கரணமும் முக்கியம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 89

கரணம்

ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம்


எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம்.
அந்த வகையில் கரணம் என்றால் என்ன. எந்த வகையான
கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்.

சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள்


தேய்பிறை நிலைக் கால சுழற்சியே ஒரு மாதம் என்று
கணக்கிடப்படுகிறது. அப்படியான சந்திரனின் வளர்பிறை,
தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள்.
இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில்,
அத்திதியின் அரைப் பகுதியாகும். ம்மொத்த 11 வகையான
கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் “ஸ்திர”
கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு
மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் “சர”
கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில்
ஒரு முறை மட்டுமே வரும். அக்கரணங்களுக்குக்கான
உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும்
ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள்
பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தை
அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும்
சில குணாதிசியங்கள் இருக்கும்.

சகுனிக் கரணம்: இக்கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும்


அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும்,

1
சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்
மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால்
இவர்கள் எடுக்கும் முடிவுகள்
சரியானதாக இருக்கும். இவர்கள் தங்களை மிகவும்
பக்குவப்பட்ட மனிதர்களாக மாற்றிக்கொள்வார்கள்.
போர்புரியவும்,நோய்த் தீர மருந்து உட்கொள்ளும்
செயல்களை இக்கரணத்தில் செய்தால் சிறந்தப் பலன்களைக்
கொடுக்கும். இக்கரணத்திற்கான உருவம் காக்கை.

சதுஷ்பதக் கரணம் இக்கரணங்களில் பிறந்தவர்கள் சுதந்திரத்


தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே
பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுக்கு பணிந்து வேலை
செய்யாமல், தானே முதலாளியாக இருக்கக் கூடிய
வியாபாரத் தொழில்களையே இவர்கள் செய்வார்கள்.
பிறரிடம் மிக கடினமாக உழைக்கக் கூடிய தன்மை
கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அனைத்திலும்
உண்மையாக நடந்து கொள்வார்கள். இக்கரணத்தில்
சிரார்த்தம், தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக்
கொடுக்கும். மேலும் இவர்கள் தத்துவ ஆராய்சியிலும் ஈடு
படுவர். இவர்களுக்கான விலங்கு உருவம் நாய்.

நாக கரணம்: நாக கரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும்


பூமி சம்மந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டி எடுப்பது
போன்ற தொழில்களையோ, வியாபாரங்களையோ செய்வர்.
நல்ல குணாதிசயங்கள் இவர்களிடம் காணப்படும். நாக

2
கரணத்தில் பிறந்ததால் இவர்களில் சிலருக்கு
விஷப்பாம்புகளை மயக்கிப் பிடிக்கும் ஆற்றல் இருக்கும்.
இவர்கள் ஆன்மீக வழியில் சென்றால் சிறந்த ஞானியாகக்
கூடிய அமைப்பு உள்ளது. இக்கரணத்தில் பிறந்த ஒரு சிலர்
பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இக்
கரணத்தின் உருவம் நாகப்பாம்பு.

கௌஸ்துவ கரணம் : கௌஸ்துவ காரணத்தில்


பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக
இருப்பார்கள். ஆனால் இக்கரணத்தில் பிறந்த ஒரு சில
தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமற்றவர்களாகவும்,
பிறருக்கு துன்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்களிடம் அவப்பெயரைச் சம்பாதிப்பார்கள் இதன்
காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும்
கஷ்டப்படுவார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தையும்
இக்கரணத்தில் துணிந்து செய்யலாம்.

பவக் கரணம் : இக்கரணத்தவர்கள் சற்று ஏழ்மையானச்


சூழ்நிலையில் பிறந்தாலும், மிகவும் பெருந்தன்மையான
குணங்களை பெற்றிருப்பர். பேராசைப்படாமல் தங்களுக்கு
கிடைத்ததைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை இனிதாக்கிக்
கொள்வார்கள். இக்கரணத்திற்கான விலங்காக சிங்கம்
இருப்பதால், வீர தீர சாகசம் புரியும் ராணுவம்,
காவல்துறைப் போன்றப் பணிகளில் இவர்கள் சிறப்பாகச்
செயல்புரிவர்.

3
பாலவக் கரணம் : இக்கரணத்தில் பிறந்தவர்கள் அழகானத்
தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகுந்த
தைரியசாலிகளான இவர்கள் எந்த ஒரு காரியத்திலும்
துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். அதே
நேரத்தில் பிறருக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத்
தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம்
கொண்ட இவர்கள் அது சம்பந்தமானது துறைகளில்
சாதனைகள் புரிவார்கள். இக்கரணத்தவர்களுக்கான விலங்கு
புலி.

கிம்ஸ்துக்னம் கரணம்: இக்கரணத்தில் பிறந்தவர்கள்


பிறருக்கு அதிகம் தீங்கு செய்யக் கூடியவர்களாக
இருப்பார்கள். அனால் சிறந்த அறிவாற்றலைக்
கொண்டிருப்பார். தீயவர்களுன் சகவாசம் கொள்ளாதவரை
இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்களுக்கு
சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்து, அவர்கள் சொற்படி
நடந்தால் சித்தி நிலை அடையக்கூடிய யோகம் இவர்களுக்கு
உண்டு. இவர்களுக்கான விலங்கின் உருவம் புழு.

தைதுலைக் கரணம்: இவர்கள் எப்போதுமே இளகிய மனம்


கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் தங்கள்
பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன்
தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள்.
இயற்கையிலேயே இவர்கள் மனவுறுதி கொண்டவர்களாக
இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக் கொண்டு

4
அதில் வெற்றி அடைவர். பொதுவாக எதிர்காலத்திற்கான
பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து
பணிபுரிவர். இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் கழுதை.

கரஜைக் கரணம்: இந்நபர்கள் எந்த ஒரு விஷயத்தையும்


மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
சிறந்தப் பேச்சுத் திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும்
இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள்
என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம்
போன்ற காலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர்.
இவர்களுக்கு சற்று சலன புத்தி இருப்பதால், பெண்கள்
விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இகரணத்திற்கான உருவம் யானை.

வனிஜக் கரணம்: இவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன்


இருக்கும். மேலும் வியாபாரதில் சாதிக்கக் கூடிய மிகச்
சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள்
எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்து
விடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு
வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்.
காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப்
பெறுவார்கள்.இக்கரணத்திற்கான விலங்கு உருவம் எருது.

பத்ரைக் கரணம்: இவர்களும் இங்கு கூறப்பட்ட சில


கரணத்தவர்களைப் போல் தீயச் செயல்களைப் புரிவர்களாக
இருப்பர். இவர்களுக்கு சற்று மந்தக் குணம் இருக்கும்

5
காரணத்தினால் எக்காரியத்தையும் சற்றுத் தாமதமாகவே
செய்து முடிப்பர். ஆனால் ஏவ்வொரு விஷயத்தையும்
அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர்.
மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாரவது
தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் இவர்களும்
வெற்றியாளர்களாகலாம். இக்கரணத்திற்கான பறவையின்
உருவம் கோழி.

கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள்,


பறவைகள் உருவங்களும் ஜோதிட சாத்திரத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து
உங்களுக்கான கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு
கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசயங்கள் இருக்கும்
அது பற்றி பார்ப்போம். பவம் ,பாலவம், கௌலவம்,
தைதுலை,கரசை ஆகியவை சுபகரணங்களாகும். வணிசை,
பத்திரை, சகுனி, சதுஷ்பாதம் , நாகவம் ,
கிம்ஸ்துக்னம்ஆகியவைஅசுபகரணங்களாகும்.

கரணங்கள் விலங்குகள் பவம் - சிங்கம், பாலவம் - புலி,


கௌலவம் - பன்றி, தைதுளை - கழுகு, கரசை - யானை,
வணிசை- எருது, பத்தரை - கோழி, சகுனி - காக்கை,
சதுஷ்பாதம் - நாய், நாகவம் - பாம்பு, கிம்ஸ்துக்னம் - புழு.
இந்த 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த
பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும்,
உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

6
தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின்
காம உணர்வினையே அதிகமாக பிரதிபலிப்பார்கள். நாய்
குணம் கொண்டவர்களுடன் கோழி குணமோ, காகம்
குணமோ கொண்டவர்களை ஜோடி சேர்த்தால் உறவு
இனிக்காது தம்பதியரிடையே இதுதான்
பிரிவுக்குகாரணமாகிறது.

விலங்குகளின் குணாதிசயங்கள் திருமணத்திற்கு ஜோடி


சேர்க்கும் போது பத்துப்பொருத்தம், ஜாதகப்பொருத்தம்
பார்ப்பது போல கரணம் பொருத்தமும் கண்டிப்பாக பார்க்க
வேண்டும். கரணங்களுக்கும் தம்பதியர் இடையே பிரச்சினை
ஏற்பட்டு திருமணம் முறிந்து போவதற்கும் எப்படி காரணம்
என்று யோசிக்கிறீர்களா? அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்
ஜோதிடர்கள். கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது ,
பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி
தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு
சந்தோஷமாக இருக்கும். அதே நேரம் மற்ற சிங்கம், புலி,
யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை
யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.
எந்த விலங்குகளுக்கு எவ்வளவு நேரம் காமத்தில் அதிக
ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு ,
புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம்
ஒரே மாதிரி இல்லை. குறுகிய நேரம், நீண்ட நேரம் என
மாற்றம் உடையதாக இருக்கின்றது. உதாரணமாக கோழி
அல்லது சேவலின் உறவும் , காகங்கள் உறவில்

7
ஈடுபடுவதும் சில நொடிகளே, அதே நேரம்
நாய்,பன்றி,கழுதை,புழு போன்ற விலங்குகள் உறவில் நீண்ட
நேரம்ஈடுபடும்.

சிங்கம் - புலி பவம் கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கம்


போன்றவர்கள். இவர்கள் எக்காரியத்திலும் பின் வாங்காத
தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும்.
சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும்.
மென்மையான தலைமுடி கொண்டவர். பாலவம் கரணத்தில்
பிறந்தவர்கள் புலி போன்றவர் சிற்றின்ப பிரியர். நீங்காத
செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர்.
தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத
நற்குணமுடையவரும்.தன்உறவினரைப்பேணிக்காக்கும்குண
முடையவர்.

பன்றி, கழுதை இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கப்


பணியாளராக இருப்பார்கள். நல்ல ஆச்சாரமுடையவர்,
பெற்றவர்கள் மீது மதிப்பு மரியாதை கொண்டிருப்பார்கள்.
நிலபுலன்களைச் சம்பாதிப்பார்கள், சொத்துக்களும் வண்டி
வாகன வசதியும் கொண்டிருப்பார்கள். தைதூலை கரணத்தில்
பிறந்தவர்கள் தருமம் செய்ய மாட்டார்கள்.
அரசாங்கத்தின்மூலம்பொருளைபெறுவார்கள்.

யானை - எருது - சேவல் கரசை கரணத்தில் பிறந்தவர்கள்


அரசாங்கத்தின் மூலம் பணவரவு கிடைக்கும். எதிரிகளை

8
எளிதில் வெல்லக்கூடியவர்கள். அனைவருக்கும்
உதவக்கூடிய தரும சிந்தனை உள்ளவர்கள். வணிசை
கரணத்தில் பிறந்தவர்கள் கற்பனையான வார்த்தைகளை
பேசுவார்கள். இந்த உலகத்தோடு ஒத்து வாழமாட்டார்கள்.
பத்திரையில் பிறந்தவர்கள் சஞ்சல மனம் படைத்தவர்களாக
இருப்பார்கள்.

காகம், நாய், பாம்பு,புழு சகுனியில் பிறந்தவர்கள் காகம்


போன்றவர்கள் நல்ல அறிவு உள்ளவர்கள், அழகானவர்கள்
தைரியசாலிகள் மிகுந்த செல்வம் உடையவர்கள். நாய்
குணம் கொண்ட சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் பெண்
பிரியர்கள். வறுமை உடையவர்கள். சொன்ன சொல்லை
காப்பாற்ற மாட்டார்கள். நாகவத்தில் பிறந்தவர்கள்
துன்பத்தை வெல்பவர்கள். உத்தம குணம் கொண்டவர்
சுவையான உணவு உண்பவர்கள். கிம்ஸ்துகினத்தில்
பிறந்தவர்கள் பெற்றோர்கள் மீது பற்று கொண்டவர்கள்.
சகோதரர்கள் மீது பாசம் கொண்டவர்கள்.

பொருத்தம் ரொம்ப முக்கியம் ஒரு கோழி குணம் கொண்ட


பத்திரை கரணத்தில் பிறந்தவர்களுக்கும் காகத்தின் அதாவது
சகுனி கரணத்தில் பிறந்த ஆண்களுக்கு உறவில் ஈடுபடும்
நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும். அதே நேரம்
ஒரு பன்றியின் குணம் கொண்ட கௌலவம் கரணத்தில்
பிறந்தவரோ அல்லது நாயின் குணம் கொண்ட சதுஷ்பாதம்

9
கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது
நீண்டநேரம் இருக்கும். எனவேதான் பொருத்தமான கரணம்
பார்த்து ஜோடி சேர்ப்பது நல்லது. இதைத்தான் கரணம்
தப்பினால் மரணம் என்றுபெரியோர்கள்கூறியுள்ளனர்.

நட்சத்திரமும் குணமும்:

அச்வினி

அசுவினி நட்சத்திர கூட்டம் குதிரை முக வடிவில்


அமையும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ
ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம்
கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய்.

பொதுவான குணங்கள்: புத்தி கூர்மை, வடிவான தோற்றம்,


ஆடை ஆபரணங்கள் அணிவதில் ஆசை, பாசம், நேசம்,
கோபதாபங்கள். உணர்ச்சிவசப்படுதல், தன்னம்பிக்கை,
துணிச்சல், தர்ம சிந்தனை, பயமின்மை,
எதையும் வேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படுதல்,
தற்பெருமை, கர்வம், தவறான முடிவெடுத்தல் – சாதிக்கும்
தன்மை, பிடிவாதம் போன்றவை - உயரிய மன உறுதியும்
உடல் வலிமையும் ஒருங்கே கொண்டவர்களாக
இருப்பார்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை
சிறப்பாக முடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்.
கூர்மையான அறிவாற்றலும் சிந்தனை திறனும் இருக்கும்.

