயனிலை


என்று வருவதே மரபு
கருத்து 2: தொடர் அமைப்பு சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
அ) கருத்து 1 சரி. ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி. ஈ) கருத்து 1 சரி ,2 தவறு

விடை:) இரண்டு கருத்தும் சரி

5. பொருத்துக
அ தமிழ் அழகியல். 1. பரலி சு.நெல்லையப்பர்
ஆ. நிலவுப் பூ. 2. தி சு நடராசன்
இ. கிடை. 3. சிற்பி பாலசுப்பிரமணியன்
ஈ உய்யும் வழி. 4. கி ராஜநாராயணன்

அ) 4,3,2,1 ஆ) 1,4,2,3 இ)2,4,1,3 ஈ)2,3,4,1


விடை: ஈ)2,3,4,1

குறுவினா
1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.
● கவிதையின் இயங்காற்றல் தான் நடை என்று தொல்காப்பியம்
கூறுகின்றது
● “நடைபெற்றியலும் “என்றும் “நடை நவின்றொழுகும்”என்றும் சில
சொற்றொடர்கள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன
● ஆசிரியர் நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி
எனும் நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் தெளிவாக கூறுகின்றது.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
6
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

2. “படாஅ ஈத்த கெடாஅ நல்லிசைக்


கடாஅ யானைக் கலிமான் பேக”- இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை
நியமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கண குறிப்புகளையும் எடுத்து
எழுதுக
ஓசை நயமிக்க சொற்கள்
படாஅ,கெடாஅ,கடாஅ,பேக

இலக்கண குறிப்பு
படாஅ,-செய்யுளிசை அளபெடை
கெடாஅ,-செய்யுளிசை அளபெடை
கடாஅ -செய்யுளிசை அளபெடை
பேக- விளித்தல் விகாரம்

3. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்


● வானத்தின் செந்நிறத்தைப் போல உழைக்கும் தொழிலாளர்களின்
கைகள் சிவந்திருக்கும்
● அத்தொழிலாளர்களின் தோள் மீ து முத்து முத்தாய் வியர்வை துளிகள்
வற்றிருக்கும்
ீ இவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று
சிற்பிபாலசுப்பிரமணியனார் பாடுகின்றார்.

4. விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க.


விடியல் பொழுது வனப்புடன் இருக்கும்.

கூடுதல் வினாக்கள்
1. ஒலி பின்னல் என்றால் என்ன?
● இசையோடும் இசை கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை
பிறக்கிறது
● ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை
ஒலிப்பின்னல் என்கிறோம்

2. மொழியின் இயல்பு வழக்குகளை கலையியல் வழக்குகளாக மாற்றுபவை


எவை?
● உவமை,
● உருவகம்,
● எச்சம்,
● குறிப்பு,
● உள்ளுறை,
● இறைச்சி.

3. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் சிறப்பான நூல்கள் யாவை?


● தண்டியலங்காரம்
● மாறனலங்காரம்
● குவலயானந்தம்

4. அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?


● தொல்காப்பியம்,
● வரசோழியம்,

● இலக்கண விளக்கம்
● தொன்னூல்விளக்கம்,
● முத்து வரியம்.

சிறு வினாக்கள்
1.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
7
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● இசையோடும் இசை கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை


பிறக்கிறது
● ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை
ஒலிப்பின்னல் என்கிறோம்
● இப்பண்பைச் சங்கப் பாடல்கள் பலவற்றில் காணலாம்
சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம்

● “கடந்ததடு தானே மூவருங்கூடி


உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”
என்ற புறநானூற்றுப் பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற
விதத்தில் கதடற முதலிய வல்லினம் மெய்கள் பிற மெய்யைக்
காட்டிலும் அதிகமாக வருகின்றன இதன் மூலம் ஒலிக்கோலத்தின்
வலிமையை அறிந்து கொள்ளலாம்.

2. ‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம்


வானமெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக
காட்சி நயம்
● கதிரவன் மாலை நேரத்தில் மலைகளுக்கிடையே மறையும் இயற்கை
அழகை தலையைச் சாய்ப்பான். என்று கவிஞர் நயமாக கூறுகிறார்
● மாலை நேர கதிரவனின் ஒளிபட்டு வானம் முழுவதும் செந்நிறமாக
மாறிய அழகை செந்நிறத்துப் பூக்காடாம் வானம் எல்லாம் என்று
வர்ணிக்கின்றார்
● கதிரவனின் மறைவிற்குப் பின் வானத்தில் தோன்றும் விண்மீ ன்களைப்
பூக்களாக வர்ணித்துள்ள நயம் பாராட்டத்தக்கது

3. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ இடம் சுட்டி பொருள் விளக்குக


இடம்
ஆசிரியர் தண்டி எழுதிய தண்டியலங்கார நூலில் பொருள் அணியியல்
பகுதியில் இடம்பெற்ற பாடலில் காணப்படும் வரி.
பொருள்:
சூரியனும் தமிழும் ஒலிக்கின்ற நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட இந்த
உலகத்தின் இருளை அகற்றும் என்பது இதன் பொருள்

விளக்கம்
மக்களால் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றி கடலால்
சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒளர்கின்ற கதிரவன்.
பொதிகை மலையில் தோன்றி சான்றோரால் தொழப்பட்டு மக்களின்
அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புமை இல்லாததுமாக
இருப்பது தமிழ்.

4. பின்வரும் இருபாக்களின் கருத்துகளில் உள்ள வேற்றுமையை


எடுத்துக்காட்டுக

பழையன கழிதலும் புதியன மீ ண்டும் அந்த பழமை நலம்
புகுதலும் புதுக்குதற்கு
வழுவல கால வகையி னானே மெய்சிலிர்க்க தமிழ் குயிலே !கூவி வா
நன்னூல் ,வா !
சிற்பி பாலசுப்பிரமணியன்

● காலம் மாறுபாட்டின் காரணமாக பழையது கழியலாம் புதுமைகள்


தோன்றலாம் குற்றமல்ல என்று நன்னூல் கூறுகிறது.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
8
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● பழமை எல்லாம் தேவையற்றவை என்று ஒதுக்கி விடக் கூடாது


அவற்றை மீ ண்டும் புதுப்பித்து தமிழில் மறுமலர்ச்சிக்கு வித்திட
வேண்டும் என்பது சிற்பி எழுதிய கவிதையின் பொருள்
வேற்றுமை
● நன்னூலார் பழையன கழிதல் குற்றமல்ல
● கவிஞர் சிற்பி மீ ண்டும் அந்த பழமை நலமே தற்போது வசந்த காலமாய்
தோன்ற வேண்டும் என்கிறார்

கூடுதல் வினா
1.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக
இலக்கணம்
இரு வேறு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையை முதலில் கூறி பின்
வேறுபடுத்தி காட்டுவது பொருள் வேற்றுமை அணி
சான்று
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்

பாடலின் பொருள்
மக்களால் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றி கடலால்
சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒளர்கின்ற கதிரவன்.
பொதிகை மலையில் தோன்றி சான்றோரால் தொழப்பட்டு மக்களின்
அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புமை இல்லாததுமாக
இருப்பது தமிழ்.

பொருத்தம்
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை
முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையை பின்னர்
வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.

நெடுவினா
1.கவிதையின் நடையை கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி
விளக்குக
கவிதையின் நடையை கட்டமைக்கும் அழகியல் கூறுகள்
● தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே
முதன்மையான ஆதாரம்.
● உண்மையையும் உணர்வையும் அறிவுப்புலனையும் அழகியல்
இலக்கியமாக ஆக்குகிறது .
● மொழி சார்ந்த கலை என்பது இலக்கியம் ஆகும்
● மொழியின் தனித்துவமான பண்புகள் இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத்
தன்மையைத் தந்து விடுகிறது இதை கவித்தனம் அல்லது
இலக்கியத்தனம் என்பர்
● மொழிக்குள் இருக்கும். வலிமைமிக்க ஆற்றல்
கவிதைக்காக,இலக்கியத்திற்காக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது
கவிதையின் இயங்காற்றல் தான் நடை
● இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை
பிறக்கிறது
● ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை
ஒலிப்பின்னல் என்கிறோம்

● வன்மையான உணர்ச்சியை காட்ட வல்லின மெய்கள் அதிகமாக


வருகின்றன பாடல்களில் நெடில் ஒலிகளின் வருகை சில ஒலிகளும்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
9
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

சில சொற்களும் தன்மை வரல் தன்மை. சொல் விளையாட்டுகள்


போன்ற ஒலி கோலம் சங்க பாடல்களில் முக்கியமான பண்பாகும்
● சொல்வளம் என்பது தனிச் சொற்களால் நிறைந்து அமைவதைக்
குறிக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் கவவுக்கை நெகிழாமல்
முயங்கி கிடப்பதையும் குறிக்கும் .
● சொல்பவனுடைய மொழித் திறனைக் கேட்போர் பெற வேண்டும்
பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்ப தொடர்கள் நேர்
நடத்தும் ஏரி இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்கும்

2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழி பற்று சமூக


பற்று ஆகியவற்றை விவரிக்க
மொழி பற்று
● தமிழை வளர்ப்பதையே எப்போதும் கடமையாக கொள்ள வேண்டும்
● தமிழில் புதியன புகுதல் வேண்டும் .
● உண்மை இன்பம் அதிகமாக வேண்டும்
● தமிழ்நாட்டில் வதிகள்
ீ தோறும் தமிழ் பள்ளிக்கூடங்கள் தோன்ற
வேண்டும் பிற மொழியில் உள்ள இசை, சிற்பம், பூமி நூல்கள், வான
நூல்கள் என அனைத்து துறை சார்ந்த நூல்களும் தமிழில் போய்
பதிந்தது பெருகவேண்டும்
சமூக பற்று
● நம்மை விட மெலியவருக்கு நாம் இறக்கப்பட்டு அவர்களை நமக்கு
இணையானவராக ஆக்க வேண்டும்
● அனைத்து துறையிலும் உயர வேண்டும்
● ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்று கொள்ள வேண்டும் பெண்ணை
தாழ்த்துபவர்கள் தன் கண்ணை தானே குத்திக் கொண்டதற்குச் சமம்
● தமிழ்நாட்டில் தொழில்கள் பெருக வேண்டும்
● தொழில்கள் தொழில்கள் என்று கூவ சொல்கிறார் வியாபாரம் வளர்க
எந்திரங்கள் பெருகுக முயற்சிகள் ஓங்குக என்று கூறுகிறார்

3. தமிழில் சீரிளமை திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்


கூறுவனவற்றை தொகுத்து எழுதுக
தமிழில் துணை வேண்டும்
● எம் அருமை செந்தமிழே சிவப்பு சூரியன் மாலை நேரத்தில் மழை
முகடுகளில் தலை சாய்ப்பான்.
● அந்த செந்நிற ஒளிபட்டு வானமெல்லாம் சிவப்பு பூக்கள் பூத்து நிறைந்த
செங்காடாகவே காட்சியளிக்கும்.
● அதுபோல கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களின் கைகளும்
சிவந்து காட்சியளிக்கும்.
● தொழிலாளர்களின் தோள்கள் மீ து வியர்வை துளிகள் முத்து முத்தாய்
வற்றிருக்கும்.

● இந்த காட்சிகளை எல்லாம் வியந்து பாடுவதற்கு ஏற்ற துணை தமிழ்
மொழி மட்டுமே !அதுவே தமிழில் சீரிளமை திறம் என்கிறார் கவிஞர்
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்
● கவிஞர்களின் மனதில் பொங்கி வருகின்ற கவிதை வெறிக்குப்
பொருத்தமான உணவாக விளங்கக் கூடியது தமிழ் .
● பழங்காலத்தில் பாண்டியநாட்டில் முச்சங்கத்தில் கொலுவிருந்தது
தமிழ். பாரி முதலான கடையெழு வள்ளல்களை ஈன்றவள் தமிழ்.
பெருமை மிகுந்த பழங்காலம் மீ ண்டும் புதுப்பிக்கப்பட
வேண்டும்.அதற்கு தமிழே அனைவரின் மெய்சிலிர்க்கும் படியாக
கூண்டை உடைத்து வரத்துடன்
ீ வெளிவரும் சிங்கத்தைப் போல
பொதிய மலையிலிருந்து புறப்பட்டு சீறி கொண்டு வா!
● உன் சீரிளமை திறம்தான் என்னை என்று கவிஞர் தமிழில் சீரிளமை
திறத்தை வியந்து பாடுகிறார்.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
10
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

4. சொல்லோவியங்கள் என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால்


எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது அவ்வெளியிட்டு
விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி நன்றி உரை எழுதுக.

“அரசினர் மேல்நிலைப்பள்ளி”

சொல்லோவியங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா

இடம் :பள்ளி வளாகம்

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து :மாணவர்கள்


வரவேற்புரை :
முன்னிலை உரை :

மொழியை ஆள்வோம் பக்கம்.19


தமிழாக்கம் தருக

1.Learning is a treasure that will follow its owner everywhere.


கற்றல் என்பது அதன் உரிமையாளரைப் பின்பற்றும் ஒரு கருவூலமாகும்

2.A new language is a new life


ஒரு புதிய மொழி புதிய வாழ்க்கை

3.If you want people to understand you, speak their language.


மக்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்களுடைய
மொழியைப் பேசுங்கள்
4.knowledge of language is the doorway to wisdom
மொழி அறிவானது ஞானத்தின் நுழைவாயில்

5.The limits of my language are the limits of my world.


என் மொழியின் எல்லையே என் உலகின் எல்லை

இலக்கிய நயம் பாராட்டுக

முச்சங்கம் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத்துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற் சங்கமாக
சுவை மிகுந்த கவி கூட்டி
அற்புதங்கள் எல்லாம்
அமைத்த பெருமாட்டி!

திரண்ட கருத்து

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
11
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

முதல் இடைக்கடைச் சங்கங்களை அமைத்து அதில் அனுபவமும் அறிவும்


மிக்க முதுமை வாய்ந்த புலவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து மூன்று
சங்கங்கள் மூலமாகவும் அளவிடர்கறிய பொருளான அகம் புறம் மற்றும்
அறம் சார்ந்த நூல்களை எல்லாம் ஆக்கி சொற்போர் நிகழ்த்தும் இடமான
சங்கத்தில் என் வகை சுவைகளும் மிகுந்த கவிதைகளை இயற்றி மனித
வாழ்விற்கே அறம் புறம் என்ற இலக்கணங்களையும் மின்னியல் மண்ணியல்
கனிமவியல் போன்ற பல அற்புதம் நிறைந்த அறிவுசார் நூல்களை எல்லாம்
அமைத்தவர் நம் தமிழ் அன்னையே

மைய கருத்து

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு மையக் கருத்து அழகு


முதுமைத் தன்மை வாய்ந்த புலவர்களால் முச்சங்கங்களையும் அமைத்து
அதிலே அடைவிற்கரிய பொருள்கள் எல்லாம் என் சுவை மிகுந்த
பாடல்களாலும் பல அற்புதங்கள் எல்லாம் தன் நூல்களில் அமைத்தவள்
தமிழன்னை என்கிறார் கவியரசர் கண்ணதாசன்

தொடை நயம்
i)எதுகை தொடை
மலைகளில் அழகு உதகை
கவிதையில் அழகு எதுகை

செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்று வர தடுப்பது எதுகை

எதுகைச் சொற்கள்
முச்சங்கம் அச்சங்கத்
சொற்சங்கம் அற்புதங்கள்

ii)மோனைத் தொடை
குயவன் கையில் பானை
கவிஞன் கையில் மோனை

செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மூனை எனப்படும்


முச்சங்கம், முதுபுலவர்
அச்சங்கம், அளப்பரிய, அற்புதம் ,அமைத்த.
Iii)இயைபுத் தொடை
அடிதோறும் கடைசி சீரோ அசையோ எழுத்தோ ஒன்றி வருவது இயைபு
தொடையாகும்.
தமைக்கூட்டி, பொருள்கூட்டி, கவி கூட்டி, பெருமாட்டி

அணிநயம்
மரத்துக்கு அழகு கனி கவிதைக்கு அழகு அணி

இப்பாடலில் கூட்டி என்ற சொல் அமைந்து என்ற பொருளை பலமுறை


வந்துள்ளதால் இப்பாடல் சொற்பொருள் பின்வருநிலையை அணியாகும்

சுவை நயம்
தமிழ் மொழியை பெருமையாக கூறியுள்ளதால் பெருமித சுவை வந்துள்ளது

சொல் நயம்
சுவை மிகுந்த
இப்பாடலில் என் சுவைகளால் கவிஞர்கள் தம் ஏற்பாடுகளை
வெளிப்படுத்தியுள்ள பாடல்கள் நிறைந்துள்ளன எனவே சுவை மிகுந்த என்ற
சொல் இப்பாடலுக்கு ஏற்ற நயமான சொல்லாக அமைந்து வந்துள்ளது
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
12
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

முடிவுரை இப்பாடல் தொடை நயம் அணிநயம் சுவையினையும்


சொல்நையும் போன்ற அனைத்து நயங்களும் நிரம்பப் பெற்றுள்ளது
கண்ணதாசனின் கவி இன்பத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.

உவமை தொடர்களை சொற்றொடர்களில் அமைத்து எழுதுக


1.தாமரை இலை நீர் போல
ராமன் வகுப்பில் அனைவரிடமும் தாமரை இலை நீர் போல பழகுகிறான்

2. கிணற்றுத் தவளை போல


உலக நடப்பு அறியாமல் கிணற்றுத் தவளை போல வாழக்கூடாது.

3. எலியும் பூனையும் போல


அண்ணனும் தங்கையும் எலியும் பூனையும் போல சண்டையிட்டுக்
கொள்வார்கள்

4. அச்சாணி இல்லாத தேர் போல


பொறுப்பில்லாத மகனைப் பார்த்து அச்சாணி இல்லாத தேர் போல தாய்
உடைந்து போனாள்.

5. உள்ளங்கை நெல்லிக்கனி போல


எனது ஆசிரியர் நடத்திய பாடம் எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல
எளிதாக புரிந்தது.

மொழியோடு விளையாடு
VII.
1.எண்ணங்களை எழுத்தாக

காலத்தச்சனால் கல்வெட்டு செதுக்கிய நம் உளி


கணித்தது நம் தொன்மைக்கு ஒரு துளி!
நாகரிகத்தின் காலக்கண்ணாடியே நம் கல்வெட்டு!
நம் பழம் பெருமை அறிந்திடவே ஒரு அடிக்கல் நாட்டு!
அறச்செயல்களை நமக்கு அறிவித்ததும்
அரிய எழுத்துருகளை நாம் அறியச் செய்ததும் !
ஆதி மனிதன் அதில் கல் சித்திரங்களின் அருமையே !

ஆவணமானது நம் தொன்மையில்

VIII.
2.அந்தாதி தொடரால் கவித்துவமாக்குக
குழந்தையை கொஞ்சம் தாயின் குரல்
தாயின் குரலில் உயிரின் ஒலி
உயிரின் ஒலியில் குழந்தையின் துயில்
குழந்தையின் துயிலில் தாயின் அன்பு

3.குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களை கண்டுபிடிப்போம்


எ.கா கவிஞர் தம் ஈற்றிரு எழுத்துக்களால் அணிகலன் செய்யலாம் -கவிமணி
(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி,
ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)

1. தமிழ் அறிஞர் முதல் இரு எழுத்துக்களால் மறைக்கலாம்

மறைமலை அடிகள்

2. தாய்மொழி ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தருவன


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
13
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

தமிழ்ஒளி

3. சிறுகதை ஆசிரியர் முதல் பாதி நவனம்



புதுமைப்பித்தன்
4. முன்னெழுத்து அரசன்: பின் எழுத்து தமிழ் மாதம்

கோதை

நிற்க அதற்குத் தக

செயல்பாடு சரி காரணம் தவறு மாற்றம்

பொருள்களை எடுத்த சரி பொருள்களை


இடத்தில் வைத்தல் தேடாது எடுக்க முடியும்
நேரம் வணாதல்

தவிர்க்கப்படும்

பொது இடத்தில் எச்சில் தவறு தூய்மை கெடும்


துப்புதல் நோய் பரவும்
கட்டுப்படுத்தி
குறிப்பிட்ட இடத்தில்
துப்ப பழக்க வேண்டும்

வகுப்பில் காகிதங்களை தவறு வகுப்பறை


கிழித்து போடுதல் தூய்மை கெடும் குப்பை
கூடை வைத்து போட
பழக வேண்டும்

இருக்கை மேசைகளில் தவறு பொதுவுடமை


கிறுக்குதல் நமக்கு முன் பலருக்கும்
பயன்பட்டது நமக்குப்
பின் பலருக்கும்
பயன்பட வேண்டும்
பாதுகாப்பாக
காப்பாற்றுவது நல்லது

இயல் 2
இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்

இலக்கண தேர்ச்சிக்கொள் (பக்கம்-41)


1. தமிழில் திணை…….. பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது
அ)பொருள் குறிப்பு ஆ) சொற்குறிப்பு இ)தொடர் குறிப்பு ஈ)எழுத்து குறிப்பு
விடை :அ)பொருள் குறிப்பு

2. “உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே


அஃறிணை என்மனார் அவரல பிறவே” நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்
அ) நன்னூல் ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம் ஈ) இலக்கண விளக்கம்

விடை:இ) தொல்காப்பியம்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
14
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

3. யார் எது ஆகிய வினா சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும்


திணைகள் முறையே
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
விடை: ஆ) உயர்திணை, அஃறிணை

4. பொருத்தி விடை தேர்க


அ) அவன் அவள் அவர் -1)உளப்படுத்தாதத் தன்மை பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் -2) உளப்பாட்டு தன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் -3)தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள் நாம் -4)பதிலீடு பெயர்கள்
அ) 4,1,2,3 ஆ)2,3,4,1 இ)3,4,1,2 ஈ)4,3,1,2
விடை: அ) 4,1,2,3

5. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும்


பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும்
பயன்படுத்துவதற்கும் உதவும் அடிப்படை பண்புகள்
● திணை
● பால்
● எண்
● இடம்
ஆகியனவாகும்.

6) உயர்திணை பன்மை பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு


தொடர்களை எழுதுக
● இரண்டு மாணவர்கள் வந்தனர்
● கவிஞர்கள் கவிதைகளை எழுதினர்

நம்மை அளப்போம்(பக்கம்-42)

பலவுள் தெரிக.
1.பொருத்துக
அ) குரங்குகள் - 1)கன்றுகளை தவிர்த்தன.
ஆ) விலங்குகள் - 2)மரங்களிலிருந்து வழ்ந்தன.ீ
இ) பறவைகள் -3)குளிரால் நடுங்கின.
ஈ) பசுக்கள் -4)மேய்ச்சலை மறந்தன.
அ) 1,3,4,2 ஆ) 3,1,4,2 இ)3,4,2,1 ஈ)2,1,3,4

விடை : இ )3,4,2,1

2. நரம்புகளுக்குள் வணை
ீ மீ ட்டிங் கொண்டிருக்கிறது என்று ஐயப்ப மாதவன்
குறிப்பிடுவது
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர் நிலைகள்

விடை: இ) மழைத்துளிகள்

3. வெள்ளச் சமவெளிகள் அழிய காரணம்


அ) பருவநிலை மாற்றம்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
15
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

ஆ) மணல் அள்ளுதல்
இ) பாறைகள் இல்லாமை
ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்

விடை: ஆ) மணல் அள்ளுதல்

4. பொய்யா வானம் புதுப்பெயல் பொலிந்தன தடித்த சொல்லின்


இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

விடை: ஈ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

5. உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கி சென்றால் மட்டுமே புவி


வெப்பமாதலை கட்டுப்படுத்த முடியும் இத்தொடர் உணர்த்துவது
அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடு தேவையாகிறது
ஆ) பசுமை குடில் வாயுக்கள் அதிகமாகின்றது
இ) காலநிலை மாறுபடுகிறது
ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது

விடை: அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடு தேவையாகிறது

குறுவினா
1. ‘ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத் தொடர் வாயிலாக
எவற்றை வலியுறுத்துவாய்?

● மரம் என்பது மழைக்கு ஆதாரமாக விளங்கும்


● மாசுகளைத் தூய்மைப்படுத்தும் மண்ணரிப்பைத் தடுக்கும்
● நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்க துணை புரியும்
● மரம் வளர்ப்பது நமது கடமை
● ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் எனும் முழக்கத்தொடர் வாயிலாக
வலியுறுத்துவேன்.

2. இனநிரை பிரித்து புணர்ச்சி விதி தருக


இனநிரை - இனம்+ நிரை

விதி
● மவ்வறு ீ ஒற்றழிந்து உயிர் ஈறு ஒப்பவும் எனும் விதிப்படி மகர ஒற்று
ஒழிந்தது
● இனம்+ நிரை
● இனநிரை

3. மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாக


சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான் இரு
தொடர்கள் ஆக்குக
● மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாக
சேதப்படுத்தினான்.
● மனிதன் இயற்கை வளங்களை கடமையாக சேதப்படுத்தியதன்
விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான்.

4. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
16
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● மழைக்காலத்தில் நனைந்திருந்த பகுதிகள் எல்லாம் திடீர் சூரியனின்


ஒளிக்கதிர்களால் காய்ந்து விட்டது.
● அதனால் நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாக தெரிகிறது.

கூடுதல் வினா

|. விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு நடுங்கியதாக நக்கீ ரர் கூறுகிறார்


● குரங்குகள் நடுங்கின.
● விலங்குகள் மேய்ச்சலை மறந்தன.
● பசுக்கள் கன்றுகளைத் தவிர்த்தன.
● பறவைகள்மரத்திலிருந்து விழுந்தன.

சிறு வினா
1. “இக்கவிதையின் அடி
‘தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே, எனும் நாட்டுப்புறப் பாடலின்
தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.

‘தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே,

● நாட்டுப்புறப் பாடலில் நாள்தோறும் புல் நுனியில் காணப்படும் பனி நீர்


சூரியன் தோன்றியதும் மறைவதைக் கண்டு பணி நீர் புல் நுண்ணியில்
தூங்குவதாகவும் அதனை கதிரோன் கதிர் கரம் நீட்டி வாங்கி
கொள்வதாகவும் பாடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் இருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்”


● மழைக்காலங்களில் நிரம்பி வழிந்து குளிர்ச்சியாக இருந்த நீர் நிலைகள்
சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டவுடன் ஆவியாக்குவதைக் கவிஞர்
கதிரவன் தன் கதிர்களை உதடுகள் ஆக்கி மழை நீரை உறிஞ்சி
எடுப்பதாக கற்பனை நயத்துடன் பாடியுள்ளார்

2. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்


● கோவலர்கள் தங்கி இருந்த மலை பகுதியில் உலகம் குளிருமாறு புதிய
மழையைப் பொழிந்தது .
● தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது .
● தாம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால்
வருத்தம் அடைந்தனர்.
● குளிரின் மிகுதியால் ஆயர்கள் சூடி இருந்த காந்தள் மாலை கசங்கியது.
● பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
● ஆயர்களது பற்கள் நடுங்கின.

3. மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் முன் எச்சரிக்கை


நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
● பேரிடர் காலங்களில் தாங்கக்கூடியவையாக புதிய கட்டுமானங்களை
அமைக்க வேண்டும்.
● நீர் வழிப்பாதைகளுக்கான தெளிவான வரைபடம் உருவாக்கப்பட்டு
அப்பதைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
● சமூக காடுகள் வளர்ப்பு திட்டங்களைச் சமூக இயக்கமாக
வளர்த்தெடுக்க வேண்டும்.
● கடற்கரை ஓரங்களில் சதுப்பு நில காடுகள் வளர்த்தல் வேண்டும்.

4. பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக


● நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர்
மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
17
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து,


சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்து முதலான பேரிடர்கள் நிகழும்
போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாற்ற இந்த
ஆணையம் உதவுகிறது.
● மாநிலம் மாவட்டம் ஊராட்சி சுற்றுலா ஆட்சி என அனைத்து
நிலைகளிலும் குழுக்கள் அமைத்து பேரிடர் காலங்களில் செயலாற்ற
பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிவகை செய்கிறது

நெடுவினா
1. நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல்
ஆர்வலர் பசுமை தாசனாலும் உடன் நீங்கள் நடத்திய கற்பனைக்
கலந்துரையாடலைத் தொகுத்து எழுதுக

நெகிழியைத் தவிர்த்து நிலத்தை நிமிர்த்துவது தொடர்பாக சில விளக்கங்களை


அறிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமை தாசனாருடன் உரையாட
தொடங்கினேன்
இனியன்: வணக்கம் ஐயா சுற்றுச்சூழல் ஆர்வலரான தங்களை சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி ஐயா
பசுமை தாசர்: வணக்கம் தம்பி…! அது …என்ன கையில்…. தம்பி…!
இனியன்: வட்டிற்கு
ீ உறவினர் வந்துள்ளனர் அவர்களுக்கு தேநீர் வாங்கி
செல்கிறேன் ஐயா
பசுமை தாசர் : நெகிழி பையில் தேநீர் வாங்கிச் செல்வது ஆபத்தானது தம்பி..!
இனியன் : அப்படியா ஐயா

பசுமை தாசர்: ஆமாம் தம்பி ..!பெட்ரோலிய எண்ணையைச் சுத்திகரிக்கும்


போது கிடைக்கும் பாலி எத்தலின் என்னும் வேதி கழிவுப்பொருளில் இருந்து
தான் நெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த நெகிழியிலிருந்து
தயாரிக்கப்படும் நெகிழி பையில் சூடான தேநீரை ஊற்றினால்
வேதிவினைபுரிந்து அதில் உள்ள தேன ீரை நாம் குடிக்கும் பொழுது புற்றுநோய்
முதலிய கொடிய நோய்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது தம்பி.

