நற்றிணை 91

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

நற்றிணை Natrinai 91

பெருநல் ஈகை என்பது திருமணம்

தோழி, சேர்ப்பன் தன் தேரில் உன்னை மணம் புரிந்துகொள்ள


வந்துகொண்டிருக்கிறான். இது உனக்குத் தெரிந்தது தானே!- தோழி
தலைவியிடம் சொல்கிறாள்.

புன்னைப் பூக்கள் உதிர்ந்து நிழலே பூத்துக்கிடக்கும் கடற்கரை. அந்தக்


கரையை மோதிப் பாயும் கடல். அந்தக் கடலில் மேயும் சிறுமீ ன். சிவந்த
கடைக்கண் கொண்ட சிறுமீ ன். பதுங்கியிருக்கும் (உடங்கு) அந்தச் சிறுமீ ன்
நாரைக்கு இரை. தன் பெட்டையுடன் சேர்ந்து மேயும் நாரைக்கு இரை.
புன்னைமரத்தின் உச்சிக் கிளையில் கட்டிய கூட்டில் அதன் குஞ்சு. அந்தக்
குஞ்சு தன் தாயைக் கூப்பிடுகிறது. தந்தை-நாரை அந்த மீ னைக் கொண்டு
சென்று குஞ்சுக்கு ஊட்டுகிறது. இது கானல் தோட்டம் (படப்பை).

அந்தத் தோட்டப் பகுதியில் நம் சிறுகுடி. பெருநல் ஈகை (திருமணம்) புரியக்


காத்திருக்கும் சிறுகுடி. சேர்ப்பன் தேரில் வருகிறான். விரைந்து பாயும் குதிரை
(கடுமா) பூட்டிய தேரில் வருகிறான். வண்டுகள் ஒலித்துக்கொண்டு
மொய்க்கும் மாலையை அணிந்துகொண்டு வருகிறான். பட்டப்பகலில்
வருகிறான். இது உனக்குத் தெரிந்ததுதானே!

பூமாலை, ஆண் பெண் பறவைகள் சேர்ந்து இரை தேடல், குஞ்சுக்கு ஊட்டல்


முதலான இறைச்சிப் பொருள்களும், உள்ளுறை உவமங்களும் வாழ்க்கைப்
பாங்கை உணர்த்துவதை உன்னிப்பாக எண்ணிப் பார்த்து
உணர்ந்துகொள்ளலாம்.

இவற்றையும் தலைவி உணர்ந்துள்ளாள் என்பதை இப்பாடலில் வரும் "நீ


உணர்ந்ததுவே" என்னும் தொடர் உணர்த்துகின்றது.

You might also like