10
இந்த நட்சத்திரக்காரர்களின் கண்களில் எப்போதும் பிறரை
ஈர்க்கும் ஒரு கவர்ச்சி இருக்கும். எந்தக் காரணத்துக்காகவும்
சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எதிலும்
முதலிடத்தில் இருக்க விரும்புவீர்கள். எந்த ஒரு
விடயத்தையும் ஆராய்ந்த பிறகே ஏற்றுக்கொள்வார்கள்.
நெருக்கமான நண்பர்கள் என ஒரு சிலர் மட்டுமே
இருப்பார்கள். பல மொழிகளை கற்றறியும் திறன் இருக்கும்.
செய்கின்ற பணிகளில் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருப்பார்கள். இவர்களை தேடி உயரிய பதவிகள் வரும்.
தங்களின் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக
இருப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் அதிகம் ஈடுபாடிருக்கும்
ஈடுபடுவீர்கள். தீர்க்காயுள் உண்டு. அசுவினி நட்சத்திரத்தில்
பிறந்த நீங்கள் எதிலும் முதலிடத்தில் இருக்கவே
விரும்புவீர்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சாதகமாக
இருக்கும் பட்சத்தில் போலீஸ், ராணுவம் போன்ற
துறைகளில் சேர்ந்து சிறப்பான சாதனைகள் புரிய
வாய்ப்புகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய
அஸ்வினி தேவர்கள் தேவலோக மருத்துவர்கள் என்பதால்
ஒரு சிலர் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் மற்றும்
அவர்களுடைய உழைக்கும் சக்தி மற்றும் கவனம்
முழுவதையும் வேலையில் அல்லது விளையாட்டு போன்ற
தான் ஈடுபட்டு கொண்டிருக்கும் துறையில் செலுத்தி
வெற்றிபெறுவார்கள். எதிலும் வேகமாக செயல்பட

11
துடிப்பவர்கள் (கார், பைக்கில் மிக வேகமாக செல்வது
இவர்களுக்கு பிடிக்கும்). தீயணைப்பு, அறுவை சிகிச்சை
மருத்துவம், மாந்திரிகம், ஆராய்ச்சி போன்ற துறையில்
ஆர்வம் மிகுந்தவர்கள். எப்பொழுதும் எதாவது ஒரு செயலில்
தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பார்கள். அமைதியாக ஒரு
இடத்தில் அமர்ந்து இருப்பது என்பது இவர்களுக்கு
ஒத்துவராது.

அசுவினி முதல் பாதம்: (இது செவ்வாய் கிரகத்தின் அம்சம்)


குடும்பப் பற்று, போர் வீரனைப் போன்ற வீரம், முரட்டுப்
பிடிவாதம், அபாரமான தன்னம்பிக்கை, பொருள்களிடமும்
பெண்களிடமும் விருப்பம், எல்லாவற்றையும் அனுபவித்து
வாழ வேண்டும் என்ற ஆசை போன்றவை இதற்குரிய
குணங்கள். அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில்
பிறந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாக
இருப்பார்கள். வாழ்க்கையில் தனது சொந்த உழைப்பால்
முன்னேறுபவர்களாக இருப்பார்கள். வசதியாக வாழ அதிக
செலவு செய்தாலும் பிறருக்கு எந்நேரத்திலும் உதவுவார்கள்.
இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள்
அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அடிக்கடி ஏற்ற
இறக்கங்களைச் சந்தித்தாலும், அடிப்படை வசதிகளுக்கு
எந்தக் குறையும் ஏற்படாது.

நட்புக்கு எப்போதும் மிகுந்த மரியாதை தருவார்கள்.


நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். மேலும் இந்த

12
நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல
நிலையில் இருந்தால் இவர்கள் கடின உடல் உழைப்பில்
நம்பிக்கை கொண்டவர்கள்,எந்த ஓர வஞ்சனையும் கர்வமும்
கொள்ளாமல் பக்க விளைவுகளை நினைத்துபார்க்காமல்
தன்னை சார்ந்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க
போராடும் மனப்பான்மை மற்றும் அவர்களின்
பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் மனப்பான்மை
கொண்டவர்கள், சந்திரன் தீய கிரக சேர்க்கையில் அல்லது
பார்வையில் இருந்தால் இவர்களுக்கு சண்டை போடுவது
மற்றும் தன்னை சுற்றி பிரச்னை உண்டாக்குவது அல்லது
பிரச்சனைகளை ரசிப்பது போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாக
இருக்கும்.

அசுவினி 2-ம் பாதம்: (சுக்ரனின் அம்சம்) கலையில் ஈடுபாடு,


பணம் சேர்ப்பதில் ஆர்வம், சிற்றின்ப ஈடுபாடு, புகழில்
விருப்பம் போன்ற குணங்கள் இருக்கும். அசுவினி
நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களைக்
கவரும்படியான தோற்றத்துடன் காணப்படுவார்கள். மிக
சிறந்த உயர் கல்வி கற்கும் யோகம் இந்த பாதத்தில்
பிறந்தவர்களுக்கு உண்டு. அதிகளவில் நண்பர்களைப்
பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு மிக இளம் வயதிலேயே
வசதியான சொந்த வீடு, வாகன வசதிகள் போன்றவை
அமையும். இந்த அஸ்வினி 2 ஆம் பாதத்தில்
பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணமே
நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. தங்களின்

13
குழந்தைளுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற
எண்ணம் கொண்டிருப்பார்கள். இந்த பாதத்தில்
பிறந்தவர்களின் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில்
இருந்தால் இவர்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து
நிதானமாக செய்யும் மனப்பான்மை
கொண்டவர்கள்..பிறருக்கு உதவி செய்யும் போது கூட
அனைத்து விளைவுகளையும் நிதானமாக யோசித்து
செய்பவர்கள் ஆனால் ஒரு செயலை செய்ய ஆரம்பித்து
விட்டால் அதை எப்படியும் வெற்றியுடன் முடித்துவிட சதா
யோசித்து கொண்டே இருப்பார்கள். நல்ல வழியில் மட்டுமே
இவர்களின் செயல்பாடு இருக்கும். சந்திரன் தீய கிரக
சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு
யோசிக்கும் திறமை நன்கு இருந்தாலும் அது
அடுத்தவர்களுக்கு உபயோகமாக இருக்காது. சிலர் தீய
வழிகளில் கூட தங்கள் கவனத்தை செலுத்த நேரிடும்.

அசுவினி 3-ம் பாதம்: (புதனின் அம்சம்) கல்வி, தெய்வ பக்தி,


ஆன்மிக ஈடுபாடு, உடல் சுகம், சாமர்த்தியம், தலைமை
தாங்கும் திறமை இதற்குரிய தனிக் குணங்கள்.
அஸ்வினி 3 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் நல்லவனுக்கு
நல்லவனாகவும், வல்லவனுக்கு வல்லவனாகவும்
இருப்பார்கள். அனைவரும் உங்களை விரும்பும் வகையில்
உங்கள் செயல்பாடுகள் இருக்கும். தங்களின் சிறந்த
பேச்சாற்றலால் தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்து
கொள்வார்கள். கணிதம், வானவியல், ஜோதிடம்

14
ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமிருக்கும். பெற்றோர்களுக்கு
மிகுந்த மரியாதை தரக்கூடியவர்களாக இருப்பார்கள். எந்த
ஒரு விடயத்தை பற்றியும் அறிவுபூர்வமாக வாதம்
செய்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். பலர்
வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகே
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை
கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் வசதி
வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், எப்போதும் எளிமையாக
இருப்பதையே விரும்புவார்கள். சந்திரன் நல்ல நிலையில்
இருந்தால் இவர்கள் உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை
கொண்டவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு
மருத்துவம், உடற்பயிற்சி, யோகாசனம் போன்ற உடல்நலம்
சார்ந்த அறிவுரைகளை கூறுவார்கள் , விளையாட்டு மற்றும்
வீரதீர செயல்களில் தங்களை ஈடுபடுத்தி அடுத்தவர்களுக்கு
தங்கள் அனுபவத்தை சொல்லும் மனப்பான்மை
கொண்டவர்கள். பிற்காலத்தில் பலவிதமான அனுபவங்கள்
மூலம் தொழில் துவங்கும் சாத்தியம் இவர்களுக்கு
உண்டு.தாய் அல்லது தாய் போன்றவர்கள் மூலம் நல்ல
அறிவுரைகள் கிடைப்பது மற்றும் தாயின் ஆதரவு
இவர்களுக்கு அதிகம் இருக்கும். சந்திரன் தீய கிரக
சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு
மேற்கூறிய பலன்கள் முழுவதுமாக சரியாய் அமைந்து
விடுவதில்லை. இதற்கு எதிர்மாறான குனங்களும்
அமைவதுண்டு.

15
அசுவனி 4-ம் பாதம்: (இந்தப் பாதத்திற்கு சந்திரன் அதிபதி)
உணர்ச்சிவசப்பட்டு வாழ்பவர், தார்மிகச் சிந்தனை உள்ளவர்,
திறமையும், நேர்மையும் உள்ளவர்கள் இந்தப் பாதத்தில்
பிறந்தவர்கள். அஸ்வினி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில்
பிறந்தவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள்.
இவர்களை சூழ்ந்து எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து
கொண்டேயிருக்கும். விலை உயர்ந்த நவீன ரக ஆடை,
ஆபரணங்களை அணிவதில் மிகுந்த ஆர்வம்
கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அழகிய
உடலமைப்பு இருக்கும். மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம்
மற்றும் முக கவர்ச்சி இருக்கும். பால் கொண்டு
செய்யப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் விரும்பிச்
சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். அதிக தெய்வ பக்தி
கொண்டவர்களாக இருப்பார்கள். ஏழை எளியவர்களுக்கு
உதவி செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டிருப்பார்கள்.
எந்த ஒரு புதிய விடயத்தையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம்
அதிகமிருக்கும்.

இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல நிலையில்


இருந்தால் இவர்கள் தங்கள் சுய அறிவை அதிகம்
பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். அதே நேரம் தங்கள்
அறிவை மிகுந்த ஈடுபாட்டுடன் எதிலும் உபயோகித்து அந்த
செயலில் வெற்றி காண்பவர்கள், அதே நேரம் அந்த
செயலில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்றால் அதை
நினைத்து அதிகம் வருந்துவார்கள். ஏனென்றால்

16
இவர்களுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகம்
கிடைத்திருக்கும் எனவே எதிலும் தாய்மை பண்புடன்
செயல்படுவார்கள்.

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம் விஷ்ணுவின் திருநாமத்தைப் போல


அமைந்த 3 நக்ஷத்திரக் கூட்டம். இதுவும் மேஷ ராசியில்
அமைகிறது. ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்ற
பழமொழி உண்டு. உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும்,
சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள் இவர்கள்.

பரணி நட்சத்திரம் ராசி நாதன் செவ்வாய். இந்த நக்ஷத்திர


அதிபதி – சுக்கிரன் - Advertisement - பொதுவான குணங்கள்:
வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு,
சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், சுயநலம்,
தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும்
உள்ள பண்பு ஆகியவை இந்த நக்ஷத்திரத்துக்குரிய
பொதுவான குணங்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,
சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின்
அதிகத்திற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மேலும்
பூமிக்காரகன் செவ்வாயின் ராசியில் பிறந்திருப்பதால் எந்த
ஒரு விடயத்திலும் தனித்து செயல்படவே
விரும்புகிறவர்களாகவே இருப்பார்கள். –

17
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பிறருக்கு தானம் தருமம்
செய்வதில் விருப்பம் அதிகம் எனவே. தான் கஷ்டப்படுகிற
நிலையிலும் தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல்,
வாழ்வில் நலிவடைந்தவர்கள் மற்றும் துயருற்றவர்களுக்கு
ஆறுதல் சொல்வதுடன் கையில் இருப்பதையும் கொடுத்து
உதவும் மனிதநேயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெற்றோர்கள் மீது மிகுந்த மதிப்பும், பாசமும்
கொண்டிருப்பார்கள். அவர்களின் இறுதி காலம் வரை நன்கு
பராமரிப்பார்கள். சில பண்டைய ஜோதிட சாஸ்திர
நூல்களில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தானம்,
தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், மிக பெரிய
செல்வந்தர்களாகவும், கலாரசிகர்களாகவும், சமுதாயத்தில்
புகழ்பட வாழ்பவர்களாகவும், தாம்பூலப் பிரியர்களாகவும்
தாம்பூல பிரியர்களாகவும் இருப்பார்கள் என குறிப்பிடுகிறது.
மேலும் சாஸ்திரங்களைச் பற்றி விளக்கம்
சொல்பவனாகவும், மிகுந்த மனோதைரியம் உள்ளவனாகவும்,
அனைத்து விஷயங்களையும் அறிந்தவனாகவும் பரணி
நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் எனவும் கூறுகிறது.
தொடங்கிய எந்த ஒரு காரியத்தையும் அது முடியும் வரை
விடாமுயற்சி மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி,
புகழ் ஈட்டுவார்கள். பொதுவாகபரணி நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் அரசனைப் போல் அல்லது அரசனுக்கு நிகரான
சுகபோக வாழ்க்கையை வாழ்வார்கள் என சுக்ர நாடி என்கிற
பழமையான ஜோதிட சாஸ்திர நூல் குறிப்பிடுகிறது. ‘பரணி

18
தரணி ஆளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப பரணி
நட்சத்திரக்காரர்கள் அரசாங்கம் மற்றும் இதர பணிகளிலும்
அதிகபட்ச அதிகாரங்கள் பெற்ற பதவியில் அமர்வார்கள்.
சிறந்த ஆளுமை மற்றும் நிர்வாக திறன்
கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சூழ்நிலை மற்றும்
மனிதர்களின் தன்மைகளுக்கேற்ப செயல்பட்டு காரியங்களை
வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். மற்றவர்கள்
கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தாலும்,
நடத்தைகளை வெளிப்படுத்தினாலும் அமைதியிழக்காமல்
சூழ்நிலையை கச்சிதமாக கையாள்வார்கள். கலாரசனை
மிகுந்த சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் பரணி
நட்சத்திரக்காரர்கள் இருப்பதால் இசையில் மிகுந்த ஈடுபாடு
இருக்கும். மேலும் ஓவியம், நாட்டியம் போன்றவற்றில்
தங்களையே மறந்து விடும் அளவிற்கு ஈடுபாடு மற்றும்
திறமைகளை கொண்டிருப்பார்கள். நடை, உடை,
பாவனையில் ஒரு தனி தன்மை இருக்கும். வாசனைத்
திரவியங்கள் பயன்படுத்துவதில் மிகுதியான நாட்டம்
உடையவர்களாகவும், விலையுயர்ந்த ஆடம்பர உடைகளை
அணிவதில் மிகவும் விருப்பமுள்ளவர்களாகவும்
இருப்பார்கள். உணவு உண்பதில் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
ஆகிய பரணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகவும்
விருப்பமானதாகும். பசியை போக்க வேண்டும் என்கிற
எண்ணம் இல்லாமல் எந்த ஒரு உணவையும் மிகவும்
ரசித்துச் சாப்பிடும் குணம் பரணி நட்சத்திரக்காரர்கள்