இனியன் : நெகிழிப்பை அவ்வளவு கொடியதா ஐயா

பசுமை தாசர் : இது மட்டுமா இன்னும் சொல்கிறேன் கேள் நெகிழிப்பையைப்


பொதுவெளிகளில் தூக்கி எறிவதால் விவசாய நிலங்கள் கடுமையாக
பாதிக்கப்படுகின்றது மேலும் அதை எரிப்பதனால் டையாக்சீன் என்ற புகை
பூதமும் ஏற்பட்டு காற்று மாசும் ஏற்படுகிறது.

இனியன் : அப்படியா… ஐயா

பசுமைதாசர் : நெகிழிப் பொருள்கள் மண்ணுக்குள் மக்குவதற்கு 100


ஆண்டுகளுக்கு மேலாகும் அதனால் மழை நீர் பூமிக்குள் செல்வது
தடுக்கப்படுகின்றது வேளாண்மை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது
அதுமட்டுமின்றி ஆறு மற்றும் கால்வாய்களில் நெகிழி பொருட்களைக்
கொட்டுவதால் அவற்றின் நீர் வழி பாதைகள் தடுக்கப்படுகின்றது
மழைக்காலங்களில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு
ஏற்படுகின்றது.

இனியன் : இதற்கெல்லாம் என்ன செய்யலாம் ஐயா

பசுமைதாசர் : நெகிழிப் பொருள் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாக மக்கள்


தவிர்க்க வேண்டும் கண்ட கண்ட இடங்களில் பரவி கிடக்கின்ற நெகிழிப்
பொருட்களைத் திரட்டி அழிக்க வேண்டும் எல்லாவற்றுக்கும் மேலாக

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
18
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

அரசாங்கம் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழி சார்ந்த பொருட்களை உற்பத்தி


செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்

இனியன் : நெகிழி சார்ந்த எத்தனையோ பொருட்கள் உள்ளன அவற்றை


பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் இதற்கு விழிப்புணர்வு
பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் சொல்வது சரிதானே.,..! ஐயா

பசுமைதாசர் : இதற்குத் தகுதியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள் தான் இந்த


வகையில் பள்ளி பிள்ளைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி நெகிழியால்
மூடப்பட்ட பொருட்கள் சாக்லேட் முதல் அனைத்தையும் வாங்குவதை
மாணவர்கள் தவிர்க்க வேண்டும் பயன்பாடு குறைந்தால் அது தானே மறைந்து
விடும் இந்த நெகிழி வந்ததால் சணல் துணியால் செய்யப்பட்ட பை முதலான
பொருட்கள் உற்பத்தி குறைந்து போனது. அவை மீ ண்டும் உருவெடுக்கும்
.தொழில்கள் பெருகும் .தொல்லைகள் குறைந்து நன்மைகள் பெருகும்.

2.நெடுநல்வாடையில் நக்கீ ரர் காட்டும் மழைக்கால வர்ணனையை சொல்லில்


வடிக்க
புதுப்பெயல்
● மேகமானது தான் தங்கி இருந்த மழையை வலப்பக்கமாக சூழ்ந்து
எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது
தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்தனர்.
● வளைந்த கோலையுடைய ஆயர், எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை
வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர் .
● தாம் பழகிய நிலத்தை விட்டு பெயரும் நிலையால் வருத்தம்
அடைந்தனர் .
● தலையில் சூடி இருந்த நீண்ட இதழ்களை உடைய காந்தள் மாலை
கசங்கியது.
● பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்
பற்கள் நடுங்கின
வாடைக்கால வாழ்வு
● விலங்குகள் குளிர் மிகுதியால்
● மேய்ச்சலை மறந்தன.
● குரங்குகள் நடுங்கின.
● மரங்களில் தங்கி இருந்த பறவைகள் நிலத்தில் வழ்ந்தன.

● பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மழையையே
குளிரச் செய்வது போன்று இருந்தது நள்ளிரவு.

3. பொறுப்புணர்ச்சி இன்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய


மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.

முதல் கல் -உத்தம சோழன்


கதை மாந்தர்கள்
மருதன்
மாரிமுத்து, காளியப்பன் ,முல்லையம்மா, பிரேம்குமார் ,அல்லி
முன்னுரை
இதழ்கள் எனும் சிறுகதையை உத்தமசோழன் எழுதியுள்ளார் இக்கதையில்
வரும் கூலி விவசாய கூலியாள் மருதனின் பண்பு நலன்களைப் பற்றி
பின்வரும் பகுதிகளில் காணலாம்

மூழ்கும் பயிரும் மருதனின் கவலையும்

ஐப்பசி மாதத்தில் காவிரியின் கடைமடை பகுதியில் பெருமழை பொழிந்து


வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வளவனாட்டின் வடகறையில் நின்று பார்த்த
மருதனுக்கு திக் என்றது நடவு முடிந்து பத்து நாளான பச்சை பிடிக்கத்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
19
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

தொடங்கிய இளம் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கும் நிலையில் இருந்தன மழை


மேலும் தொடரும் என்ற வானிலை அறிவிப்பைக் கேட்ட மருதன் மேலும்
பதற்றம் அடைந்தான். ஒரு வாரமே ஆன குழந்தை பயிர்கள் ஒரு நாள்
மூழ்கினால் போதும் முழுவதும் அழுகிவிடும் என்ன செய்யலாம் என்று
எண்ணும் மருதனுக்குள் ஆயிரம் யோசனைகள்.

தீர்வினை தேடும் அறிவும் அக்கறையும் மிகுந்தவன்


உபரி நீர் வடிய வேண்டிய மதகடிக்கு மருதன் சென்றான் ஊரைச் சுற்றிலும்
உள்ள மூன்று மயில் நீலபடி வாய்க்கால் முழுவதுமே செடிகளைப் பிடுங்கி
எறிந்தால் போதும் ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும் விரல்கள்
பத்தும் மூலதனம் என்ற தாராபாரதியின் கருத்திற்கு ஏற்ப ஊர் மக்களை
எல்லாம் ஒன்று சேர்த்து இந்த வேலையை செய்து விடலாம் என்ற
தன்னம்பிக்கையில் ஊருக்குள் சென்றான்

பொதுநலம் மிக்க பண்பாளர்


ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு காட்டாமணக்கு
செடியை அகற்றினால் ஒரே நாளில் வாய்க்காலும் சுத்தமாகிவிடும்
தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும் என்று மருதன் வடிகாலில் மீ ன் பிடித்துக்
கொண்டிருந்த மாரிமுத்துவிடம் கூறினான் மனிதனின் பேச்சைக் கேட்டு
கண்டுகொள்ளாமல் மாரிமுத்து மீ ன் பிடிப்பதிலேயே கவனமாக
இருந்தான்.ஊரில் மிகப்பெரிய மிராசான காளியப்பனை மருதம் சந்தித்தான்.
ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வாய்க்காலை அடைத்துள்ள
காட்டாமணக்குச் செடிகளை அகற்ற முயற்சிக்க வேண்டுமாய்
கேட்டுக்கொண்டான் ஊர் மக்களை ஒன்று திரட்டினால் தனக்கு பணம்
செலவாகும் என்று காளியப்பன் எண்ணினான். தான் நாளை வெளியூருக்கு
செல்ல இருப்பதாக கூறி காலி அப்பனும் ஒதுங்கிக் கொண்டான். ஊர் மக்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து காட்டாமணைக்கு அகற்றினால் பயிர்களை
வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து விடலாம் என்று மருதன் ஊர் காரர்கள்
பலரிடம் கூறினான் மருதன் சொல்லும் செயலுக்கு ஊரார் ஒப்புக்கொண்டனர்
ஆனால் ஊரார் அனைவரும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி ஒதுங்கி
கொண்டனர்

தவித்த மருதன்
உடலும் உள்ளமும் சோர்ந்த நிலையில் மருதன் வட்டிற்கு
ீ வந்தான் மருதனின்
மனைவி அல்லி விவரம் கேட்டால் இந்த ஊரில் இருக்கின்ற 60 வேலி
நிலத்தில் நமக்கென்று ஒரு குழி நிலம் கூட இல்லை எந்த நிலம் எப்படி
போனால் நமக்கு என்ன என்று அல்லி கூறினாள் இரவு உணவை
இயந்திரத்தனமாய் சாப்பிட்டு படுத்தான் வரதன் அவனுக்குத் தூக்கம்
வரவில்லை

முதல் கல்லானான் மருதன்

விடியற்காலையில் விழித்தெழுந்த அல்லி வட்டில்


ீ மருதனைக் காணாது
திகைத்தாள்.மருதன் தன்னந்தனியாக வடிகாலில் மண்டி கிடந்த
காட்டாமணக்கு செடிகளை அகற்றிக் கொண்டிருந்தான் வாய்க்காலில்
மருதனை கண்ட அல்லி மருதனுக்கு உதவியாய் செடிகளை அகற்றினாள்.
அவ்விருவரின் செயலைப் பார்த்த மாரிமுத்து மீ ன்பிடிப்பதை விட்டுவிட்டு
மருதுடன் இணைந்து காட்டாமணக்கு செடிகளை வெட்டி இழுத்தான் அந்த
வழியாக வெளியூருக்கு சென்ற காளியப்பனும் வாய்க்காலில் இறங்கினார்.
இச்செய்தி ஊருக்குள் பரவியது ஊரார் ஒவ்வொருவராக வாய்க்காலுக்குள் வர
தொடங்கினர்.
முடிவுரை

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
20
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

தனக்கென வாழாமல் பிறர்க்கென முயலும் உடையவனாக மருதன்


விளங்குகிறான் பொது சேவையில் ஈடுபடுபவர் பிறரை எதிர்பார்க்காமல்
முதலில் தாமே செயலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை மருதன் என்னும்
பாத்திரத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.

கதை உணர்த்தும் நீதி

கருமம் சிதையாமல் கண்ணோட்டமாக இருப்பவர்களுக்கு இந்த உலகமே


சொந்தம்

4. புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்குள் அருகில் அருந்து கிடக்கும் மின்


இணைப்புகளைச் சரி செய்ய கோரி உங்கள் ஊர் மின்வாரிய பொறியாளருக்குக்
கடிதம் எழுதுக

அனுப்புனர்
ஊர் பொதுமக்கள்
பாரதி நகர்
சின்னாம்பாளையம்
சென்னை
பெறுநர்
மின்வாரியபொறியாளர் அவர்கள்
. தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம்
சென்னை

மதிப்பிற்குரிய ஐயா,
. பொருள்: புயல் தாக்கத்தினால் எங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து
கிடக்கும் மின் இணைப்புகளை சரி செய்ய வேண்டுதல் - சார்பாக.

வணக்கம்,
. நாங்கள் மேட்டுபாளையத்தில் பாரதி நகர் பகுதியில் வசித்து வருகிறோம்
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து நாங்கள்
இன்னும் மீ ளவே இல்லை. சுழன்றடித்த சூறாவளியால் மரங்கள் விழுந்து
மின்இணைப்பு கம்பிகளெல்லாம் அறுந்து கிடக்கின்றன. விளையாட வரும்
குழந்தைகள் வண்டி வாகனங்களில் செல்வோர், வயலுக்கு ஆடு மாடுகளை
ஓட்டி செல்வோர் என்ற பலரும் பயணம் செய்யும் பாதை இது மின் இணைப்பு
கம்பிகள் அருந்தும் தொங்கிக் கொண்டும் கிடைப்பதால் பலருக்கும் துன்பம்
ஏற்பட வாய்ப்பு உண்டு உயிர்பலி கூட நடக்கலாம் எனவே அறுந்து கிடக்கும்
மின் இணைப்புகளைச் சீர் செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்
.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
ஊர் மக்கள்.

நாள்:
இடம்:

உறைமேல் முகவரி
பெறுநர்
மின்வாரியபொறியாளர்அவர்கள்
தமிழ்நாடுமின்வாரிய அலுவலகம்
சென்னை

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
21
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

மொழியை ஆள்வோம் பக்கம். 44

மொழிபெயர்ப்பு பகுதியைப் படித்து 20 ஆங்கில சொற்களையும் அதன்


தமிழாக்கத்தையும் எடுத்து எழுதுக
1. Green Belt movement - பசுமை வளாக இயக்கம்
2. Founded. - தோற்றுவித்தவர்
3. Thirty years. - 30 ஆண்டுகள்
4. Many women. - பல பெண்கள்
5. Trees. - மரங்கள்
6. Food. - உணவு
7. Fuel. - எரிபொருள்
8. Election. - தேர்தல்
9. Elected. - தேர்வு
10. Parliament. - நாடாளும் மன்றம்
11. Minister of environment - சுற்றுச்சூழல் அமைச்சர்
12. Nobel Prize. - நோபல் பரிசு
13. Thousand of women. - பல்லாயிரக்கணக்கான பெண்கள்
14. Social Forestry schemes - சமூக காடுகள் வளர்ப்பு திட்டம்
15. Thirty million trees. - மூன்று கோடி மரங்கள்
16. Democracy. - மக்களாட்சி

17. Generation. - தலைமுறை


18. Transformed. -மறுமலர்ச்சி
19. Desertification. - பாலைவனமாதல்
20. Deforestation. - காடுகளை அழித்தல்
21. Soil erosion - மண் அரிப்பு

மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

எ.கா விலை, விளை, விழை


கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல்
இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விழைவதாக
அரசு அறிவித்தது

“1. தலை, தளை, தழை


ஆடுகளுக்குத் தழையை தளைத்து தலையில் சுமந்து சென்றான்.
2. கலை,களை, கழை
தம் வறுமையைக் களைய கழைக்கூத்தாடிகள் கயிற்றில் ஏறி பல கலைகளை
நிகழ்த்தினான்.
3. அலை, அளை, அழை
அளையில் இருந்த பாம்பை பிடிக்க அலைந்து திரிந்து பாம்பாட்டியை
அழைத்து வந்தான்.

இலக்கிய நயம் பாராட்டுக

வெட்டி அடிக்குது மின்னல்-கடல்


. வரீ திரை கொண்டு விண்ணை இடிக்குது:
கொட்டி இடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணை குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட ட்டடா -என்று
தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய -மழை
. எங்ங்னம் வந்ததடா தம்பி வரா!

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
22
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

முன்னுரை
. பாரதியார் பாடலின் நயங்களை கீ ழ் விரிவாக ஆராய்வோம்

திரண்ட கருத்து
மின்னல் வெட்டி அடிக்குது கடல் அலை விண்ணை தொடுகிறது மேகம்
கொட்டி முழங்குகிறது வானை குடைகிறது தாளம் முழக்கத்தோடு எட்டு
திசைகளிலும் இப்பெருமமழை எப்படி வந்தது தம்பி வரா.

மைய கருத்து
மழை வரும் போது வானில் நிகழ்வு நிகழ்வுகளை மிகத் தெளிவாக நம் கண்
1
முன்னே படம் பிடித்து காட்டுகிறது இப்பாடல்.

தொடை நயம்
மோனைத் தொடை
அடிதோறும் அல்லது சீர் தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
மோனை

வெட்டி–வரீ
எட்டுத்திசையும்–எங்ங்னம்
கொட்டி –கூவென்று

எதுகை தொடை
அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
எதுகை

வெட்டி—கொட்டி
சட்டச்சட –எட்டுத்திசையும்

சந்தநயம்:இப்பாடல் சிந்துபாவில் அமைந்துள்ளது

சுவைநயம்:இப்பாடலில் பெருமிதச்சுவை அமைந்துள்ளது


அணி2நயம் : இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்றுள்ளது

கீ ழ்க்காணும் அழைப்பிதழை பத்தியாக மாற்று பக்கம் ( 45)

விடை. சென்னை கலைவாணர் அரங்கத்தில் வைத்து அக்டோபர் இரண்டாம்


நாள் காலை 10 மணி அளவில் பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம்
நடைபெற்றது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. செஞ்சிலுவைச் சங்க
ஒருங்கிணைப்பாளர் திருமதி அரசி அவர்கள் . வரவேற்புரை வழங்கினார்
இயற்கை வேளாண் உழவர் திரு அமுதன் அவர்கள் முன்னிலை வகித்தார்
பேரிடர் மேலாண்மை இயக்குனர் திரு இமயவரம்பன் அவர்கள்
தலைமையுரை ஆற்றினார்.
. கருத்தரங்கில் இயற்கை சீற்றங்களும் பருவ கால மாற்றங்களும் என்ற
தலைப்பில் முனைவர் செங்குட்டுவன் அவர்களும், பேரிடர்களை
எதிர்கொள்ளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் திரு முகிலன் அவர்களும், நீர்
வழிப்பாதைகளை பாதுகாத்தல் என்ற தலைப்பில் திருமதி பாத்திமா
அவர்களும், பேரிடர் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
என்ற தலைப்பில் திரு வின்சென்ட் அவர்களும் உரைகளை நிகழ்த்தினர்
பசுமை படை மாணவர் தலைவர் பர்வன் ீ அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது .

1
2

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
23
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இயல் 3
சுற்றத்தார் கண்ணே உள
இலக்கணத் தேர்ச்சி கொள் பக்கம் (67)

1.பொருள் குழப்பம் இன்றி எழுதுவதற்குரிய காரணங்களில் பொருந்துவதை


தேர்க.
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ) நிறுத்தற் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ) வல்லினமெய்களை தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

விடை : இ) நிறுத்தற் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.

2. வல்லினம் மிகும், மிகா தொடர்களின் பொருள் அறிந்து பொருத்துக


அ பாலை பாடினான் . தேரை என்னும் உயிரினத்தை பார்த்தான்
ஆ பாலைப்பாடினான் -2) தேரினைப் பாடினான்
இ) தேரை பாடினான் -3) பாலினைப் பாடினான்
ஈ தேரைப் பாடினான் - 4) பாலைத்திணை பாடினான்

அ)4,1,3,2. ஆ) 2, 3, 1, 4. இ) 4, 3, 1, 2. ஈ)2, 4, 1, 3

விடை இ) 4, 3, 1, 2

3. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களை சேர்த்து தொடரமைக்க


மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியை கண்டனர்
*அறிவியல் கண்காட்சியை மாணவர்கள் வரிசையில் நின்று கண்டனர்.

4. கீ ழ்காணும் சொல்லு உறுப்புகளை பிரித்தும் சேர்த்தும் இருவேறு


தொடர்களை அமைக்க

முன்:
● அவன் முன்வந்து கூறினான்
● அவன்முன் வந்து கூறினான்
தானே
● ரவிதானே எல்லா வேலைகளையும் செய்தான்
● ரவி தானே எல்லா வேலைகளையும் செய்தான்.
கொண்டு
● எழுதிக்கொண்டு வந்தான்
● எழுதி கொண்டு வந்தான்
விட்டான்
● பந்தைப் பிடித்துவிட்டான்
● பந்தைப் பிடித்து விட்டான்

5.காற்புள்ளியிடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச்


சான்று தருக.
● அவள், அக்காள் வட்டிற்குச்
ீ சென்றாள்
● அவள் அக்காள், வட்டிற்குச்
ீ சென்றாள்.

6) சலசல, வந்து வந்து,கலகல,விம்மி விம்மி இவற்றில் இரட்டைக்கிளவி


தொடர்களை எழுதி அவற்றை எழுதும் முறையைக் கூறுக.

இரட்டைக்கிளவி தொடர்கள்
● சலசல
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
24
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● கலகல
சான்று
● ஆற்றில் நீர் சலசலவென ஓடியது
● கலா கலகலவென சிரித்தாள்

7) திருவளர்ச்செல்வன் திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது


அதற்கான இலக்கண விதி யாது ?
● இவற்றில் திருவளர்ச்செல்வன் என்பதே சரியான தொடராகும்.
● ஏனென்றால் வினைத்தொகையில் சொல்லுக்கு இடையில் வல்லினம்
மிகுதல் கூடாது.

நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க கால சமூகத்தில்
நடைமுறையில் இருந்துள்ளன அவை
அ) அறவோர் துறவோர்
ஆ) திருமணமும் குடும்பமும்
இ) மன்றங்களும் அவைகளும்
ஈ)நிதியமும் சுங்கமும்

விடை: ஆ) திருமணமும் குடும்பமும்

2) பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க.


அ) உரிமை தாகம் - 1. பாரசீக கவிஞர்
ஆ) அஞ்ஞாடி. -2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை. - 4. சாகித்திய அகாதமி

அ) 2, 4, 3, 1. ஆ)3, 4, 1, 2. இ)2, 4, 1, 3. ஈ) 2, 3, 4, 1

விடை: இ)2, 4, 1, 3

4 இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று


ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம். ஆ) அவமானம் இ) வஞ்சனை. ஈ) இவை


அனைத்தும்

விடை:ஈ) இவை அனைத்தும்

4. “ உவா உற வந்து கூடும்


. உடுபதி இரவி ஒத்தார்”.... யார் யார்?
அ) சடாயு, இராமன். ஆ) இராமன்,குகன்
இ) இராமன், சுக்ரீவன். ஈ) இராமன், சவரி

விடை: இ) இராமன், சுக்ரீவன்

5. எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே


என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
அ)தனிக்குடும்பம் முறை
ஆ)விரிந்த குடும்பம் முறை
இ)தாய்வழிச் சமூக முறை
ஈ)தந்தைவழிச் சமூக முறை
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
25
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

விடை: ஈ)தந்தைவழிச் சமூக முறை

குறுவினா

1புக்கில் தன்மனை சிறுகுறிப்பு வரைக


புக்கில்:
● தற்காலிகமாக தங்கும் இடம் புக்கில் எனப்படும்
தன்மனை
● திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து
பிரிந்து தனியாக வாழும் இடம் தன்மனை எனப்படும்

2) நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது


நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து :
● என் பொய்யான உலகப்பற்று அழிந்தது
● அளவற்ற காலம் நான் மேற்கொண்டு இருந்த தவம் பலித்தது
● என் பிறவி ஒழிந்தது
● என ராமனிடம் சவரி கூறினாள்.

3.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு


உருவாகப்படுத்துகிறார்?
● ஆனந்தம்
● மனச்சோர்வு
● அற்பத்தனம்
● விழிப்புணர்வு
● ஆகிய இவற்றை எதிர்பாராத விருந்தாளிகளாக ரூமி உருவகம்
செய்துள்ளார்

4) துன்பு உளது எனின் அன்றோ சுகம் உனது என்ற ராமனின் கூற்று பின்வரும்
இரு பழமொழிகளில் எதற்கு பொருந்தும்
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆ) சிறு துரும்பும் பல் குத்த உதவும்

விடை :அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்

5) சங்க காலத்தில் தாய் வழி சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த


உரிமைகள் யாவை ?
● சங்ககாலத்தில் கண சமூகத்திற்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள்.
● தாய் வழியாகவே குலத் தொடர்ச்சி குறிக்கப்பட்டது
● சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன்
இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை
இருந்துள்ளது.
● தாய் வழி முறையில் குடும்பத்தில் சொத்தும் வளங்களும்
செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன

கூடுதல் வினா
1 குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படையாக இருப்பது எது ?
● குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே
● குடும்பம் திருமணம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து
செயல்படுகின்றன.

2 மணந்தகம் என்றால் என்ன ?

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
26
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● குடும்பத்தின் தொடக்கமாக திருமணம் புரிந்த கணவனும் மனைவியும்


சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே
மணந்தகம் எனப்படுகிறது.

சிறு வினா .
1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம்
விளக்கம் எழுதுக
● கணவன் மனைவி மகன் ஆகிய மூவரும் சேர்ந்து வாழ்ந்த தனி
குடும்பம் வளர்ச்சி அடைந்தபோது தந்தையும் சேர்ந்து வாழ்ந்த நேர்வழி
விரிந்த குடும்பமே மேலும் வளர்ந்து கூட்டு குடும்பமாக அமைந்தது.
● கணவனின் சகோதர சகோதரிகள் தாய் தந்தையர் இணைந்து இன்றைய
கூட்டுக் குடும்பமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
● இவ்வகையில் இன்றைய கூட்டுக் குடும்பம் பண்டைய விரிந்த
குடும்பத்தின் தொடர்ச்சியாக விளங்குகிறது.

2)குகனோடு ஐவராகி வடணனோடு


ீ எழுவரான நிகழ்வுகளை சுட்டிக்காட்டுக.
● தயரதனின் புதல்வர்களான ராமன் பரதன் இலக்குவன் சத்ருகன் ஆகிய
நால்வரும் உடன் பிறந்தவர்களாக இருந்தனர்.
● பின்பு வேடுவர் தலைவன் குகனுடன் சேர்ந்து ஐவர் ஆயினர்
● கிட்கிந்தையில் சந்தித்த கதிரவனின் மகனான வானரத் தலைவன்
சுக்ரீவனுடன் சேர்ந்து அறுவராகினர்.
● இராவணன் சீதையைக் கடத்தி வந்த செயல் பிடிக்காத வடணன் ீ
இராமனிடம் அடைக்கலம் புகுந்தான். அன்பான வடெனோடுீ எழுவர்
ஆயினர்.

3. வருபவர் எவராயினும் நன்றி செலுத்து இடஞ்சுட்டி பொருள் விளக்குக


இடம் சுட்டுதல்
ஜலாலுத்தீன் ரமி எழுதிய தாகம் கொண்ட மீ ன் ஒன்று என்ற நூலில் உள்ள
விருந்தினர் இல்லம் என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது.
பொருள்
இல்லத்திற்கு வருபவர் எத்தகைய பண்புடையவராக இருந்தாலும் அவர்
வந்ததற்கு நன்றி செலுத்து
விளக்கம்
உன் இல்லத்திற்கு வருபவர் தீய எண்ணத்தோடு வந்தாலும் உன்னை
அவமானப்படுத்த வந்தாலும், உன்னை ஏமாற்ற வந்தாலும், அவர்களை நீ
வாசலுக்கே சென்று என் முகத்துடன் வரவேற்பாயாக. ஏனெனில் அவர்கள்
ஒவ்வொருவரும் உனக்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டி எனவே அவர்கள்
வந்ததற்கு நீ நன்றி செலுத்து என்று கவிதை கூறுகிறது.

4)தன் தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப


உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள்
யாவை ?
● அம்மா அப்பா இருவரும் பணிக்குச் செல்வதால் குடும்ப வேலைகளைப்
பகிர்ந்து கொள்கிறேன்
● வட்டிற்குத்
ீ தேவையான தண்ண ீர் கொண்டு வருதல் மளிகை கடைக்குச்
சென்று வருதல் சில நேரங்களில் காய்கறிகள் வாங்கி வருதல் போன்ற
வேலைகளையும் செய்கிறேன்.
● வண்வம்புகளைத்
ீ தவிர்த்து பெற்றோர் வாழ்வதற்கு அமைதியான
சூழ்நிலையை உருவாக்கித் தருவேன்.
● குறைந்த அளவில் செலவு செய்து விட்டு அதிக அளவில் சேமிப்பு
செய்வேன்
● தம்பிக்கும் தங்கைக்கும் வட்டுப்பாடம்
ீ எழுத உதவி செய்வேன்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
27
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● பெற்றோர்களுக்கு அதிக வேலை பளுவைக் கொடுக்காமல் என்னால்


இயன்ற வேலைகளை நானே செய்து முடிப்பேன்.

5) சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.


● ராமன் தன் தந்தையின் நண்பனான கழுகு வேந்தனையும் தன்
தந்தையாகவே கருதி மகன் நிலையில் சடாயுவுக்கு இறுதிச்சடங்கு
செய்கிறான்
சடாயுவுக்கு, இராமன் ஆற்றிய கடமைகள்
● ‘எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று’ கண்டவர்
வியக்கும் படியான கறிய அகில்கட்டைகளையும் சந்தன
கட்டைகளையும் ராமன் கொண்டு வந்து வைத்தான்
● தேவையான அளவு தருப்பைப்புற்களையும் ஒழுங்குபட
அடுக்கினான்.
● பூக்களையும் கொண்டு வந்து தூவினான்
● மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
● தெளிந்த நீரையும் எடுத்து வந்தான்
● இறுதிச் சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன்
தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு
வந்தான்.

கூடுதல் வினா
1. தாய் வழி குடும்பம் குறித்து பக்தவச்சல பாரதி கூறும் கருத்துக்களை
விவரிக்கவும்
● சங்ககாலத்தில் கண சமூகத்திற்கு தாயே தலைமை ஏற்றிருந்தாள்.
● தாய் வழியாகவே குலத் தொடர்ச்சி குறிக்கப்பட்டது
● பதிற்றுப்பத்து கூறும் சேர நாட்டு மருமக்கள் தாய முறை இதற்கு சிறந்த
எடுத்துக்காட்டாகும்
● இவளது மகன் என்று கூறப்படும் உரிமை இருந்தது
● சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன்
இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை
இருந்துள்ளது.
● தாய் வழி முறையில் குடும்பத்தில் சொத்தும் வளங்களும்
செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
நெடு வினா
1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் எனும் பரந்த
அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு விளக்குக

● முன்னுரை
● குடும்பம்
● வாழிடம்
● மணந்தகம்
● தாய் வழி குடும்பம்
● தந்தை வழி குடும்பம்
● தனி குடும்பம்
● விரிந்த குடும்பம்
● முடிவுரை

முன்னுரை
எந்த சமூக கட்டமைப்பிற்கும் குடும்பமே அடிப்படை அலகாகும்.
குடும்பம் தொடங்கி குலம் கூட்டம் பெருங்குழு சமூகம் என்ற அமைப்பு வரை
விரிவு பெறுகிறது.
குடும்பம்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
28
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

. சங்க சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாக


கொண்டிருந்தது. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது
திருமணமே. குடும்பம் திருமணம் ஆகிய இரண்டு சொற்களும்
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. குடும்பம்
என்னும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் பயின்று வருகிறது.

