Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

கிளி வெண்பா

கிளி வெண்பா
=============
பச்சை மணிக்கிளியே! பாவலர்க்கு நற்புகழை
இச்செகத்தில் ஈவ தெதுகூறு? - உச்சரிக்கும்
சீர்கள் உவந்தளிக்கும் செந்தமிழ்த் தேன்மழையாய்
ஈர்க்கின்றப் பாவென் றெழுது!
- கோவை லிங்கா.

பஞ்சவர்ணக் கிள்ளாய்! பருந்தென வட்டமிடும்


வஞ்சகர்முன் னெங்ஙனம் வாழ்வது? - வஞ்சியே!
கொஞ்சுமொழி நீக்கிக் கொடும்புலி நீயெனவே
அஞ்சியவ ரோடவினை யாற்று!
-ஆனந்த் சுந்தரராமன்

பச்சை மணிக்கிளியே பாவெல்லாம் நானெழுத


இச்சகம் போற்றியும் ஏற்றிட - அச்சேறி
நற்றமிழ் வல்லார் நவிலப் பொன்னென
நற்றிறம் நாடோறும் நல்கு!
- இரா. இரத்தினகுமார்

வெண்பச்சைப் பெண்கிளியே வெண்பாவை நான்படைக்கக்


கண்டிட்ட உத்தியைக் காட்டிடு - திண்டாட்டம்
வேண்டாமே நற்கருத்தை வெண்டளையாய் வித்திட்டால்
ஆண்டிடும் அண்டும் அழகு!
- இரா. சத்தியநாராயணன்

அருந்த மிழுரைக்கும் அஞ்சுகமே செப்பு


கருத்துடன் பாபுனை காரம் - பெரும்புலவன்
லிங்கா அருஞ்சீட னாகி விடாமலே
தொங்கிக் கவிநுட்பம் துய்
- தனராஜ் பாப்பணன்

பைங்கிளி நீயுமிங்கு பைந்தமிழ் கற்றது


எங்கென்று கூறேன் எனக்காக? - தங்கமாய்
லிங்கா கருத்தாய் இயற்றிய பாக்களை
அங்கமாய் ஆய்ந்தே அறி.
- ஜனனி.

கண்ணழகுப் பைங்கிளியே கண்டுங்கா ணாதுதினம்


சிண்டாட்டிப் போவோரைச் செய்வதென்? - கண்ணா
பழகியப் பின்னரே பாலும் புளிக்கும்
வழக்க மீ துதான் வசி..!
மாரி. வசந்த குமார்.

You might also like