19
கொண்டிருப்பார்கள். ருசியான உணவை சமைத்தவர்களைப்
பாராட்டவும் செய்வார்கள். குழந்தை பருவத்திலேயே மிகுந்த
சாமர்த்தியசாலித்தனம் இருக்கும். ஆசிரியர்கள், மற்றவர்கள்
கூறுவதை அப்படியே கேட்காமல், ஆறாம் அறிவால்
சிந்தித்து மனதுக்குத் சரியென தோன்றுவதைப் பின்பற்றக்
கூடியவர்கள். கல்வியில் மிகுந்த திறமைசாலியாக
இருப்பார்கள். எனினும் முதல் தரமான மதிப்பெண்களை
பெறாத சராசரி மாணவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை
உணர்வு கொண்டவர்கள் என்பதால் தங்களை
சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்து
கொண்டேயிருப்பார்கள். வாழ்வில் எதிர்ப்படும் எந்தப்
பிரச்னைகளையும் சுலபமாக எடுத்துக்கொள்வார்கள்.
வாழ்வில் சோர்ந்திருக்கும் நபர்களுக்கு தங்களின்
பேச்சாற்றலால் உத்வேகம் தரும் ஆற்றல் பரணி
நட்சத்திரக்கார்களுக்கு உண்டு. வெளியூர், வெளிநாடுகள்
போன்றவற்றிற்கு பயணம் செய்வது பரணி
நட்சத்திரகாரர்களுக்கு விருப்பமான ஒன்று. கடல், மலை,
அருவி, காடுகள், போன்ற இயற்கையின் அற்புதங்களில்
மனதை தொலைப்பவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு
விடயத்திலும் பிறருக்கு முன்மாதிரியாக நடந்து
கொள்வார்கள். உயரிய பதவிகளிலிருந்தாலும் பரணி
நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குக் கீழே இருப்பவர்களை
சாதுர்யமாக வேலை வாங்குவார்கள். பணியாளர்களிடம்
கண்ணியமாக நடந்து கொள்வார்கள். மிகுந்த நஷ்டத்தில்

20
இயங்கும் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை
லாபகரமானதாக மாற்றும் திறன் பரணி
நட்சத்திரக்காரர்களிடம் உண்டு. காதல் நாயகனான
சுக்கிரனுக்குரிய நட்சத்திரம் என்பதால் பரணி
நட்சத்திரக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமிருக்கும்.
மனிதர்கள், பணம் அல்லது ஆடம்பர பொருட்கள் என
எதையாவது காதலித்து கொண்டேயிருப்பார்கள். குடும்பத்தில்
மனைவி, மக்களின் தேவையறிந்து நடந்து கொள்வார்கள்.
பரணி நட்சத்திரகாரர்களுக்கு சொந்த வீடு, வாகனம்
போன்றவை வெகு சுலபமாக அமையும். இருபத்தேழு
வயதுக்குள்ளேயே பரணி நட்சத்திரக்காரர்கள்
பெரும்பாலானவர்கள் செல்வ சுகங்களைச்
சேர்த்துவிடுவார்கள் பல ஜோதிடர்களின் அனுபவபூர்வமான
கருத்தாக இருக்கிறது. 34 முதல் 41 வயதுக்குள் வாழ்வில்
மிகுந்த சாதனைகள் செய்வார்கள். பரணி நட்சத்திரக்காரர்கள்
வணிகவியல், பல் , கண், காது மருத்துவத் துறைகள்,
வணிக மேலாண்மை, ஃபைனான்ஸ் துறை ஆகியவற்றில்
மிளிர்வார்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் வயதான
காலத்திலும் கௌரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள்
போன்றவற்றை பெறுவார்கள். உடல் பருமன், ஹார்மோன்,
டான்ஸில் போன்ற உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு
நீங்கும். பொதுவாக பரணி நட்சத்திரக்கர்களுக்கு நீண்ட
ஆயுள் உண்டு.

21
பரணி நட்சத்திரம் முதல் பாதம்: (இது சூரியனின் அம்சம்)
அழகு, சுகபோகத்தில் பிரியம், எல்லாம் தெரிந்ததாக
எண்ணம், நல்ல பேச்சுத் திறமை, எதையும் தனக்குச்
சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம், கோபதாபம்,
பொறுமையில்லாத குணம் ஆகியவை முக்கிய இயல்புகள்

பரணி நட்சத்திரம் 2-ம் பாதம்: (இது புதனின் அம்சம்) குடும்ப


வாழ்க்கையில் பற்று, பணம் சேர்ப்பதில் விருப்பம், ஆடை
அணிகலன்களில் ஆசை, இசை ஆர்வம், திருப்தியில்லாத
மனப்பான்மை ஆகியவை இந்தப் பாதத்தில் பிறந்தவர்களின்
குண இயல்புகள்.

பரணி 3-ம் பாதம்: (சுக்கிரன் இதன் அம்சம்) உற்சாகம்,


மகிழ்ச்சி, புத்திகூர்மை, அபார ஞாபக சக்தி, ஜெயிக்கும்
எண்ணம், பிறரை நம்பாத தன்மை போன்றவை
இயல்புகளாக அமையும்.

பரணி நட்சத்திரம் 4-ம் பாதம்: (செவ்வாயின் அம்சம்)


தலைமை தாங்கும் தன்மை, அலங்காரத்திலும்
ஆடம்பரத்திலும் விருப்பம், சலனமான சிந்தனை, சுயமாக
முடிவெடுக்க முடியாத தயக்கம், பொறாமை, நன்றி இன்மை
போன்றவை.

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த


நட்சத்திரம். இது கத்தி போல் அமைந்துள்ள 6 நக்ஷத்திரக்

22
கூட்டங்கள் இவை. இதன் முதல் பாதம் மேஷ
ராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும்
அமையும். இந்த நக்ஷத்திரத்தை அக்னி சம்பந்தமான
நக்ஷத்திரம் என்றும் சொல்லுவார்கள். இந்த ராசிநாதன்
செவ்வாய் அல்லது சுக்கிரன். நக்ஷத்திர அதிபதி சூரியன்.
பொதுவான குணங்கள்: - Advertisement - மகிழ்ச்சியை
விரும்புபவர்கள், நேசமும் நட்பும் உள்ளவர்கள், உயரிய
கொள்கைகள் உள்ளவர்கள், நல்ல தோற்றம் உள்ளவர்கள்,
சட்டென கோபம் வருவதும் வந்த கோபம் உடனே
மறைவதும் இவர்களின் இயல்பு. நல்ல நண்பர்கள்.
நேர்மையான எதிரிகள். எதைச் செய்தாகிலும் நினைத்ததைச்
சாதிக்கும் எண்ணம் இருக்கும். சுதந்திரமானவர்கள். பிடிவாத
சுபாவம் இருக்கும். ஆணவமும், கர்வமும் இருக்கும். 27
நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது
கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. மிக உயரிய அரசாங்க
பதவிகளையும், உட்சபட்ச அதிகாரங்கள் பெற்ற
பணிகளையும் செய்பவர்களாக கார்த்திகை
நட்சத்திரக்காரர்கள் இருக்கின்றனர். கார்த்திகை
நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தை மேஷ ராசியின்
அதிபதியான செவ்வாய் பகவானும், 2, 3, 4 – ம் பாதங்களைக்
ரிஷப ராசிக்குரிய சுக்கிர பகவானும் ஆதிக்கம்
செலுத்துகின்றனர். - Advertisement - உலகில் அனைத்து
விடயங்களில் இருக்கும் நன்மை, தீமைகளை நன்கு அலசி
ஆராய்பவர்களாகவும். எந்த ஒரு பிரச்சனையிலும்

23
எல்லாவற்றையும் கேட்டறிந்து நியாயமான தீர்ப்பை
வழங்கும் நீதிபதியாகவும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்
விளங்குகிறார்கள். மேலும் கல்வி மீது மிகுந்த
ஆர்வமுள்ளவர்களாகவும், சிறந்த குணங்களை கொண்ட
குணவனாகவும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
மிளிர்கிறார்கள். நட்சத்திர மாலை என்கிற பழைய ஜோதிட
சாஸ்திர நூல் கூறுகிறது. அழகிய தோற்றமும்,
வலிமையான உடலும், உஷ்ண தன்மை கொண்டவர்களாக
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். முகத்தில்
தேஜஸ் இருக்கும். மிகுவும் புகழ் பெறக்கூடியவர்களாகவும்
இருப்பார்கள். குறைந்த நேரமே தூங்க கூடியவர்கள்.
அரசர்களின் நட்பையும், அதனால் வாழ்வில் பல
நன்மைகளையும் பெறுவார்கள். இனிப்பு பண்டங்களை
மிகவும் விரும்பி உண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாகச்
செயல்படுபவர்கள். நல்ல உயரமும், நடுத்தர உடல் வாகும்,
பரந்த நெற்றியும் கொண்டவர்கள். எப்போதும்
இன்முகத்துடன் இருப்பார்கள். தசை பலத்தைவிட எலும்பு
பலம் உங்களுக்கு அதிகம். எதையும் நேரடியாகவும்,
வெளிப்படையாகவும் பேசும் குணம் கொண்டவர்களாக
இருப்பார்கள். குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தில்
மிகுந்த முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். சூடான
உணவுகளை அதிகம் விரும்பி உண்பார்கள். எந்த ஒரு
சூழ்நிலையிலும் பழைய உணவுகளைத் தொடக்கூட

24
மாட்டார்கள். பசி பொறுக்காதவர்கள். வீரக்கலைகளில்
ஆர்வமும், தேர்ச்சியும் பெறுவார்கள். காதல் போன்ற
விடயங்களிலிருந்து கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்
விலகியே இருப்பார்கள். திருமண வாழ்க்கையிலோ கறாராக
இருப்பார்கள். வாழ்க்கை துணையிடம் கூட எதிலும் விட்டுக்
கொடுத்துப்போக மாட்டார்கள். எங்கேயும், எப்போதும்
கொண்ட கொள்கையை விடாப்பிடியாக கடைபிடிப்பவர்களாக
இருப்பார்கள். குழந்தைகளை மிக சிறந்த முறையில்
வளர்ப்பார்கள். தேவைக்கு அதிமான உடைகள், இன்ன பிற
பொருட்களை சேர்த்து வைக்கும் பழக்கம் கார்த்திகை
நட்சத்திரக்காரர்களிடம் அதிகம் காண முடியாது. பிறர்
பொறாமைப்படும் அளவிற்கு வசதிகள் இருந்தாலும்
எளிமையாக, யதார்த்தமாக இருப்பார்கள். தங்கள் சக்திக்கு
முடிந்ததை எப்பாடு பட்டவாது செய்து முடிப்பதில்
திறமையானவர்கள். வாழ்க்கையில் வீணான கனவுகள்,
கற்பனைகளில் நேரத்தை கடத்த மாட்டார்கள் கார்த்திகை
நட்சத்திரத்தினர். அதீதமான தெய்வ பக்தி இருக்கும். அதே
நேரம் அந்த தெய்வ பக்திக்கு நிகரான தாய், தாய் நாடு, தாய்
மொழி பற்று, பாசம் இருக்கும். 33 வயது காலத்திற்கு பிறகு
கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் வாழ்வில் ஏற்றங்கள்
உண்டாகும். முன் பின் அறிமுகமில்லாதவர்களின் நட்பால்
சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். மலேரியா,
இதயநோய், ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள்
உங்களை பாதித்தாலும், மீண்டும் பழைய உடல்

25
ஆரோக்கியத்தை பெறுவீர்கள். வாழ்வில் ஒரு தனிப்
பாதையை அமைத்துக்கொண்டு பயணிக்கும் நீங்கள், நீண்ட
காலம் வாழ்பவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்
இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் மற்றும் விவாதம் புரியும்
திறன் இருக்கும். அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த
பலர், சிறந்த வழக்கறிஞராகவும், பள்ளி ஆசிரியராகவும்,
கல்லூரிப் பேராசிரியராகவும் திகழ்கிறார்கள். ஒரு சிலர்
மருத்துவர், மக்களுக்கு சமூக சேவை செய்யக்கூடிய பெரிய
பதவியை வகிக்கும் தலைவர்கள், அதிகரிகளாகவும்
இருப்பார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலர்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பது
தற்செயலான ஒன்றல்ல. சித்தர்கள் மற்றும் அரசர்களில்
சிலர் மேஷ ராசியில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் என கூறப்படுகிறது. 2, 3, 4-ம் பாத, ரிஷப
ராசியில் பிறக்கும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மக்களை
வழிநடத்திச் தலைமை குணம் பெற்றிருப்பார்கள். பிறருக்கு
பணிந்து செய்யும் வேலைகளை அதிக காலம் செய்ய
மாட்டார்கள். அதையும் மீறி பணியிடங்களில் இவர்களின்
மீது அதிகாரம் செலுத்தினால் உடனே வேலையிலிருந்து
விலக தயங்க மாட்டார்கள். இந்த நட்சத்திரத்தினர் சிலர்
மத்திய வயதில் சொந்த நிறுவனங்களை நிறுவி
நடத்துவார்கள். குறிப்பாக உணவு, கெமிக்கல் சம்பந்தமான
தொழில், வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கிருத்திகை
நட்சத்திரம் முதல் பாதம்: இது குருவின் அம்சம் கொண்டது.

26
இதில் பிறந்தவர்கள் செல்வத்தை விரும்புபவர்கள். நல்ல
ஞானம் உள்ளவர்கள். தந்திரத்தால் வெல்பவர்கள். சுய
கௌரவம் மிக்கவர். புகழை விரும்புபவர்கள்.

கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம்: இந்தப் பாதத்திற்கு சனி


பகவானின் அம்சம் உண்டு. இதில் பிறந்தவர்கள் ஆசை,
பாசம், பற்றுள்ளவர்கள். உயரிய நோக்கங்களை அடையப்
போராடுபவர்கள். வீரம் மிக்கவர்கள், தற்பெருமை
கொள்பவர்கள்.

கிருத்திகை நட்சத்திரம் 3-ம் பாதம்: இதுவும் சனி பகவானின்


அம்சமுடையது. இதில் பிறந்தவர்களுக்குப் பேராசை,
பணவெறி, எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற
விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு
போன்றவை இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரம் 4-ம் பாதம்: இது குருவின் ஆதிக்கம்


உடையது. அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல
இயல்புகள் இதில் அடங்கும். தர்ம சிந்தனையும், இரக்க
குணமும், தெய்வ பக்தியும் இந்தப் பாதத்தில்
பிறந்தவர்களின் சிறப்பு அம்சங்கள்.

ரோகிணி நட்சத்திரம்

தேர் வடிவில் அமைந்த 5 நக்ஷத்திரங் களின் கூட்டம் இது.


ரிஷப ராசியில் சேரும் நக்ஷத்திரம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்
இந்த நக்ஷத்திரத்தில்தான் அவதரித்தார்.