வாழிடம்
சங்க இலக்கியத்தில் இல், மனை, குரம்பை, புலப்பில், மூன்றில், குடில், கூரை,
வரைப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின்
வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டுகின்றன
மனை என்ற சொல் தம்மனை நும்மனை என்று சங்க இலக்கியத்தில்
உள்ளதை காணலாம்
மணந்தகம்
குடும்பத்தின் தொடக்கமாக திருமணம் புரிந்த கணவனும் மனைவியும்
சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே மணந்தகம்
எனப்படுகிறது.
தாய் வழி குடும்ப முறை
. குடும்பத்திற்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழி முறையில்
குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும், பெண்களுக்குச் சென்று
சேர்ந்தனர்
தந்தை வழி குடும்பம் முறை
. சங்க காலத்தில் தந்தை வழி குடும்ப முறை வலுவாக வேரூன்றி இருந்தது
‘ மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று குறுந்தொகை கூறுகிறது.
தனி குடும்பம்
கணவன் மனைவி மகன் ஆகிய மூவரும் சேர்ந்து வாழ்ந்த தனி குடும்பம்
வளர்ச்சி அடைந்தபோது தந்தையும் சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த
குடும்பமே மேலும் வளர்ந்து கூட்டு குடும்பமாக அமைந்தது.
விரிந்த குடும்பம்
கணவனின் சகோதர சகோதரிகள் தாய் தந்தையர் இணைந்து இன்றைய
கூட்டுக் குடும்பமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வகையில் இன்றைய
கூட்டுக் குடும்பம் பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியாக
விளங்குகிறது.
முடிவுரை
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் எனும் பரந்த
அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.

2)பண்பின் படிமமாக படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த


உறவு நிலையை பாடப்பகுதி வழி நிறுவுக.
● முன்னுரை
● குகனுடன் உடன்பிறப்பு உறவு நிலை
● சடாயுவிடம் தந்தை உறவு நிலை
● சவரி தாய் உறவு நிலை
● சுக்ரீவன் உயிர் நண்பன்
● வடணன்
ீ உடன்பிறப்பு
● முடிவுரை

முன்னுரை
. வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற
வேலிகள் ராமனின் அன்பிற்கு இல்லை. தந்தை தாய் சகோதரர்கள் மீ தான
அன்பு என்ற நிலையிலேயே எல்லாரிடமும் பழகுகிறான்

குகனுடன் உடன்பிறப்பு உறவு நிலை

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
29
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

. வேடுவர் தலைவன் குகன், பாறை போன்ற உடலுக்குள் பஞ்சு உள்ளம்


கொண்டவன் அவன் நாட்டிற்குச் செல்லும் இராமன் கங்கையைக் கடக்க
அவன் உதவுகிறான். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் இல்லை
என்பதை நிறுவும் வகையில் ராமன் குகன் நட்பு முகிழ்கிறது. ராமன்
இளவரசனாக இருப்பினும் வேடனான குகனை உடன்பிறப்பாக ஏற்றுக்
கொள்கிறான்.
சடாயுவிடம் தந்தை உறவு நிலை
இராவணன் சீதையைச் சிறை எடுத்த போது கழுகு வேந்தன் சடாயு
தடுத்து சண்டையிட்டு காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததை
கூறுகிறான். பின் இறந்து விடுகிறான். இராமன் தன் தந்தையின்
நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி மகன்
நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
சவரி தாய் உறவு நிலை
. இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி.
சீதையைத் தேடி வரும் இராமனைச் சுக்ரீவ னுடன் நட்பு கொள்ளுமாறு
செய்தவள் சவரி. இராமன் அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும்
அன்பைக் காட்டினான்.
சுக்ரீவன் உயிர் நண்பன்
. சீதையைத் தேடி வரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன் சுக்ரீவனை
அழைத்து வந்தான். இராமன் சுக்ரீவனிடம் விண்ணிலும் மண்ணிலும் உள்ள
உன் பகைவர் என் பகைவர் தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என்
நண்பர்கள் உன் உறவினர் என் உறவினர் அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன்
சுற்றத்தினர் நீ என் இனிய உயிர் நண்பன் என்றான்.
வடணன்
ீ உடன்பிறப்பு
. இராமன் வடணனைப்
ீ பார்த்து நாங்கள் நால்வர் உடன் பிறந்தவர்களாக
இருந்தோம் குகனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் கதிரவனின்
மகனான சுப்ரீம்னுடன் அறுவரானோம். உள்ளத்தில் அன்பு கொண்டு
எங்களிடம் வந்த அன்பனே உன்னுடன் சேர்த்து எழுவரானோம் என்று
கூறினான்.
முடிவுரை
இவ்வாறு எந்த உயிரினமாக இருந்தாலும் உள்ளத்தில் உண்மையான
அன்போடு இருப்பவர்களை உறவாக ஏற்றுக் கொண்ட பண்பின் படிமமாக
திகழ்ந்த இராமனது பண்பு மிகச் சிறந்தது.

3. உரிமை தாகம் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல்


இருந்திருந்தால் கதையை தொடர்ந்து எழுதி முடிக்க.
● முன்னுரை
● பாகம் பிரிந்ததோடு மனதும் பிரிந்தது
● உறவினர்களின் நிலை
● ஊரைவிட்டே செல்லல்
● முடிவுரை
முன்னுரை
. முத்தையன் முகம் இருவரும் தம்பதிகள் முத்தையனின் தம்பி
வெள்ளைச்சாமி. தாய் தந்தையர் இல்லாத நிலையில் முத்தையன் தன்
தம்பியைத் தன் குழந்தை போல எண்ணி வளர்க்கிறான் தம்பி மாறிய
நிலையும் படும் துன்பங்களும் கதையாக…

பாகம் பிரிந்ததோடு மனதும் பிரிந்தது


. தன் மனைவியின் பேச்சைக் கேட்டு சொத்தில் தனது பங்கைப் பிரித்து தர
சொல்லி வெள்ளைச்சாமி கேட்கிறான். பெண் குடும்ப செலவின் காரணமாக
தனது நிலத்தை மேலூர் பங்காரு சாமியிடம் கிரைய பத்திரம் எழுதி
கொடுத்துள்ளான் தம்பி வெள்ளைச்சாமி இது நடந்த 6 மாதத்திற்கு மேலானது
இப்போது முழு பணத்தையும் கட்டவில்லை என்றால் புன்சையில் பங்காரு
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
30
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

சாமி விதை விதைத்துக் கொள்வேன் என்று கூறிவிட்டார்.


முத்தயனுக்கு தம்பி வெள்ளைச்சாமி மீ து பெரிய அளவில் கோபம் இல்லை
என்றாலும் பங்கு பாகம் பிரிக்கும் போது அவன் பேசிய நீ எனக்கு
அண்ணனாக்கும் என்ற வார்த்தைகள் மனதையும் பிரித்து விட்டது. தந்தை
இறந்த நாளிலிருந்து தோளில் சுமந்து வளர்த்த கதை எல்லாம் நினைத்து
பார்த்து மனம் கசந்து போயிருந்தது. திருமணத்திற்கு பின்பு வெள்ளையன்
நடந்து கொண்ட விதம் முத்தயனுக்கும் மூக்கமாலுக்கும் மிகவும் மன
வருத்தத்தை தந்ததால் அவர்கள் முழுவதும் ஒதுங்கி விட்டனர்.
உறவினர்களின் நிலை
. அண்ணனிடம் ஏற்பட்ட மன கசப்பை மனதிற்குள் வைத்திருந்ததால்
அவனைத் தவிர மற்ற உறவினர்கள் அனைவரிடமும் உதவி கேட்டுப்
பார்த்தான் உறவினர்கள் அனைவருமே ஏதோ ஒரு காரணத்தை சொல்லி
மறுத்துவிட்டனர் உறவினர்களிடமிருந்து உதவி கிடைக்காததால் நிலத்தை
மீ ட்க முடியாமல் தவித்தான் கடைசியில் நிலம் பங்காரு சாமியிடம் போனது.
பங்காரு சாமியின் ஆட்கள் வந்து நிலத்தை உழுது கொண்டிருந்தனர் இதை
கண்டு அண்ணன் முத்தயனும் உறவினர்களும் மனதிற்குள் வருத்தப்பட்டு
விட்டு அப்படியே இடத்தை விட்டு நகர்ந்தனர். தனக்கென்று இருந்த நிலமும்
பறிபோனதால் வெள்ளைச்சாமி தன் இருந்த ஊரை விட்டு பக்கத்து ஊரிற்குப்
பிழைப்பைத் தேடி சென்றான்.
முடிவுரை
. அண்ணனுடன் ஏற்பட்ட பகையால் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணை
அமல் போனார்கள் அதனால் இறந்த நிலமும் பறிபோனது உறவு நிலையும்
மனக்கசப்பில் முடிவு ற்றது.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

மொழியை ஆள்வோம்

தமிழாக்கம் தருக பக்கம் 70


மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கான காரணிகளில் கல்வி தன்னிறைவு
பெற்றது ஆனால் முடி உற்றது கல்வி மனிதனின் அடிப்படை உரிமை கல்வி
பொருளாதார சமூக அரசியல் முன்னேற்றங்களுக்கு ஆதாரமாக
விளங்குகின்றது. இது வருமானத்தையும் வேலை வாய்ப்பையும்
உருவாக்குகிறது. பொருளாதார வல்லுநர்கள் கல்வியின் முக்கியத்துவம்
பற்றி ஆய்வு செய்யும்போது, பெரும்பாலும் அது வாழ்வில் மிக நல்ல
வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக கூறுகின்றனர். பொருளாதார
வளர்ச்சியை கணக்கில் கொள்ளாமல் பார்த்தால் மக்களை கல்விப் பெற
செய்வது பயனுள்ள இலக்காகும்.

இலக்கிய நயம் பாராட்டுகள்

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி


. பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
. உலகத்தில் தமிழ் மொழிக்கு நிக்கும் உண்டோ!
கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று
. கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
. தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.

. நாமக்கல் கவிஞர்

முன்னுரை:
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
31
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

தொடக்கமும் முடிவும் இரட்டைக் குழந்தைகள் நாமக்கல் கவிஞர் எழுதிய


இப்பாடலில் அமைந்த நயங்களைக் காண்போம்.

தலைப்பு:

பாரதியின் பெருமை

மையக்கருத்து:

இப்பாடலில், நாமக்கல் கவிஞர், பாரதியாரின் சிறப்பைப் பற்றிப் பாடியுள்ளார்.

எதுகைத்தொடை:

செய்யுளில், இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை எனப்படும்.

எதுகைச்சொற்கள்

பெற்றெடுத்த

ஊற்றெடுத்த

கற்றுணர்ந்தே

தெற்றென

மோனைத்தொடை:

செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை எனப்படும்.

சீர்மோனை:

பெற்றெடுத்த, பின்னால், பிறமொழி, பிழையை கற்றுணர்ந்தே, காண்பாய்,


கம்பனொடு, காட்டி
தெற்றென, திறந்து, தெய்வக்கவி, திண்ணம்

சந்த நயம்

இப்பாடலில், ஒவ்வொரு அடியிலும் எட்டு சீர்கள் வந்துள்ளன. எனவே, இந்தப்


பாடலில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் பயின்றுள்ளது.

சுவை நயம்:
இப்பாடலில், பாரதியாரைப் பெருமைபடுத்திப் பாடியுள்ளார் நாமக்கல் கவிஞ
எனவே, பெருமிதச்சுவை வந்துள்ளது எனலாம்.

அணி நயம்:
. பாரதியாரை தெய்வ கவி என்று உருவகப்படுத்தி பாடியுள்ளதால் உருவக
அணி.

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.


1. என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீ துதான்;
அவர்கள் எல்லா பிரச்சனை களையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத்
தீர்ப்பார்கள்.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
32
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

விடை: என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதிய தலைமுறை மீ துதான்;


அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டு
தீர்ப்பார்கள்.

2. எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு, ஒன்றும்


செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை
கொள்.

விடை : எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு,


ஒன்றும் செய்வதறியாது
நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.

3. நம் வாழ்க்கையின் தரம், நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது.


புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும்
வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.

விடை : நம் வாழ்க்கையின் தரம், நமது கவனத்தின் தரத்தைப்


பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்த கவனம், அறிவைப்
பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத்
தேவையாகும்.

4. மாணவர்கள், பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புகொள்ள


வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக்கொள்ள
வேண்டும். (Sep.-20)

விடை : மாணவர்கள், பெற்றோர்களைத் தம் நண்பர்களாகப் பாவித்து


நட்புக்கொள்ள வேண்டும். தம் இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன்
பகிர்ந்துகொள்ள வேண்டும்.

5. ஆசிரியருக்கு கீ ழ்ப்படிதல் என்னும் குணம் உண்மையானவற்றை தெரிந்துக்


கொண்டு அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.

விடை :ஆசிரியருக்குக் கீ ழ்ப்படிதல் என்னும் குணம் உண்மையானவற்றைத்


தெரிந்து கொண்டு அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றைக் கற்றுக்
கொடுக்கும்.

பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக


ஆக்குக.(பக்கம் 72)

(எ.கா) குமரன் வடு


ீ பார்த்தேன்.

குமரனை வட்டில்
ீ பார்த்தேன்.

1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.

மாறனின் பேச்சுத்திறனை யாரால் வெல்ல முடியும்.

2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.

போட்டியில் வெற்றிபெற்றதால் கலைச்செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.

3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும். காலையில் எழுந்து


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
33
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.

4. அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.

அனைவரையும் அன்பால் அழைத்தவனுக்குத் துன்பத்தைத் தர யாருக்கு


மனம் வரும்.

5. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.

சான்றோர்க்கு மதிப்புக் கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.

திருக்குறள்
கற்பவை கற்றபின்(பக்கம்.77,78)

1. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க,

அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை


பண்பும் பயனும் அது.

ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்


தெய்வத்துள் வைக்கப் படும்.

இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இளம்என்னும்


ஏமப் புணையைச் சுடும்.

விடை: இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்


ஏமப் புணையைச் சுடும்.

2. கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி

விடை: ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான


திருக்குறளைக் கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்.

அ ) இருவேறு உலகத்து இயற்கை : திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு.


ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு
இ) ஊழில் பெருவலி யாஉள மற்றுஒன்று சூழினும் தான்முந்து உறும்.

விடை : இ) ஊழில் பெருவலி யாஉள மற்றுஒன்று


சூழினும் தான்முந்து உறும்.

4. கீ ழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளை எழுதுக.

உயர் அலுவலரின் வருகை


அலுவலகமே அல்லாடும்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
34
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே


கோப்புகளை விரைந்து முடிக்க
ஒழுங்கு செய்ய
நேரத்தில் இருக்க வேண்டும்
விரைகிறது மனம்
பரபரப்பும் மனவழுத்தமுமாய்
வண்டியை எடுக்கிறேன்
காலைக் கட்டிக் கொள்கிறது. குழந்தை
'போ அந்தப் பக்கம்'
உதறிச் செல்கிறேன் குழந்தையை,

விடை : செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்


காக்கின்என் காவாக்கால் என்?

5. இலக்கணக் குறிப்புத் தருக.


அன்பும் அறமும் -எண்ணும்மை
நன்கலம். -பண்புத்தொகை
மறத்தல். -தொழிற்பெயர்
உலகு. - இடவாகுபெயர்

6.பொருள் கூறுக.
வெகுளி. - கோபம், சினம்
புணை. - தெப்பம்
ஏமம் - பாதுகாப்பு
திரு - செல்வம்.

7. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?


அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) காலத்தினால் செய்த நன்றி

விடை :அ) செய்யாமல் செய்த உதவி

8. பகையும் உளவோ பிற? - பொருள் கூறுக.

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு


வேறு பகை இல்லை.

9. செல்லிடத்து புணர்ச்சி விதி கூறுக


செல்லிடத்து =செல் + இடத்து
விதி: தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் செல்+ ல் + இடத்து
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - செல்லிடத்து

10. பொருத்துக.
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1)சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி -2) ஞாலத்தின் மாணப் பெரிது

இ)சினம் - 3) தெய்வத்துள் வைக்கப்படும்


ஈ) காலத்தினாற் செய்த நன்றி. -4) நன்மை கடலின் பெரிது

அ ) 4, 3, 2, 1

ஆ ) 3, 4, 1, 2
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
35
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இ ) 1, 2, 3, 4

ஈ ) 2, 3, 4, 1

விடை :ஆ) 3, 4, 1, 2

குறுவினா.

1. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?


● அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச்
சிறப்புடையோரைவிட மேம்பட்டவர் ஆவார்.

2. ஞாலத்தின் பெரியது எது?


● உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக
இருந்தாலும் அது உலகத்தின் அளவைவிட மிகப்பெரியதாகும்.

3. மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?


● ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறக்கக் கூடாது.
● ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது
நல்லது.

4. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?


● ஒருவருடைய செல்வம் குறையாமல் இருக்க வழி எது என்றால், அவர்
பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

5. சினத்தை ஏன் காக்க வேண்டும்?


● சினத்தைக் காக்க வேண்டும். ஏனென்றால் சினம் நம்மையே அழித்து
விடும்.

6. இல்வாழ்வின் பயன் யாது?


● அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே
வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

சிறுவினா.

1.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல் நிறை அணியாகும்.

அணி விளக்கம்

நிரல் -வரிசை நிறை -நிறுத்துதல்,

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே


இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
பாடலின் பொருள்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
36
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த


வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணிப்பொருத்தம்

இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும்


பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை
அணி ஆகும்.

2. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை


வள்ளுவர் வழி நின்று விளக்குக.

பண்பும் பயனும்:

அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே


வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

முயல்வாருள் தலை

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச்


சிறப்புடையோரைவிட மேம்பட்டவர் ஆவார்.

வானுலக தெய்வம் :

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர்,


வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவார்.

3. எவற்றையெல்லாம்விட நன்றி உயர்ந்தது? - குறள் வழி விளக்குக.

விண்ணுலகம் மண்ணுலகம் ஈடாகாது:


தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு
மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
பொருள்
உலகைவிடப் பெரியது
உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவில் சிறியதாக இருந்தாலும், அது
உலகத்தின் அளவை மிகப் பெரியதாகும்.

கடலைவிடப் பெரியது

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த


உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப்
பெரியதாகும்.

4. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.


மறத்தல் வெகுளியை
தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும்
சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்.
பகையும் உளவோ பிற :
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு
வேறு பகை இல்லை.

தன்னையே கொல்லும் சினம்


ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல்
காத்துக் கொள்ளவேண்டும் காக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
37
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

சினம் என்னும் கொல்லி


சினம், தன்னனச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு, அது ஒருவரது சுற்றம்
என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

5.கீ ழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது


என்பதை விளக்குக.

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்


ஏமப் புணையைச் சுடும்.

-இக்குறட்பாவில் ஏகதேச உருவகஅணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம் :

செய்யுளில் ஒரு பொருளை உருவகம் செய்துவிட்டு அதற்கு இணையான


மற்றொரு பொருளை உருவகம் செய்யாமல் விடுவது ஏகதேச உருவக அணி
எனப்படும்.

பொருத்தம் :
சினத்தை நெருப்பாகவும், இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த
வள்ளுவர் உலக வாழ்க்கையை கடலாக உருவகம் செய்யாமல்
விட்டுவிட்டார் இது ஏகதேச உருவக அணியாகும்.

நெடுவினா

1.செய்ந்தன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு


நிறுவுக
● முன்னுரை
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழவேண்டும். அவ்வாறு செய்வோரை
மறவாமல் அவர் செய்த நன்மையைப் போற்றுவது சிறந்த அறமாகும்.

● வையகமும் வானகமும் ஈடாகா


தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு
மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும்
ஈடாகாது.
● ஞாலத்தின் மாணப் பெரிது :
உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது
உலகத்தின் அளவைவிட மிகப்பெரியதாகும்.
● கடலினும் பெரிது

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த


உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப்
பெரியதாகும்.

● தினை -பனை

ஒருவர் தினையளவாகிய உதவியைச் செய்தபோதிலும் அதன் பயன்


தெரிந்தவர்கள், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

● மறப்பதும் மறக்கக் கூடாததும்

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று; அவர் செய்த


தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
38
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● உய்வுண்டு -உய்வில்லை :
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருக்கும். ஆனால்
ஒருவர் செய்த உதவியை மறந்துவிட்டவர்க்கு உய்வே இல்லை.

● முடிவுரை :

உதவியில் சிறியது பெரியது என்பது இல்லை. நமது துன்பத்தில் நமக்கு


உதவியவரையும், அவர் செய்த உதவியையும் நாம் என்றுமே மறக்கக்கூடாது.
செய்ந்நன்றியறிதல் வாழ்வின் தலையாய அறம் என்பதை மேற்கண்ட
வள்ளுவரின் குறட்பாக்களின் வாயிலாக அறிந்துகொண்டோம்.

2. சினத்தைக் காத்தல் வாழ்வை மேம்படுத்தும் இக்கூற்றை முப்பால் வழி


விரித்துரைக்க.
● முன்னுரை
உள்ளத்தில் உள்ள வெறுப்பும் பகையுமே வெருளியாய் வெளிப்படும். அது
அருளுடைமைக்கு மாறானது.ஆகையால் அதற்கு இடமில்லமல்
காத்துக்கொள்ள வேண்டும்.

● செல்லிடம் - அல்லிடம்
தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் கொள்ளாமல் காப்பவரே
உண்மையில் சினம் காப்பவர் செல்லுபடியாகாத வலியவரிடத்தில் காத்தால்
என்ன? காக்காவிட்டால் என்ன ?

● வெகுளியை மறத்தல்

தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும்


சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்.
● பகையும் உளவோ
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு
வேறு பகை இல்லை.
● தன்னையே கொல்லும் சினம் :
ஒருவர் தன்னைத்தான் காத்துக் கொள்ளவிரும்பினால், சினம் வாராமல்
காத்துக் கொள்ளவேண்டும்: காக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.

● சினம் என்னும் கொல்லி :


சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு, அஃது ஒருவரது சுற்றம்
என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

● முடிவுரை:

தீய குளணங்களில் எல்லாம் தீய குணம் கோபப்படுதல், கோபத்தை ஒரு


பொருளாக மதித்து வாழ்பவரை விரும்புபவர் யாருமில்லை. அன்பின்
வழிநின்று, உயிர்களை நேசித்து. குறைகளைக் களைந்து, நிறைகளைப்
பாராட்டி, இன்சொல் பேசி, வாழ்பவரின் பின்னே உலகம் செல்லும் எனவே
யாருக்குமே பயன்தராத கோபத்தை விட்டொழித்து உள்ளத்தில்
அன்புகொண்டு வாழ்வதே வாழ்வை மேம்படுத்தும்.

'இயல் 4

உரைநடை : பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

செய்யுள் : இதில் வெற்றி பெற

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
39
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இடையீடு புறநானூறு

துணைப்பாடம் : பாதுகாப்பாய் ஒரு பயணம்

இலக்கணம் பா இயற்றப் பழகலாம்.

இலக்கணத்தேர்ச்சி கொள் (பக்கம்.100)

1. வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான


சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

அ) அன்பே தகளியாய் (ஆர்வமாய் / தகளியாய்

ஆ) வான்மழை தூறலில் (தூ றலில் / பொழிந்திடின்)

இ) கண்ணிரண்டும் இல்லார் (இலசததூர் / இல்லார்)

ஈ )வெண்ணிலவு காய்கிறது (காய்கிறது / ஒளிர்கிறது)

உ)வெய்யோன் ஒளிர்ந்திட (காய்ந்திட் / ஒளிர்ந்திட

2. மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.

அ) கல்வி கரையில் கற்பவர்

ஆ) கல்லாரே ஆயினும் கைப்பொருள்

இ) நல்லவை செய்யின் நலமே

ஈ ) அவமதிப்பும் ஆன்ற மதிப்பும்

உ)உண்ணாது நோற்பார் பெரியர்

3.பொருத்துக

அ) மாச்சீர். -1) கருவிளம், கூவிளம்


ஆ) காய்ச்சீர் -2) நாள், மலர்
இ) விளச்சீர். -3) தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர். -4) தேமா, புளிமா

அ ) 1, 2, 4, 3

ஆ )4. 3, 1, 2

இ )2, 3, 1, 4

ஈ ) 3, 4, 2, 1

விடை : ஆ ) 4, 3, 1, 2

4. கீ ழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை


வெண்பா/ இன்னிசை வெண்பா எழுத முயற்சி செய்யவும்.

( கடல், வாள், மழை, தேன். மரம் )


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
40
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

கடல் :

கண்ணில் இனிக்கும் மகிழ்ச்சி உருவாய்


மயக்கம் தகுமே கடல்,

வாள் :

பகையை ஒழிக்கும் படைவரன்


ீ கையில்
ஒளிருமே மின்னலாய் வாள்.

மழை

துன்பங்கள் போலத் தொடர்ந்து பெய்தாலும் என்றும் இனிமை மழை.

தேன்
எல்லாச் சிறப்பையும் ஈந்து உதவும் கல்விக்கு ஈடாமோ தேன்.

மரம்
வெந்நீரைத் தந்தாலும் பன்ன ீராய் ஏற்று வளத்தில் சிறக்கும் மரம்.

5. வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

வெண்பாவிற்குரிய தளைகள்
● இயற்சீர் வெண்டளை
● வெண்சீர் வெண்டளை

6.ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?

ஒரு விகற்பம்

வெண்பாவில் நான்கு அடிகளும் ஒரே எதுகையைக் கொண்டிருந்தால் அது


ஒரு விகற்பம் எனப்படும்.

பல விகற்பம்

வெண்பாவில் முதலிரு அடிகளும் ஈற்று இரு அடிகளும் வேறுவேறு ஆன


எதுகையைக் கொண்டிருந்தால் அது பல விகற்பம் எனப்படும்.

7. ஈரசைச் சீர்கள் எத்தனை? அவை யாவை?

ஈரசைச் சீர்கள் இரண்டு.


அவை
1. மாச்சீர், (தேமா, புளிமா)
2, விளச்சீர்(கருவிளம், கூவிளம்)

நம்மை அளப்போம் (பக்கம்.101)

பலவுள் தெரிக

1. "காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை இத்தொடரில் 'கலள உணர்த்தும்


பொருள்.
அ) போர்க்கருவி. ஆ ) தச்சுக் கருவி இ) இசைக்கருவி. ஈ) வேளாண் கருவி
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
41
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

விடை : இ) இசைக்கருவி

2. சுரதா நடத்திய கவிதை இதழ்


அ) இலக்கியம். ஆ) காவியம். இ) ஊர்வலம். ஈ) விண்மீ ன்

விடை:ஆ ) காவியம்

3. விண்வேறு : விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும் செங்கதிரும்


முகிலும் வேறு"
இத்தொடர் தரும் முழுமையான பொருள் :
அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு.
ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு.
இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு.
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும்
வேறு வேறு.

விடை : ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில்


அனைத்தும் வேறு வேறு.

4. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.


அ) வசம்பு. ஆ) மணத்தக்காளியிலைச் சாறு. இ) கடுக்காய். ஈ) மாவிலைக்கரி

விடை : இ) கடுக்காய்

5. 'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?


அ) இலக்கியம் ஆ) கணிதம். இ) புவியியல். ஈ) வேளாண்மை

விடை : ஆ) கணிதம்

குறுவினா

இடையீடு - எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?

சி. மணி எழுதிய இடையீடு எனும் கவிதை குறியீடுகளைக் கொண்டு


அமைக்கப்பட்டுள்ளது.
● கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம்.
● அதனை வெளிப்படுத்தும் வண்ணம்.
● எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை.
2.வசனம், கவிதை வேறுபாடு தருக.

வசனம்:
● எதுகை மோனை இல்லாமல் அடி அளவை அறிந்திடாமல்
அமைக்கின்ற வடிவமே வசனம் ஆகும்

கவிதை
● எதுகை, மோனை அடி அளவுகள் ஆகியன ஒன்றாக இணைந்து
அமைகின்ற வார்த்தைகள் கவிதை ஆகும்.

3.'எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்' - யார்க்கு?


● கலைத்தொழிலில் வல்ல கலைஞர்கள் எத்திசைக்குச் சென்றாலும்
உணவு தவறாது கிடைக்கும்.

4. அக்காலத்து கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
42
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இலக்கண நூல்கள்
● நிகண்டு,
● நன்னூல்,
● காரிகை, தண்டியலங்காரம்,
● நீதி நூல்கள்.
கணித நூல்கள்
● கீ ழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று .
அகராதி நூல்கள்
● ஆத்திசூடி
● கொன்றை வேந்தன்.

சிறுவினா.

1. "மூன்றான காலம் போல் ஒன்று'' எவை? ஏன்? விளக்குக.

மூன்றான காலம் போல் ஒன்றானவை

எண்ணம், வெளியீடு, கேட்டல்


→ஆகியவற்றை குறியீடாகக் குறிப்பிடுகிறது ஏனென்றால்.....

● கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம்,


● கவிதை வெளிப்படுத்தும் மனக்கருத்தின் வெளியீடு
● எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை →ஆகிய
இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல.

● > இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று நிகழ்வுகளும்


வேறுவேறானவை. ஆனால் அவற்றைக் 'காலம்' என்ற ஒன்றில்
ஒன்றிணைப்பது போல்,
● எண்ணம், வெளியீடு, கேட்டல் ஆகியவை வேறு வேறாயினும் கவிதை
என்ற ஒன்றில் ஒன்றிணைக்கப்படுகிறது.

2. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில்


நெறிப்படுத்துவர்கள்?

