Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

வினாவுத்திர வெண்பாக்கள்

வட்டின்
ீ அமைதி விரைந்தோடச் செய்வதெது?
நாட்டில் பெருஞ்செல்வம் நாட்டும்எது? - ஏட்டில்காண்
கல்வியை வாழ்வினில் காட்டிட வென்செய?
வெல்போர்த் தொழிலைப் பழகு!
- குளோரி சக்தி.

படைக்கல மேந்தி பகைவெல்லும் செய்கை


விடையாம் அதுவென்ன? வெவ்வே(று) - அடைமொழி
சேர்ந்த வினையென்? திறன்வளர் என்றாலோ?
பார்!போர்த் தொழிலைப் பழகு!
- கோவை லிங்கா.

மணிமுடி வேந்தர் மறங்காட் டுவதென்?


பணியின் பொருளாம் பதமென்? - அணியெனக்
கற்பதுங் கைவரக் காண்பதும் எவ்விதம்?
நற்போர்த் தொழிலைப் பழகு!
-ஆனந்த் சுந்தரராமன்.

வெல்லும் படைகொண்டு வரர்கள்


ீ செல்வதெங்கே?
சொல்லைச் செயலாக்கிச் சோர்வுதனை - வெல்லுமென்?
மாற்றங்கள் தோன்றவும் மண்ணுயிர்கள் செய்வதென்?
நற்போர்த் தொழிலைப் பழகு!
- அ. வள்ளிபாபு.

வரப்
ீ படைகொண்டு வறெய்து
ீ மென்னாமோ?
தீரப் புயங்கள் திகழவே - சீரதாய்
நிற்பதுமென் ? செய்வினை நீர்மையும் கூறாமோ?
நற்போர்த் தொழிலைப் பழகு!
- ந.இரா. இராசகுமாரன்.

வாழ்க்கையென்ப தேவோர் களமாமே என்னவோ ?


வழ்ச்சியில்லா
ீ வெற்றியை வெல்வதெது? - தாழ்விலாப்
பெற்றநல் நட்பைப் பிணைப்பது மென்னவோ?
நற்போர்த் திறத்தைப் பழகு !
- இரா.சத்தியநாராயணன்.

நாட்டுக் கிடையில் வருவது மென்னவோ..?


மூட்டை சுமப்பதின் வேலையுமென்? - கூட்டினுள்
சொற்போர்த் துவங்கிச் சுகமுடன் வாழவே
நற்போர்த் தொழிலைப் பழகு!
- மாரி. வசந்த குமார்.
================

வெப்பமின் சாரம் விரைந்தே கடத்துமெ(து)


ஒப்பிலா வாசிப்பின் உள்ளடக்கம் - செப்பு!
வலோர்க்க றிவெதனால்? வாய்க்கும் தெளிவு?
உலோகநூல் கற்றே உணர்!
-ஆனந்த் சுந்தரராமன்.

மண்ணில் கிடைக்கும் மதிப்புள்ள தென்னவோ?


எண்ணத்தில் நற்சுவை ஈவதெது? - கண்ணா
கலையறி(வு) எவ்வழி காண்ப(து) அகத்தே?
உலோகநூல் கற்றே உணர்!
- வே.செந்தில்குமரன்.

இரும்பும் தகரமும் ஈயமும் யாது?


குருவெனக் கற்பிக்க கோர்த்த - உருவென்
சொலோ?படித்து என்றால்? சுரணை மறுபேர்?
உலோகநூல் கற்றே உணர்!
- கோவைலிங்கா
================

எதுவரினும் பார்க்கலா மென்றிருப்பார் யாரோ?


இதுவுண்(டு) எதிர்பதம் என்ன? - பொதுவாய்
அணிகளில்லை யென்றுமங்கை ஆழ்ந்துகொள்வ தேது?
துணிந்தவர்க் கில்லை துயர்
- மலர்மைந்தன்.

பயமறியார் வெல்வாரே பந்தயத்தில் யாரோ?


பயந்தவர் வெல்வார்! பதிலேது? - அயர்ந்தார்
அணியமிலார் வாழ்வில் அனுதினம் ஏது?
துணிந்தவர்க் கில்லைத் துயர்!
- இரா. இரத்தினகுமார்.

தன்செய லாலே தரணியை வெல்வார்யார்?


குன்றவர்க் குண்டோ குறைகளும்? - குன்றாப்
பிணியென ஆசை பெருக்கத் தருமென்?
துணிந்தவர்க் கில்லை துயர்!
-ஆனந்த் சுந்தரராமன்.

===============

மரம்தாவி யோடும் மனிதமுன் னோர்யார்?


வரவும் செலவும் வகையாய் - விரைந்து
தரவோர் உறுப்பென்? தளைத்த மலரென்?
குரங்குகைப் பூமாலை கொள்!
- கோவை லிங்கா.

படிப்புடன் இஃதால் பணம்மிகும் அஃதென்?


துடித்துத் துவளா தொருமேற் - படியென்?
தழைத்தின் முதலோடு தாரும் கடையென்?
உழைப்பே உயர்வு தரும்!
- கோவை லிங்கா.
விளைமண் செழிக்க விரைந்தோ டுவதென்?
விளையாடித் துள்ளு வதுமென்? - சளைத்தது
நீர்நீங்கிக் காய்ந்த நிலையுமென்? கார்முகில்
வார்நதி மீ ன்கரு வாடு!
-ஆனந்த் சுந்தரராமன்.

அவையினில் யார்க்குதான் அப்பரிசு கிட்டும்?


எவையெழுத இன்னுயிர் போகும்? - அவைதான்
பலரையும் அச்சுறுத்தும் பாயும் விலங்கென்?
புலவர்க்கு வெண்பா புலி.
- மலர்மைந்தன்.

தோளில் கரமிட்டுத் தோழனும் செய்வதது.?


காளியாய் வற்றிருப்பாள்
ீ கானகத்தார்? - தூளித்
துணையிருக்(கு) இன்பத்தேன் துச்சமென்ற வர்யார்?
அணைத்திட்ட தெய்வமே தாய்!
- கி.மணிவாசகன்.

எண்ண முடியுமோ என்னால் உனையங்கு?


மண்ணில் கவரத்தான் மாறுமோ? - பண்பாடி
தண்மையால் தானாகத் தாவுமோ பூமிக்கு?
விண்மீ ன் குணங்கள் ஒளிர்ந்து!
- ஜனனி
================

You might also like