27
இது ஒரு சிரேஷ்டமான நக்ஷத்திரம். இதன் ராசிநாதன்
சுக்ரன், நக்ஷத்திர அதிபதி சந்திரன். - Advertisement -
பொதுவான குணங்கள்: இதில் பிறந்தவர்கள்
சுதந்திரமானவர்கள். சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பவர்கள்.
பாசமுள்ளவர்கள். நேர்மையானவர்கள், சௌகர்யம்,
சௌபாக்யம் இரண்டிலும் ஆசை உள்ளவர்கள், தலைமை
தாங்கும் திறமை, கோபதாபம் உள்ளவர்கள். பொதுவாக
நல்லவர்கள். பிறர் நலம் விரும்புபவர்கள். மற்றவர்களைச்
சார்ந்து வாழ்பவர்கள். இவை ரோகிணி நட்சத்திரத்தின்
பொதுவான குணங்களாகும். ரோகிணி நட்சத்திர
சிறப்பியல்புகள் - Advertisement - பிரம்ம தேவரால்
நிர்வகிக்கப்பட்டு, நிலவின் கோள் செல்வாக்கால் ரோகிணி
நட்சத்திரம் வழிநடத்தப்படுகிறது. ரோகிணி நட்சத்திரம்
உயிர்தன்மை, இயற்கை வளர்ச்சியின், உயிர்களின்
பெருக்கம் ஆகிய குணாம்சங்களை வெளிப்படுத்துகிறது.
இந்த ரோகிணி நட்சத்திரத்துடன் தொடர்புடைய சிவப்பு
தன்மை, அதீத உற்சாகம் மற்றும் உற்சாகத்தின் பொதுவான
தன்மையை வெளிப்படுத்துகிறது. ரோகிணி நட்சத்திரத்தின்
ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வெளிப்படையான அமைதி
மற்றும் மென்மையான போக்கும் கொண்ட ஆளுமைகளை
கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரோகிணி
நட்சத்திரக்காரர்களுக்கு கவர்ச்சிகரமான முகம் மற்றும் இதர
உடல்ரீதியான அம்சங்கள் இருக்கும். ஒரு சூழ்நிலையை
தங்களுக்கு சாதகமாக திருப்புவதில் கைதேர்ந்தவர்களாக

28
இருப்பார்கள். வார்த்தைகளை விட செய்கைகளின் மூலமாக
பல விடயங்களை தெரியப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சிறந்த கற்பனை வளமும்,
படைப்பாற்றல் திறன் இருக்கும் அதே நேரம் அதீத சிந்தனை
மற்றும் மன சஞ்சலங்கள் காரணமாக. அமைதியற்ற
நிலையும் ஏற்பட்டு தவிப்பார்கள் பல சமயங்களில் தங்களின்
கற்பனை உலகத்தில் சஞ்சரித்து மனக்கோட்டை கட்டிக்
கொண்டிருப்பார்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்களின் அழகு
மற்றும் அலங்கார ஆடம்பர வாழ்க்கை பிறரை
பொறாமைப்பட வைக்கும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
பலர் கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்கள்.
தங்களின் சிறந்த படைப்பாற்றல் மற்றும்
புத்திசாலித்தனத்தால் வாழ்வில் உயர்ந்த நிலைகளை
அடைவார்கள். எத்தகைய தவறுகளையும் பொறுத்துக்
கொள்ளும் சகிப்புத் தன்மை இந்த ரோகிணி
நட்சத்திரக்காரர்களுக்கு அதிகம். தனக்குப் பிறர் எவ்வளவு
தீமைகள் செய்தாலும், அவர்களை பழிவாங்கும் எண்ணம்
இல்லாமல் அவர்களுக்கு மீண்டும் உதவக்கூடிய பரோபகார
மனம் கொண்டவர்கள் ரோகிணி நட்சத்திரக்காரர்கள். இந்த
நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திர பகவான் இருப்பதால்
வெகு சுலபத்தில் பிறர் செய்த தவறுகளை மன்னித்து,
மறப்பார்கள் மனதில் எத்தகைய வஞ்சத்தையும் வைத்துக்
கொள்ள மாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அமைதியான வாழ்க்கை வாழ்வதையே அதிகம்

29
விரும்புவார்கள். பிறரை மிரட்டும் தொனியில் ஒரு போதும்
பேச மாட்டார்கள். எப்போதும் நேர்மையாக இருப்பதை
விரும்புவார்கள். பேச்சில் ஒளிவு மறைவு என்பதே
இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராகவும்,
அளவற்ற செல்வம் கொண்ட வாழ்க்கையையும்
வாழ்வார்கள். இவர்களில் சிலர் கவிதை, கட்டுரை, கதை,
நாடகம் ஆகியவற்றை எழுதுவார்கள். ஜன வசீகரம் நிறைந்த
நட்சத்திரம் என்பதால் திரைத் துறையில் பெரிய
கலைஞர்களாக இருப்பார்கள். பள்ளி, கல்லூரி கலைப்
போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, பாராட்டு பெறுவார்கள்.
எந்த ஒரு விடயத்திலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அதிகம் இருக்கும். அதிலும்
குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் தன்
வாழ்க்கை துணையிடம் அனைத்து விடயங்களிலும்
விட்டுக்கொடுத்துப் விட்டுக்கொடுத்து செல்பவர்காளாக
இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,
திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசை
கலைஞர்கள், படைப்பாற்றல் இயக்குநர்களாக
மாறிவிடுவார்கள். புகைப்படம் எடுத்தல், திரைப்பட எடிட்டிங்
ஆகிய தொழில்களிலும் சிறந்து விளங்குபவர்களாக
இருக்கிறார்கள்.மேலும் விவசாயம், சுற்றுச்சூழல் தொடர்பான
தொழில்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மிகப்பெரும்
தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். விளம்பர துறை, கதை
எழுதுதல், மார்க்கெட்டிங் மற்றும் நகை வடிவமைத்தல்

30
உட்பட தொழில்களில் மிகப்பெரிய உச்சங்களை
தொடுவார்கள் . ரோகிணி நட்சத்திரம் 1-ஆம் பாதம் ரோகிணி
நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷ
ராசிக்குரிய செவ்வாய் பகவானின் ஆளுகைக்குட்பட்ட
வர்களாக இருக்கிறார்கள். சந்திரன், செவ்வாய் இந்த இரு
கிரகங்களும் எதிர்ரெதிர் தன்மை கொண்டவை என்பதால்
பெரும்பாலான நேரங்களில் மதில் மேல் பூனை போன்ற
நிலையில் இருப்பார்கள். சுகபோகங்களை அனுபவிக்க
வேண்டும் என்கிற பேராவல் இருக்கும். இந்தப் பாதத்தில்
பிறந்தவர்கள் கொடை உள்ளம் கொண்டவர்களாக
இருப்பார்கள். அதே நேரம் தேவையற்ற பொருட்களை
வாங்கி பணத்தை வீணடிக்கவும் செய்வார்கள். இவர்களின்
மனதில் எப்போதும் ஒரு போராட்டம் இருந்துகொண்டே
இருக்கும். பூர்வீக சொத்துக்களை அனுபவிக்கும் யோகம்
இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் உண்டு.
இவர்களுக்கு காவல்துறை, ராணுவம் போன்ற துறையில்
விருப்பம் இருக்கும். ரோகிணி நட்சத்திரம் 2-ஆம் பாதம்
ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
ரிஷ்ப ராசியின் அதிபதியான சுக்கிர பகவானின்
ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக இருப்பதாலும் ரோகிணி
நட்சத்திரத்தின் அதிபதியான சந்திரன் சுக்கிரனுக்குரிய ரிஷப
ராசியில் உச்சம் அடைகிறார் என்பதாலும் இந்தப் பாதத்தில்
பிறந்தவர்களுக்கு வாழ்வில் செல்வ வளத்திற்கு என்றும்
குறைவு ஏற்படாது. புதிய ஆடை, ஆபரணங்கள், சொகுசு

31
வாகனம், வசதியான வீடு போன்றவை சிறு வயதிலேயே
அனுபவிப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் கலை
ஆர்வத்தோடு ரசித்து செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.
பிறரை கவரக் கூடிய அழகிய முகத்தோற்றம், கவர்ச்சியான
உடல்வாகு கொண்டவர்களாக இருப்பார்கள். சாந்தமாகவே
இருந்தாலும் நெருக்கடியான சமயங்களில் வீராவேசத்தோடு
செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். சுகபோகங்களை
அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகம்
கொண்டவர்கள். தர்ம சிந்தை, இரக்க குணம், பொது
நலத்தில் ஈடுபாடு இந்த பாதத்தில் பிறந்தவர்களிடம்
இருக்கும். எதையும் எளிதில் விரும்புவார்கள். விரும்பியது
கிடைக்காவிட்டால் பெரும் துன்பம் அடைவார்கள். ரோகிணி
நட்சத்திரம் 3-ஆம் பாதம் ரோகிணி நட்சத்திரத்தின்
மூன்றாவது பாதத்தின் மீது மிதுன ராசிக்கு அதிபதியான
புதன் பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே இந்த
பாதத்தில் பிறந்த ரோகிணி நட்சத்திரக்காரர்கள்
இயற்கையிலேயே சிறந்த சிந்தனைத்திறன் மற்றும்
புத்திசாலித்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். கல்வியில்
சிறந்து விளங்குவார்கள். கணிதம், அறிவியல் போன்ற
துறைகளில் மிகப்பெரும் சாதனைகள் செய்வார்கள். ஓவியம்,
சிற்பம், நடனம் இசை போன்ற கலைகளில் ஆர்வம் அதிகம்
இருக்கும். ஒரு சிலர் இக்கலைகளில் நிபுணத்துவம் பெற்று
அதன் மூலம் பெரும் புகழும், பொருளும் ஈட்டுவார்கள்.
இந்த பாதத்தில் பிறந்தவர்கள் நடுத்தர வயதிற்குள்ளாகவே

32
மிகப்பெரும் செல்வந்தர்களாக மிளிர்வார்கள். ரோகிணி
நட்சத்திரம் 4-ஆம் பாதம் ரோகிணி நட்சத்திரத்தின்
நான்காவது பாதம் இந்த நட்சத்திரத்தின் அதிபதியான சந்திர
பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டதாக இருக்கிறது. எனவே
இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த கற்பனை வளமும்,
திடமான மனோபலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மனம் விரும்புவதை
அடைவது இவர்கள் நோக்கமாக இருக்கும். நல்லவர்கள்,
பிறர் நலம் கருதுபவர்கள், குடும்பப் பற்றுள்ளவர்கள்,
ஆசாபாசம் மிக்கவர்கள். பொறுமையாக இருந்து எதையும்
சாதிக்க விரும்புபவர்கள். எதிர்பாலினத்தவர்களிடம் காதலில்
ஈடுபடுபவர்களாகவும், பிற உயிர்களின் மீது மிகுந்த அன்பு
செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு
அதிகமிருக்கும். அரிசி, மருந்து, மீன் ஆகியவற்றின்
தொடர்புடைய வியாபாரங்களில் மிகுதியான செல்வம்
ஈட்டுவார்கள். ஒரு சிலர் அரசியல் துறையில் ஈடுபட்டு மிகப்
பெரும் பதவிகளை அடைவார்கள். பயணங்களில் அதிக
விருப்பம் உள்ளவர்கள். வெளிநாடுகளுக்கு சென்று புகழும்,
பொருளும் ஈட்டுபவர்களாக இருப்பார்கள். ரோகிணி நட்சத்திர
பரிகாரங்கள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள்
வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு
திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது
உங்களின் வாழ்வில் சிறந்த பலன்களை உண்டாக்கும்.

33
மேலும் அதே திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில்
நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு அரிசி
நிவேதனம் வைத்து, மல்லிப்பூக்கள் சமர்ப்பித்து நெய்தீபம்
ஏற்றி வழிபடுவதால் சந்திர பகவானின் நல்லருள் கிடைத்து
உங்கள் வாழ்வில் பல யோகங்கள் உண்டாகும். முக்கியமான
எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பாக உங்கள்
தாயாரிடம் ஆசிர்வாதம் பெற்று செல்வது நன்மை
உண்டாக்கும். கோயில் குளங்களில் உள்ள மீன்களுக்கு
அவ்வப்போது பொரியை உணவாக அளிக்க வேண்டும்.
உங்கள் உறவுகளில் உள்ள திருமணம் ஆகா இளம்
பெண்களுக்கு அவர்களின் பிறந்த நாள் மற்றும் வேறு
எதாவது விஷேஷ தினங்களின் போது நைல் பாலிஷ்.
ஸ்டிக்கர் போட்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றை
தானமாக கொடுப்பது சிறப்பான பலனை அளிக்கும் ஒரு
பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் ரோகிணி நட்சத்திர
தினத்தன்று உங்கள் வாழ்க்கை துணையோடு
கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவதால் உங்களின்
இல்லற வாழ்வு சீரும் சிறப்புகமாக இருக்கும். வருடத்திற்கு
ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய
திருக்கோயில்களான திங்களூர், திருப்பதி திருமலை
ஏழுமலையான் கோவில் போன்றவற்றிற்கு சென்று வழிபட
வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு
முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி
முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த

34
வெற்றிகளைத் தரும். கோடைக்காலங்களில் மற்றும்
கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர்
பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது.
மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை
தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி
அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான
பலன்களைத் தரும். ரோகிணி நட்சத்திரத்திற்குரிய
தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம்
தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல்
பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது
ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன
நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை
செய்வது சந்திர பகவானின் அருளாசி களைத் தரும்
பரிகாரமாக இருக்கிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு
அதிர்ஷ்டம் தருபவை: அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட திசை: மேற்கு அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை,
வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள் : 2, 7, 8 அதிர்ஷ்ட ரத்தினம்
: முத்து அதிர்ஷ்ட உலோகம்: வெள்ளி அதிர்ஷ்ட பறவை :
ஆந்தை அதிர்ஷ்ட ஆங்கில எழுத்துகள் : O, V அதிர்ஷ்ட
தெய்வம் : ஸ்ரீ கிருஷ்ணர்

திருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By


Satheesh -Jun 11, 2019, 08:15PM IST திருவாதிரை நட்சத்திரம்

35
மிதுன ராசியில் அடங்கும். இது ஒரே ஒரு நட்சத்திரம்
தான். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக்
கருதலாம். ‘சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப்
பெருமான் அவதரித்த நட்சத்திரம்’ இது என்பார்கள். மார்கழி
மாதம், திருவாதிரை அன்று சிவாலயங்களில் நடராஜப்
பெருமானின் தரிசனமே ஆருத்ரா தரிசனம் எனப்படுகிறது.
பொதுவான குணங்கள்: - Advertisement - நல்ல தோற்றம்,
அழகு, உடல் வலிமை உள்ளவர்கள். திடசித்தமும்,
எடுத்ததை முடிக்கும் ஆற்றலும் இருக்கும். இரக்கம், தயாள
குணம், தர்ம சிந்தனை, பிறருக்கு உதவும் தன்மை இருக்கும்.
மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்பவர்கள். கோப
தாபம் இருக்கும். அவசரப்பட்டுச் செயல்களைச் செய்வார்கள்.
தவறு நேர்ந்தால், திருத்திக் கொள்வார்கள்.
திருவாதிரை முதல் பாதம்: திருவாதிரை நட்சத்திர
சிறப்பியல்புகள்: - Advertisement - பண்டைய ஜோதிட
நூல்களில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
எவருமே வாழ்வில் தாழ்மை நிலையை அடைவது இல்லை
எனக் கூறுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில்
பிறந்தவர்களின் பேச்சு இரட்டைத் தன்மை உடையதாக
இருக்கும். ஒரு இடத்தில் ஒரு கருத்துக்கு ஆதரவு
தெரிவிக்கும் இவர்கள், மற்றொரு இடத்தில் அக்கருத்திற்கு
எதிர்ப்பை தெரிவிப்பார்கள். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்
பெரும்பான்மையான மக்களின் செல்வாக்கு பெறும்
நிலைக்கு உயர்வார்கள். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்