● நான் ஆசீரியரானால் எதையும் பொறுமையுடன் எடுத்துச் சொல்லி


புரிய வைப்பேன்.
● மாணாக்கர்களிடம் உண்மையான அன்பும் அக்கறையும்
கொண்டவனாய் நடந்து கொள்வேன்.
● தேர்ச்சி குறைவு மாறுபட்ட பழக்க வழக்கம் கண்டால் அக்கறையோடு
கடிந்து கொள்வேன்.
● தவறு செய்தால் தவறு என்பதை புரிய வைப்பேன்.
● மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக
இருப்பேன்.
3. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொகுத்துரைக்க
● முதன் முதலில் தட்டில் நெல் பரப்பி அதில் குழந்தையின்
சுட்டுவிரலைப் பிடித்து எழுத கற்றுக்கொடுப்பது வழக்கம். இது இன்றும்
நடைமுறையில் உள்ளது.
● திண்ணை
● பள்ளிக்கூடத்தில் ஆற்று மணலைப் பரப்பிஅதன் மீ து எழுத கற்றுக்
கொடுப்பர்.
● ஓலையில் எழுத்து பதியுமாறு எழுத்தாணி கொண்டு எழுதினர்
தனியாக பனை ஓலையில் எழுதப்பட்டதை ஏடு என்றும் ஏடுகளின்
தொகுப்பைச் சுவடி என்றும் வழங்கினர்.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
43
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● அதன் பிறகு பலகையும் பளப்பமும் வந்தன. அதைத்தொடர்ந்து


காகிதத்தில் எழுத பென்சிலும் கட்டைப் பேனாவும் பயன்படுத்தப்பட்டு
அவையும் மறைந்த பின்னர் மையூற்று பேனாவும் பந்து முனை
பேனாவும் வந்தன.
● அண்மையில் கையால் எழுதும் வழக்கம் மாறி தட்டச்சு செய்யும்
முறையும் கணினியில் பதிவு செய்யும் முறையும் வளர்ந்தது கையால்
எழுதும் வழக்கம் வெகுவாக குறைந்து வருகின்றது.

4.வாயிலோயே எனத் தொடங்கும் அவ்வையாரின் புறநானூற்று பாடல்


பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
● புறப்பொருளில் ஒருவனுடைய புகழ் வலிமை கொடை அருள் போன்ற
நல் இயல்புகளை சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணை என்னும்
திணையுள் அடங்கும்
● வாயிலோயே என தொடங்கும் அவ்வையாரின் பாடலுள் அதியமான்
நெடுமானஞ்சு எனும் வள்ளலின் புகழ் கொடை முதலான பண்புகள்
சிறப்பித்து கூறப்பட்டுள்ளன
● எனவே இப்பாடல் புறத்திணைகளுள் பாடாண் திணைக்கு உரியதாகும்.

கூடுதல் வினா
1.பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.(செப்.-21, மே - 20, 22)

பாடாண் திணை = பாடு + ஆண் + திணை. பாடத்தக்க சிறப்புடைய


ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் முதலான
நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது, பாடாண்திணை எனப்
புறப்பொருளில் கூறப்பெற்றுள்ளது.

சான்று :
‘எத்திசை செலினும் அத்திசை சோறே ‘

வாயில் காவலனை விளித்துப் பாடியதாக அமைந்த புறநானூற்றுப் பாடல்,

'பாடாண் திணை'க்குச் சான்றாகும்.

திணைப் பொருத்தம்
பரிசலருக்கு வாயிலை அடைக்காத காவலனே விரைந்து ஓடும் குதிரையைக்
கொண்ட நெடுமானஞ்சி தன்னுடைய தகுதி அறியானோ என
குறிப்பிட்டுள்ளமையே அதியமான் பாடத்தக்க சிறப்பு அமைந்தவன்
என்பதனை புலப்படுத்தும்.

2.'வித்தியாரம்பம்' - குறித்து எழுதுக.

ஐந்தாம் பிராயம்: முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம்


செய்யும் பொழுது தாய் தந்தையர்
பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.
விசேட நாள்: பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய
விசேட நாளாகக் கொண்டாடப்பெறும்.

வித்தியாரம்பம்:
ஏட்டின் மீ து மஞ்சள் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச்
செய்வார்கள்.

உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க, மாணாக்கன் அதனைப்


பின்பற்றிச் சொல்லுவான்.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
44
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

3. ஓதற்பிரிவு பற்றித் தொல்காப்பியம் கூறுவது யாது? ஒதற்பிரிவு:

கற்றல் - கற்பித்தல் - வாதம்புரிதல்: இல்லறம் நடத்தும் காலத்தில் கூட,


வேற்று நாட்டிற்குச் சென்று கல்வியைக் கற்பித்தும் வாதம் புரிந்து வென்றும்
தாம் முன்பு அறியாதவற்றைக் கற்றும் வந்தனர். தம்முடைய இலக்கண
நூலான தொல்காப்பியத்திலும் பிறவற்றிலும் இங்ஙனம் பிரியும் காலம்
ஓதற்பிரிவென்று சொல்லப்பட்டிருக்கின்றது.

கால எல்லை: ஓதற்பிரிவின் கால எல்லை மூன்று வருடங்கள் என


அந்நூல்கள் விதிக்கின்றன.

4. எழுத்தாணிகள் - குறிப்பு வரைக.

எழுத்தாணிகள்:
● ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியில் பல பேதங்கள் உண்டு.
● எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு.
மூவகைகள் :
● 1)மடக்கெழுத்தாணி
● 2) வாரெழுத்தாணி
● 3) குண்டெழுத்தாணி

பேனாக்கத்தி:
● ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு
எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே 'பேனாக்கத்தி' என்ற பெயர்
வந்திருக்கின்றது.

மடக்கெழுத்தாணி: ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு


எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.

மெல்லிய எழுத்தாணி : ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக இருபது


முப்பது வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன.

5.முறை வைப்பு என்று எதனை கூறுவார்கள்?


● பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய விசேட
நாளாகக் கொண்டாடப் பெறும்.
● ஏட்டின் மீ து மஞ்சட் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச்
செய்வார்கள்.
● உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க, மாணாக்கன்
அதனைப் பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச்
சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை 'முறை
வைப்ப'தென்று கூறுவார்கள்
● உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை
முறை வைப்பதுண்டு.

நெடுவினா.

1. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.


கவிதை எழுத அறிய வேண்டுவன :

i) சொற்களை அமைக்கும்போது எதுகை, மோனை சேர்க்காமல், அடி அளவை


அறியாமல் அமைகின்ற வடிவம் வசனம் ஆகும்.

ii) எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
45
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

நெறிகளுக்கு உட்பட்டு சொற்கள் அமைவது கவிதையாகும்.

iii) எழுத்துகள் தொடர்ந்து இருந்தால் அசைகள் வரும். அசைகள் சேர்ந்து சீர்


வரும். இரண்டு சீரின் இடைவெளியில் தளைகள் வரும்.

iv) தளைகள் தொடர்ந்து நடந்து அடிகள் அமையும். அடியின் கீ ழே


அடியிருந்தால் தொடைகள் வரும்.

v) தொடை நயங்கள் நன்கு அமைந்திருந்தால் கவிதை வரும். இவற்றைத்


தெரிந்து கொண்டு கவிதை எழுதத் தொடங்க வேண்டும்.

vi) மாவும் புளியும் மரத்தில் காய்க்கும். கவிதையின் சீர்களில் தேமாவும்


புளிமாவும் நன்கு காணப்படும்.

vii) உரிய வடிவத்தில் எழுதாவிட்டால் தளைகள் பொருந்தாது. பாடலின்


இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளில் ஒன்றைக்
கொண்டு முடியும்.

viii) செடியில் பூத்த பூமீ து வண்டுவந்து அமர்வது போல நல்ல புலவர்களின்


பாடல்களில் புகழ் தங்கும்.
ix) எளிய மக்களுக்கும் விளங்குகின்ற வகையில் தமிழ்க் கவிதைகளைத்
தரவேண்டும்.

x) நுணுக்கமாக ஆராய்ந்து எழுத்துகளை அறிந்து நம் முன்னோர்கள்போல்


கற்றுவந்தால் அறம், பொருள்கள் உள்ளத்தில் தோன்றும். அறிவினிலே புகழ்
விளையும்.

xi) இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு கவிதை எழுதுவோர்க்குப் புகழும்


சிறப்பும் ஒருங்கே அமையும்.

2. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே


நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

முன்னுரை :

கல்வியும் அதன் நோக்கமும் கல்விக்கூட அமைப்பும் கற்பிக்கும் முறைகளும்


மாறுதலடைகின்றன. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர்
மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்பித்தல் முறைகளை இங்கு காண்போம்.

வித்யாரம்பம் :

i) முதன்முதலில் ஐந்தாம் வயதில் வித்யாப்பியாசம் செய்யும்பொழுது தாய்


தந்தையர் பிள்ளைகளை வாத ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து
வந்தார்கள்.
பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம் ஒரு விசேட நாளாகக்
கொண்டாடப்பெறும். முறை வைப்பது :

i) ஏட்டின்மீ து மஞ்சள் பூசி, பூசித்து பையனிடம் கொடுத்து வாசிக்கச்


செய்வார்கள்.

ii) உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கன்


அதனைப் பின்பற்றிச் சொல்லுவான்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
46
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

Iii) இப்படி உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும்


சேர்ந்து சொல்வதை 'முறைவைப்பது' என்று கூறுவார்கள்.
மையாடல் விழா :

i) சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே தெரிவதற்காக சுவடியில் வசம்பு,


மஞ்சள், மணத்தக்காளியிலைச் சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு,
மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைத் தடவுவார்கள்.

ii) இங்ஙனம் மை தடவிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால்


'மையாடல் விழா' என்று சொல்வார்கள்.

எழுதுதல்:
பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள்.

உபாத்தியாயர் முதலில் தரையில் எழுத அதன்மேல் பிள்ளைகள்


விளம்புவார்கள். பிறகு தாமே எழுதிப் பழகுவார்கள்

எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில்


எழுதி வந்தார்கள்.

அடிப்படையான நூல்கள் எல்லாம் மாணவர்களுக்கு மனனமாக இருக்கும்.

தமிழில் திகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்


மளனமாக இருக்கும்.

கணிதத்தில் கீ ழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய


பலவகை வாய்பாடுகள் மனனமாக இருக்கும்.

அந்தாதி முறையைக் கொண்டும் எதுகை, மோனைகளைக் கொண்டும்


செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

அன்பினால் அடக்குதல் :

முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை.

ஆசிரியர்கள் அன்பினால் மாணாக்கர்களை வழிப்படுத்தி வந்தார்கள்.

அவர்கள்பால் இருந்த மரியாதை பயத்தை உண்டாக்கியது.

வாதம் புரிதல் :

கல்வியில் வாதம் புரிதல் நம் நாட்டுப் பள்ளிக் கூடங்களில் இருந்தது.

மிகச் சிறந்த நூற்பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதம் புரிந்து தம்


கல்வித் திறமைகளை நிலைநாட்டுவர்.

சாந்துணையும் கற்றல் :

பள்ளிக்கூடத்திலிருந்து கற்கும் காலம் கடந்த பின்னர், பழைய காலத்தவர்கள்


பின்பும் எங்கெங்கே கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தார்களோ,
அங்கங்கே சென்று அவர்களிடம் தாம் முன்பு கல்லாதவற்றைக் கற்று
வந்தார்கள்.

முடிவுரை:
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
47
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

அந்நாளைய கற்பித்தல் முறைகளைப் பழையன என்று புறந்தள்ளிவிடாமல்,


தேவையானவற்றைத் தேர்ந்து பயன்படுத்தினால் அவை இன்றைய கல்விக்கு
ஏற்ற உரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

3.'சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு' - இக்கூற்று நனவாக நாம் செய்ய


வேண்டியன யாவை? சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு

முன்னுரை:

மனித வாழ்வு பயணங்களால் நிறைந்தது. அன்றாட வாழ்வில் சாலைகளில்


நான் நாம் அதிகமாகப் பயணம் செய்கிறோம்.சாலையில் பாதுகாப்பாக செல்ல
கொண்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்:

பள்ளிப்பருவத்திலையே மாணவர்களுகுச் சாலைப் பாதுகாப்பு குறித்த


விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில்
கவனமுடன் பயணம் செய்வர்.

உயிரின் மதிப்பைப் புரிய வைத்தல்:

பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது


குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் சாலையில் விளையாடுவது,
கவனிக்காமல் திடீரென்று சாலையைக் கடப்பது. சாலையின் நடுவே
செல்வது. சாலையை அடைத்துக் கொண்டு செல்வது, முன்பு செல்லும்
வாகனத்தைப் பிடித்துக் கொண்டு மிதிவண்டியில் செல்வது, பேருந்தில்
படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது போன்ற செயல்களில்
ஈடுபட மாட்டார்கள். மாணவர்கள் விபத்துகளில் தங்கள் உயிரையும்
உடலுறுப்புகளையும் இழப்பது அவர்களின் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும்
பெரிய இழப்பு என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

ஒழுங்கீ னச் செயல்களைத் தடுத்தல்:

இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்வது. தலைக்கவசம்


அணியாமல் செல்வது. கைபேசியில் பேசிக்கொண்டே செல்வது. போட்டி,
பந்தயம் என்று பொதுவழியில் உச்ச வேகத்தில் ஓட்டுவது. காதணி கேட்பிகள்
பொருத்திக் கொண்டு வாகனம் ஓட்டுவது. மது குடித்துவிட்டு வாகனம்
ஓட்டுவது போன்ற டுழுங்கீ னச் செயல்களைத் தவிர்த்தாலே விபத்துகளின்
எண்ணிக்கை குறைந்து விடும்.

'அவசரம்' என்ற நோயைத் தடுத்தல்:

அவசரம்' என்ற பெயரில் ஏற்படும் வாகன ஓட்டுநரின் கவனக்குறைவு, போதிய


பயிற்சியின்மை, தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, மிகுதியான
ஆட்களையோ சரக்குகளையோ ஏற்றிச் செல்வது. தொடர்வண்டி
இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது போன்றவற்றில் தமக்கும்
பிறர்க்கும் ஆபத்து ஏற்படும் என்பதைப் புரிய வைத்தாலே விபத்துகளின்
விழுக்காடு குறைத்து விடும்.

குறியீடுகளைப் பயன்படுத்துதல்

: சாலையில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர்


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
48
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.

(i) உத்தரவுக் குறியீடுகள்

(ii) எச்சரிக்கை குறியீடுகள்

(iii) தகவல் குறியீடுகள்

என்ற மூவகைக் குறியீடுகளையும் நாம் கண்டுணர்ந்து அவற்றைப் பின்பற்றிப்


பயணங்களை மேற்கொள்ளும்பொழுது விபத்தில்லாத தமிழ்நாடு உருவாகும்.
முடிவுரை
வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்றி நடக்க
வேண்டும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த
வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் நம் நாடு சாலை விபத்து இல்லாத
நாடாக திகழும்.

தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக. (பக்கம் 102)

எ.கா : நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.

நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.


எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.

2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.


அரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.


வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.


ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது.

5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்


இன்று சாயுங்காலம் கபடிப்போட்டி நடைபெறும்.

III. தமிழாக்கம் தருக

நூலக வசதி

சர்வதேச அளவில், இந்தியாவில் கல்வி மற்றும் சமூகத் தேவைகளால் நூலக


வசதியில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில்
காமன்வெல்த் தலைமையிலான மேலாதிக்கத்தையும் பிரிட்டிஷ்
காலனிகளையும் இந்தியா வெறுமனே எதிர்க்கிறது. ஒரு சில நகரங்களால்
மட்டுமே நூலகத்தை அதிகரிக்க செய்ய முடிகிறது. ஒரு சில நகரங்கள்
மட்டுமே பெருமிதம் கொள்கிறது. இதில் கிராமப்புற மக்கள் முற்றிலும்
புறக்கணிக்கப்படுகிறார்கள். பின்தங்கிய நாடுகளில் கூட காணப்படுகின்ற
நூலக வசதி இங்கு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. பின்தங்கிய
பகுதிகளில் நூலகத்தின் வளர்ச்சி தாமதமாகிறது. பள்ளிகளின் எண்ணிக்கை
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
49
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

மற்றும் எழுத்தறிவு விகிதம் உயர்ந்தால் மட்டுமே இந்தியாவில் புத்தகங்களை


வாசிப்போர் எண்ணிக்கையும் உயரும். சில பகுதிகளில் புத்தகம் மற்றும்
பத்திரிகைகள் வாங்குவதற்குக் கூட வழி இல்லை. போதுமான அளவிலான
பொது நூலகம் மற்றும் வாசிப்பு அறை இல்லாத காரணத்தினால் வாசிக்கும்
பழக்கம் மக்களிடையே குறைந்து காணப்படுகிறது. எனவே தான், மக்களில்
பெரும்பாலோர் வாசிக்கும் பழக்கத்தினை வழக்கமாகக்
கொண்டிருக்கவில்லை.

IV. பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக :


(பக்கம்.103)

அ ) யானைக்கும் அடி சறுக்கும்: மே 2022 ஆகஸ்ட் - 2022

பொருள்:

தனக்குத் தான் அனைத்து அனுபவங்களும் தெரியுமே இது என்ன? இது


சாதாரண ஒன்று தானே என்று எளிதாக நாம் நினைத்தது நமக்கு எதிர்பாராத
பெரிய தீமையை ஏற்படுத்தி விடும்.

வாழ்வியல் நிகழ்வு:

என் நண்பன் இராமன் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல


பதக்கங்களையும் வென்றுள்ளான். ஏன் கடலில் கூட ஒரு முறை நீந்திச்
சென்று திரும்பி வந்து சாதனை புரிந்துள்ளான். ஒருமுறை அவன்
உறவினர்களோடு ஆற்றங்கரைக்கு சென்றான்.அப்போது ஆற்றில் ஏற்பட்ட
திடீர் வெள்ளப் பெருக்கு கரையில் உள்ளவர்களையும் அவர்களது
உடமைகளையும் அடித்துக் கொண்டு சென்றது. என் நண்பன் ராமன் தான்
கடலிலேயே நீந்தியவன் என்ற நம்பிக்கையில் ஆற்றுக்குள் சென்று
அனைவரையும் காப்பாற்றி விடலாம் என நினைத்தான் ஆனால் எதிர்பாராத
விதமாக ஆற்று வெள்ளத்தில் ராமனும் அடித்துச் செல்லப்பட்டார் நீண்ட
நேரத்திற்குப் பின்பே தீயணைப்பு துறையினரால்
காப்பாற்றப்பட்டான்.அப்போது யானைக்கும் அடி சறுக்கும்' என்ற
பொன்மொழியை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.

ஆ) தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை


அறுப்பான்

ஆகஸ்ட்-2021 ஆகஸ்ட் 2022

பொருள்:

நாம் பிறர்க்கு நன்மை செய்தால் நமக்கும் நன்மையே கிடைக்கும். நாம் தீமை


செய்தால் நமக்கும் தீமையே கிடைக்கும்.

வாழ்வியல் நிகழ்வு என நண்பன் வாசனின் அப்பா

பெருந்தன்மையான குணமுடையவர். எல்லாரிடத்திலும் இயல்பாகப் பழகும்


தன்மையுடையவர். நல்ல பழக்க வழக்கங்களையும் மன்னிக்கும் குணம்,
பொறுமை. மனிதநேயம் ஆகியவற்றையும் சிறு சிறு கதைககள்,
பொன்மொழிகள் மூலமாகத் தம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்தே
வளர்த்தார். இப்போது அவரின் பிள்ளைகளான என் நண்பரின் சகோதர
சகோதரிகள் அரசின் பலதுறைகளிலும் மிக உயர்ந்த பதவியில் உள்ளனர்.
ஆனால், வாசனின் சித்தப்பாவோ முற்றிலும் மாறுபட்டவர். வாசனின்
அப்பாவிற்குக் கிடைக்கும் மரியாதையும் புகழையும் கண்டு
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
50
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

பொறாமைப்படுபவர். அதனால் அவர் பகை உணர்ச்சியையும். பழிவாங்கும்


குணம், தண்டிக்கும் குணம் போன்ற தீய பண்புகளைச் சொல்லிக் கொடுத்தே
தம் பிள்ளைகளை வளர்த்தார். அவர்கள் இப்போதோ தினமும் காவல்
நிலையம் சென்று கையெழுத்து போடும் குற்றவாளிகளாக உள்ளனர்.

வாசனின் குடும்பம் மூலம் தினை விதைத்தவன் தினை அறுப்பான்


என்பதையும் வாசனின் சித்தப்பா குடும்பம் மூலம் வினை விதைத்தவன்
வினை அறுப்பான் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

இ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை: பொருள்:

நாம் எப்போதும் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் இருக்கும் குறைகளை


மட்டுமே கண்டுபிடித்து அவற்றைப் பெரிதாக்கி சண்டையிட்டால் நம்
நண்பர்களோ அல்லது உறவினர்களோ நம்மை விட்டு
விலகி விடுவர்.

வாழ்வியல் நிகழ்வு

என் அத்தை நிரஞ்சனா பெரிய குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். ஆனால்


எப்போதும் தன்னைச் சுற்றி உள்ள உறவினர்களிடமும் அண்டை
வட்டாரிடமும்
ீ அவர்களது குறைகளைச் சுட்டிக் காட்டிச் சண்டையிட்டுக்

கொண்டே இருப்பார். தினமும் இந்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே


போனதால் பக்கத்து

வட்டார்கள்
ீ இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். அந்தத் தெருவினரே
இவரிடம் பேசுவதே கிடையாது.

போகப் போக என் அத்தையின் பிள்ளைகளுக்கும் திருமணம் மற்றும்


கல்வியின் காரணமாக வெளியூர்,

வெளிநாடு என்று பயணித்து விட்டனர். இப்போது அவரிடம் சென்று யாரும்


பேசுவதோ பார்ப்பதோ கிடையாது. மாமாவின் மரணத்திற்குப் பிறகு ஆதரிக்க
யாருமின்றி தனிமரமாகவே இருக்கிறார்.

தனது ஆதரவற்ற சூழ்நிலையில் என் அத்தை ‘குற்றம் பார்க்கின் சுற்றம்


இல்லை" என்பதை உணர்ந்து கொண்டார்.

குற்றம் பார்ப்பது அத்தையின் குறை கூறும் மனநிலை சுற்றம் இல்லை →


தற்போது ஆதரவற்று இருப்பது

ஈ) எறும்பு ஊரக் கல்லும் தேயும்: PTA ஆகஸ்ட் - 2021 மார்ச் 2011

வாழ்வியல் நிகழ்வு
என் சித்தி சுடலிக்குப் பொறியியல் படிப்பு மீ து நம்பிக்கை இல்லை. எனவே,
தன் மகனின் பொறியியல் படிப்பு மீ தான ஆசையைத் தவறு என்று புரிய
வைக்க நினைத்தாள். தினமும் தன் திறன்பேசியில் தேடித்தேடி செய்திகளை
சேகரித்தாள். அவனுடைய எதிர்காலத்தில் எந்தத் துறையில் மதிப்பு
அதிகமாகும் என்பதை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தாள். தக்க
சான்றுகளோடு மெய்பித்தாள். பொறியியல் துறை பற்றிய தனது சொந்த
கருத்துக்களை மகனிடம் தினமும் பதிவு செய்ய ஒரு காலகட்டத்தில்
அவனுக்கு பொறியியல் மீ தான ஆசை குறைந்து போனது. பிறகு வேறு
துறையைத் தேர்ந்தெடுத்து மிகக் குறைந்த செலவில் படித்து முடித்து விட்டு
இப்போது தன் அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் உள்ளான்.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
51
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

பொருள்:

இந்நிகழ்விலிருந்து எறும்பு ஊரக் கல்லும் தேயும்' என்பதை உணரலாம்.


எறும்பு ஊர்வது சித்தியின் பிற துறை சார்ந்த கருத்துகள் கல்லும் தேயும் சித்தி
மகனின் மனம் மாறியது

) ஊழி பெயரினும் தாம் பெயரார்.

பொருள்: காலமாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் சிலர்


தம்முடைய தன்மையில்
மாற மாட்டார்கள்.

வாழ்வியல் நிகழ்வு:

என் மாமா வளவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.


பள்ளிப்படிப்பை மட்டுமே இலவசமாக முடித்தார். மற்ற மேல்படிப்புகளை
படிக்க வைக்க அவரது தந்தையிடம் வசதி இல்லாததால் படிக்க வைக்க
முடியவில்லை. என் மாமாவே முயன்று பல இடங்களில் இரவும் பகலும்
வேலை செய்து பணம் சேர்த்து வைத்தார். அதன் பின்பு கல்லூரியில் சென்று
படித்தார். முதுகலைப் படிப்பையும் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே
படித்தும் வந்தார். அவரது கடின முயற்சியால் நன்கு படித்துப் போட்டித்
தேர்வில் வெற்றி பெற்று முதன்மை கல்வி அலுவலர் ஆகி விட்டார். பின்பு
அவரது குடும்பமே வடு, ீ நிலம எல்லாம் சொந்தமாக வாங்கி வசதியாகி
விட்டனர்.எனினும் அவரும் அவர் குடும்பமும் தனது தன்மை மாறாமல்
இன்றும் வாழ்ந்து வருகின்றனர். எங்கள் ஊரில் கல்வி பயிலும் மிகவும் ஏழை
மாணவர்களை அவரே தனது சொந்தச் செலவில் படிக்க வைக்கின்றார்.
அவரது தனிப்பட்ட செலவில் பல வசதிகளை அமைத்துத் தந்துள்ளார்.
இந்நிகழ்விலிருந்து ஊழி பெயரினும் தாம் பெயரார்' என்பதை உணரலாம்.

6.சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடர் அமைக்க.

எ.கா : பலகை

● பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.


● பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின.

1. தாமரை

● தாமரைகளைக் குளத்தில் கண்டேன் .


● தா மரைகளை காட்டில் கண்டேன்.

2. கோவில்

● கோவில்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்து வரலாம்.


● கோ இல் சென்று புலவர் மன்னரைப் பாடினார்.

3. வெங்காயம்

● வெங்காயம் உணவுக்கு அதிகம் பயன்படுகின்றது.

● உடலில் ஏற்பட்ட வெங்காயங்கள் உறுத்தலைக் கொடுத்தன.

4. தலைமை
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
52
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● தலைமை ஆசிரியர் உரையாற்றினார்.


● தலை மை பூசுதல் கண்களுக்குக் கேடு விளைவிக்கும்.

. இயல் 5

உரைநடை : மதராசப்பட்டினம்

செய்யுள் : தெய்வமணிமாலை தேவாரம் அகநானூறு

துணைப்பாடம் : தலைக்குளம்

இலக்கணம் : படிமம்

இலக்கணத் தேர்ச்சிகொள் பக்கம் (124)

1) படிமம் என்பதன் பொருள்


அ) சொல். ஆ) செயல். இ) காட்சி. ஈ) ஒலி
விடை :இ) காட்சி.

2) 'காலை இளம் வெயில் நன்றாக மேய. தும்பறுத்துத் துள்ளிவரும்


புதுவெயில்' இக்கவிதையில் பயின்று வந்துள்ளது.
அ)பயன்படிமம். ஆ)வினைப்படிமம். இ) மெய்ப்படிமம். ஈ )உருப்படிமம்

விடை : ஆ)வினைப்படிமம்

3)கூற்று : உவமை உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய். உரு


ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.

காரணம்: எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே


கருத்தினை விளக்குவதில்லை.
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் சரி காரணமும் சரி
ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு

விடை :அ) கூற்று சரி. காரணம் தவறு

4) மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க

அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு...


ஆ ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது.
இ)பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்...)
ஈ)வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப...

விடை :இ)பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்...)

5)மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது" - இதில் எவ்வகைப்


படிமம் வெளிப்படுகிறது?
மெய்ப்படிமம்

பலவுள் தெரிக

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
53
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

நம்மை அளப்போம் (பக்கம் 125)

1.சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம் காரணம்


அ)நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ)மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ)அஆ இஅனைத்தும்

விடை :ஈ)அஆ இஅனைத்தும்

2)கூற்று :இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை


நோக்கி வந்தனர்.

காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே


இருந்தது.

அ)கூற்று சரி, காரணம் தவறு


ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி. காரணம் சரி

விடை :ஈ) கூற்று சரி. காரணம் சரி

பொருத்துக.

அ) திருவல்லிக்கேணி ஆறு -1) மாவலிபுரச் செலவு


ஆ) பக்கிங்காம் கால்வாய் -2) கல் கோடரி
இ)பல்லாவரம். -3)அருங்காட்சியகம்
ஈ)எழும்பூர் -4) கூவம்

அ)1.2.4.3. ஆ) 4. 2, 1,3. இ )4. 1. 2,3. ஈ)2.4.3.1


விடை :இ )4. 1. 2,3

4)'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்' - இத்தொடர் உணர்த்தும்


பண்பு
அ) நேர்மறைப் பண்பு. ஆ) எதிர்மறைப் பண்பு.
இ) முரண்பண்பு. ஈ) இவை அனைத்தும்

விடை :இ) முரண்பண்பு

5) 'விளியறி ஞமலி' இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?


அ) எருது. ஆ) குதிரை. இ) நாய். ஈ) யாழி

விடை :இ) நாய்.

குறுவினா

1) கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக.


● கலிவிழா -திருமயிலையில் நடைபெறும் எழுச்சி மிக்க விழா
● ஒலி விழா - திருமயிலையில் நடைபெறும் ஆரவார விழா

2) கீ ழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.


● காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
54
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

1869-இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள்,


தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

3) 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே' -


தொடருக்குப் பதவுரை எழுதுக.
● அறச்செயல்கள் செய்கின்றவர்கள் நிறைந்திருக்கும்
● சென்னைப் பகுதியில் கந்தகோட்டத்தில் அமைந்திருக்கின்ற
திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

4) 'பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்' - தொடரில் உள்ள முரண்


நயத்தைக் குறிப்பிடுக.

● பெருங்கடல் - சிறுகுடி - இதுவே இத்தொடரில் உள்ள முரண் நயமாகும்.


● பரதவர் மீ ன் பிடிக்கும் கடல் பெரியது. ஆனால் அவர்கள் வாழும்
இடமோ சிறுகுடி என்று கூறப்பட்டுள்ளது.

சிறுவினா

1)சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து


இருப்பனவற்றைக் குறிப்பிடுக.

● இந்திய 'சாரசனிக் கட்டடக்கலை' பாணியில் கட்டப்பட்ட மத்திய


தொடர்வண்டி நிலையம், தென்னகத் தொடர்வண்டித் தலைமையகம்,
எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம்
உயர்நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டடம்,
விக்டோரியா அரங்கு. தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று
வழங்கப்படும் 'மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்'

● எழும்பூர் மற்றும் கோட்டை அருங்காட்சியகங்கள்.

● கன்னிமரா நூலகம்.

● திரைப்படத் தொழில் சார்ந்த இடங்களும், திரையரங்குகளும்


சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்று நிலைத்து
இருப்பனவாகும்.

2)இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக்


கேட்கிறார்?
உத்தமர் உறவு : ஒரு நெறிப்பட்ட மனத்துடன் இறைவனது மலர் போன்ற
திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு தனக்கு வேண்டும்
என்கிறார் வள்ளலார்.
வஞ்சகர் உறவு: தம் உள்ளத்தில் ஒன்றை நினைத்துக்கொண்டு புறத்தில்
வேறொன்றாகப் பேசும் வஞ்சகர்களின் உறவு தனக்கு ஏற்படாமல் காக்குமாறு
கந்தவேளிடம் வள்ளலார் வேண்டுகிறார்.

3) பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர்


எவ்வாறு
பதிவு செய்கிறார்?

i) சென்னை திருமயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கோயில் கபாலீச்சுரம்.

ii) இக்கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பங்குனி உத்திரவிழா


சிறப்பானது.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
55
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

iii) இவ்விழாவை இளம்பெண்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள்.

iv) எழுச்சிமிக்க விழாக்கள் நடைபெறும்.

v) கோயிலில் வற்றிருக்கும்
ீ இறைவனுக்குத் திசைதோறும் பூசையிடும்
வகையில் பங்குனி விழா கொண்டாடப்படும்.

vi) இவ்விழாவானது மிகுந்த ஆரவாரத்துடன் அனைவராலும்


கொண்டாடப்பட்டது என்று திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.

4)'நெல்லின் நேரே வெண்கல் உப்பு - இத்தொடரின் வழி பண்டமாற்று


வணிகத்தை விளக்குக.
i) அம்மூவனார் எழுதிய அகநானூற்றுப் பாடலில், "நெல்லின் நேரே வெண்கல்
உப்பு" என்னும் தொடர் இடம்பெற்றுள்ளது.

ii) கடல்சார்ந்த நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் உப்பளங்களில் உப்பை


விளைவித்தனர்.

iii) அவ்உப்பை வண்டியில் ஏற்றிச் சென்று, தொலைவில் உள்ள ஊர்களில்


விற்பர்.

iv)உமணர் ஒருவரின் மகள், "உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப்


பெற்றுக்கொள்ள வாரீரோ!'' என்று கூவினாள்.

v) இதன் மூலம் சங்ககாலத்தில் தன்னிடம் உள்ள விளைபொருட்களைக்


கொடுத்துவிட்டு, அதற்குப்பதிலாகத் தனக்குத் தேவையான பொருட்களைப்
பெற்றுக்கொண்ட பண்டமாற்று முறை இருந்தமையை நாம் அறியமுடிகிறது.

நெடுவினா

1) "ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு" -


நான் வாழ்ந்த நகரம் திருநெல்வேலி

வாழ்வாதாரம்:

இந்தியாவின் 12 புனித நதிகளுள் வற்றாத ஜீவநதியான திருநெல்வேலியில்


பாயும் தாமிரபரணியும் ஒன்று. பொதிகை மலையில் தோன்றிக் கடலோடு
கலக்கும் தண்பொருநை ஆறு பற்றிய நாகரீகமே முதல் நாகரீகம் என்பர்.
தாமிரபரணியின் தொடக்கம் முதல் எல்லை வரை நீண்டிருந்த மாவட்டம்
பின்பு திருநெல்வேலி,தூத்துக்குடி என இரண்டானது. மக்களின்
வாழ்வாதாரமாக விளங்குவது தாமிரபரணியே.

● தொன்மை நாகரீகத்தின் பிறப்பிடம் :


ஆதித்த நல்லூரில் நடந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு,
வெண்கலப் பொருட்கள். மட்பாண்டங்கள், பொன், முதுமக்கள் தாழிகள்
போன்ற பொருள்கள் தான் உலகிலேயே மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.

● பாரம்பரியம் :
சைவ சித்தாந்தமும் கிருத்துவமும் தழைத்தோங்கிய பூமி இது. கல்வியில்
சிறந்த பாளையங்கோட்டையானது 'தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என்று
போற்றப்படுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்திய சுதந்திர போராட்ட
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
56
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

வரலாற்றிலும் இம்மண்ணின் மைந்தர்களே முன்னோடிகளாவர்.


மூலிகைகளோடு தாமிரச்சத்து நிறைந்துள்ள தாமிரபரணி ஆற்று நீரின்
சுவைக்கு ஈடு இணை எதுவுமில்லை. தமிழகத்தில் சாகித்ய அகாதெமி
விருதுகளை அதிகமுறை வென்று இலக்கியத் துறையில் மாபெரும் சாதனை
படைத்தவர்கள் திருநெல்வேலியைச் சார்ந்தவர்களே.

● நீர்த்தேக்கங்கள்
400 ஆண்டுகளுக்கு முன்பாக நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளும்,
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளும் தென்
தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகிறது.

● பண்பாட்டு அடையாளங்கள்:

வரலாற்றுச் சிறப்புடைய கோவில்களும் புண்ணிய தீர்த்தங்களும்,


அருவிகளும், பண்பாட்டு அடையாளங்களாக அமைந்துள்ளன.
பாண்டியர்களின் முதல் தலைநகரான கொற்கை துறைமுகத்தில் விளைந்த
முத்துகள் உலகப்புகழ் பெற்றவை. பன்னாட்டு வணிக ஏற்றுமதிக்குப் புகழ்
பெற்ற நகரம்
திருநெல்வேலிச் சீமையாகும்.

2) "கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன" - இது குறித்து


உங்கள் கருத்தை விவரிக்க.
முன்னுரை :

● இயற்கை எழில் கொஞ்சும், அமைதியான சூழலை உடையவை


கிராமங்கள்.
● கிராமங்கள் தங்கள் பசுமையையும் இயற்கை எழிலையும் கொஞ்சம்
கொஞ்சமாக இழந்து வருகின்றன.
● கிராமங்கள் தங்களின் அடையாளங்களை இழந்ததற்கான
காரணங்களைப் பற்றி என் கருத்தை விவரிக்கின்றேன்.

வேளாண்மை பொய்த்தது :

● கிராமங்களின் தனிப்பெரும் அடையாளம் வேளாண்மை ஆகும்.


● பசுமைப் புரட்சி என்ற பெயரில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக
செயற்கை உரங்களை விதைத்தோம்.
● அதன் விளைவு, மண் தன் தன்மையை இழந்தது
● வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தி குறைந்தது.
● போதுமான அளவு பருவ மழையும் பெய்யாததால் வேளாண்மை
கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

● வேலையில்லா திண்டாட்டம்
I) கிராமங்களில் முதன்மைத் தொழில் வேளாண்மை
Ii)வேளாண்மை பொய்த்ததால், பலரும் வேலையில்லா நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.
iii)வேலை தேடுவதற்காக கிராமங்களைவிட்டு, நகரங்களை நோக்கிச்
செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
iv)சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் பல
கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூட செயல்படுத்தப்படவில்லை.

நகரமயமாதல் :

● நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பது


அனைவரின் நோக்கமாக உள்ளது.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
57
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● எனவே, கிராமங்கள் அனைத்தும் நகரங்களாக மாறிவருகின்றன.

● விளை நிலங்கள் யாவும் வட்டு


ீ மனைகளாக்கி விற்பனை
செய்யப்படுகின்றன.

● விவசாயிகளும் தங்கள் வருவாய்க்காக வேறு வழியின்றி தங்கள்


நிலங்களை விற்பனை செய்கின்றனர்.

முடிவுரை :

● கிராமங்கள் வெறும் வாழ்விடங்கள் இல்லை.

● கிராமங்கள் நம் பண்பாட்டின் அடையாளங்கள், இயற்கையின்


அங்கங்கள் என்பதை நாம் உணர வேண்டும்
● இந்தியாவின் வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான கிராமங்களின்
வளர்ச்சி என்ற காந்தியடிகளின் பொன்மொழியை பின்பற்றி வாழ
வேண்டும்

3.சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப் பகுதிகள் செய்யுளில்


எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?.

● சென்னையில் உள்ள மயிலாப்பூர் ஐப்பசியில் ஓணவிழா,


கார்த்திகையில் விளக்குத் திருவிழா, மார்கழியில் திருவாதிரை
விழா, தை மாதத்தில் தைப்பூச விழா, மாசியில் கடலாட்டு விழா,
பங்குனியில் பங்குனி உத்திர விழா. போன்று ஆண்டுதோறும்
விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை என்று அழைக்கப்படும்
மயிலாப்பூர். இவ்வூர் சென்னை மாநகரின் ஒரு பகுதியாகும்.

● மயிலையில் காட்சிப்படுத்தப்பட்ட பங்குனிஉத்திர விழா: பெரிய


ஊரான திருமயிலையானது இளம்பெண்கள் ஆரவாரத்தோடு
கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வதிகளையுடையது.

அங்கு எழுச்சி மிக்க விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

கபாலீச்சரம் என்னும் கோவில் அமைந்துள்ளது.

● கபாலீச்சரம் கோவிலில் வற்றிருக்கும்


ீ இறைவனுக்குப்
பூசையிடும் பங்குனி உத்திரமானது அரவார்விழாவாக
ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு
திருவிழாக்களால் எழும் ஆரவாரம் நிறைந்ததாக மயிலாப்பூர்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கந்தகோட்டப் பகுதிகள்:

● ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும்


ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை
உருவான இடம் சென்னை இவ்வுண்மை நெறியை உருவாக்கி
வளர்த்த வள்ளலார். சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று
ஆன்மீ க மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின்
ஊற்றுக்களமாக இருந்தது கந்தகோட்டம்.

● காட்சிப்படுத்தப்பட்ட கந்தகோட்டப் பகுதிகள்: அறம் செய்வார்கள்


நிறைந்திருக்கும் பகுதி
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
58
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● ஒருமையான மனத்துடன் கந்தகோட்டத்து திருக்கோவிலில்


எழுந்தருளியிருக்கும் கந்தவேளின் மலர் போன்ற திருவடிகளை
நினைக்கின்ற உத்தமர்கள் நிறைந்த பகுதி. கந்த கோட்டத்து
முருகப்பெருமான் குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய
மாணிக்கமணியானவர்

● ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியானவர். இவ்வாறு


அறம் செய்பவர்கள், உத்தமர்கள் நிறைந்த பகுதி என்றும்
அங்குள்ள இறைவன் குளிர்ந்ததன்மை, அருள், ஆறுமுகமானவர்
என்றும் காட்சிப்படுத்தப்படுகிறது.

தமிழாக்கம் தருக. (பக்கம் 126)

பெரியார் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளர் மட்டுமல்ல; அவர் அதை விட


அதிகமாக இருந்தார். அவர் தாழ்த்தப்பட்டவர்களின் சிறந்த சாம்பியனாக
அறியப்படுகிறார்; இந்த கோளத்திலும் அவர் அதை விட அதிகமாக இருந்தார்.
அவரது செயல்பாட்டுக் கோளம் மிகவும் பரந்ததாக இருந்தது, அவர் எந்தப்
பிரச்சினையை எடுத்தாலும் அதில் ஆழமாகச் சென்று, அதன் அனைத்து
அம்சங்களையும் புரிந்துகொண்டு, அதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை
ஓய்வெடுக்கவில்லை. நம் சமூகத்தில் வகுப்புவாத வேறுபாடுகள் ஆழமாகப்
பதிந்திருந்தன, பெரியார் காட்சிக்கு வரும் வரை நமது சமூகத்தின் நிரந்தர
அம்சங்களாகத் தோன்றின.

இலக்கிய நயம் பாராட்டுக.(பக்கம் 126)

பிறப்பினால் எவர்க்கும் - உலகில்


பெருமை வாராதப்பா !
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டுமப்பா !
நன்மை செய்பவரே - உலகம்
நாடும் மேற்குலத்தார் !
தின்மை செய்பவரே - அண்டித்
தீண்ட ஒண்ணாதார் !

. - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

மையக்கருத்து:

மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான புகழ் வரவேண்டுமெனில் நல்ல


செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும்.
தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார்.

தொடை நயம்:

தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்

என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு அளபெடை நயங்கள்


அமைந்துள்ளன.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
59
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

மோனை நயம்:

காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை

முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

சான்று:

நன்மை. நாடும்

தின்மை. தீண்ட

எதுகை நயம்:

மதுரைக்கு வகை
செய்யுளுக்கு எதுகை

முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது


எதுகை.

சான்று:

பிறப்பினால். சிறப்பு

தின்மை. தீண்ட

இயைபு:

இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.

சான்று:

வாராதப்பா. வேண்டுமப்பா

மேற்குலத்தார். ஒண்ணாதார்

அணி நயம் :

குளத்துக்கு தாமரை அழகு


கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு

என்பதற்கு ஏற்ப இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது.

பேச்சுவழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.(பக்கம் 127)

எ:கா: இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ.


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
60
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

விடை:இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

1.நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்


விடை:நிலத்தைக் கிளற வேண்டுமடா அப்போதுதான் வயிறு நிறையும்.

2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.


விடை:அன்றைக்கு அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க
வேண்டியதுதான்?

8. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு


போனாரு.
விடை:வட்டுக்கு
ீ அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா
எங்கு அழைத்துக்கொண்டு போனார்.

4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது


விடை:பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாகச்
சிரமப்படுகிறது.

5.ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்


விடை:இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.

பத்தியாக எழுதுதல்.(பக்கம் 127)

தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் இருவகைப்படும். அவையாவன :


எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவாகும்.

எட்டுத்தொகை நூலில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு,


கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் சார்ந்தவையாகும்.
புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டு நூல்களும் புறப்பொருள்
பற்றியனவாகும். பரிபாடல் என்ற நூல் மட்டும் அகம், புறம் இரண்டும் கலந்த
நூலாகும்.
பத்துப்பாட்டு நூல்களுள் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை,
பட்டினப்பாலை என்ற நான்கு நூல்களும் அகப்பொருள் பற்றியனவாகும்.
மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய
ஆறு
நூல்களும் புறப்பொருள் பற்றியனவாகும்.

பிறமொழிச் சொல். தமிழ்ச்சொல்

சர்க்கார் -அரசு
சம்பளம் -ஊதியம்
ஜீவனம். -வாழ்க்கை
மாயை. -மாயத்தோற்றம்
ஆத்மா -உயிர்
பிரபஞ்சம். -உலகம்
சக்தி. -ஆற்றல்
அம்சம். -அழகு, பகுதி
ஆத்மவிசாரம. -மனக்கவலை
மனுசன். -மனிதன்
அவகாசம். -வாய்ப்பு
மனுசவர்க்கம். -மனிதக்கூட்டம்
ஸ்புடம். -சோதனை, தரம்பிரித்து.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
61
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

. இயல் 6

உரைநடை. : திரைமொழி

செய்யுள் : கவிதைகள் சிலப்பதிகாரம் மெய்ப்பாட்டியல்

துணைப்பாடம் : நடிகர் திலகம்

இலக்கணம் : காப்பிய இலக்கணம்

வாழ்வியல் : திருக்குறள்

இலக்கண தேர்ச்சி கொள்

1.ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரை தம் உரையில் குறிப்பிட்டவர்.

அ) சிவஞான முனிவர். ஆ) மயிலை நாதர்.


இ) ஆறுமுக நாவலர். ஈ )இளம்பூரணர்

விடை: ஆ) மயிலை நாதர்

2.கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு · இயம் எனப் பிரிந்து மரபைக்


காப்பதுடன் இருகிறது. 2 இவளிெப்படுத்துவது. மொழி காப்பு கதையர் மலாய்
பிரிக்க மறெல்லாம் பொருள் தருகிறது.

கூற்று 2: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி

அ) கூற்று 1 சரி. கூற்று 2 தவறு. ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு

இ) இரண்டும் சரி. ஈ) இரண்டும் தவறு

விடை : அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

3. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.


அ) காதை. -1) கந்தபுராணம்
ஆ) சருக்கம். -2) சீவகசிந்தாமணி
இ) இலம்பகம். -3) சூளாமணி
ஈ) படலம். -4) சிலப்பதிகாரம்

அ ) 4, 3, 2, 1. ஆ ) 3, 4, 1, 2. இ ) 3. 4. 2. 1. ஈ ) 4, 3, 1, 2

விடை : அ) 4, 3, 2, 1

4. தவறான இணையைத் தேர்க.

பாவகை. இலக்கியம்
அ) விருத்தப்பா. -நாலடியார்
ஆ) ஆசிரியப்பா. -அகநானூறு
இ) கலிவெண்பா. -தூது
ஈ) குறள் வெண்பா. -திருக்குறள்

விடை :அ) விருத்தப்பா. -நாலடியார்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
62
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

குறுவினா.

5. காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?


காப்பியம் இரண்டு வகைப்படும்.
அவை :
1. பெருங்காப்பியம்
2. சிறுகாப்பியம்

6.காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?

காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் :


● தமிழில் காப்பியம் என்னும் இலக்கிய வகை பாட்டுடைச்
செய்யுள்,உரையிடையிட்ட
பாட்டுடைச்செய்யுள்,சரிதம்,புராணம்,கதை,மாக்கதை காதை, காவியம்,
மாக்கவி, மாபெருங்காப்பியம் முதலான பல்வேறு பெயர்களில்
வழங்கப்பட்டு வருகின்றது.

7. காப்பியச் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக.

காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை காப்பியச் சிற்றுறுப்புகள்


ஆகும்.

8. பாவிகம் - விளக்குக.
பாவிகம்
● காப்பியத்தின் பண்பாகப் 'பாவிகம்' என்பதைத் தண்டியலங்காரம்
குறிக்கின்றது.

● காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக்


கருத்தினையே பாவிகம் என்பர்.

● "பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப்" என்பது


கம்பராமாயணத்தின் பாவிகம்

● "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை


உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்''என்பது
சிலப்பதிகாரத்தின் பாவிகம்.

நம்மை அளப்போம்.

பலவுள் தெரிசு:

1. ஆர்ப்பரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம்: மகா மௌனம் - அடிகள் புலப்படுத்துவது


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
63
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

அ) இரைச்சல். ஆ) குறைகுடம் கூத்தாடும்

இ) நிறைகுடம் நீர்த்தழும்பல் இல். ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க


இயலாது.

விடை : ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.

2. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்……

தொடர்களில் வெளிப்படும் செய்திகள்

1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.


2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

அ) 1 சரி 2 தவறு. ஆ) 1 தவறு 2 சரி.


இ) 1 தவறு 2 தவறு. ஈ ) 1 சரி 2 சரி

விடை :ஈ ) 1 சரி 2 சரி

3. பொருத்துக.

அ) ஆமந்திரிகை. . -1) பட்டத்து யானை.


ஆ) அரசு உவா. -2) மூங்கில்
இ) கழஞ்சு. -3) இடக்கை வாத்தியம்
ஈ) கழை. -4) எடை அளவு

அ ) 3, 1, 4, 2. ஆ ) 4, 2, 1, 3. இ ) 1, 2, 3, 4. ஈ )4,3,2,1

விடை : 3) 3, 1, 4, 2

4. வேறுபட்டதைக் குறிப்பிடுக.

அ) அண்மைக் காட்சித் துணிப்பு. ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு


இ) நடுக் காட்சித் துணிப்பு ஈ) காட்சி மறைவு

விடை :ஈ) காட்சி மறைவு

குறுவினா

1 எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?


சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு. அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என்று
மெய்ப்பாடு எண்வகைப்படும்.

2.பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று


தருக.

● பின்னணி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர


உதவும் கலையாகும்.
● பின்னணி இசைச் சேர்ப்பும், சில வேளைகளில் மவுனமும் திரையில்
உணர்வுகளை வெளிக்கொணர் உதவுகின்றன.
● எடுத்துக்காட்டாக, கதைநாயகி சன்னல் வழியாகத் தலையை நீட்டி
வெளியே தெரியும் ஒரு காட்சியை வெறித்துப் பார்க்கிறாள் எனில், தெரு
காட்டப்படுவதில்லை.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
64
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● அவள் தெருவைப் பார்ப்பது மட்டுமே காட்டப்படுகிறது.

● அக்காட்சியில் ஒரு மகிழுந்து புறப்பட்டுச் செல்லும் ஒலி


இணைக்கப்படுகிறது.
● இதில் அவளைப் பார்க்க வந்தவர், அவள் விருப்பத்திற்கு மாறாக
அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார் என்ற கதை, அப்பெண்ணின்
முகபாவனை மூலமே சொல்லப்படுகிறது.

3. ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக.

ஒருமுக எழினி

● ஒருமுக எழினி என்பது மேடையின் ஒரு புறத்திலிருந்து


மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை ஆகும்.

பொருமுக எழினி:

● பொருமுக எழினி என்பது மேடையின் இருபுறத்தில் இருந்தும் நடுவில்


ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்
திரையாகும்.

4. "மூச்சு நின்றுவிட்டால்
பேச்சும்
அடங்கும்" - கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.

"தூங்கையிலே வாங்குகிற மூச்சு

சுழிமாறிப் போனாலும் போச்சு''

"எரியறதைப் புடுங்கினா கொதிக்கிறதும் அடங்கும்",

கூடுதல் வினா

1.சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை?

i) குடிமக்கள் காப்பியம்
ii) மூவேந்தர் காப்பியம்
iii) புரட்சிக் காப்பியம்
iv) முத்தமிழ்க் காப்பியம்
v)உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
vi) பொதுமைக் காப்பியம்
vii) ஒற்றுமைக் காப்பியம்
viii) வரலாற்றுக் காப்பியம்

2.மீ அண்மைக் காட்சித் துணிப்பு என்றால் என்ன?


● காலிலிருந்து செருப்பைக் கழற்றி வாசலில் விடும்போது, கண் கீ ழே
குனிந்து செருப்பை மட்டும் பார்க்கிறது. இது மீ அண்மைக் காட்சித்
துணிப்பு எனப்படுகிறது.

3.குலஷோவ் விளைவு - குறிப்பு வரைக.

● மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள்


முண்டியடித்துச் செல்கின்றன.
● அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
65
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர்.


● தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர்கள், மந்தைகள் ஆவதை
இக்காட்சிகளின் இணைப்புஉணர்த்துகிறது.
● காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன்மூலம் வெவ்வேறு காட்சிகளை
உருவாக்கிக் காட்ட முடியும்.
● இவ்வாறு காட்டுவதை குலஷோவ் விளைவு என்பார்கள்.

சிறுவினா

1. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு


குறித்து உங்கள் கருத்தை எழுதுக இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் நாட்டிய
அரங்கத்திற்கான அமைப்பு

i) சிற்பநூலில் சொல்லப்பட்டவாறு சிறந்த நிலத்தை ஆடல் அரங்கிற்குத்


தேர்ந்தெடுத்தனர்.

ii) மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே ஒன்றுக்கொன்று இடையே


ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். iii)
தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக
இம்மூங்கிலை வெட்டினர்.

iv) அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும்


எட்டுக்கோல் நீளமும் ஒருகோல்

உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர். v) தூண்களின்


நிழலானது, அவையிலும் நாடக அரங்கிலும் விழாதபடி நல்ல அழகான நிலை
விளக்குகளை நிறுத்தினர்.

vi) ஒருமுகத்திரை, பொருமுகத்திரை, கந்துவரல்திரை மூன்றையும் சிறப்புடன்


அமைத்தனர்.

vii) ஓவிய வேலைப்பாடுமிக்க மேல்விதானத்தையும் அமைத்து, சிறந்த


முத்துமாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.

2.ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலைகளைக்


கற்பனையாகப் படைக்க,
அச்சம்
* சனி, ஞாயிறு இரண்டுநாள் விடுமுறையில் ஆசிரியர் கொடுத்திருந்த
வேலைகளை முடிக்காமல், திங்கள்கிழமை காலையில் எழுந்ததும்
நினைவுக்கு வந்து, அன்று விடுப்பு எடுத்துப் பணிகளை முடித்துவிட்டு,
மறுநாள் பள்ளி செல்லலாம் என நினைத்துத் தன் பெற்றோரிடம் தனக்கு உடல்
நலமில்லை என்று பொய் கூறுவது, அச்சத்திற்கு நல்ல சான்றாக இருக்கும்.
வியப்பு
* தன் பிறந்த நாளன்று பெற்றோரிடம் ஆசிபெற நிற்கும்போது, தந்தை “இந்தா
உனக்குப் பிறந்தநாள் பரிசாக மிதிவண்டி” என்று கூறிச் சாவி ஒன்றைக்
கொடுக்கும்போது, பையனின் முகத்தில் தோன்றும் மலர்ச்சியை மருட்கை
(வியப்பு) எனக் கூறலாம்.

3.திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.


திரைப்படத்தின் காட்சியின் ஆற்றல் :
● திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைவதே கதை நகர்வுக்கு
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
66
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

உதவும்.
காட்சி மாற்றம் :
● திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன்
மூலம் கதை சொல்வர்.
சான்று
● முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப்
பயணச் சீட்டைக் கொடுப்பாள். அடுத்த காட்சியில் கதாநாயகி
தொடர்வண்டியில் இருப்பாள்.

● எண் 7. வரையா
ீ தெரு என்று முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும்
போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.
காட்சி மறைவு:
● காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக
மங்கலாக்கிப் பின் இருளைக் காட்டுவது 'காட்சி மறைவு' எனப்படும்.
காட்சி உதயம் :
● ஒரு காட்சி மறைந்து அடுத்த காட்சி தொடங்கும் போது இருட்டாக
இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாகிப் பின் முழுக்காட்சியும்
வெளிப்படுவது 'காட்சி உதயம்' எனப்படும்.

கலவை (அ) கூட்டு:


● ஒரு காட்சி மறையும் போதே அடுத்த காட்சி தெரியத் தொடங்குவது
கலவை அல்லது கூட்டு எனப்படும்.
அழிப்பு:
● பழைய காட்சியை அழித்துக்கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை
அழிப்பு என்பர்.

இப்படி பல உத்திகள் இயக்குநராலும் தொகுப்பாளராலும் காட்சி நகர்வுக்கெனப்


பயன்படுத்தப்படுகின்றன.

4.கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும்


தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன்
கவிதையைக் கொண்டு நிறுவுக.
(I) கண்முன் நிகழ்தல்:பிறப்பும் இறப்பும் நிகழ்வது
மனதில் நிகழ்வது

நீண்ட நாள் வாழப்போகும் ஆசையில் இவ்வுலகிற்கு வந்த நாம், மாயை


என்னும் வலையில் சிக்கிக் கர்மவினை காரணமாகச் சில காலங்களிலேயே
வாழாமல் இறந்து விடுகிறோம்.

இவ்விரண்டையும் தொடர்புபடுத்தி எழுந்த நகுலனின் கவிதையே


இருப்பதற்கென்று தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்'

(ii) கண்முன் நிகழ்தல்

→ கடலின் மேற்பரப்பில் அலைகள் பேரொலி எழுப்பினாலும் அதன்


அடிப்பரப்பானது ஆரவாரம் செய்யாமல் மிகவும் அமைதியாக இருக்கும்.

மனதில் நிகழ்வது

நம் புறத்தில் நடைபெறும் எந்த அசைவுகளும் நம் அகத்தினை அசைக்க


இயலாது.

இவ்விரண்டையும் தொடர்புபடுத்தி எழுந்த நகுலனின் கவிதையே


'ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மெளனம் ; மகா மௌனம்'
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
67
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

(iii) கண்முன் நிகழ்தல் கடல் இருக்கின்ற வரைக்கும் அலைகள் ஒலியெழுப்பிக்


கொண்டே தான் இருக்கும்.

மனதில் நிகழ்வது உடல் இருக்கின்ற வரைக்கும் எண்ணங்கள் ஆரவாரித்துக்


கொண்டு தான் இருக்கும்.

இவ்விரண்டையும் தொடர்புபடுத்தி.

'அலைகளைச் சொல்லி பிரயோஜனமில்லை கடல் இருக்கிற வரை'

என்று எழுந்தவையே நகுலனின் கவிதைகள்

நெடுவினா

1.திரைப்படத்துறை என்பது ஆயிரம்பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது


கலைகளின் சங்கமம? உங்கள் பாவையைக் கட்டுரையாக்குக.

முன்னுரை:

திரைப்படம் என்பது தனி ஒருவன் முயற்சியால் உண்டாவதல்ல பல


ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பால் உண்டாவது, திரைப்படத்துறை
என்பது வட்சக்கணக்கான மக்களை வாழ் வைத்துக்கொண்டிருப்பது அதன்
சிறப்பு என்ன என்பதை இக்கட்டுரையின் மூலம் என் பார்வையைப் பதிவு
செய்கிறேன்.

