ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே,

அது பூசை என்று வெளியே உன்மேல் பாசம் செய்யுதே,


நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே,
அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே.

எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்று தோணுதே,


செய்த ஒவ்வொன்றிலும் சுயநலமே என்ன நாணுதே,
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்,
உந்தன் பாதம் ஒன்றே ஆக வேண்டும் எந்தன் தாரகம்.

பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே,


பலர் புகழ இன்னும் புகழு என்னும் கள்ளம் வெல்லுதே,
காமம் குரோதம் வென்றோம் என்று வாயும் சொல்லுதே,
உள்ளே விருப்பும் வெறுப்பும் தலைவிரித்தே ஆடிச் செல்லுதே,

பசி ருசியைக் கடந்தோம் என்று மார் தட்டுதே,


இந்தா புசி என்ற தினம் நாக்கும் வயிறும் காலைக் கட்டுதே,
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்,
எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்.

சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது,


ஆனால் ஜெகத்தினையே ஜெயித்ததாக சொல்லி அலையுது,
நன்று செய்த நல்லவரை அன்றே மறக்குது,
இது குன்று போன்ற குறை சுமந்தும் கூசாது இருக்குது,

வந்தவர்க்கே அறிவுறையை வாரி வழங்குது,


இது தன் வாழ்க்கையில் தத்தளித்தே வாடி வதங்குது,
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்,
எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்.

நினைத்தபடி நடப்பதுவே எந்தன் வாடிக்கை,


அது உன்நினைவே என்று சொல்வது என்ன வேடிக்கை,
உனக்காவே வாழ்ந்திடுவேன் என்று பாரிக்கை,
பின் எனக்காக இது செய் என்று என்ன கோரிக்கை,

துறவி என்று கூறிக்கொண்டும் எதையும் துறக்கலே,


இந்த பிறவிக்கேனோ ஞானம் ஏதும் இன்னும் பிறக்கலே,
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்,
எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்.

You might also like