36
இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவதில்
வல்லவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு
நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமே தவிர,
எதிரிகள் என்பவர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள்.
இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசாமல் எல்லா வகையான
உணர்வுகளையும் உடனே வெளிக்காட்டி விடுவார்கள்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கடினமான நபர்களை போல்
காணப்பட்டாலும், இவர்களிடம் நன்கு பழகிய பின்பு
அவர்களின் இனிமையான குணங்களை பலர் தெரிந்து
கொள்வார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கொடுத்த
வாக்கை காப்பாற்ற முயற்சிப்பார்கள். தன்னை நம்பி
வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். தனக்கு
ஒரு விடயம் தெரியவில்லை என்றாலும் அது குறித்து
தெரிந்ததை போல் பேசி சமாளிப்பார்கள். திருவாதிரை
நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்த அறிவாற்றல் இருக்கும்
எடுத்துக்கொண்ட காரியங்களை முடிக்கும்வரை உணவு,
தண்ணீர் கூட அருந்தாமல் உழைப்பார்கள். சற்று சுயநல
குணங் இருந்தாலும் பிறருக்கு எத்தகைய உதவி செய்யவும்
தயங்க மாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு
செயல்படுவார்கள். விவாதங்கள் செய்வதில் வல்லவர்களாக
இருப்பார்கள். அடிக்கடி நண்பர்களுடனும், பிறருடனும்
ஏதாவது ஒரு விடயத்தை பற்றி காரசாரமாக
விவாதிப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் அது குறித்து

37
ஒரு முறை விளக்கினாலே உடனடியாக கிரகித்துக் கொண்டு
செயல்படும் சிந்தனையாற்றல், செயல்திறன் திருவாதிரை
நட்சத்திரக்காரர்களுக்கு அதிகமுண்டு. எனவே பள்ளி,
கல்லூரிகளில் கல்வியில் சிறந்து விளங்கி முதன்மையான
மதிப்பெண்கள் எடுப்பார்கள். சிறந்த கற்பனை வளம்
இருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுதல் போன்ற
எழுத்தாற்றல் தேவைப்படும் துறைகளில் சிறந்து
விளங்குவார்கள். வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ
ஆசைப் படுவார்கள். அதற்காக கடுமையாக உழைக்கவும்
செய்வார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சிலர் தங்களின் இளம் வயதிலிருந்தே குடும்பப்
பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுவார்கள். தங்களின்
உறவினர், நண்பர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று
அவர்களின் வயிறும், மனமும் குளிரும் வகையில் சிறப்பாக
உபசரிப்பார்கள். உறவினர்களின் ஆதரவை மிகவும்
விரும்புவார்கள். ரியல் எஸ்டேட், மனை விற்பனை, வீடுகள்
வாங்கி விற்பது போன்ற தொழில்களில் சிறந்த லாபங்களை
ஈட்டுவார்கள். தங்களின் வாழ்க்கைத் துணையை மிகவும்
நேசிப்பார்கள். ஆன்மீகத்தில் மிகுதியான ஈடுபாடு இருக்கும்.
பல திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு நன்மை
அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரம் 1 – ஆம் பாதம்
திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் மீது குரு
பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே இதில்
பிறந்தவர்கள் பழமையான ஆச்சாரங்களை விட்டுக் கொடுக்க

38
மாட்டார்கள். அனைத்து இடங்களிலும் ஒரு ஒழுக்கம்,
விதியைப் பின்பற்றி செயல்படுவார்கள். புதியவர்களிடம் கூட
மிக இயல்பாக பழகும் குணம் கொண்டவர்கள். எதையும்
நேர்பட பேசும்வர்களாக இருப்பார்கள். சற்று முரட்டு
குணமும் இருக்கும். தலைமைப் பதவிகளை பெறுபவர்களாக
இருப்பார்கள். பண்டைய சாஸ்திரங்கள் அனைத்தையும்
கற்றுத் தேர்ந்து பண்டிதர்களாக இருப்பார்கள். தன்னை விட
வயதில் மூத்தவர்களின் நட்பையும், வழிகாட்டுதலையும்
அதிகம் விரும்புவார்கள். பிற மொழிகளை கற்பதில் ஆர்வம்
அதிகம் இருக்கும். ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு
கொண்டவர்களாக இருப்பார்கள். சிறப்பான பேச்சாற்றல்
இருக்கும். பட்டிமன்றம், விவாதம் போன்றவற்றில்
கலந்துகொண்டு மக்களிடையே பிரபலம் அடைவார்கள். ஒரு
சிலர் ஆன்மீக சொற்பொழிவுகள் செய்து அதன் மூலம்
செல்வமும், புகழும் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையின்
மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்குப்
பொதுவாக இவர்களுக்கு குழந்தைகள் என்றாலே மிகவும்
பிடிக்கும். அவர்களுடன் நேரம் செலவழிப்பதிலும்,
விளையாடுவதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் 2 – ஆம் பாதம் திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஆதிக்கம்
செலுத்தும் கிரகமாக சனி பகவான் இருக்கிறார் இந்தப்
பாதத்தில் பிறந்தவர்களுக்கு நேர்மை குணம் செயல்பாடும்
அதிகம் இருக்கும் இந்த சூழ்நிலையிலும் சட்டதிட்டங்களை

39
மீறாமல் நடப்பார்கள் இவர்களில் சிலருக்கு கூச்சசுபாவம்
குணமிருக்கும் பெரும்பாலும் தனிமையை அதிகம்
விரும்புபவர்கள் ஆக இருப்பார்கள் மிக நிதானமாக
பேசுவார்கள் வாழ்வில் இன்பம் துன்பம் இது ஏற்பட்டாலும்
சமநிலையை இழக்காமல் இருப்பார்கள் விளையாட்டுகளில்
ஆர்வம் அதிகம் இருக்கும் ஒரு சிலர் மிகச் சிறந்த
விளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள்
பெரும்பாலான நேரம் பொறுமையாக பேசினாலும்
உணர்ச்சிவசப்படும்போது கடுமையாக பேசி பிறர் மனம்
வருந்த செய்துவிடுவார்கள். திருவாதிரை நட்சத்திரம் 3 –
ஆம் பாதம் திருவாதிரை நட்சத்திரத்தின் மூன்றாம்
பாதத்தையும் சனிபகவானே ஆள்கிறார். இந்த மாதத்தில்
பிறந்தவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல
கஷ்டமான சூழ்நிலைகளை சந்திப்பார்கள்.
நெருங்கியவர்களின் துரோகச் செயலுக்கு உள்ளாவார்கள்.
கஷ்டங்களை அதிகம் சந்தித்தவர்கள் என்பதால் உறுதியான
மனமும், பண்பட்ட குணமும் இருக்கும். எதிர்ப்பவர்களுக்கு
அவர்களின் வழியிலேயே சிறந்த பாடங்களை புகட்டுவார்கள்.
மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்களாக
இருப்பார்கள். அதீத தெய்வ நம்பிக்கை இருக்கும்.
உண்மையான தெய்வ பக்தியால் அனைத்தையும் சாதிக்க
முடியும் என்கிற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும்.
யோகிகள், சித்தர்கள், மகான்கள் பற்றி அறிந்துகொள்ள
மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

40
குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில்
அதிக ஈடுபாடு இருக்கும். இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு
உடன் பிறந்த சகோதரர்களை காட்டிலும் சகோதரிகளே
உதவிகரமாக இருப்பார்கள். பாரம்பரிய சிகிச்சை முறைகள்,
மருத்துவ மூலிகைகள் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள
முயற்சிப்பார்கள். திருவாதிரை நட்சத்திரம் 4 – ஆம் பாதம்
திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தை ஆள்பவராக
குருபகவான் இருக்கிறார். இந்த நட்சத்திர பாதத்தில்
பிறந்தவர்கள் தெய்வ கடாட்சம் நிரம்பியவர்களாக
இருப்பார்கள். இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள்
மூலம் பணம் மற்றும் இன்ன பிற பொருட்களின் லாபங்கள்
ஏற்படும். அநியாயம், அக்கிரமங்களை ஒருபோதும்
சகித்துக்கொள்ள மாட்டார்கள். கொடுமை செய்தவர்கள்,
அநியாயக்காரர்களை அடக்கி ஒடுக்கி வைப்பார்கள். மக்கள்
சேவை, மகேசன் சேவை என்கிற கொள்கை
கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் விவாதம்
செய்து வெற்றி பெறுவதென்பது இயலாத காரியமாக
இருக்கும். அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவிகளை
பெறுவார்கள். அந்த பதவிகளை தங்களின் சுயநலத்திற்காக
ஒரு போதும் பயன்படுத்த மாட்டார்கள். இந்தத் துறையில்
ஈடுபட்டால் மக்களிடம் வெகு சீக்கிரத்தில் பிரபலம்
அடைவார்கள். தங்களின் குழந்தைகள் மீது மிகுந்த பாசம்
கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை ஒழுக்கத்துடன்
வளர்த்து அவர்களால் பெருமை அடைவார்கள்.

41
சமைக்கப்பட்ட உணவுகளை விட பழங்கள், பருப்புகள்
போன்ற இயற்கையான உணவுகள் உண்பதை அதிகம்
விரும்புவார்கள். திருவாதிரை நட்சத்திர பரிகாரங்கள்:
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில்
கெடுபலன்கள் ஏற்படுவதை குறைத்து நன்மையான பலன்கள்
அதிகம் ஏற்படுவதற்கு செவ்வாய் அல்லது
சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு செவ்வரளி பூக்களை
சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி ராகு பகவானுக்குரிய
மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். பிரதோஷ
தினங்களின் போது சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பால்
தானம் தந்து வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி
தினங்களில் பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து,
நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் நன்மைகள் பல
ஏற்படும். மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர
தினத்தன்று அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது
நல்லது. புற்று நோய், தொழு நோய்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள், ஆடைகள் தானம்
அளிப்பதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மாதத்தில் வரும்
அஷ்டமி தினங்களில் பைரவர் கோயிலுக்கு பச்சை பயறு
தானியங்களை தானமளிக்க வேண்டும். பைரவரின்
அம்சமான நாய்களுக்கு அவ்வப்போது உணவளிப்பதாலும்
உங்கள் நட்சத்திர தோஷங்கள் நீங்கி அனைத்து
நன்மைகளும் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு
அதிர்ஷ்டம் தருபவை: அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய்,

42
வெள்ளி அதிர்ஷ்ட நிறங்கள் : இளம் பச்சை அதிர்ஷ்ட
எண்கள் : 2, 6, 7 அதிர்ஷ்ட ரத்தினம் : கோமேதகம் அதிர்ஷ்ட
நட்சத்திர பறவை : அன்றில் பறவை அதிர்ஷ்ட ஆங்கில
எழுத்துகள் : K, G, N, C அதிர்ஷ்ட தெய்வம் : துர்க்கை
அம்மன்

புனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -


Jun 20, 2019, 08:15PM IST புனர்பூசம் நட்சத்திரத்தை புனர்வஸு
என்றும் சொல்வார்கள். ‘புனர்’ என்றால் ‘மீண்டும்’ என்று
பொருள். ‘வஸு’ என்பது ‘சிறப்பு’ அல்லது ‘நல்லது’ என்பதைக்
குறிக்கும். ‘மீண்டும் சிறப்பு’ என்பதே இந்த நட்சத்திரத்தின்
பொருள். பகவான் ஸ்ரீவிஷ்ணு ராமனாக அவதரித்தது இந்த
நட்சத்திரத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான
குணங்கள்: - Advertisement - தெளிவான அறிவு, பற்று, பாசம்,
நேர்மை, நியாய உணர்வு, தயாள குணம், பொறுமை போன்ற
உயரிய குணங்கள் இவர்களுக்கு உரியது. நல்லதையே
நினைத்து நல்லதையே செய்பவர்கள். பிறர் நலம்
நாடுபவர்கள். ஆன்மிகத் துறையிலும், பொதுச் சேவையிலும்
ஈடுபாடு கொண்டவர்கள் பலர் இந்த நட்சத்திரக்காரர்களாக
இருப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரம் சிறப்பியல்புகள்:
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த நேர்மையான
குணமும், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்பவராகவும்
இருப்பவர்கள். இதற்கு உதாரணமாக இருப்பவர்

43
புராணங்களில் ஏகபத்தினி விரதன் எனப் புகழப்படும்
அயோத்தி சக்கரவர்த்தி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஆவார்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு
செயலையும் அடக்குமுறையால் சாதிப்பதை விட, தங்களின்
அன்பான விட்டுக் கொடுத்து செல்லும் தன்மையால்
சாதிப்பதையே விரும்புவர். இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் எப்போதும் பொய் பேசுவதை
விரும்பமாட்டார்கள். உண்மை பேசுவதால் தங்களுக்கு
லாபம் இல்லை என்றாலும் உண்மையையே பேசுவார்கள்.
இவர்களின் பேச்சில் சாதுரியம் நிறைந்திருக்கும். எதிலும்
சிக்கனத்தை கடைபிடிக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பித்த சாரீரம்
கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அடிக்கடி உடல்நலக்
குறைவு ஏற்பட்டு குணமாவார்கள். பால், நெய், தயிர் போன்ற
பால் தொடர்புடைய உணவுகளை அதிகம் விரும்பி உண்ணத்
கூடியவர்களாகவும் இருப்பார்கள். - Advertisement - புனர்பூசம்
நட்சத்திரக்காரர்கள் அழுத்தந்திருத்தமாக பேசக்
கூடியவர்களாக இருப்பார்கள். நெடுந்தூரம் நடந்து
செல்லவேண்டும் என்றாலும் அலுத்துக் கொள்ளாமல்
நடக்கும் ஆர்வம் கொண்டவர்கள். குரு பகவானின் சாரமும்
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இருப்பதால் இவர்களில்
பெரும்பாலானவர்கள் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடக்கும்
நல்ல குடிமகன்களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் அதிக
ஈடுபாடு கொண்டவர்கள். ஒரு சிலர் பிறருக்கு ஞான