திரைப்படத்துறை ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழில்

ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்


வேண்டும். மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படம் உருவாக்கம்
தொடர்பான பணிகள் செய்யப் பல்லாயிரக்கணாக்கான பணியாளர் வேண்டும்.
இது பல படங்கள் பல மொழிகளில், பல நாடுகளில் பணிக்கு மொழிவேறுபாடு
கிடையாது. எந்த மொழிக்காரரும் எந்த மொழியிலும் பணியாற்றலாம்.

இப்படிப் பலப்பல தேவைகளைக் கொண்ட திரைப்படத்துறை ஆயிரக்


கணக்கான குடும்பங்களை. லட்சக்கணக்கான குடும்பங்களை,
லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றிக் கொள்ளும் தொழிலாக உள்ளது.
'கிளாப் அடிக்கும் மனிதன் முதல் 'போஸ்டர்' ஒட்டும் மனிதன் வரைப் பல
இனங்களில், பல தரத்தில், பல வகையில் செயல்படுவது திரைப்படத்துறை.

கலைகளின் சங்கமம்!

எத்தனை எத்தளை திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சிலப் படங்களே


பேசப்படுபவையாக உள்ளன. சில படங்கள் காலத்தை வென்றும் வாழ்கின்றன.
அமரகாவியமாக உள்ளன. ஏன்? என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை
நமக்கு விளங்கும். அதுதான் 'கலைகளின் சங்கமம்' பூக்கின்ற மலர்கள்
எல்லாம் மணப்பதில்லை. படைக்கப்படுகின்ற படங்கள் எல்லாம் பாராட்டப்
படுவதில்லை. ஆயிரம் படங்கள் வந்தாலும் ஐந்து அல்லது ஆறு படங்கள்தான்
கலைநயம் மிக்கதாக, கலைகளின் சங்கமமாகக் காணப்படுகிறது. ஆஸ்கர்
விருதுகளை அள்ளிக் குவிக்கிறது.

எந்த ஒரு பெற்றோரும் தன் பிள்ளையை அனைவரும் புகழ்வதையே


விரும்புவர். அதுபோல் எந்த ஒரு இயக்குநரும் தம் படங்களைப் பார்த்தவர்கள்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
68
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

பாராட்ட வேண்டும் என்று விரும்புவர். சாதாரணமான படங்கள் ணாமல்


போய்விடும். ஆனால் கலைகளின் சங்கமமாக இருந்தால் பாராட்டைப்
பெற்றே தீரும். பல காலம் வாழும்.

முடிவுரை:

திரைப்படத்துறை ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழில்தான். அதில்


சந்தேகம் ஏதுமில்லை. அதனை நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
உள்ளன, உண்மைதான். ஆனால் திரைப்படம் வாழவேண்டுமானால் அது
கலைகளின் சங்கமமாக இருக்க வேண்டும். திரைப்படத்துறை கலைகளின்
சங்கமமாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணப்பதிவு.

2. மகா நடிகரை கண்ட பாலச்சந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன்


எழுதுக.
● ஊழித் தாண்டவமாடும் ருத்ரன், கவச குண்டலம் கொடுத்த கர்ணன்,
காளமேகத்தில் கவிதை ததும்பச் செய்த கவிகுல குரு காளிதாசன்.
அமிழ்தத் தமிழ்மொழியின் உன்னதக் கவியான பாரதி, தாய்த் தமிழ்
மண்ணின் வரீ தீரச் சந்ததியான வரபாண்டிய
ீ கட்டபொம்மன், சோழ
குலோத்துங்கச் சூரியனான ராஜராஜசோழன் என சிவாஜிகணேசனின்
கதாபாத்திரங்கள் என் மன அடுக்குகளில் மின்னிமறைந்தனர்.
● சிவாஜிகணேசனின் புருவங்களையும் கண்களையும் முக
அபிநயங்களையும் உதடுகளையும் கைவிரல்களையும் தாள, லய
அபிநயங்களையும், சலனங்களையும் கண்டவர் வியப்பது கண் கூடு.

● அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று


நடித்தார். அதைப் பார்த்த பெரியார், வி.சி. கணேசனுக்கு
'சிவாஜிகணேசன்' என்று பெயரிட்டார். அந்தப் பெயரே அவருக்கு
நிலைத்தும்விட்டது.
● அவர், 'பராசக்தி' என்ற திரைப்படத்தில் நடிக்க, முதன்முதலில் ஏ.வி.எம்
ஸ்டுடியோவுக்கு வருகிறார். பராசக்தியின் வெற்றி அவரைத்
திரைப்படத்துறையின் உச்சாணி கொம்பில் மலரச் செய்து அழகு
பார்த்தது.
● வரபாண்டிய
ீ கட்டபொம்மன் என்ற திரைப்படம்தான் சிவாஜிகணேசனை
உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது

● நீ ஏர் பிடித்தாயா? களை வெட்டினாயா? கஞ்சிக்கலயம் சுமந்தாயா ?


அங்கு கொஞ்சி விளையாடும் எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள்
அரைத்துக் கொடுத்தாயா? நீ என்ன எனக்கு மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே'.
● தென்னிந்திய நடிப்புச் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் நாட்டியப்
பெருமையின் புகழ்க் கொடி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன்

3.உங்கள் ஊர்ப்பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த


அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக. 2022

பண்ணிசைக் கலைஞர்:

வாழுமிடம்:

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் என்ற ஊரில்


வாழும் சிவஞானம் என்பவர் ஒரு மிகச் சிறந்த பண்ணிசைக் கலைஞர்
ஆவார். இவருக்குச் சிறுவயது முதலே சிவபெருமான் மீ தும் பண்ணிசை
மீ தும் தீராத பற்று உண்டு.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
69
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

பண்ணிசைப் பயிற்சி:

இவர் அங்குள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் முறைப்படி ஐந்து


ஆண்டுகள் பண்ணிசையைக் கற்றுக் கொண்டார். பிறகு அங்குள்ள
வழியடிமை கொண்ட நாயகி சமேத சிவந்தியப்பர் ஆலயத்திலும்
உலகம்மை சமேத பாபநாசர் ஆலயத்திலும் பண்ணிசைக் கலைஞராக
உள்ளார்.

ஓதுவார் மூர்த்திகள்:

பண்ணிசைக் கலைஞர்களுக்கு ஒதுவார் மூர்த்திகள் என்ற


பெயருமுண்டு. சிவாலயங்களில் நாள்தோறும் நடைபெறும்
தீபாராதனையின் போது கோயில் அர்ச்சகரின் அர்ச்சனை முடிந்ததும்
தேவார, திருவாசகப்

பண்களை ஓதுவார் மூர்த்திகள் பாடுவர்.

தமிழார்வம் மிக்கவர்

தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை பண்ணிசையோடு


மட்டுமல்லாமல் தமிழில் மிகுந்த ஆர்வமுடையவர். அங்குள்ள
சிவஞான சுவாமிகள் வாழ்ந்த மடத்தில் உள்ள தமிழ் இலக்கண
இலக்கிய நூல்களைப் படித்து, தமிழ் பற்றிய தேடலை வளர்த்து
வருகிறார்.

வித்யாசாலை:

பண்ணிசையைத் தம் ஊரில் மட்டுமல்ல திருநெல்வேலி, தஞ்சாவூர்


போன்ற பழைமைமிக்க சிவாலயங்களுக்கும் சென்று கச்சேரி
நிகழ்த்துவார். மார்கழி மாதம் நடைபெறும் திருவெம்பாவை
பசனைகளையும் நிகழ்த்துவார். அங்குள்ள திருவாவடுதுறை ஆதின
மடத்தில் இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள 'வித்யாசாலை'
தொடங்கி சிறுவர்களுக்குத் தம் கலையைக் கற்றுக் கொடுத்தும்
வருகிறார்.

தமிழாக்கம் தருக.(பக்கம் :154)

இந்தியாவின் 'கலாச்சார தலைநகரம்' என்று பிரபலமான தமிழ்நாடு, அதன்


அற்புதமான கோயில்கள் மற்றும் பிற கட்டிடக்கலை கற்களுக்கு மிகவும்
பிரபலமானது. பழங்கால தஞ்சாவூரில் சோழ வம்சத்தின் காலத்தில் செழித்து
வளர்ந்த தஞ்சை ஓவியங்களின் நன்கு அறியப்பட்ட மற்றும் சிறந்த தஞ்சை
ஓவியங்கள் காரணமாக மாநிலம் முதன்மையாக உயர்ந்தது. இந்த பாரம்பரிய
கலை வடிவத்தில், ஓவியங்கள் இப்பகுதியின் புனித தெய்வங்களின்
அழகுபடுத்தப்பட்ட வடிவத்தை வெளிப்படுத்துகின்றன. ஓவியங்களில் உள்ள
தெய்வங்கள் கண்ணாடி துண்டுகள், முத்துக்கள், அரை விலையுயர்ந்த கற்கள்
மற்றும் தங்கம் மற்றும் பிற துடிப்பான வண்ணங்களால்
அலங்கரிக்கப்பட்டுள்ளன. நவன ீ காலத்தில், தஞ்சை ஓவியங்கள் மனித
உருவங்கள், விலங்குகள், மலர் உருவங்கள் மற்றும் பறவைகளை
பார்க்கின்றன.

கீ ழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத்


தொடர்களுக்கு ஏற்றவாறு
மாற்றி எழுதுக.(பக்கம் 154)
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
70
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

எ.கா. கபிலன் திறமையானவர் என்று (குமரன்) தெரியும்.


கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.

1. நேற்று முதல் (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


● நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

2.உங்களுக்கு.(யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.


● உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்.

3. முருகன் (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.


● முருகன் வேகமாகச் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

4. நம்முடைய...தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.


● நம்முடைய தேவையின் அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.

பொருள் வேறுபாடு அறிந்து தொடரமைக்க :(பக்கம் 154))


எ.கா: களம், கலம்

● போர்க்களத்தில் புண்பட்ட வரர்களுக்குக்


ீ கலத்தில் நீர் தரப்பட்டது.

வலம், வளம்

● ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன.

1. புல் -புள்
● புல் வெளியில் புள் அமர்ந்தது

2. உழை - உளை
● கடுமையாக உழைத்த உழவனின் மனம் விலையைக் கண்டு
உளைந்தது.

3. கான் - காண்
● அடர்ந்த கான் சென்று மலைகள் அருவிகளின் அழகை காண்

4. ஊண் - ஊன்

● நாம் அன்பால் வளர்த்த ஆட்டைக் கொன்று அதன் ஊனை ஊணாகக்


கொள்வது உயர்வுதானா?

5. தின்மை - திண்மை

● எவர்க்கும் எக்காலத்திலும் தின்மை செய்யாது வாழ்வதே வாழ்விற்குத்


திண்மை சேர்க்கும்

இலக்கிய நயம் பாராட்டுக.

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்


அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
71
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?

. பாரதிதாசன்

மையக்கருத்து :

வாழைக்குக் குருத்து அழகு !


பாட்டுக்குக் கருத்து அழகு 1"

அந்திவான இருள் காரணமாக கரிந்து போன உலகைக் கண்டேன்; வானத்தைக்


கண்டேன்; திசைகளையும் கண்டேன். என்ன ஆச்சரியம் ! சிறிது நேரத்தில்
நிலவு சிரித்தது. இருளும் சிரித்தது. உலகத்து அழகையெல்லாம் சிந்தாமல்
சிதறாமல் சேகரித்து ஒளிகூட்டி இந்தா என்று இயற்கை கொடுத்தது நிலவே
உன்னைத்தானா? சொல்

மோனைத் தொடை:

பாடல் அடிகளிலோ அல்லது சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றுபோல்


வரத்தொடுப்பது மோனைத் தொடை எனப்படும்.

எ.கா :
அந்தி. அவ்வாறே

பிந்தி. பெருஞ்சிரிப்பு

எதுகைத் தொடை
பாடல் அடிகளிலோ அல்லது சீர்களிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
எதுகைத் தொடை எனப்படும்.

எ.கா :

அந்தி. சிந்தா

பிந்தி. இந்தா

முரண் தொடை -

ஒரு செய்யுளில் சொற்களோ. பொருளோ முரண் பட தொடுப்பது முரண்


தொடை ஆகும்.

காரிருள் × ஒளி

அணி நயம்:

ஒளி முத்தோ

இதில் ஒளியாகிய முத்து என்று உவமையையும் உவமேயத்தையும்


ஒன்றெனக் கூறுவதால் உருவர் அணி' இப்பாடலில் பயின்று வந்துள்ளது.

சந்த நயம் :-
இப்பாடல் அடிதோறும் எட்டு சர்க்ளையும் பல ஈரசைச் சீர்களையும்
பெற்றுள்ளதால் 'எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' பயின்று
வந்துள்ளது.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
72
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

சுவை நயம்:

எ.கா:

'பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்' * என்று நிலவின் அழகையும்


ஒளியையும் குளிர்ச்சியையும் பற்றி நயமாகக் கூறியுள்ளதால் இப்பாடலில்
'உவகைச்சுவை" நிரம்பிக் காணப்படுகிறது.

தலைப்பு

'காரிருளில் தோன்றிய ஒளி முத்து'

கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க.

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மை ஒன்று என் வட்டில்



நெடுங்காலமாக இருந்தது. மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை
வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன்மீ து பூசினேன்.
ஆனாலும் அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை. இரவில் அதன் மெல்லிய
விம்மல் ஓசை கேட்கும்…
நான் மறுநாள் மரப்பாச்சி பொம்மையை வேறுவகையில் அழகுபடுத்தி, வேறு
வாசமுள்ள எண்ணெய் பூசி வைத்தேன். இரவு வந்தது. விசும்பல் ஒலி
நிற்கவில்லை. மறுநாள் சிகைக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பாட்டி, தேங்காய்
எண்ணெய் தடவி, மணப்பொடிப் புகைபோட்டு, பச்சைநிறப் பட்டுடுத்திப் படுக்க
வைத்தேன். இரவு வந்தும் விசும்பல் ஒலி நிற்கவில்லை. மறுநாள் பொழுது
விடிந்தது. சோப்புப் போட்டுக் கழுவி, சந்தன எண்ணெய் தடவி, நீலப்பட்டுடை
அணிவித்து அழகு பார்த்தேன். இரவு வந்தது; விசும்பல் ஒலி
கேட்டது.இப்படியே விடுவது நல்லது இல்லை; என்னவென்று கேட்டு, அதன்
குறைநீக்க வேண்டுமெனக் கருதினேன். பொம்மையிடம் கேட்டேன். அது
சொன்ன பதில், என்னைத் திகைப்படையச் செய்தது! “நான் இதை எல்லாம்
கேட்டேனா? என்னை அழகிய பொம்மையாக உருவாக்கியபோது நான்
மகிழ்ந்தேன். உன் அலங்கார அமைப்புகள் என்னை வேதனைப் படுத்துகின்றன.
நான் நானாகவே இருக்கத் தயவுசெய்து எனக்கு அனுமதி கொடு. என் பண்புகள்
எனக்கே உரியவை. நீ செய்யும் கோலத்தால், என் இயல்பு கெடுகிறது.
அவையெல்லாம் வேண்டாம். நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். அதை
நீ விரும்பாவிட்டால், என்னைத் தூக்கி எறிந்துவிடு" என்றது. என்னிடம்
திகைப்பே மிஞ்சியது

கீ ழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.(பக்கம் 155)

எ.கா: வானம், பற, நிலவு, தொடு


● வானத்தில் பறப்போம் பறந்து நிலவைத் தொடுவோம்.

1. சருகு, விழு, மண், அலை


● சருகு விழுந்தது. மண் அதை அலைக்கழித்தது.

2. விண்மீ ன், ஒளிர், எரி, விழு


● விண்மீ ன் ஒளிர்ந்தது. அதனால் இருள் எரிந்து விழுந்தது.

3. குதிரை, வேகம், ஓடு, தாவு


● குதிரை வேகமாக ஓடும். அதன்மேல் வேகமாகத் தாவு.

4. குழந்தை, நட, தளிர்நடை, விழு


● குழந்தை விழுந்தது.எழுந்து தளிர்நடை நடந்தது.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
73
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

5. திரை, காண், கைதட்டல், மக்கள்


● திரையில் காண்கின்ற காட்சிகளைக் கண்டு மக்கள் கைத்தட்டல் செய்து
மகிழ்ந்தனர்.

திருக்குறள்
கற்பவை கற்றபின்

1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.

அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்


திண்ணியர் ஆகப் பெறின்.

ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு


. அச்சாணி அன்னார் உடைத்து.

இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்


. மற்றைய எல்லாம் பிற.

விடை : ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு


. அச்சாணி அன்னார் உடைத்து.

2. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.

மனமோ மாட்டுவண்டி
பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு
இப்படி இருந்தால் எப்படி நகரும்
வாழ்க்கைச் சக்கரம்
ஊர் போகும் பாதையில்
சக்கரம் உருண்டால்
அதுவே அறிவு; அதுவே தெளிவு.

அ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு


. அவ்வது உறைவது அறிவு.

ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ


. நன்றின்பால் உய்ப்பது அறிவு.
இ) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
. உள்ளழிக்கல் ஆகா அரண்.

விடை: அ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு


. அவ்வது உறைவது அறிவு.

3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளை


கண்டறிக.

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்


மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட !
சிறந்தக்கால் சீரியார் நட்பு.

அ) பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும்


. கெழுதகைமை கேடு தரும்.

ஆ) எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
74
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

. அதிர வருவதோர் நோய்.

இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை ; தீயினத்தின்


. அல்லல் படுப்பதூஉம் இல்.

விடை : இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை ; தீயினத்தின்


. அல்லல் படுப்பதூஉம் இல்.

4. அல்லல் படுப்பதூம் இல் - எவரோடு பழகினால்?

அ) வாள் போல் பகைவர். ஆ) மெய்ப்பொருள் காண்பவர்


இ) எண்ணியாங்கு எய்துபவர். ஈ) தீயினத்தார்

விடை : ஈ) தீயினத்தார்

5. திண்ணியர் என்பதன் பொருள்

அ) அறிவுடையவர். ஆ) மன உறுதியுடையவர்.
இ) தீக்காய்வார். ஈ) அறிவினார்

விடை : ஆ) மன உறுதியுடையவர்

6. ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர். ஆ) சொல்லியபடி செய்பவர். இ) தூதுவர். ஈ) உறவினர்

விடை : இ) தூதுவர்
7. பொருத்துக.

அ) பாம்போடு உடன் உறைந்தற்று. -1) தீக்காய்வார்

ஆ) செத்தார். -2) சீர் அழிக்கும் சூது

இ) வறுமை தருவது. -3) கள் உண்பவர்

ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் -4) உடம்பாடு இலாதவர்

அ ) 1, 2, 3, 4. ஆ )2,3,4,1. இ ) 4, 1, 3, 2. ஈ ) 4, 3, 2, 1

விடை :ஈ ) 4, 3, 2, 1

8. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்

அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்.


ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்.
ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்.

விடை : அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்.

9. எளியது. அரியது என்பன

அ) தீயினத்தின் துணை - நல்லினத்தின் துணை.


ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது.
இ) சிறுமை பல செய்வது - பகைவர் தொடர்பு.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
75
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

ஈ) மெய்ப்பொருள் காண்பது - உருவுகண்டு எள்ளாதது.

விடை : ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது.

குறுவினா
1. மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது
ஏன்?
● மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து
விலக்கி நல்லவழியில் செலுத்துவதே அறிவாகும். எனவே மனத்தை
அதன் போக்கில் செல்ல விடக்கூடாது என்று வள்ளுவம் கூறுகிறது.

2. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு


. அச்சாணி அன்னார் உடைத்து. -இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு
பொருத்துக.

உவமை :
● பெரிய தேருக்குச் சிறு அச்சாணிதான் இன்றியமையாதது.
பொருள்
● ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது.

பொருத்தம்

● மிகப்பெரிய தேரினை மிகச்சிறிய அச்சாணி செலுத்துவது போல


உருவில் சிறியவரும் மிகப்பெரிய செயலைச் செய்வதனால், ஒருவரின்
தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது.

3 மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது?


● நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும். மற்றவை எல்லாம்
பயன்படா என்று திருக்குறள் கூறுகின்றது.

4.நஞ்சண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?


● நஞ்சுண்பவர் என வள்ளுவர் இடித்துரைப்பது கள்ளுண்பவரையே
ஆகும்.

5. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?


● அரசரோடு நடபுப் பாராட்டினாலும் தகுதி அல்லாதவற்றைச் செய்தால்
அந்த உரிமை கேட்டினைத் தரும்.

6. பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?


● அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால்
அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவேயாகும்.

7. அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?


அஞ்சத்தகுந்தன :
● உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு
அஞ்சவேண்டும்.
அஞ்சவேண்டாதது
● வாளைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு
அஞ்ச வேண்டியது இல்லை.

8. வறுமையும் சிறுமையும் தருவது எது?

● வறுமையும் சிறுமையும் தருவது சூது.


● ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
76
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல வறுமை தருவது வேறொன்றும்


இல்லை.

9. நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.

நான் படித்ததில் பிடித்த குறள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்பதாகும்.

கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய் - தீர

விசாரிப்பதே மெய்.

என்பது வாழ்க்கை உண்மை. அதை விளக்கும் குறள் இதுவாகும். எனவே


எனக்கு இக்குறள் பிடித்தது.

10, உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக்


குறிப்பிடுகிறார்?
உலகத்தில் சிறந்த துணை :
● நல்லினமே சிறந்த துணையாகும்.
உலகத்தில் கொடுமையான பகை :
● தீய இனமே கொடுமையான பகையாகும்.

11. இலக்கணக் குறிப்புத் தருக.

● ஒரீஇ- சொல்லிசையளபெடை

● படுப்பதூஉம் -இன்னிசை அளபெடை

● சொல்லுதல் - தொழிற்பெயர்

12. கீ ழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று - பொருள் கூறுக.

● நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

13. பெருந்தேர் -புணர்ச்சி விதி கூறுக.

பெருந்தேர்=பெருமை + தேர்
விதி: ஈறுபோதல் -பெரு + தேர்
விதி இனமிகல் பெரு+ந்+ தேர்= பெருந்தேர்

சிறுவினா.

1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க


. இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.

-இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.

குறட்பாவில் பயின்றுவரும் அணி தொழில் உவமை அணி ஆகும்.


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
77
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

அணி இலக்கணம்

● உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும்


'போல' எனப் பொருள் தரும் உ உருபு வெளிப்படையாகவும் வர தொழில்
சார்ந்த உவமையாக இருந்தால் தொழில் உவமை அணி எனப்படு

அணிப்பொருத்தம் :

● அரசனைச் சார்ந்து இருப்பவர், குளிர் காய்பவர்களைப் போலத்


தீயிலிருந்து அகலாது, அணுகாது இருத்தல் வேண்டும். இதில்
அகலுதல், அணுகுதல் போன்ற தொழில்கள்
ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே இது தொழில் உவமை அணி
ஆயிற்று.

2. அறிவின் மேன்மை பற்றி திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?

● "அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைவரால்


அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

● மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து


விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

● எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின்


மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

● உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில்


தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.

3.எடுத்துக்காட்டு உவமையணியை விளக்கிக் கீ ழ்க்காணும் குறளுக்கு


இவ்வணியைப் பொருத்தி எழுதுக.
துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
அணி விளக்கம் :

●உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் வர


'அதுபோல' எனப்பொருள் தரும் உவம உருபு மறைந்து வந்தால் அது
எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
பொருள் :
● துஞ்சினார் செத்தாரின் உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர்
அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே
பொருத்தம் :
● உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர் என்பது உவமை.
கள் உண்பவரும் நஞ்சு உண்பவர் ஆவர் என்பது உவமேயம். 'அதுபோல'
என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே இக்குறள்
எடுத்துக்காட்டு உவமையணியைச் சார்ந்தது ஆகும்.

4.மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.

● நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்; மற்றவை எல்லாம்


பயன்படாது.
● இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல்
எவர்க்கும் எளியது ஆனா சொல்லியபடி செய்து முடித்தல் அரியது.
● எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
78
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.


● ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது. பெரிய தேர்க்குச் சிறு
அச்சாணிதான் இன்றியமையாதது.

5. சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன


பற்றி நீவிர் அறிவனவற்க எழுதுக.

● மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; அவர்களுக்குப் பிறர்


கொடுக்கிற மதிப்பு மதிப்பில்லாமையும் அவர் சேர்ந்த இனத்தால்
ஏற்படும்.

● ஏனென்றால் மனப்பண்பை மற்றவர்கள் அறிய முடியாது. ஆனால்


சேர்ந்துள்ள இனப்பள அனைவருக்கும் தெரியும். ஆகவே அறிவிலும்
குணத்திலும் ஒழுக்கத்திலும் இழிவான சிற்றினத்தாருடன்
சேரக்கூடாது.

நல்லினத்தின் துணை :

● நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் இல்லை ; தீய


இனத்தைவிடத் துன்பத்தைத் தரு பகையும் இல்லை.

● ஆகவே, நல் இனத்தோடு சேருவதில் எவ்வளவு கவனம் செலுத்த


வேண்டுமோ அவ்வளவு கவனத்தோ தீமைகளைத் தரும் தீய
இனத்தோடு சேராமல் இருக்க வேண்டும்.

6. வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைக்குச் சான்றாக வள்ளுவர்


கூறுகிறார்?

வாள் :
● வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு
அஞ்ச வேண்டியது இல்லை. ஆனா உறவுடையவர்போல் நடித்து
உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

பாம்பு :
● அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடிவாழும் வாழ்க்கை, ஒரு
குடிசையில் பாம்புடன் வாழ்வ போன்றது.
7. சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விவரிக்க.
வறுமை தருவது சூது :

● ஒருவருக்குத் துன்பம்பலவற்றையும் உண்டாக்கி அவருடைய


புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும்
இல்லை.
செல்வமும் பண்பும் கெடும் :
● சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால் அது அவருடைய
பரம்பரைச் செல்வத்தையும், இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

கள் - நஞ்சுண்பவர்
● உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்
உண்பவரும் நஞ்சு உண்பவர் qஆவர்.

● கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது,


நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

நெடுவினா
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
79
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

1. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவம்


வழி நின்று நிறுவுக.
அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும்.
முன்னுரை
● அறிவுடைமை என்பது ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும்
சேகரித்துக் கொண்ட அறிவை ஆராய்ந்து தன் வாழ்க்கைக்கு
பயன்படுத்திக் கொள்வதாகும்
பாதுகாப்பு அரண்
● "அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைவரால்
அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
நல்வழியில் செலுத்துதல்
● மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து
விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
மெய்ப்பொருள் காண்பது
● எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின்
மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
● உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில்
தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.
நடுங்கும்படி வரும் துன்பம் இல்லை
● பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை
கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய
துன்பம் ஒன்றும் இல்லை.
முடிவுரை
● அறிவுடையவர் ஒரு பொருளும் இல்லாவிட்டாலும் எல்லாம்
உடையவராகவே மதிக்கப்படுவர்.
● அறிவில்லாதவர் எல்லாம் உடையவராக இருந்தாலும் ஒன்றும்
இல்லாதவராகவே கருதப்படுவர் ஆகவே நாம் அறிவுடையவராக
திகழ்வது இன்றியமையாததாகும்.

2.திருக்குறள் ஓர் வாழ்வியல் இலக்கியம் நிறுவுக.
திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் :.
● திருக்குறள் ஓர் இலக்கியம் மட்டுமன்று, அது மனிதனை
மாண்புடையவனாக்கும் மறைநூல்.

● மரபுகளை மாற்றுதல் கள்ளுண்டு களித்தலையும், புலால்


உண்ணுதலையும் சமூகத்தின் பண்புகளாய் ஏற்று வாழ்ந்த
காலகட்டத்திற்குப் பிறகு திருக்குறள் தோன்றுகிறது. 'உண்ணற்க
கள்ளை' என்றும், 'ஊன் உண்பவன் நரகத்தில் துயர் அடைவான்' என்றும்
சுட்டிக் காட்டுகிறது.

அறநெறிப் பட்ட வாழ்க்கை மனத்துக்கண் மாசின்றி வாழ்தலே உயரிய


வாழ்க்கை என நீதி உரைக்கிறது.

சமூக ஒற்றுமை

'சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும்


கொடுமைகளையும் களைந்திட முயன்றவர் வள்ளுவர்". உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்று உலகினில் எங்கும் இல்லை என்று தீர்க்கமாகச் சொன்ன
ஞானி வள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்" என்பது வள்ளுவத்தின் வாக்கு. வையம்


எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்காக அறக்கருத்துக்களை அழகிய
முறையில் விதித்தும், வேண்டியும், தடுத்தும் காட்டிய விதம் சிறப்பானது.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
80
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

வள்ளுவத்தை வாசிப்போம்; வையகத்தை நேசிப்போம்.

கூடுதல் வினாக்கள்.

1.சொற்பொருள் பின்வரும் நிலையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

இலக்கணம் :

● செய்யுளில் ஒரு சொல் மீ ண்டும் மீ ண்டும் வந்து ஒரே பொருளைத்


தருமாயின் அது சொற்பொருள் ஒள்வரும் நிலையணி எனப்படும்.
சான்று

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்
● எப்பொருளை யார்யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின்
மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

விளக்கம்

● இக்குறட்பாவில் 'பொருள்' என்னும் சொல் மீ ளாடும் மீ ண்டும் வந்து


'செய்தி' என்னும் ஒரே பொருளைத் தருவதால் இது சொற்பொருள்
பின்வரும் நிலையணி ஆயிற்று.

2 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்


. திண்ணியர் ஆகப் பெறின்.
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

இக்குறட்பாவில் சொற்பொருள் பின்வரும் நிலையணி அமைந்துள்ளது.

இலக்கணம்

● செய்யுளில் ஒரு சொல் மீ ண்டும் மீ ண்டும் வந்து ஒரே பொருளைத்


தருமாயின் அது சொற்பொருள் பின்வரும் நிலையணி எனப்படும்.

கருத்து:

● எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர்


எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

விளக்கம் :

● மேற்கண்ட குறளில் 'எண்ணிய' என்னும் சொல் பல்வேறு இடங்களில்


வந்து 'நினைத்தல்' என்ற ஒரே பொருளைத் தருவதால் இது
சொற்பொருள் பின்வரு நிலையணி ஆயிற்று.

3.உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்


பாம்போடு உடன்உறைந் தற்று. இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை
விளக்குக.

இக்குறட்பாவில் பயின்று வரும் அணி உவமையணி ஆகும்.

அணி இலக்கணம்:
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
81
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● உவமை ஒரு தொடராகவும், உவமேயம் மற்றொரு தொடராகவும்


அமைந்து, உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.
கருத்து :
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை ஒரு
குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது.
● உவமை : ஒரு குடிசையில் பாம்புடன் வாழும் வாழ்க்கை.
● உவமேயம்: அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழ்வது.
● உவம உருபு : அற்று.
விளக்கம்
● மேற்கண்ட குறளில் உவமை பொருள் இரண்டையும் கூறி, அவற்றை
இணைப்பதற்கான உவம உருபு அற்று வெளிப்படையாக வந்துள்ளதால்
இது உவமை அணி ஆயிற்று

இயல். 7

உரைநடை : இலக்கியத்தில் மேலாண்மை

செய்யுள் : அதிசய மலர் தேயிலைத் தோட்டப் பாட்டு புறநானூறு

துணைப்பாடம் : சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

இலக்கணம் :தொன்மம்

இலக்கணத் தேர்ச்சிகொள்.

1.பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க.

அ) கர்ணன் தோற்றான் போ.

ஆ) வயதில் சிறியவள். ஆனாலும் தலைவி !

இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு.

(ஈ) இந்தா போறான் தருமன்

விடை : ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி !

2. தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க. 2

அ) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்.

ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.

இ) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்

ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

விடை : ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

3. 'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப்


பயன்படுத்தியவர்

அ) கு. அழகிரிசாமி. ஆ) புதுமைப்பித்தன்


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
82
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இ) ஜெயமோகன். ஈ) எஸ். இராமகிருஷ்ணன்

விடை: ஆ) புதுமைப்பித்தன்

4. பண்புக் குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக.


i) அறம். . - 1) கர்ணன்
ii) வலிமை. . -2) மனுநீதிச்சோழன்
iii) நீதி. -3) பீமன்
iv) வள்ளல். -4) தருமன்

அ ) 3, 2, 1, 4. ஆ ) 4, 3, 2, 1. இ ) 2, 4, 3, 1. ஈ )4,3,1,2

விடை :ஆ ) 4, 3, 2, 1

5.தொன்மம் விளக்கம் தருக.

தொன்மம்:

● தொன்மம் என்றால் பழங்கதை, புராணம் என்று பொருள்.


● தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ஒன்று தொன்மம்.
● காலம் காலமாக உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட கருத்து வடிவங்களும்
தொன்மங்களே.

6. பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இருதொடர்களை எழுதுக.


● கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான். "
● இந்தா போறான் சகுனி.

7. உன்மனம் ஒரு பாற்கடல்


அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?

இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?

கவிதையில் வெளிப்படும் தொன்மம் :

பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்கள்.

நம்மை அளப்போம்.

பலவுள் தெரிக

1. பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்' விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்

அ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்


ஆ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
இ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
ஈ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்

விடை : ஆ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்

2 அதிசய மலரின் புன்னகை உணர்த்துவது


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
83
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

அ) நம்பிக்கை ஆ)பெருமிதம். இ)புகழ் ஈ)அச்சம்


விடை :நம்பிக்கை
3. முச்சந்தி இலக்கியம் என்பது
கூற்று 1 கதை வடிவிலான வடிவம் உடையது.
கூற்று 2:பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது.

அ) கூற்று 1 சரி. கூற்று 2 தவறு. ஆ) கூற்று 1, 2 சரி


இ) கூற்று 1, 2 தவறு. ஈ) கூற்று 1 தவறு. கூற்று 2 சரி

விடை : ஆ) கூற்று 1. 2. சரி

4. உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் இத்தொடரில் பெயரெச்சம்

அ) உண்டு. ஆ) பிறந்து. இ) வளர்ந்த. (ஈ) இடந்தனில்

விடை :இ) வளர்ந்த

5. 'யானை புக்க புலம் போல' - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்

அ) தனக்குப் பயன்படும். பிறருக்குப் பயன்படாது.

ஆ) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது.

இ) பிறருக்குப் பயன்படும். தனக்குப் பயன்படாது.

ஈ) தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்.

விடை :ஆ) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது

குறுவினா

1.பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.

● சரியான காலத்தில் விதைப்பது தான் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.


● 'பருவத்தே பயிர் செய்' என்பது அனுபவச் சொல்.

● ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும்


மனிதகுலத்துக்கும் பொருந்தும். பருவத்தே செய்ய வேண்டிய
செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது- கற்க வேண்டிய
பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்துதல் வேண்டும்

2.எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள


மனிதர்களின் உழைப்பைநாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பகுரும்போது
அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச்சிந்தித்து உங்கள் கருத்தை
எழுதுக. *
● நாம் பருகும் தேநீர் சுவையானது. இந்தச் சுவைக்குக் காரணமானவை
தேயிலை, சர்க்கரை, பால், தண்ண ீர் என எத்தனை பொருள்கள்!
● தேயிலை பறிப்போரைச் சிந்திக்கிறோமா? கரும்பிலிருந்து சர்க்கரை
தயாரிப்பதற்கு எத்தனைபேர் உழைத்துள்ளனர்? பால் எங்கிருந்து எப்படி
வருகிறது?
● இப்படி ஒரு தேநீரை நாம் சுவைப்பதற்கு, எத்தனை பேர்
உழைத்துள்ளனர். எண்ணிப்பார்த்தால் புரியும். நாம் அனுபவிக்கும்
ஒவ்வொரு பொருளின் பின்பும், எத்தனைபேர் உழைப்பு உள்ளது?
● அதில் நம் பங்கு என்ன எனச் சிந்தித்தால், உழைப்பின் உயர்வு
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
84
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

புலப்படும்.

3. அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?

● அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி


திரட்டினால் நாடு, கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச்
செழிப்படையும்.

4. செவியறிவுறூஉ துறையை விளக்குக.

● அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு


அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.

சிறுவினா
1. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
வேளாண் மேலாண்மை
● வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
● சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல்,

● உரிய நேரத்தில் விதைத்தல்,


● நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்,
● அறுவடைக்குப் பின் பாதுகாத்தல்,
● உரிய விலை வரும்வரை இருப்பு வைத்தல்
● என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும்
நிருவாகநெறியும் இணைந்தால்தான் வேளாண்மை செழிக்கும்.

2. அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ் நதி கூறுகிறார்?


அதிசய மலரின் பூச்செடி முளைத்ததாக தமிழ் நதி கூறுவது:

● குண்டு மழை பொழிந்து நிலங்கள் அழிக்கப்பட்டன.


● பச்சையம் இழந்த சாம்பல் நிலம் காட்சியளித்தது.
● பொட்டல் வெளியில் போரின் பின் பிறந்த குழந்தையென அதிசய
மலர் பூத்திருக்கிறது.
● ஆட்களற்ற பொழுதில் உலவிய யானைகளின் எச்சத்திலிருந்து
எழுந்திருக்கலாம், அல்லது எவருடைய சப்பாத்துப் (காலணி)
பின்புறம் விதையாக ஒட்டிக்கிடந்து செடியாக
முளைத்திருக்கலாம்

3.எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப் பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் :
● கவிஞர் தமிழ்நதி எழுதிய 'அதிசயமலர்' என்ற கவிதையில்
இடம்பெறுகின்ற வரிகள் இவை.

பொருள்:
● மலரை அடையாளம் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சி ஒன்று
வருகிறது. நாளை பறவைகளும் வாலாம்.

விளக்கம் :
● குண்டு மழை பொழிந்தது. நிலங்கள் அழிக்கப்பட்டன. மனிதர்கள் சிதறி
ஓடினர். அழிக்கப்பட்ட மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. யானைகளின்
எச்சங்களில் இருந்தோ, எவருடைய காலணியின் பின்புறம் கிடந்தோ
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
85
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

எப்படியோ செடி முளைத்தது. மலர் மலர்ந்தது. பச்சையம் இல்லாத


சாம்பல் நிலத்து மலரை நாடி வண்ணத்துப்பூச்சியொன்று வந்துள்ளது.
நாளை அதன் சுவையைத்தேடி பறவைகளும் வரும் என்ற
நம்பிக்கையுடன் கவிஞர் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.

4. யானை புக்க புலம்போலத்


தானும் உண்ணான் உலகமும் கெடுமே

உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.

உவமை :
● யானை தானாகச் சென்று வயலில் நெற்கதிர்களை உண்ணத்
தொடங்கினால் தானும் உண்ணாமல் பிறர்க்கும் பயன்படாமல்
நெல்மணிகள் வணாகும்.

பொருள்:
● குடிமக்களிடம் நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பும் அரசன் தானும்
பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
உவம உருபு போல
விளக்கம் :
● அரசன் அறிவில் குறைந்தவனாகி முறை அறியாத சுற்றத்தாரோடு
ஆரவாரமாக குடிமக்களின் அன்ட கெடுமாறு நாள்தோறும் வரியைத்
திரட்ட விரும்புவது யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல்
பிறர்க்கும் பயன்படாமல் வணாக்குவது
ீ போன்றது. அரசன் தானும்
பயனடைய மாட்டான். நாட்டு மக்களும் துன்புறுவர்.
பொருத்தம்
வயல் - நாட்டிற்கும் ; யானை மன்னனுக்கும்
பயிர் - மக்களுக்கும் : நெல்மணிகளைத் தின்பது - வரி திரட்டுவதற்கும்
உவமைகளாகச் சொல்லப்பட்டுள்ளன.
நெடுவினா

1. எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே


முழுமையாகப் பிரதிபலிக்கின்றன நிறுவுக.
● இலக்கியங்கள் என்பவை, அவை தோன்றிய சமூகத்தின் நாகரிகம்,
பண்பாடு, கலை, வாழ்க்கைமுறை முதலானவற்றை வெளிப்படுத்தும்.
இலக்கியங்கள் எனப் போற்றப்படுபவற்றும் தலைமக்களாகப்
போற்றப்படுபவர், பெரும்பாலும் அரசர்களாகவோ, உயர்குடி
மக்களாகவோ இருப்பர். எளிய மக்களின் வாழ்க்கைமுறை.
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுட்டிச் சொல்லப்படுவது உண்டு.
எளிய மக்களின் வாழ்க்கை முறைகளையும், மனவேதனைகளையும்
தனிவகையில் கூறும் நூல்களும் உண்டு, அவை நாட்டுப்புற
இலக்கியங்கள் எனப்படுகின்றன.
● எளிய மக்கள் தங்கள் வாழ்க்கையில் இயல்பாக ஏற்படும்
தாக்கங்களைத் துயரப் பாடல்களாகவோ, கதைப் பாடல்களாகவோ
வெளியிட்டுள்ளனர். பாடமாக அமைந்துள்ள 'தேயிலைத்
தோட்டப்பாட்டு' என்பதை எடுத்துக் கொள்வோம். அது, கதைப்பாடல்
என்னும் இலக்கிய வடிவம் கொண்டதாக உள்ளது.
● அதில் இடம்பெற்றுள்ள கும்மிப் பாடல்கள், 'பாரத மக்களின் பரிதாபச்
சிந்து' என்னும் தலைப்பில், தேயிலைத் தோட்டப்பாட்டு' என்னும்
நூலில் இடம்பெற்றுள்ளது. இது, தேயிலைத் தோட்டத்தில் பணியுரியும்
மக்களுடைய வாழ்வின் துயரங்களை விளக்குவதாக உள்ளது.
● தங்கள் நாடு செய்தொழிலை இழந்த நிலை, ஆளவந்த வெள்ளையர்,
நாட்டின் தொழிலையும் மக்கள் வாழ்வு முறையையும் சீரழித்த தன்மை,
சீரும் சிறப்பும் கொண்ட நமது இந்தியத் தேசத்தில் அன்னியர் புகுந்து
வருமானத்தைக் கெடுத்தது, கைத்தொழிலைக் கொஞ்சம் கொஞ்சமாகக்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
86
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

கொள்ளையிட்டது.

● மண்ணின் மக்களை அற்பப் புழுக்களாக எண்ணியது, பிறந்து வளர்ந்த


மண்ணில் உழைப்புக்கும் உணவுக்கும் வழி இல்லாமல் திண்டாடி,
கங்காணிகளின் வித்தார வார்த்தைக்கு மயங்கி வேலை கிடைக்கும்.
வாழ்வு கிடைக்கும் எனக் கப்பல் ஏறிய செய்திகள் எனப் பலகுறித்துப்
பாடுகின்றனர்.

● குரங்காட்டிகள் போன்ற கங்காணிகள், மக்களை ஆலையில் பிழிந்த


கரும்பாக வேலை வாங்கினர். ஒன்றுக்குப் பத்தாகப் பற்றுவரவுக்
கணக்கு எழுதிச் சாகும்வரை தலைச்சுமையாக்கி வேலை வாங்கினர்.
கடல்கடந்து இலங்கை, அந்தமான் போன்ற தீவுகளில் வெள்ளை
முதலாளிகளுக்குச் சிக்கனமான செலவில் பணி செய்ய, மக்களை
அழைத்துச் சென்று ஏமாற்றினர். பெண்டு பிள்ளைகளுக்காக
உண்ணஉணவுக்கும் செலவுக்குமாக உழைத்த மக்கள், மண்ணுளிப்
பாம்புபோல் வருந்தினர் என்றெல்லாம் பாடலில். குறிப்பிடப்பட்டுள்ளன.
● இறுதியாகத் தங்கள் மக்கள் தங்களைப்போல் துன்பப்படாமல் வாழ,
நன்றாகப் படிக்க வைத்துக் கல்வி ஒழுக்கங்களில் சிறப்படையுமாறு
வளர்க்க வழி கூறி, ஒன்றுங் குறையில்லாமல் ஒற்றுமையாக ஊரில்
கட்டுப்பாட்டோடு வாழமுடியும் என்பதை வலியுறுத்துகின்றது.

2. சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள புகளூர் கல்வெட்டு எவ்வகையில்


துணை புரிகிறது விளக்குக.
கல்வெட்டு செய்தி
● புகளூர்க் கல்வெட்டு நான்கு வரிக்கல்வெட்டு. நாற்பது ஆண்டுகளாக
படிக்க முடியாமல் விட்டுவிட்ட கல்வெட்டு. சங்ககால வரலாற்றை
அறிந்து கொள்ளத் துணை புரிகிறது.

● புகளூர் கல்வெட்டின் முழுவாசகம் பின்வருமாறு:

"அம்மன்னன் யாற்றூர் செங்காயபன் உறைய்


கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகன் இளங்
கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்'

● என்னும் கல்வெட்டில் முதல்வரியில் 'யாற்றூர்' என்னும் இடத்தைச்


சேர்ந்த சமணத் துறவியான 'செங்காயபன்' வசிக்கும் உறையுள் இது
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
● இரண்டாவது வரியில் உள்ள 'கோ' என்ற முதல் சொல்லே இது
சங்ககால தமிழ் மன்னனின் கல்வெட்டுகள் என்பதை உறுதிசெய்கிறது.
● சங்ககால நூல்களில் மட்டும் இதுவரை காணப்பட்ட பெருங்கடுங்கோ,
இளங்கடுங்கோ, இளங்கோ ஆகிய பண்டைத் தமிழ் மன்னர்களின்
பெயர்கள் முதன் முறையாக புகளூர்க் கல்வெட்டில் காணப்பட்டன.
● இக்கல்வெட்டு கருவூரில் இருந்து ஆட்சி செய்த சேரல் இரும்பொறை
மன்னர்கள் பொறித்தது. vii) பதிற்றுப்பத்திலும், ஏனைய சில சங்க
நூல்களிலும் பாடப்பெற்ற பழந்தமிழ் மன்னர்கள் இவர்கள்.

● இக்கல்வெட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.


● புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள்
முறையே பதிற்றுப்பத்தின் ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது
பாட்டுடைத் தலைவர்கள் ஆவர்.

3.நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத்


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
87
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

தொகுத்து எழுதுக. நிருவாக மேலாண்மை

உயர் பதவி வகிப்பவர் அறிய வோண்டியது :

● உயர் பதவிகளில் இருப்பவர்கள் தம் பணியாளர்களில் யார்


திறமைசாலிகள் என்று தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால்
யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

நாலடியார் கூறும் மேலாண்மை :

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்


நல்லறிவு நாளுந் தலைப்படுவர்.

● புதிய மண்பானையானது பாதிரி பூவை சேர்ந்ததலால் தன்னிடம் உள்ள


தண்ண ீருக்கு நறுமணம் தருவது போல கல்லாதவர்க்கும் கற்றவர்
சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்று கூறுகிறது.

வரவறிந்து செலவு செய்ய வேண்டும்

● நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும்.


● .வரவாத் தாண்டி செலவு செய்பவன் அடுத்தவர்களிடம் கையேந்த
வேண்டிய அவல நிலைக்குக் தள்ளப்படுவான்.

ஷேக்ஸ்பியர் நாடகம் காட்டும் மேலாண்மை:


● ஏதெனிஸ் நகரில் வாழும் டைமன் என்பவன் அதிக செலவு செய்கிறான்

● கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரித்த போதும் அவன்


வருந்தவில்லை.
● தான் அளித்த விருந்தை உண்டவர்கள் உதவவார்கள் என்று
பொய்க்கணக்குப் போடுகிறான்ய

● கடைசியில் அனைத்தையும் இழந்து ஊருக்கு வெளியே சென்று மனித


இனத்தையே வெறுத்து வாழ்கிறான்.
● இக்கதை மூலம் மிகச்சிறந்த வாழ்வியல் விளக்கம் தருகிறது
ஷேக்ஸ்பியரின் நாடகம்

நல்வழியில் ஔவையார் காட்டும் நிதி மேலாண்மை :


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - நல்வழி (25)

● என்ற பாடலில் தன் வருமானத்திற்கு அதிகமாய்ச் செலவு செய்து


ஆடம்பரமாக வாழ்பவன் அவமானப்படுவான். புத்தி கெட்டுப் போவான்

● அவன் செல்லும் இடங்களிளெல்லாம் திருடன் என்று தூற்றப்படுவான்.

● ஏழு பிறப்புகளிலும் தீய குணம் கொண்டவனாய் மாறுவான்

● நல்லவர்க்கெல்லாம் பகைவன் ஆவான்.

முடிவுரை:

● அடுத்தவர் நலனுக்காக வாழ்பவரே தலைமைப்பண்பாளர்.


சூழ்நிலைகளுக்கேற்ப சிந்தித்துச் செயல்பட வேண்டும். நொடிக்கு நொடி
மாறுபடும்.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
88
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

தமிழாக்கம் தருக.

சுமார் 50 வயதுடைய ஒரு வெள்ளைப் பெண், ஒரு கறுப்பினத்தவரின் அருகில்


அமர்ந்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விமானப் பணிப்பெண்ணை
அழைத்தார்.

"மேடம், என்ன விஷயம்?" தொகுப்பாளினி கேட்டாள்.

"என்னை ஒரு கறுப்பினத்தவரின் அருகில் வைத்தீர்கள். எனக்கு மாற்று


இருக்கை கொடுங்கள்".

தொகுப்பாளினி பதிலளித்தார். "இந்த விமானத்தில் ஏறக்குறைய எல்லா


இடங்களும் எடுக்கப்பட்டவை. நான் வேறு இடம் கிடைக்குமா என்று பார்க்கப்
போகிறேன். தொகுப்பாளினி போய் சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி
வந்தாள். "மேடம், நான் நினைத்தது போலவே, அங்கு இருக்கைகள் எதுவும்
இல்லை. பொருளாதார வர்க்கம். முதல் வகுப்பில் எங்களுக்கு இன்னும் ஒரு
இடம் உள்ளது".

அந்தப் பெண் எதுவும் சொல்லும் முன், தொகுப்பாளினி தொடர்ந்தாள்.


"ஒருவரை மிகவும் கேவலமாக ஒருவரின் அருகில் உட்கார வைப்பது
அவதூறாக இருக்கும்."

அவள் கறுப்பினத்திடம் திரும்பி, "சார், உங்களுக்கு முதல் வகுப்பில் இருக்கை


காத்திருக்கிறது" என்றாள்.

இந்த நேரத்தில், தாங்கள் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற


பயணிகள் எழுந்து நின்று கைதட்டினர்.

எல்லோர் மீ தும் ஒளி வசும்


ீ சூரியனிடம் இருந்து பாடம் எடுக்கவும்.

அல்லது ஒவ்வொரு கரையிலும் பெய்யும் மழை.

எங்கள் இனம், முகத்தின் நிறம் என்ற வேறுபாடு இல்லை.

ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் இயற்கையின் பரிசுகள்

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.(பக்கம் 185)

1. ஆற அமர :
● எந்த ஒரு செயலையும் ஆற அமர சிந்தித்து செய்ய வேண்டும்

2. ஆணி அடித்தாற் போல் :


● சல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் மாணவர்கள், ஆணி
அடித்தாற்போல் எதற்கும் அஞ்சாமல் இரவுபகல் பாராது திரண்டு
நின்றனர்.

3. அகலக்கால் :
● வரவுக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் அகலக்கால் வைக்கக் கூடாது

4. வழிவழியாக :
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
89
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● நம் முன்னோர்கள் வழிவழியாக விவசாயத் தொழிலை செய்து


வருகின்றனர்
5. கண்துடைப்பு:
● தேர்தலில் பல வாக்குறுகளைக் கொடுக்கும் அரசியல்வாதிகள்,
வெற்றிபெற்றபின் கண் துடைப்பாக ஒருசில வாக்குறுதிகளை மட்டுமே
நிறைவேற்றுகின்றனர்.

இலக்கிய நயம் பாராட்டுக.

பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த. கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே கோடிப்
. புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீ ன் காசினை செலுத்தி
. இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை - ஏழை
. விறகெரிக்க வசுவேன்.

நா.காமராசன்
மையக்கருத்து

உலகிற்காகவும் மக்களுக்காகவும் இயற்கையை மாற்றித் தருவேன் என்கிறார்.

தொடைநயம்

எதுகைத் தொடை

அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க


இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை ஆகும்.

இரவில் - இரவலரோடு -இரவெரிக்கும்

iil மோனைத் தொடை:

அமதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது மோனைத்


தொடை ஆகும்.

புயல் - புதிய

இரவில் -இரவெரிக்கும்

இரவில் - இரவலரோடு

iii} இயைபுத் தொடை:

அடிதோறும் கடைசி சிரோ, அசையோ, எழுத்தோ ஒன்றி வருவது இயைபுத்


தொடை ஆகும்

காகடல்களாக்குவேன். -தென்றலாக்குவேன்

பேசுவேன். -வசுவேன்

iv) முரண் தொடை


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
90
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

செய்யுளில் எதிரெதிரான பொருளுடைய சொற்கள் இடம் பெற்று வருவது


முரண் தொடை ஆகும்.

எகா :கடல்× பாலை

புயல்× தென்றல்

விண்மீ ன் × பரிதி

பூ × சருகு

அணி நயம் :

எ.கா: பூமிச்சருகாம்

பூமியைச் சருகாக உருவகப்படுத்தியுள்ளதால் இப்பாடலில் 'உருவக அணி'


அமைந்துள்ளது.

சந்த நயம்:

இப்பாடலில் தனிச் சொல் பெற்று வந்துள்ளதால் 'சிந்துப்பா' வகையைச்


சேர்ந்தது செப்பலோசை பெற்று வந்துள்ளது.
சுவை நயம்
பெருமிதசுவை

தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப்பிழைகளை நீக்கி எழுதுக


1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும்
இருந்தன.
● வாழைத்தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும், காகங்கள்
கரைந்துகொண்டும் இருந்தன.

2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.


● முருகன் சோறு உண்டு, பால் பருகினான்.

3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.


● கோவிந்தன் குடியிருக்கச் சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்தார்.

4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக் குட்டியும் கண்டேன்.


● வனவிலங்குக் காப்பகத்தில், சிங்கக் குருளையும் யானைக் கன்றும்
கண்டேன்.

5. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.


● பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

6. கோவலன் மதுரைக்குச் சென்றது.


● கோவலன் மதுரைக்குச் சென்றான்.

7 . பறவைகள் நெல்மணிகளைக் கொத்தித் தின்றது.


● பறவைகள் நெல்மணிகளைக் கொத்தித் தின்றன.

பத்தியைப் படித்துத் தேவையான இடங்களில் நிறுத்தக் குறிகளை இட்டு


எழுதுக.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
91
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம்


என்கிறீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன
நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்
விடை :
இளங்கோ அடிகள் சாத்தனாரிடம், "முன்செய்த வினை நிறைவேறும் காலம்
என்கிறீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது ? அதன் விளைவு
என்ன ? நிகழ்ந்த காலம் யாது ? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக!" எனக்
கேட்டார்.

கூடுதல் வினா
1.செவியறிவுறூஉ துறையை விளக்குக.
செவியறிவுறூஉ துறை
துறை விளக்கம்

● அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு


அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
சான்று
"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;" புறநானூற்றுப் பாடல். - எனத்
தொடங்கும்

பொருத்தம்

● அரசனிடம் பிசிராந்தையார், வரி திரட்டும் முறையறிந்து


மக்களிடமிருந்து வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப்
பெற்றுச் செழிப்படையும் என்று அறிவுறுத்துவதால் இது இத்துறைக்குப்
பொருந்தும்.

2. பாடாண் திணையை விளக்குக.


திணை விளக்கம்:
● ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற
நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும்.
சான்று :
"காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே" எனத்தொடங்கும் பிசிராந்தையார்
பாடிய புறநானுாற்றுப் பாடல்

திணைப்பொருத்தம்:

● இப்பாடல் பாண்டிய மன்னன் அறிவுடை நம்பியின் நல்லியல்புகளைக்


சிறப்பித்துக் கூறுவதால் பாடாண் திணை ஆயிற்று.

இயல் 8

உரைநடை : நமது அடையாளங்களை மீ ட்ட

செய்யுள் முகம்

இரட்சணிய யாத்திரிகம்

சிறுபாணாற்றுப்படை

துணைப்பாடம் : கோடை மழை

இலக்கணம் :குறியீடு
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
92
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இலக்கணத்தேர்ச்சி கொள்

1.குறியீடுகளைப் பொருத்துக.

அ) பெண். -1) சமாதானம்


ஆ ) புறா -2) வரம்

இ)தராசு. -3) விளக்கு
ஈ)சிங்கம். -4) நீதி
அ) 2,4,1,3. ஆ)2, 4, 3, 1. இ) 3. 1, 4, 2. ஈ ) 3, 1, 2, 4

விடை :) 3, 1.4, 2

2.கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக


உருப்பெற்றது.

காரணம்: பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள்


குறியீட்டியத்தை வளர்த்தார்கள்.
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு. காரணம் தவறு
ஈ)கூற்று தவறு, காரணம் சரி

விடை: ஆ) கூற்று சரி, காரணம் சரி

3.சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக்


குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்

அ) உவம. ஆ) உவமேயம் இ)உத்தி. ஈ) உள்ளுறை உவமை


விடை:ஈ) உள்ளுறை உவமை

4.'திட்டம்' என்னும் தலைப்பில் 'வரங்கல் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே


தவங்கள் எதற்காக?' என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் 'வரம்' எதற்குக்
குறியீடாகிறது?

அ) அமுதசுரபி. ஆ) ஆதிரைப் பருக்கை. இ) திட்டம். ஈ) பயனற்ற


விளைவு

விடை :இ) திட்டம்

5.மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும்


பயன்படும் இலக்கிய உத்தி எது"

அ) குறியீடு. ஆ) படிமம். இ) அங்கதம். ஈ) தொன்மம்

விடை: அ) குறியீடு

குறுவினா :

1. குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.

மதுபானக் கடைக்கு
இன்றும்
எமன்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
93
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

சாவித்திரி சத்தியவானை
மீ ட்கச் செல்கிறாள்

இதில் எமனுக்கு மதுபானக்கடை குறியீடாக வந்துள்ளது.

2. வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளை குறிப்பிடுக


குறியீடுகள் :
● வியர்வைத்துளிக்கு-ஆதிரைப்பருக்கை
● செழிப்புக்கு - அமுதசுரபி

3.குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.


● சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு
தொடர்பு இருத்தல் வேண்டும். சுட்டும் பொருள் என்பது எல்லோரும்
அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
● இத்தொடரின் வாயிலாகக் குறியீட்டுப்பொருள் நுண்ணிய முறையில்
வெளிப்படுத்தப்பட வேண்டும்.

பலவுள் தெரிக
நம்மை அளப்போம்.

1 . சிறுபானாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய


நிலப்பகுதி

அ) உதகமண்டலம். ஆ) விழுப்புரம். இ) திண்டிவனம். ஈ) தருமபுரி

விடை: இ) திண்டிவனம்

2.பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.