44
வழிகாட்டும் ஞான குருவாகவும் உயர்வார்கள். சுலபத்தில்
உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். கோபம், அன்பு
போன்றவற்றை மறைத்து வைக்காமல் உடனடியாக
வெளிக்காட்டுபவர்களாக இருப்பார்கள். புனர்பூசம்
நட்சத்திரக்காரர்கள் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்ட
பிறகு உலகமே எதிர்த்தாலும் எக்காரணம் கொண்டும்
தாங்கள் கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்க
மாட்டார்கள். தன்மானம், சுய மரியாதைக்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுப்பவர்கள். புனர்பூசம்
நட்சத்திரக்காரர்கள் இந்த இரண்டிற்கும் பங்கம் வரும்போது
சீரம் சிங்கமாக மாறுவார்கள். தங்களுக்கு அடுத்த வேளை
உணவு கிடைக்காது என்ற போதிலும் பிறரை ஏமாற்றி
பிழைப்பது, சத்தியத்திலிருந்து விலகிய வாழ்க்கை வாழ்வது
போன்றவற்றை புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும்
செய்வது கிடையாது. பிறரிடம் இருந்து இலவசமாக
எதையும் பெற்றுக் கொள்ள மிகவும் தயக்கம் காட்டுவார்கள்.
ஆனால் தங்களால் முடிந்த எத்தகைய உதவிகளையும்
பிறருக்கு செய்த வண்ணமே இருப்பார்கள். புனர்பூசம்
நட்சத்திரக்காரர்கள் குறிப்பாக மனிதர்களின் பசியைப்
போக்கும் அன்னதானம் செய்வதில் மிகவும் விருப்பம்
கொண்டவர்கள். ஒரு போதும் தாங்கள் செய்கின்ற
உதவிகளை பிரபலப்படுத்த மாட்டார்கள். தங்களின்
திறமையான பேச்சினால் தங்களுக்குத் தேவையான பல
காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். பிற நபர்களுடன்

45
பழகுவதற்கு முன்பாக அவர்களை தங்கள் பார்வையாலேயே
அலசி அவர்களின் குணம் எப்படிப்பட்டது என்பதை ஓரளவு
யூகித்துவிடும் திறமை பெற்றவர்களாக புனர்பூசம்
நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். தங்களிடம் அதிக
நேர்மை, ஒழுக்க குணங்கள் இருப்பதால் யாருக்கும்
அஞ்சாமல் கம்பீரமாக வாழ்வார்கள். பொதுவாக
சிக்கனமானவர்கள் என்றாலும் தேவை ஏற்படும் போது
எத்தகைய செலவுகளும் செய்ய தயங்க மாட்டார்கள். தங்கள்
குடும்பத்தினரின் மன உணர்வுகளை அவர்கள் கூறாமலேயே
நன்கு புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக
எத்தகைய தியாகங்களையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
தங்களை சுற்றி உறவுகள், நண்பர்கள் கூட்டம் இருந்தாலும்
அவர்களின் மனம் மட்டும் ஏதோ ஒன்றை பற்றி தொடர்ந்து
சிந்தித்தவாறு இருக்கும். பிறருடன் இனிமையாக பழகும்
குணம் கொண்டவர்கள் என்றாலும் இவர்களாகவே
யாரிடமும் வழியே சென்று பேசி பழக மாட்டார்கள். காதல்
போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபாடு இல்லாதவர்களாக
இருப்பார்கள். அப்படி காதலில் ஈடுபட்டிருக்கும் புனர்பூச
நட்சத்திரத்தினர் தங்களின் பெற்றோர் மற்றும் உடன்
பிறந்தவர்களுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யவும்
தயங்க மாட்டார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மிகச்
சிறப்பான திருமண வாழ்க்கை அமையும். பெண்
குழந்தைகள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாக
இருப்பார்கள். பெண் தெய்வங்களையே அதிகம் விரும்பி

46
வழிபடுபவர்கள். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில்
தாங்கள் கற்ற கல்வியை விட அனுபவ அறிவைக்
கொண்டே பல சாதனைகள் செய்வார்கள். இந்த
நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலானவர்கள் அரசுப் பணிகளை
விட தனியார் துறைகளில் அதிகம் வேலை செய்பவர்களாக
இருக்கின்றனர். இந்த புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் 37
வயதிற்கு மேற்பட்ட காலங்களில் வாழ்வில் சகல
சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நீண்ட காலம்
வாழ்வார்கள். புனர்பூசம் நட்சத்திரம் 1 – ஆம் பாதம்
புனர்பூசம் நட்சத்திரத்தின் முதலாவது பாதத்தை அங்காரகன்
எனப்படும் செவ்வாய் பகவான் ஆள்கிறார். இந்த பாதத்தில்
பிறந்தவர்கள் தங்களின் தாய் மீது மிகுந்த பாசம்
கொண்டவர்களாக இருப்பார்கள். உற்றார், உறவினர்களோடு
சேர்ந்திருக்கும் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். ஆன்மீக
சொற்பொழிவுகள் ஆற்றுவதில் ஆர்வமும், திறமையும்
கொண்டிருப்பார்கள். பிற மனிதர்களின் மீது ஆதிக்கம்,
அதிகாரம் செலுத்த விரும்புவார்களே தவிர, மற்றவர்கள்
இவர்களின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க
மாட்டார்கள். இவர்களுக்கு தந்தை வழி உறவினர்களிடம்
மதிப்பும் அவர்களால் தக்க சமயங்களில் உதவிகளும்
கிடைக்கும். எப்பொழுதும் உண்மைக்காக பாடுபடுபவர்களாக
இருப்பார்கள். தங்களின் முன்னோர்களின் சொத்துக்களை
எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதில் உறுதியுடன்

47
செயல்படுவார்கள். சகோதர, சகோதரிகளுடன் இணக்கமாக
செல்வார்கள். மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில்
மிகப்பெரிய சாதனைகள் புரிந்து பிரபலமானவர்களாக
இருப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரம் 2 – ஆம் பாதம் புனர்பூச
நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தை ஆளும் கிரகமாக
சுக்கிர பகவான் இருக்கிறார். அனைத்து தரப்பு
மனிதர்களுடனும் சமமாகவும், அன்பாக பழகக் கூடிய மனம்
கொண்டவர்கள். எப்போதும் இன்முகத்துடன் இருக்கக்
கூடியவர்களாக இந்த பாதத்தில் பிறந்தவர்கள்
இருக்கின்றனர். ருசி மிகுந்த உணவுகளை அதிகம் விரும்பி
உண்பார்களாக இருப்பார்கள். அனைத்து விடயங்களிலும்
பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இவர்கள்
இருக்கின்றனர்.எதிரிகளிடமும் கண்ணியமாக நடந்து
கொள்ளும் குணம் கொண்டவர்கள். சொகுசு வாகனங்கள்
வாங்குவதையும், அதில் பயணிப்பதையும் மிகவும்
விரும்புவார்கள். பல ரகமான வாசனை திரவியங்களை பூசிக்
கொள்வதில் விருப்பம் உடையவர்கள். ஆய கலைகளில்
அதிக விருப்பமும், அதில் ஒரு சில கலைகளை நன்கு கற்று
தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள். பிற மத மனிதர்களால் மிகுந்த
ஆதாயம் பெறுபவர்களாக இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள்
இருக்கின்றனர். தங்களின் பூர்வீக சொத்துக்களை காப்பாற்ற
நீதிமன்றங்கள் செல்லவும் தயங்க மாட்டார்கள்.
அவ்வப்போது ஏதேனும் ஒரு தீவிர சிந்தனையில்
ஈடுபடுவார்கள். தங்களின் பெற்றோர் மனைவி மற்றும்

48
குழந்தைகளை மிகவும் நேசிப்பார்கள். அவர்களுக்கு எல்லா
வசதிகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். இந்த
பாதத்தில் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு கணவனால்
மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் வாழ்வில்
அதிர்ஷ்டகரமான திருப்புமுனைகள் ஏற்படுகின்றன.
புனர்பூசம் நட்சத்திரம் 3 – ஆம் பாதம் புனர்பூச
நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தை ஆளும் கிரகமாக
புதன் பகவான் இருக்கிறார். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள்
அமைதியான தோற்றம் கொண்டிருந்தாலும் செயல்படுவதில்
சூரர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றல் இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு உயரிய
விடயத்திற்கான தேடலில் இருப்பார்கள். கதை, கவிதை
எழுதுதல் போன்ற எழுத்துத் துறைகளில் அதிக திறமை
இருக்கும். பல வகையான பத்திரிகைகள், புத்தகங்கள்
வாசிப்பதில் அதிகம் இருக்கும். எந்த ஒரு விடயத்திலும்
தங்களின் ஆராய்ச்சி அறிவுக்கு உட்படுத்தி உண்மையை
அறிந்து கொண்ட பின்பு ஏற்றுக் கொள்வார்கள். அனுபவ
அறிவைக் கொண்டு தங்களின் வாழ்வை மேம்படுத்திக்
கொள்வார்கள். பிறருக்கு ஏற்படும் எத்தகைய
சிக்கல்களுக்கும் சிறந்த தீர்வுகள், ஆலோசனைகள்
வழங்குபவர்களாக இருக்கின்றனர். மற்றவர்களுக்கு தாமாக
முன் வந்து உதவி செய்பவர்களாக இருப்பார்கள். பணி
நிமித்தம் காரணமாக சிலர் தங்கள் குடும்பத்தை விட்டு
பிரிந்து இருக்கக் கூடும். சுயநலத்துடன் செயல்படுபவர்களை

49
இவர்களுக்கு அறவே பிடிக்காது. வாழ்வில் எந்த ஒரு
விடயத்திலும் இது போதும் என திருப்தி அடைந்து விடாமல்
மேலும் மேலும் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை
மேற்கொள்வார்கள். இயற்கையின் மீது அதிகம் நேசம்
கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கை அழகு நிரம்பிய
இடங்களுக்கு பயணங்களை மேற் கொள்வதில் ஆர்வம்
அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். புனர்பூசம்
நட்சத்திரம் 4 – ஆம் பாதம் புனர்பூசம் நட்சத்திரத்தின்
நான்காவது பாதம் கடக ராசியில் வருவதால் இந்த
பாதத்தை ஆளும் நவகிரக நாயகர் மனோகரனான சந்திர
பகவானாவார். சுரந்து எழுத்தாற்றல் நிறைந்தவர்களாகவும்,
கற்பனை வளம் அதிகம் கொண்டவர்களாகவும்
இருக்கின்றனர். தெய்வீக வழிபாட்டில் அதிக ஆர்வமும், பல
புண்ணிய தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபடும் வழக்கம்
கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை போன்ற
உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளுடன்
அதிக நேரம் செலவழிப்பதை விரும்புவார்கள்.
அனைவரையும் எளிதில் நம்பும் குணம் கொண்டவர்களாக
இருப்பார்கள். கலாரசனை அதிகமிருக்கும். பார்ப்பவர்களை
வசீகரிக்கும் படியான முகத்தோற்றமும், உடலமைப்பையும்
பெற்றிருப்பார்கள். தான, தர்ம காரியங்களில் அதிக விருப்பம்
இருக்கும். தங்களின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக
அதி தீவிரமாக உழைத்து செல்வங்களை சேர்ப்பார்கள்.
இவர்கள் மதியாதார் வாசல் மிதியாதே என்கிற பழமொழிக்கு

50
ஏற்ப வாழ்வார்கள். அதே நேரம் தங்களை மதிப்பவர்களுக்கு
மிகுந்த பதில் மரியாதை தருபவர்களாக இருப்பார்கள். இந்த
நான்காம் பாதத்தில் பிறந்த பலர் வெளிநாடுகளுக்குச் சென்று
மிகுந்த செல்வம் சேர்த்து தங்களின் குடும்பத்திற்கு
அனுப்புவார்கள். புனர்பூசம் நட்சத்திர பரிகாரம் புனர்பூசம்
நட்சத்திரத்தின் அதிபதியாக குரு பகவான் இருப்பதால்
வியாழக்கிழமைகளில் குரு பகவான் சந்நிதிக்கு சென்று
மஞ்சள் நிற பூக்களை குரு பகவானுக்கு சமர்ப்பித்து, 27
வெள்ளை கொண்டைக்கடலை கோர்த்த மாலையை சாற்றி,
இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி குரு பகவானுக்குரிய
மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். வருடமொருமுறை
ஆலங்குடி குரு பகவான் ஆலயம் சென்று குரு பகவானை
வழிபட வேண்டும். இந்த பூஜை வழிபாட்டு முறையை
புனர்பூச நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களில்
பிறந்தவர்களும் மேற்கொள்ளலாம். மேலும்
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடைகளை அணிந்து
கொள்வது குரு பகவானின் அருளை உங்களுக்கு கிடைக்கச்
செய்யும். புனர்பூச நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள்
மிதுனம் ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும்
வருகிறது. முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் புதன்
கிழமைகளில் விநாயகரை விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி
வழிபட வேண்டும். மேலும் ஒரு பிராமண பெண்ணுக்கு ஒரு
புதன் கிழமையன்று பச்சை பயறு மற்றும் பச்சை நிற புது
புடவை தானமளிப்பது உங்களின் நட்சத்திர பாத

51
தோஷங்களை போக்கும். புனர்பூச நட்சத்திரத்தின் நான்காம்
பாதத்தில் பிறந்தவர்கள் பெண் பூனைகள் அருந்துவதற்கு
பால் கொடுத்து வருவதும் சிறந்த பரிகாரம் ஆகும். புனர்பூச
நட்சத்திரக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும்
நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள், யோகங்கள்
போன்றவற்றை பெறுவதற்கு மிதுன ராசியின் நாயகனான
புதன் பகவானை புதன் கிழமைகள் தோறும் நெய் தீபம்
ஏற்றி வழிபட வேண்டும். பிறகு புதன் பகவானின் அம்சம்
நிறைந்த பெருமாளையும் வணங்கி வர வேண்டும்.
வருடத்தில் ஒரு முறையாவது புதன் பகவானின் ஆதிக்கம்
நிறைந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு
சென்று வழிபட வேண்டும்.

பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -Jun


25, 2019, 07:15PM IST பூசம்: இதனை புஷ்யம் என்றும்
குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி’ என்றால் ‘பலம்’
என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று
நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27
நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில்
பூசமும் ஒன்று! - Advertisement - பொதுவான குணங்கள்: பூச
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள். புத்திக்கூர்மை
உள்ளவர்கள். எதையும் எளிதில்
கிரகித்துக்கொள்ளக்கூடியவர்கள். சுதந்திரமாக வாழ

52
நினைப்பவர்கள். அடக்கமானவர்கள். அதே நேரம்,
ஆத்திரமும் கோபமும் உள்ளவர்கள். - Advertisement - பூசம்
நட்சத்திர சிறப்பியல்புகள் ஜோதிட சாஸ்திரத்தில்
சனீஸ்வரன் நீதிமான் என வர்ணிக்கப்படுகிறார். அந்த
சனீஸ்வர பகவானுக்கு உரிய பூசம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் நீதி, நேர்மை, நியாயத்திற்காக
பாடுபடுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு உடல்
உறுதியும், மன உறுதியும் அதிகமுண்டு. எத்தகைய
சிக்கலான பிரச்சனைகளுக்கும் சுலபமாக தீர்வுகளை கண்டு
செயல்படுவார்கள். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு
கொண்டவர்களாக பூச நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள்.
ஒரு சிலர் தங்களின் ஆன்மீக வாழ்க்கைக்காக தங்களின்
குடும்பம், செல்வம் ஆகிய அனைத்தையும் துறந்து விடும்
திட சித்தத்தையும் பெற்றிருப்பார்கள். இந்த
நட்சத்திரக்காரர்கள் அனைவராலும் விரும்பப்படுகிறவர்களாக
இருப்பார்கள். பலவகையான விடயங்களைப் பற்றியும்
ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என
விரும்புவார்கள். எல்லா விடயங்களிலும் தூய்மை மற்றும்
சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இவர்களில் பலர் ஏழ்மையான குடும்பத்தில்
பிறந்திருந்தாலும் தங்களின் கடுமையான உழைப்பின்
மேலும் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.
நெருக்கடியான நிலைகளிலும் திறம்பட செயலாற்றும்
குணம் கொண்டவர்கள். சனி பகவானுக்குரிய நட்சத்திரமாக

53
இருப்பதால் இவர்களில் பெரும்பாலானோருக்கு மனதில்
ஏதேனும் இனம் புரியாத ஒரு சோகம் இருக்கும். பிறருக்கு
தங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவி செய்வதற்கு
தயாராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு சவாலாகவும்,
கடினமாக இருக்கும் விடயங்களையும் இவர்கள் தங்களின்
திறமையால் எளிதில் சாதித்து வெற்றி பெறுவார்கள்.
ஒழுக்கமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தவறு
செய்தவர்களை மன்னிக்கும் குணம் இருக்கும். தங்களின்
மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்களாக இருப்பதால் தவறான
செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உறவினர், நண்பர்கள்,
விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர்கள். பொறுமை
குணம் அதிகம் இருந்தாலும் இவர்களுக்கு சில சமயங்களில்
சட்டென கோபம் ஏற்பட்டு விடும். தங்களின்
சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது எரிமலையாக
வெடிப்பார்கள். வாழ்வில் எந்த ஒரு விடயத்திலும்
சுலபத்தில் அஞ்சாமல், மன உறுதியுடன் எதிர்த்து போராடி
வெற்றி பெறுவார்கள். மிகுந்த தன்னம்பிக்கை
கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரக்காரர்கள்
இருக்கிறார்கள். முக அமைப்பு பிறரை கவரும் வகையில்
இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்நன்றி
மறவாதவர்களாக இருக்கின்றனர். பாரம்பரிய பழக்க
வழக்கங்களில் பற்றுடையவர்கள். அதேநேரம் புதுமையை
வரவேற்கவும் தயங்காதவர்கள். மனதளவிலும் பிறருக்கு
தீங்கு செய்வோர் நினைக்காதவர்கள். இந்த பூச

54
நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்த கற்பனை வளம் அதிகம்
இருப்பதால் கதை, கவிதை, கட்டுரை எழுதுதல் போன்ற
துறைகளில் பிரகாசிப்பார்கள். இளமை காலங்களில்
போராட்டமான வாழ்க்கையை ஏற்பட்டாலும் நடுத்தர வயது
மற்றும் பிற்பாதி வயதுகளில் மிகுந்த சொத்துக்களை
சேர்ப்பார்கள். எவ்வளவு அதிகம் சம்பாதித்தாலும் எப்போதும்
தன்னடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். ஒரு சிலர்
தங்களின் உழைப்பால் மக்கள் செல்வாக்கு மிக்க
தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள்.
சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பும் அதனால்
மிகுதியான ஆதாயமடைவார்கள். திரைப்படத்துறை, இரும்பு
சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, கப்பல்துறை
பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் துறைகளில் ஈடுபட்டு
அதிகம் வருமானம் பெறுவார்கள். பூசம் நட்சத்திரக்காரர்கள்
பெரும்பாலும் காதல் போன்ற விடயங்களில் ஈடுபட்டு அதில்
தோல்வி அடைந்தவர்களாக இருக்கின்றனர். எனினும்
தங்களுக்கு வருகின்ற வாழ்க்கைத்துணையிடம் அன்புடன்
நடந்து கொள்வார்கள். சற்று சபல புத்தி இருந்தாலும்
ஒழுக்கக் கேடான செயல்களில் ஒருபோதும் ஈடுபட
மாட்டார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அதிகம்
விரும்புவார்கள். தங்களுக்கு உற்றார், உறவினர்கள் செய்த
உதவிகளை ஒருபோதும் மறவாமல், தக்க சமயத்தில்
அவர்களுக்கு பதில் உதவி செய்வார்கள். எப்படிப்பட்ட உணவு
என்றாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதில்

55
இன்பம் காண்பார்கள். வாழ்வில் வசதியான வீடு, வாகனம்
ஆகியவை அமையப் பெறுவார்கள். பூச நட்சத்திரம் 1 – ஆம்
பாதம் பூச நட்சத்திரத்தில் முதலாவது பாதத்தை
சூரியபகவான் ஆள்கிறார். எனவே இந்தப் பாதத்தில்
பிறந்தவர்கள் இயற்கையிலேயே அதிக சுறுசுறுப்பு குணம்
கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் நோய் நொடிகள்
அண்டாது. மிகப்பெரும் கூட்டத்திலும் தங்களின்
தனித்தன்மையால் அனைவரின் கவனத்தையும்
பெறுவார்கள். இவர்களுக்கு தந்தையுடன் அடிக்கடி
முரண்பாடுகள் ஏற்படும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
அதே நேரம் விளையாட்டுப் போட்டிகளிலும் அதிகம்
ஈடுபட்டு மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்று பரிசுகளை
வெல்வார்கள். இவர்களிடம் தலைமை பண்பு அதிகமிருக்கும்.
பிறரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்கிற நோக்கம்
தெரிந்தவர்கள். தவறான காரியங்களை ஒருபோதும்
செய்யமாட்டார்கள். மற்றவர்கள் அப்படி செய்வதையும்
அனுமதிக்க மாட்டார்கள். சூடான உணவுகளை அதிகம்
விரும்பி உண்பார்கள். மனதிற்கினிய வாழ்க்கைத்துணையை
அமையப் பெறுவார்கள். சூரியனுக்குரிய பாதம் என்பதால்
அடிக்கடி உஷ்ண சம்பந்தமான நோய்களால்
அவதிப்படுவார்கள். வாழ்வில் சீக்கிரத்திலேயே வாழ்வில்
உன்னதமான நிலையை அடைவார்கள். பூச நட்சத்திரம் 2 –
ஆம் பாதம் பூச நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தை புதன்
பகவான் ஆள்கிறார். எனவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள்

56
இயற்கையிலேயே மிகுந்த சாமர்த்தியசாலிகளாக
இருப்பார்கள். நகைச்சுவையாக பேசும் திறன் பெற்றவர்கள்.
வாழ்க்கையில் அனைத்து வசதிகளும் பெற்று வாழ
விரும்புவார்கள். தங்களின் பெற்றோர் மீது மிகுந்த அன்பும்,
மரியாதையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சொல்கின்ற
விடயங்களை தயங்காமல் செய்து முடிப்பார்கள். தங்களின்
உறவினர்களோடு அதிகம் நெருங்கிப்பழக விருப்பம்
இருக்காது. எந்த ஒரு நபரிடமும் நட்புறவோடு மட்டுமே
இருக்க விரும்பும் நபர்களாக இந்த பாதத்தில் பிறந்தவர்கள்
இருக்கின்றனர். அவ்வப்போது எதையாவது நினைத்து
கவலை கொண்டிருப்பார்கள். தங்களுக்கு தீங்கு
செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணம் கொண்டவர்கள்.
ஒரு காரியத்தில் ஈடுபடும் போது அந்தக் காரியத்தை செய்து
முடிப்பதில் எத்தனை தடங்கல்கள், பிரச்சினைகள்
உருவானாலும் அனைத்தையும் தங்களின் பொறுமை குணம்
மற்றும் திறமையால் முடித்து விட்டு தான் மறுவேலை
பார்ப்பார்கள். தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக
அதிகம் செல்வம் சேர்க்க கடுமையாக உழைப்பார்கள்.
பொழுதுபோக்குக்காக பிற செயல்களில் ஈடுபடுவதை
காட்டிலும் புத்தகங்கள் படிப்பதிலேயே இந்த பாதத்தினர்
அதிகம் நேரம் செலவழிப்பார்கள். பூச நட்சத்திரம் 3 – ஆம்
பாதம் பூச நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தை
சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் ஆட்சி புரிகிறார்.
எனவே இயற்கையாகவே பிறரை கவர்கின்ற முகம், உடல்

57
தோற்றம் பெற்றிருப்பார்கள். எத்தனை வயதானாலும்
இளமை தோற்றத்துடன் காணப்படுவார்கள். வாழ்வில்
எத்தனை சோதனைகள், இன்னல்கள் ஏற்பட்டாலும் அவை
அனைத்தையும் தங்கள் திறமையால் வென்று, இன்புற
வாழ்வார்கள். எப்பாடுபட்டாவது தாங்கள் நினைத்த
காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். கூட்டுக் குடும்ப
வாழ்க்கையை மிகவும் விரும்புபவர்களாக இருப்பார்கள்.
இயற்கையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.
இயற்கை எழில் நிறைந்த இடங்களில் வசிக்கவே அதிகம்
விரும்புவார்கள். புதிய ஆடை, அணிகலன்கள் அணிவது,
விதவிதமான வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில்
அதிக ஈடுபாடு இருக்கும். தீவிரமான ஆன்மீக சிந்தனை
இருக்கும். செல்வங்கள் அதிகம் பெற்றவராக இருந்தாலும்,
அச்செல்வங்களை தான, தர்ம காரியங்களில்
செலவழிப்பதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.
வாகனங்கள் மீது தீவிர பற்றுக் கொண்டவர்களாக
இருப்பார்கள். தாங்கள் பயணிக்கும் பழைய வாகனங்களை
மாற்றி விட்டு புதிய வாகனங்களாக அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு போதும் சண்டையை
விரும்பாதவர்கள். சண்டை போடுபவர்களை சுலபத்தில்
சமாதானப்படுத்தி விடுவார்கள். சுக்கிரன் இந்தப் பாதத்தை
ஆள்வதால் பிற உயிர்களின் மீது அன்பு அதிகம் இருக்கும்.
தங்கள் வீட்டிலும் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் ஏதேனும்
செல்லப்பிராணிகளை வளர்ப்பார்கள். பூச நட்சத்திரம் 4 – ஆம்

58
பாதம் பூச நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தை ஆளும்
கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். எனவே
இயற்கையிலேயே வீரப்பராக்கிரமம் நிறைந்தவர்களாக
இருப்பார்கள். தங்களின் உடல் பலத்தை பேணிக் காப்பதில்
மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
உறவுகளோடு சேர்ந்து வாழ்வதையே விரும்புவார்கள். எந்த
காலத்திலும் தங்கள் உறவினர்களை விட்டுக் கொடுக்க
விரும்ப மாட்டார்கள். வாழ்வில் அனைத்து சுகங்களையும்
அனுபவித்து வாழ வேண்டும் என நினைப்பார்கள். தங்களின்
சிறந்த பேச்சாற்றல் மூலம் தங்களுக்கு வேண்டிய
காரியங்கள் அனைத்தையும் சாதித்துக் கொள்வார்கள்.
சுயகவுரவம் மிக்கவர்கள். தன்மானத்துக்கு இழுக்கு
ஏற்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
திடமான மன உறுதி இருந்தாலும் அவ்வப்போது
எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
தங்களின் குழந்தைகளை மிகவும் நேசிப்பார்கள்.
அவர்களுக்கு சிறந்த வாழ்வை கொடுக்க தங்களால் முடிந்த
அனைத்தையும் செய்வார்கள். முன்கோப குணம்
அதிகமிருக்கும். சமயங்களில் அந்த முன்கோபத்தால் பிறரை
மனம் வருந்த செய்துவிட்டு பின்பு அதற்காக மிகவும்
வருந்துவார்கள். பிறருக்கு தாங்கள் இளமையான
தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும் என்பதில் அக்கறை
கொள்வார்கள். அதற்காக சிறந்த ஒப்பனை செய்து
கொள்வார்கள். பூசம் நட்சத்திரத்தில் செய்ய கூடிய

59
காரியங்கள் மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், குழந்தைக்கு
பெயர் சூட்டுதல், முடி இறக்குதல், காது குத்துதல், புதிய
ஆடை, ஆபரணம், வாகனம் வாங்குதல், புதிய வீடு, மனை
வாங்குதல், புதிய வீடு கட்டும் வேலை ஆரம்பித்தல், மனை
கோலுதல், வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்குதல்,
விவசாயத்தில் விதை விதைத்தல், உயர்ந்த பதவிகளில்
பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளல், விருந்துண்ணல், புதிய
வேலையில் சேர்தல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில்
தொடங்குவது மிகவும் சிறப்பானதாகும். தவிர்க்க வேண்டிய
நட்சத்திரங்கள் பரணி, பூசம், அனுஷம், பூராடம்,
உத்திரட்டாதி ஆகிய ஆண் – பெண் நட்சத்திரக்காரர்களை
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யாமல்
தவிர்க்க வேண்டும். பூசம் நட்சத்திர பரிகாரங்கள் பூசம்
நட்சத்திரகாரர்கள் தங்கள் நட்சத்திர அதிபதியான சனி
பகவானை சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த
விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சனி பகவான் மந்திரங்கள்
துதித்து வழிபட்டு வர வேண்டும். வருடத்திற்கொருமுறை
திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்று, சனி ப்ரீத்தி
பூஜை செய்து வழிபட வேண்டும். சனி மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் பூஜித்து வர
வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும். தினமும் நீங்கள்
காலை உணவை சாப்பிடும் முன்பு உணவிலிருந்து
கொஞ்சத்தை எடுத்து காகங்களுக்கும், சாப்பிட்டு முடித்த
பின்பு உணவின் மீதத்தை தெரு நாய்களுக்கு வைப்பது சனி

60
தோஷத்தை போக்கும். சனிக்கிழமைகளில் துறவிகள்,
யாசகர்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப அன்னதானம் மற்றும்
பொருள் தானம் செய்யலாம். உங்கள் வீடுகளில்
நறுமணமுள்ள மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பதால்
இறையாற்றல் உங்கள் வீடுகளில் நிறையும். கடின
உழைப்பிற்கு பெயர் பெற்ற விலங்குகளான கழுதைகளுக்கு
உணவளிப்பதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து
தோஷங்களும் நீங்கி, செல்வச்செழிப்பு உண்டாகும். பூச
நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய கோயில்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில்
இருக்கின்ற அருள்மிகு திருவெண்காடு
சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பூச
நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டும். புதுச்சேரி
மாவட்டத்தில் இருக்கும் திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீ
தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று
சிவபெருமானையும், சனீஸ்வர பகவானையும் பூச
நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டும். வழிபட வேண்டிய
தெய்வம் பூச நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தெய்வமாக
தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவரை தினந்தோறும்
வழிபடுவதால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.
பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை:
அதிர்ஷ்டக் கிழமைகள்: சனிக்கிழமை அதிர்ஷ்ட விருட்சம் :
அரச மரம் அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் :
8 அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து அதிர்ஷ்ட உலோகம்: இரும்பு

61
அதிர்ஷ்ட பறவை : கடற் காகம் அதிர்ஷ்ட ஆங்கில
எழுத்துகள் : H,D

ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh


-Nov 10, 2017, 09:20PM IST பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும்
ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆஸ்லேஷா அல்லது ஆயில்யம்
எனப்படுகிறது. இது கடக ராசி நட்சத்திரம். இதன் தேவதை
‘நாகம்’ என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான குணங்கள்: -
Advertisement - திறமையானவர்கள். ஆதிக்கம்
செலுத்தக்கூடியவர்கள். மனம் விரும்பியவண்ணம் வாழ
நினைப்பவர்கள். தாங்கள் விரும்பியதை அடைய
முயல்பவர்கள். கடுமையான சொல் பேசுபவர்கள்.
மாந்த்ரீகம், தாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு
உள்ளவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் முதல் பாதம்: இது குருவின் அம்சம்.