அ) தனித்தமிழ்த் தந்தை. 1) மு.வரதராசனார்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர். 2) மயிலை சீனி வேங்கடசாமி
இ) தமிழ்த் தென்றல். 3) திரு.வி.க.
ஈ) மொழி ஞாயிறு. 4) தேவநேயப்பாவாணர்

விடை :அ) தனித்தமிழ்த் தந்தை - 1) மு.வரதராசனார்

3. ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி


வேங்கடசாமி எழுதிய நூல்
அ) பௌத்தமும் தமிழும். ஆ) இசுலாமும் தமிழும்.
இ) சமணமும் தமிழும். ஈ) கிறித்தவமும் தமிழும்.

விடை : ஈ) கிறித்தவமும் தமிழும்.

4. நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத்


தேடியபடி என்று சுகந்தி சப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது.
அ) தமது வட்டு
ீ முகவரியை. ஆ) தமது குடும்பத்தை
இ) தமது அடையாளத்தை. ஈ) தமது படைப்புகளை

விடை : இ) தமது அடையாளத்தை

5. கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்

அ) ஆய் அண்டிரனும் அதிகனும். ஆ) நல்லியக்கோடனும் குமணனும்


இ) நள்ளியும் ஓரியும். ஈ) பாரியும் காரியும்

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
94
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

விடை :ஆ) நல்லியக்கோடனும் குமணனும்

II. குறுவினா

புத்தகப் புறநிலை வினாக்கள்


1.'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்:-


● தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் நூலாகும்.

● கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முதல் நூல்.

● தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்றதும் இந்நூலே ஆகும்.

● தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழுகுக் கலைச்


செல்வங்களை மறந்து, தன்பெருமை தான் அறியாச் சமூகமாக
இருப்பதால் இந்நூல் எழுதப்பட்டது என்கிறார் மயிலை சீனி.
வேங்கடசாமி

2.'விரிபெரு தமிழர் மேன்மை


ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்' - யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
● பாரதிதாசன் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றித் தமிழினத்திற்குத்
தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும்
பணியை மேற்கொண்டதால் கூறியுள்ளார்.
3
முகம் முகவரியற்றுப் போனதற்குச் சுகந்தி சுப்பிரமணியன் கூறும்
காரணத்தைக் கூறுக
முகம் முகவரியற்றுப் போனதற்குச் சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணம்

● தனக்குள்ளே தன் முகம் தொலைந்துபோன காரணத்தால்


முகம்முகவரியற்றுப் போனது என்று சுகந்தி சுப்பிரமணியன் கூறுகிறார்

4) இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?


. மக்கள் 'இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும்
● இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே
● வானம் இடிந்து விழவில்லையே!
● 'கடல்நீர் வற்றிப் போகவில்லையே!
● மேலும், 'இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ'
என்பர்.

சிறுவினா

1) மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள்


உருவாக்கித் தருக.

● மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள்:

● மயிலை சீனி. வேங்கடசாமி,16.12.1900 ஆம் ஆண்டு சென்னை


மயிலாப்பூரில் பிறந்தார்.

● இவரின் தந்தை ஒரு சித்த மருத்துவர். இவரின் தமையனார்


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
95
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

கோவிந்தராசன் ஒரு தமிழாசிரியர்.


● இவர் தொடக்கப்பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப்
பணியாற்றினார்.
● விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க, தெ.பொ.மீ ,
ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் தொடர்பு
கொண்டிருந்தார்.

● சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு,


கலைவரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர்
கவனம் செலுத்தினார்.

● திருமணமே செய்து கொள்ளாமல் தம் வாழ்வை முழுமையாகத்


தமிழியல் ஆய்வுக்கு ஒதுக்கியவர்.

2) கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப்


படுத்துக.

கடையெழு வள்ளல்கள் மற்றும் அவர்கள் செய்த செயல்கள்:


பேகன்
● மயிலுக்குப் போர்வையைத் தந்தவன்.
பாரி
● முல்லைக் கொடிக்கு தேரினைத் தந்தவன்.
காரி
● இரவலர்களுக்குக் குதிரைகளைத் தந்தவன்

ஆய்
● இறைவனுக்கு நீலவண்ணக் கல்லையும், நாகம் தந்த ஆடையினையும்
தந்தவன்.

அதியன்
● ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்தவன்.

நள்ளி
● நண்பர்களின் மனக்குறிப்பறிந்து பொருட்செல்வங்களைத்தந்தவன்.
ஓரி
● மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாகத் தந்தவன்.

3) 'ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்' - இடஞ்சுட்டிப் பொருள்


விளக்குக.
இடம் :-
● எச்.ஏ. கிருட்டிணனார் இயற்றிய இரட்சணிய யாத்திரிகத்தில்
இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.
பொருள்:-
● எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன்
நின்றார். இதை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

விளக்கம் :-
● இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு
உடன்பட்டு நின்றார். தனக்கு இழிவான செயல்களைச் செய்த
இம்மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று
எண்ணி இரக்கப்பட்டார்.அதனால், எந்த உதவியும் பெற இயலாத ஓர்
ஏழையைப் போல் அமைதியுடன் நின்றார் என்பதை நாம்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
96
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

எண்ணிப்பார்க்க வேண்டும்.
● பகைவனிடமும் அன்பு பாராட்டியவர் என்பது புலப்படும்.

4) கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.


கொடை வழங்குதல்:

● தம்மை நாடி வந்தவர்க்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவி செய்தலே


கொடை ஆகும் கொடை கொடுப்பவர் இரவலர் பற்றிச் சிந்திக்கக்
கூடாது. முன்பு வந்தவரா? முன்பு வராதவரா? செல்வரா? வறிஞரா?
என்ற பாகுபாடின்றி யாவர்க்கும் வாரி வழங்க வேண்டும்.

● கொடை கொடுப்பதில் விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ


இருக்கக்கூடாது. தன்னை நாடி வருபவர்க்கு இல்லை என்று கூறாத
வண்ணம் மிகுந்த செல்வத்தை நாம் தேடிச்சேர்க்க வேண்டும்.

● மனிதத்தின் தனி அடையாளமான கொடைத்தன்மையே, இறைவனிடம்


சென்று நம்மை இளைப்பாறச் செய்யும்.
● கொடுப்பதில் மகிழ்ச்சி காண வேண்டும்.

● இன்றளவும் பூமியில் நிலைத்து நிற்கும் முதல், இடை, கடை


வள்ளல்களைப் போல நாமும் ஈந்து உவக்க வேண்டும்.

நெடுவினா

1) மயிலையார் ஓர் "ஆராய்ச்சிப் பேரறிஞர்" என்னும் கூற்றினைச்


சான்றுகளுடன் கட்டுரைக்க.
● மயிலையார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். . 'கிறித்துவமும் தமிழும்'
என்னும் நூலை மயிலையார் எழுதினார்.
● இதுவே அவருடைய முதல் நூலாகும். அதைத்தொடர்ந்து 'பௌத்தமும்
தமிழும்', 'சமணமும் தமிழும்' ஆகிய நூல்களை இயற்றினார்.

● தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து,


கோலெழுத்து, தமிழ் பிராமி ஆகியவற்றில் புலமைப் பெற்றிருந்ததால்
சாசனங்களை எளிதில் வாசித்து ஆராய்ந்தார். கி.பி.3 முதல் கி.பி. 9
வரையில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப்பற்றி எழுதியுள்ளார்.
● மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் மற்றும் மூன்றாம் நந்திவர்மன்
பற்றியும் எழுதியுள்ளார்.

● சங்ககால மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள், துளுநாட்டு


மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு
ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.

● தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் 'தமிழர் வளர்த்த அழகுக்


கலைகள்” என்னும் நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த
முதல் நூல்.

● தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகள்


செய்தார்.

● 'தமிழ் நாட்டு வரலாறு' என்னும் நூல் இவருடைய மீ ட்டுருவாக்க

● முயற்சிக்குச் சரியான சான்றாகும். துளு மொழியையும் தமிழ்


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
97
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

2) எச்.ஏ. கிருட்டிணனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி


நிறுவுக.

● கம்பர் திருத்தக்க தேவரை பின்பற்றி விருத்தப்பாவில் ராமாயணம்


பாடினார். எச். ஏ. கிருட்டிணனார் கம்பரை அடியொற்றி விருத்தப்பாக்கள்
வாயிலாக இயேசு பெருமானின் வாழ்வை காவியம் ஆக்கினார்.
● கம்பராமாயணம் போன்றே இரட்சணிய யாத்திரிகத்தை
பெருங்காப்பியமாய் இயற்றியுள்ளார்
● இந்நூலின் செய்யுள் நடையைப் பெரும்பாலும் கம்பராமாயண செய்யுள்
நடையையும் அதன் அமைப்பையும் அதிகம் பின்பற்றி எழுதியுள்ளார்
● கம்பர் வடமொழி காப்பியமான இராமாயணத்தைத் தமிழ் மரபுக்கு ஏற்ப
தமிழில் பாடி பெருமைப்படுத்தினார். எச் ஏ கிருட்டிணனார் ஆங்கில
நூலை தழுவி இயேசு பெருமானின் வாழ்வை தமிழில் இரட்சணிய
யாத்திரிகம் என்று படைத்தார்
● கம்பரின் பாடல்களைப் போல கிருட்டிணனாரின் பாடல்களும் எளிதில்
கற்கும் வகையில் பாடப்பட்டுள்ளன.
● பல இடங்களில் கிருட்டிணனாரின் கற்பனை கம்பரையே நமக்கு
நினைவூட்டுகிறது.
● எனவே இவரின் கவிதை நயம் கவிதை நடை ஆகியவற்றை அறிந்த
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மனம் திறந்து இவரை கிருத்துவ கம்பர்
என பாராட்டி மகிழ்ந்தனர்.

3) கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை


விளக்குக.
முன்னுரை :

● பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தை, பிஞ்சு குழந்தைக்காகத் தம்


மூச்சைப் பிடித்து வைத்துக் கொண்டு வாழும் பெரியவர் ஆறுமுகம்.
பெரியவர் தள்ளாத வயதில் பிஞ்சுக் குழந்தையுடன் கஷ்டப்படுவதை
நினைத்து அதற்கான நிவர்த்தி தரும் யுத்தியைக் கூறுபவனாக பாபு.
குழந்தையைத் தத்து எடுக்க வரும் தம்பதிகள் பெரியவர்க்கும் ஆறுதல்
தர எண்ணும் எண்ணம் என்ற மனிதநேயப் பண்புகளைப் பின்னிப்
பிணைத்துக் காட்டியுள்ளார் படைப்பாளர் சாந்தா தத்.

பெரியவருக்கும் குழந்தைக்குமான பாசப்பிணைப்பு:

● வயதான தந்தையையும் ஆறுமாதமே ஆன பிஞ்சுா குழந்தையையும்


பார்த்துக் கொள்ள வேண்டியவன் தன் மனைவியின் பிரிவைத் தாங்க
முடியாமல் விஷம் குடித்து இறந்து விட்டான். தன் மகன் பெற்ற
குழந்தையைப் பெரியவர் கட்டாயம் பார்த்துக் கொள்ள வேண்டிய
நிலையில் உள்ளார். பெரியவர் ஆறுமுகத்தின் மனைவி இறந்து போன
நிலையில் கூட தன் ஒரே மகனுக்காகவே அவரும் உயிர் வாழ்ந்தார்.

மருந்துக் கடை பாபுவின் மனிதநேயம்:

● பெரியவர் ஆறுமுகம் குழந்தையை வைத்துக்கொண்டு படும்


கஷ்டத்தை எல்லாம் தினமும் பார்த்து வந்த பாபு, தனக்குத் தெரிந்த
குழந்தையில்லாத ஒரு தம்பதிக்குத் தத்து கொடுக்க ஆலோசனை
கூறினான்.

பெரியவரின் மனமாற்றம்:

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
98
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

● ஒருமுறை மருத்துவமனையில் வைத்து தனக்குப்பின் குழந்தையைப்


யார் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் மேலோங்குகிறது. தனக்கு
எதிரே வரும் ஒரு பெண்ணிடம் குழந்தை இருக்கும் அரவணைப்பு
நிலையைக் கவனிக்கிறார். தம் பேரக் குழந்தைக்கு ஒரு ஆறுமல்,
அரவணைப்பு வேண்டும் என முடிவெடுக்கிறார்.

தத்து எடுக்க வந்த தம்பதியின் பண்புநலன்:

● பாபுவுடன் தத்து எடுக்க வந்த தம்பதிகள் பெரியவர் குழந்தையை விட்டு


விட்டு தனியே வருந்துவார் எனக்கருதி குழந்தையைத் தந்ததற்கு நன்றி
தெரிவித்ததுடன் பெரியவரையும் தங்களுடன் வந்து விடுமாறு
வேண்டிக்கொண்டனர்.

பாபுவின் கருணை:
● பாபு தீர்வு காணத் தேடிய வழி குழந்தைக்கு மட்டுமல்ல பெரியவருக்கும்
தான் என்பதை உணர்ந்த ஆறுமுகம்கண்ணில் நீர் வடிய கைகூப்பினார்.

முடிவுரை:
● மனித நேயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிறுகதை
எழுதுபவர் பெண்படைப்பாளர் சாந்தா தத் இக்கதையில் வரும்
கதாமாந்தர்களின் மனித நேயப் பண்புகளை நம் கண் முன்னே படம்
பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழாக்கம் :பக்கம் 215

என்னிடம் அடிப்படையான சில நல்ல பண்புகள் இருக்கிறது என்பதை


என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். பெரியவர்களை மதித்தல், மக்களைச்
சந்திக்கும்போது வணங்குதல், அவர்களிடம் விடைபெறும்போது வாழ்த்தி
அனுப்புதல் என்பன. இதற்கும் மேலாக சட்டத்தைப் பின்பற்றுவது, ஏழை
எளியவர்களுக்கு உதவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுவது,
வடில்லாதவர்கள்
ீ மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது போன்றவை
என்னுடைய நல்ல பழக்கங்கள் ஆகும். இதைத் தவிர்த்து, எழுதுதல், இசை
கேட்டல், நடனம், பாடுதல் போன்றவைகளால் மகிழ்ச்சியும் ஆன்ம
அமைதியும் கிடைக்கிறது.

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றும்.

. “எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா!" என்று


கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி செல்லையா பதில் சொல்லத்
தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து
போசனை செய்தான், மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள்காட்டி விரலை
வைத்துக் கொண்டும் கண்ணை இலோக மூடிக்கொண்டும் யோசனை
செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்
போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற
பிள்ளைகள், அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும்
செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ஐந்தாம்
வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக்
கொண்டான் செல்லையன் அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம்
வாங்கவில்லை அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து
வைத்துக் கொண்டான். இருவரும் 'படப்போட்டி'யை ஆரம்பித்து விட்டார்கள்.

. 'ராஜா வந்திருக்கிறார்", கு. அழகிரிசாமி


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
99
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

. உரையாடல்

பள்ளிக் கூடத்தில் இருந்து ராமசாமி, செல்லையா, தம்பையா, மங்கம்மாள்


ஆகிய நால்வரும் வட்டிற்கு
ீ வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது
செல்லையாவைப் பார்த்து ராமசாமி கேட்கிறான்.

ராமசாமி :செல்லையா | டேய் 1 ஏண்டா பேசாம உம்மினு வாறே.

செல்லையா. :உம்ம்னு இல்லே. யோசிக்கிறேன்.

ராமசாமி. :என்ன யோசிக்கிற

செல்லையா: டேய் ! நானும் நீயும் போட்டி வைச்சுக்கலாமா?

ராமசாமி. :என்ன போட்டி?

செல்லையா. :படப்போட்டி சரியா?

ராமசாமி. : சரி ! நான் ரெடி.

இருவரும் பையைத் திறந்து புத்தகத்தை எடுக்கிறார்கள். ராமசாமி ஐந்தாம்


வகுப்புக்குரிய இந்திய தேசிய சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டான்.
செல்லையா தன்னிடம் உள்ள 'சிவிக்ஸ்' புத்தகத்தை எடுத்துக்கொண்டான்.

ராமசாமி. :எனக்கு சில்க் சட்டை இருக்கு! உளக்கு இருக்கா?

(செல்லையா,தம்பையா,மங்கம்மாள்) மூவரும்

என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள்.

உரை எழுதுவோம்

உங்கள் பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர் தற்பொழுது மாவட்ட


ஆட்சியராகப் பணியாற்றுகிறாம் பாட்பெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில்
சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும்
விதமாக ஒரு பக்க அளயில் வரவேற்புரை ஒன்றை எழுதுக

வரவேற்புரை

தென்காசி நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள


பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகை தரும் மாவட்ட ஆட்சியருக்குப் பள்ளி
மாணவர்கள் வரவேற்று வாசித்து அளிக்கும் வரவேற்பு மடல்

எம்பள்ளி முன்னாள் மாணவரே ! இந்நாள் ஆட்சியரே !

உங்கள் வருகையை அறிந்தோம். சோலை கண்ட சுந்தாக்


குயில்களானோம், நார்மேகம் கண்ட கவின் மயிலானோம். என்ன மகிழ்ச்சி !
எப்படிச் சொல்வது ?

நந்தவனக் காற்றே 1 நல்லெண்ண வஊற்றே !

. உங்கள் சமூகப்பணிகள் எல்லாவற்றையும் இந்த ஊரும் உலகமும்


அறியும். மனிதநேயத்தின் மறுஉருவம் நீங்கள்தான் என்பது இம்மன்றத்து
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
100
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

மக்களின் ஒருமித்த முடிவு, அண்மைக்காலமாக ஊடகங்கள் உங்கள்


சேவையை சிறப்பித்துக் கொண்டாடுவதை அறிவோம். நீங்கள் எங்கள்
பள்ளிக்கு விருந்தினராக வந்ததை எண்ணி எண்ணி மகிழ்கிறோம்.

சாதனை நெஞ்சமே ! சத்திய உள்ளமே !

. நீங்கள் சிந்திய வியர்வைத் துளிகளின் விளைச்சல்தான் மாவட்ட


ஆட்சியர் பதவி, இந்த உச்சத்தைத்தொட நீங்கள் பட்டபாடுகளை
அடிக்கோடிட்டுக் காட்டுங்கள். அது எங்கள் வழிகாட்டியாகட்டும். எங்கள்
வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுக்கும் கைவிளக்கு ஆகட்டும். வெற்றியின்
சொந்தமே! வணையிசைச்
ீ சந்தமே! உங்கள் உரையைக் கேட்சு செவி
வாசலைத் திறந்து வைத்துள்ளோம். உள்ளக் கோயிலில் ஒளிபிறக்கட்டும்.
எங்கள் வாழ்க்கை சிறக்கட்டும்.

வருக ! வசந்த உரை தருக !

வரவேற்பில் மகிழும்
மாணவர்கள்
நகரமன்ற ஆண்கள் மேனிலைப் பள்ளி
. தென்காசி

இடம் தென்காசி.

நாள் : 13.3.2022

விடைக்கேற்ற வினா அமைத்தல் :

விடை : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான்


இடம்பெற்றுள்ளது.
● வினா : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது?

1. விடை: நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர்
மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
● வினா : நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை
எப்போது அமைத்தது?

2. விடை: சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச்


சீர் செய்யவும் பாதுகாப்பாகப்
பயணிக்கவும் உதவுகின்றன.
● வினா: சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகளின் பயன்கள்
யாவை?

3.விடை: 1856 இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம்


இராயபுரத்தில் அமைக்கப்பட்டது
● வினா: தென்னிந்தியாவின் முதல் தொடர் வண்டி நிலையம் எங்கு,
எப்போது அமைக்கப்பட்டது?

4.விடை : ''யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே


யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
101
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

ஆவணப்படம்" என்கிறார் கிரியோர்சன்.


● வினா: 'ஆவணப்படம்' குறித்த கிரியோர்சன் கருத்து யாது?

இலக்கிய நயம் பாராட்டல் :

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்


. மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
. கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழுப்பி வானின் வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர்.
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.

. திரிகூடராசப்ப கவிராயர்

மையக்கருத்து

வான் எட்டும் அளவுக்கு மிகவும் உயர்ந்த மலை என்று குற்றால மலையையும்


அதில் வாழும் மக்களின்விலங்குகளின் இன்பமான வாழ்க்கை நிலையையும்
விளக்குகிறார் கவிஞர்.
தொடை நயம்:

i) எதுகைத் தொடை
அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க
இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை ஆகும்.
எ.கா:வானரங்கள் -கானவர்கள்
தேனருவி கூனலிளம்
ii) மோனைத் தொடை:
அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது மோனைத்
தொடை
கானவர் கமனசித்தர்
தெனருவி. திரையெழும்பி

iii) இயைபுத் தொடை:


அடிதோறும் கடைசி சீரோ, அசையோ, எழுத்தோ ஒன்றி வருவது இயைபுத்
தொடை ஆகும்.

எ.கா:

கொஞ்சும். கெஞ்சும்

யழைப்பார். வளைப்பார்

யொழுகும். வழுகும்

முரண் தொடை: செய்யுளில் எதிர்ப்புதமான பொருளுடைய சொற்கள் இடம்


பெற்று வருவது முரண்
எ.கா:செங்கதிரோன் ×இளம்பிறை

அணி நயம்: "உயர்வு நவிற்சி அணி


சுவை நயம் :பெருமிதசுவை

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
102
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

இயல் 1
உறுப்பிலக்கணம்

1.சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன்


சாய் பகுதி,
ப் - சந்தி,
ப் - எதிர்கால இடைநிலை,
ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2.விம்முகின்ற = விம்மு + கின்று + அ


விம்மு - பகுதி,
கின்று நிகழ்கால இடைநிலை,
அ - பெயரெச்ச விகுதி.

3.வியந்து = விய + த் (ந்) + த் + உ விய-பகுதி,


த்-சந்தி(ந்ஆனதுவிகாரம்),
த் இறந்தகால இடைநிலை,
உ- வினையெச்ச விகுதி.

4.இருந்தாய் =இரு + த் (ந்) + த் + ஆய்


இரு - பகுதி,
த் - சந்தி (ந் ஆனது விகாரம்).
த் - இறந்தகால இடைநிலை,
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

5.வந்து = வா(வ) + த் (ந்) + த் + உ


வா - பகுதி: வ எனக் குறுகியது விகாரம்
த் - சந்தி : த் ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி.

6.உயர்ந்தோர் = உயர் + த் (ந்) +த் + ஓர்


உயர்-பகுதி,
த்- சந்தி; த் (ந் ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி.

7.விளங்கி =விளங்கு + இ
விளங்கு - பகுதி.
இ- வினையெச்ச விகுதி.
இயல் 2
9.கலங்கி = கலங்கு + இ
கலங்கு - பகுதி,
இ- வினையெச்ச விகுதி
இயல் 3

10.தந்தனன் = தா (த) + த் (ந்) + த் + அன் + அன்


தா பகுதி. (த எனக் குறுகியது விகாரம்).
த் - சந்தி (À ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
அன் - சாரியை;
அன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
103
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

11.பொலிந்தான் = பொலி + த் (ந்) + த் + ஆன்


பொலி- பகுதி;
த் - சந்தி (ந் ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

இயல் 5

12.நினைக்கின்ற= நினை + க் + கின்று + அ


நினை - பகுதி:
க்- சந்தி;
கின்று நிகழ்கால இடைநிலை;
அ பெயரெச்ச விகுதி.

13.வைத்து= வை+த்+த்+உ
வை - பகுதி;
த் - சந்தி;
த்- இறந்தகால இடைநிலை;
உ வினையெச்ச விகுதி.

14.பேசுவார்= பேசு + வ் + ஆர்


பேசு - பகுதி;
வ்- எதிர்கால இடைநிலை;
ஆர்- பலர்பால் வினைமுற்று விகுதி.

15.கண்டான் = காண்(கண்) + ட் + ஆன்

காண் - பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்)


ட் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

16.அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்

அமர் - பகுதி

த் - சந்தி (ந் ஆனது விகாரம் )

த் - இறந்தகால இடைநிலை.

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.

17.செய்த - செய் +த் + அ,


செய் - பகுதி.
த் இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி

18.சாற்றி - சாற்று + இ,
சாற்று- பகுதி.
இ- வினையெச்ச விகுதி
இயல் 6

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
104
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

19.தொழுதனர்=தொழு + த் + அன் + அர்


தொழு - பகுதி;
த் - இறந்தகால இடைநிலை;
அன் - சாரியை;
அர் - படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

20.நகை = நகு + ஐ
நகு - பகுதி (நகை ஆனது விகாரம்)
ஐ - தொழிற்பெயர் விகுதி.

21.மருட்கை = மருள் + கை

மருள் - பகுதி ('ள்' 'ட்' ஆனது விகாரம்)

கை - தொழிற்பெயர் விகுதி.

22.வெகுளி = வெகுள் + இ

வெகுள் - பகுதி

இ- தொழிற்பெயர் விகுதி.
. இயல் 7
23.அறிந்து = அறி + த் (ந்) + த் +உ

அறி - பகுதி;
த்-சந்தி (ந் ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
உ- வினையெச்ச விகுதி

24.அறுத்து = அறு +த் +த் +உ


அறு - பகுதி;
த் - சந்தி;
த் - இறந்தகால இடைநிலை;
உ- வினையெச்ச விகுதி.
இயல் 8
25.பகைத்த = பகை +த்+த்+அ

பகை - பகுதி:
த் - சந்தி;
த் - இறந்தகால இடைநிலை;
அ- பெயரெச்ச விகுதி.

26.களைந்து = களை + த் (ந்) +த் +உ

களை - பகுதி;
த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
உ- வினையெச்ச விகுதி.

27.பழித்தனர் = பழி +த்+த்+அன்+அர்


பழி - பகுதி;
த் - சந்தி;
த் - இறந்தகால இடைநிலை;
அன் - சாரியை;
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
105
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

அர் - பலர்பால் வினைமுற்று விகுதி

28இடிந்து = இடி +த்(ந்) +த் +உ

இடி - பகுதி:
த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
உ - வினையெச்ச விகுதி.

29.ஈந்த = ஈ +த்(ந்) +த் +அ

ஈ - பகுதி:
த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை:
அ - பெயரெச்ச விகுதி

30.அமர்ந்தனன் = அமர் +த்(ந்) +த் + அன் + அன்


அமர் - பகுதி;
த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
அன் - சாரியை;
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

31.தாங்கிய = தாங்கு +இ(ன்) +ய் +அ

தாங்கு - பகுதி;
இ(ன் ) இறந்தகால இடைநிலை ;
ய் - உடம்படுமெய் சந்தி;
அ - பெயரெச்ச விகுதி
இயல் 1

புணர்ச்சி விதி

1.செம்பரிதி = செம்மை + பரிதி

விதி: ஈறு போதல் - செம் + பரிதி - செம்பரிதி.

2.வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - வானமெல்லாம்.

3.உன்னையல்லால் = உன்னை + அல்லால்

விதி: இஈஐ வழி யவ்வும் - உன்னை + ய் + அல்லால்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -உன்னையல்லால்.

4.செந்தமிழே = செம்மை + தமிழே

விதி: ஈறு போதல் - செம் + தமிழே

விதி: முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
106
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

5.ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

விதி : உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் -ஆங்க் + அவற்றுள்

விதி : உடல்மேல்உயிர்வந்துஒன்றுவது இயல்பே -ஆங்கவற்றுள்.

6.தனியாழி = தனி + ஆழி

விதி: இஈஐ வழி யவ்வும் - தனி +ய்+ஆழி

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - தனியாழி.

7.வெங்கதிர் = வெம்மை + கதிர்

விதி: ஈறு போதல் - வெம் + கதிர்

விதி : முன்னின்ற மெய் திரிதல் - வெங்கதிர்.

இயல் 2

8.இனநிரை = இனம் + நிரை

விதி: மவ்வறு
ீ ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும். இனநிரை

9.புதுப்பெயல் = புதுமை + பெயல்

விதி: ஈறுபோதல் - புது + பெயல்

விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - புதுப்பெயல்


இயல் 3
10.அருங்கானம் = அருமை + கானம்;
விதி: ஈறு போதல் - அரு + கானம்;
விதி : இனமிகல் - அருங்கானம்

இயல்.4

11.எத்திசை =எ +திசை
விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் -எத்திசை
இயல்.5

12.உள்ளொன்று = உள் + ஒன்று

விதி:'தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்' - உள்ள் + ஒன்று

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' - உள்ளொன்று.

13.ஒருமையுடன் = ஒருமை + உடன்

விதி : 'இஈஐவழி யவ்வும்'- ஒருமை + ய் + உடன்


விதி: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' - ஒருமையுடன்.

14.பூம்பாவாய் = பூ + பாவாய்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
107
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்

விதி: பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் - பூம்பாவாய்

15.பெருங்கடல் - பெருமை + கடல்


விதி : 'ஈறுபோதல்' - பெரு + கடல் விதி :
'இனமிகல் - பெருங்கடல்

இயல்.5

16.தலைக்கோல் = தலை + கோல்


விதி : இயல்பினும்விதியினும்நின்ற உயிர்முன் கசதப மிகும் - தலைக்கோல்.
இயல் 8

17.முன்னுடை = முன்+உடை

விதி : 'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' - முன்ன் + உடை

விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - முன்னுடை.

18.ஏழையென = ஏழை + என

விதி:'இ ஈ ஐ வழி யவ்வும் -ஏழை + ய் + என


விதி: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - ஏழையென.

19.நன்மொழி = நன்மை + மொழி


விதி : 'ஈறுபோதல்' -'நன்மொழி'.

20.உரனுடை = உரன் + உடை

விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' -'உரனுடை'.

யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு


மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
108

You might also like