தைரியசாலிகள். புத்திக்கூர்மையும், ஆராய்ச்சி செய்து
புதியன கண்டுபிடிப்பதில் ஈடுபாடும் உள்ளவர்கள். கோபமும்
இருக்கும்; குணமும் இருக்கும். புகழ்ச்சியை விரும்புபவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதன் அதிபதி சனி


பகவான். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகபோகங்களை
அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். அதற்காக எதையும்,

62
எப்படியும் பெற முயல்பவர்கள். அநியாயத்தையும்
தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதன் அதிபதியும்


சனி பகவான்தான். இவர்கள் அடிக்கடி கோபப்படுபவர்கள்.
எந்த வழியிலாவது செல்வத்தை அடைய முயற்சிப்பவர்கள்.
தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்பவர்கள். பிறருடைய
அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். ஆயில்யம் நட்சத்திரம்
நான்காம் பாதம்: இதன் அதிபதி குரு பகவான். இவர்கள்
புத்திசாலிகள். ஆனால் சோம்பேறிகள். கடுமையாக உழைக்க
விருப்பமில்லாதவர்கள். குழந்தைப் பருவத்தில்
கஷ்டப்படுபவர்கள். எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள்;
திட்டமிடாமல் செயல்படுபவர்கள்.

ஆயில்யம் 4-ம் பாதத்தில் குழந்தைகள் பிறந்தால்,


பெற்றோர்களுக்கு ஏதாவது கஷ்டம் வரும் என்பதால், இந்த
நட்சத்திரத்துக்கு உரிய ‘சந்திர சாந்தி’ எனும் பூஜை செய்வது
சம்பிரதாயமான பரிகாரம்.

மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -Nov


10, 2017, 09:27PM IST இது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட
கூட்டம். ஒரு பல்லக்கு வடிவில் தோற்றமளிப்பது,
மகம் நட்சத்திரக் கூட்டம். ‘மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை
ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏற்கெனவே

63
குறிப்பிட்டிருந்தபடி, இந்தப் பழமொழிகளை மட்டுமே நம்பி
நட்சத்திரப் பலன்களைக் கூறக்கூடாது. ஒருவரது ஜாதகத்தில்
எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சமாக இருக்கின்றன
என்பதையும், எந்த கிரகங்கள் பகை அல்லது நீசமாக
இருக்கின்றன என்பதையும் வைத்தே பலன்கள் கூற
வேண்டும். மகத்தில் பிறந்து ஜகத்தை ஆண்டவர்களும்
உண்டு; நாடு நகரம் துறந்து வீதிக்கு வந்து
திண்டாடியவர்களும் உண்டு. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த
நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன். மகம் நட்சத்திரம்
பொதுவான குணங்கள்: - Advertisement - கலைத்திறமை
உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்புகளும், விருப்பமும்
கொண்டவர்கள். கோபம், ஆத்திரம், பிடிவாதம்,
ஜெயிக்கவேண்டும் என்ற லட்சியம் ஆகியவை இந்த
நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள். புகழுக்காக
எதையும் இழக்கத் துணிந்தவர்கள். மனத்தில் பட்டதை
வெளிப்படையாகப் பேசுபவர்கள். சிறந்த பேச்சாளிகள், வாதத்
திறமை மிக்கவர்கள். பொருள்களிடமும் புருஷர்களிடமும்
ஆசையும் பாசமும் மிக்கவர்கள். தோல்வியை இவர்களால்
தாங்க முடியாது.

மகம் நட்சத்திரம் முதல் பாதம்: இதன் அதிபதி செவ்வாய்.


பூமி, நிலபுலன்கள் சேர்ப்பதில் ஆசை உள்ளவர்கள். நல்ல
தோற்றம் உள்ளவர்கள். பிறரை வசீகரிக்கும் குணங்கள்
உள்ளவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். சொத்து
சுகங்களில் பற்றுள்ளவர்கள். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

64
மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதற்கு உரிய கிரகம்
சுக்கிரன். ஆசாபாசங்கள் மிகுந்தவர்கள். இரக்க குணமும்,
பிறருக்கு உதவும் தன்மையும் இவர்களிடம் இருக்கும்.
உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பற்றும் பாசமும்
கொண்டவர்கள். இசை, நடனம், நாடகம், தகவல் தொடர்பு
ஆகிய துறைகளில் திறமையும், ஈடுபாடும் மிக்கவர்கள்.
ஆத்திரம் இருக்கும். அனுதாபமும் இருக்கும்.

மகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: விஷ்ணுவை


அதிபதியாகக் கொண்ட புதன், இந்தப் பாதத்துக்குத்
தலைவன். தெய்வ பக்தியும் பிறருக்கு உதவும் குணங்களும்
இருக்கும். இனிமையான இல்லறம் அல்லது பற்றில்லாத
துறவறம் என்று எல்லைகளுக்கப்பால் சிந்திப்பவர்கள். எடுத்த
காரியத்தை முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சொன்னதைச்
செய்பவர்கள்.

மகம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி சந்திரன்.


சுயநலம் உள்ளவர்கள். கௌரவம், சொத்து சுகங்களை
நாடுபவர்கள். பேராசை, பொறாமை, முன்கோபம் இவர்களது
முக்கிய குணங்கள். ஆடம்பரத்தில் நாட்டமுள்ளவர்கள்.
காரியவாதிகள். உதவி செய்தவர்களை எளிதில்
மறந்துவிடுவார்கள். எப்போதும் முதன்மை ஸ்தானத்தை
விரும்புவார்கள்.

65
பூரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -Nov
10, 2017, 09:30PM IST இரண்டு கண்களின் கருமணிகள்போல்
அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும்
சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும்.
பொதுவான குணங்கள்: - Advertisement - நுண்கலைகளான
ஓவியம், இசை, நடனம், நாடக நடிப்பு போன்றவற்றில்
ஈடுபாடும் திறமையும் இருக்கும். கலைக்காக எதையும்
செய்யத் துணிந்தவர்கள். பேராசை, புகழாசை, பொருளாசை
கொண்டவர்கள். ஆடை அணிகலன்கள் அணிவதில் விருப்பம்
கொண்டவர்கள். அழகை ஆராதிப்பவர்கள். தங்கள் புகழையே
பேசிக்கொண்டிருப்பவர்கள். தான தர்மங்கள் செய்து அதனால்
புகழும் பெருமையும் அடைய ஆசையுள்ளவர்கள்.

பூரம் நட்சத்திரம் முதல் பாதம்: இதன் அதிபதி சூரியன்.


திறமைசாலிகள். நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள்.
பேச்சுத்திறமை மிக்கவர்கள். எதையும் எதிர்த்துப் போராடி,
எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம்
உள்ளவர்கள். நண்பர்களை நேசிப்பவர்கள். உடல் நலனில்
கவனம் செலுத்தமாட்டார்கள். -

பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதன் அதிபதி புதன்.


நல்ல கல்வியும் திறமையும் இருந்தாலும், அடிக்கடி
தோல்வியைச் சந்திப்பார்கள். தனக்கொரு நியாயம்,
பிறருக்கொரு நியாயம் என்ற பாகுபாடு கொண்டவர்கள்.
தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவார்கள். பிறர் உதவியை

66
எப்போதும் எதிர்பார்த்து, பிறரைச் சார்ந்து வாழ
நினைப்பவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.

பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: சுக்கிரன் இதன் அதிபதி.


ஆசாபாசம் மிக்கவர்கள். ஓவியம், சிற்பம், புகைப்படம்
எடுப்பது போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். பேராசை
மிக்கவர்கள். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தன்
சுகத்தையும், முன்னேற்றத்தையும் பற்றி மட்டுமே
சிந்திப்பவர்கள்.

பூரம் நட்சத்திரம் நான்காம் பாதம்: செவ்வாய் இதன் அதிபதி.


அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள். பணத்தைச் சேர்த்த
வேகத்தில் செலவழித்து விட்டுக் கஷ்டப்படுபவர்கள்.
திட்டமிட்டுச் செயலாற்றும் திறமை இருக்காது. தெரியாமல்
தவறுகள் செய்துவிட்டு, அதனால் பெயரும் புகழும்
பாதிக்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். செவ்வாய்க்
கிழமைகளில் பக்தியுடன் முருகனை வழிபட்டால்,
துயரங்கள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -


Nov 10, 2017, 09:35PM IST இது இரட்டை நட்சத்திரம். பூர
நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல்
அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று
ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம்

67
சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும்
அமையும். முதல் பாதத்திற்கு ராசிநாதன் சூரியன். மற்ற
மூன்று பாதங்களின் ராசிநாதன் புதன். பொதுவான
குணங்கள்: - Advertisement - திறமைசாலிகள். கல்வியறிவும்,
சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள்
அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம
சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும்
இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத
குணமும் உண்டு. தெய்வபக்தி, நேர்மை உள்ளவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம்: இந்தப் பாதத்தின் அதிபதி


குருபகவான். அறிவாற்றல், திறமை, உழைப்பு, நியாய
உணர்வு மிக்கவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடும்,
நம்பிக்கையும் இருக்கும். குருவை நாடி ஞானம் பெற
நினைப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சூது,
கபடம், பழிவாங்கும் வெறி போன்ற தீய குணங்கள்
இருக்காது. அன்பும், பண்பும், சகோதர பாசமும் உள்ளவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: - Advertisement -


இதனை ஆட்சி செய்பவர் சனி. பொருளும், புகழும்
சேர்ப்பதில் ஈடுபாடு மிக்கவர்கள். தலைமைக் குணங்கள்
மேலோங்கி நிற்கும். சுயநலம் மிக்கவர்கள். அவசரக்காரர்கள்.
ஈட்டிய பொருளை இழந்து தவிப்பவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதற்கும் அதிபதி


சனியே. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் இயல்பும்

68
குணங்களும் இவர்களுக்கும் இருக்கும். கர்வம், ஆணவம்,
‘தான்’ என்ற அகம்பாவம் மிக்கவர்கள். எனவே, பலரால்
விரும்பப்படாதவர்கள். வெற்றிக்காக எதையும் செய்பவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி குரு.


நிதானமானவர்கள். அடக்கமானவர்கள். வளைந்து கொடுத்து
வாழத் தெரிந்தவர்கள். கல்வியில் சிறந்தவர்கள்.
திறமைசாலிகள். நல்ல உழைப்பாளிகள். தர்மசிந்தனை
உள்ளவர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -


Nov 10, 2017, 09:40PM IST அஸ்தம் என்றால் ‘உள்ளங்கை’
என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது
கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல
அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன்,
புதன். பொதுவான குணங்கள்: - Advertisement - நல்ல அறிவு,
விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அளவு கடந்த
தன்னம்பிக்கை இவர்களது குணாதிசயங்கள். பொறுமையாக
இருந்து காரியத்தைச் சாதிப்பவர்கள். ‘அடக்கம் அமரருள்
உய்க்கும்’ என்ற வாசகத்துக்கு ஏற்ப பணிந்து நடந்து, பெரிய
பதவிகளைப் பெறுபவர்கள். அன்பு, காதல், இரக்கம் போன்ற
குணச்சிறப்புகள் இவர்களுக்கு உண்டு. மனம் லயிக்காத
காரியத்தைச் செய்யமாட்டார்கள். அஸ்தம் நட்சத்திரம் முதல்
பாதம்: இது செவ்வாயின் அம்சம். பொய் புரட்டு

69
இல்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். வீண்
ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். நல்லவர்கள். - Advertisement -
அஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இது சுக்கிரனின்
அம்சம். கவர்ச்சியான தோற்றத்தை விரும்புபவர்கள். சுக
போகங்களில் நாட்டமுள்ளவர்கள். பயந்த சுபாவம்
உள்ளவர்கள். நீதி, நேர்மையில் நாட்டம் மிக்கவர்கள்.
அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதன் அதிபதி புதன்.
தெய்வ பக்தியும், நேர்மையான குணமும் உள்ளவர்கள்.
அறிவுப் பசி உள்ளவர்கள். பேச்சுத் திறமையும், வியாபாரத்
திறமையும் உள்ளவர்கள். கலைத்துறையிலும் ஈடுபாடு
இருக்கும். அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன்
அதிபதி சந்திரன். மனத்தின் விருப்பப்படி வாழ
நினைப்பவர்கள். ஆசை, பாசம், நேசம் மிக்கவர்கள். தயை,
இரக்கம் உள்ளவர்கள். பகிர்ந்துண்டு வாழ்வதில் மகிழ்ச்சி
பெறுபவர்கள். தலைமை தாங்கும் குணங்கள் உண்டு.

சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -


Nov 10, 2017, 09:44PM IST இது ஒற்றை நட்சத்திரம். ஒரு
வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது.
வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம்
அளிப்பதால், ‘சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம்
அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த
நட்சத்திரம் இது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு

70
பழமொழியைச் சொல்லி பயமுறுத்தும் சம்பிரதாயம் நம்
நாட்டில் உண்டு. ஆனால், அந்தப் பழமொழிகளின் கருத்துக்கு
ஆதாரம் கிடையாது. சித்திரை நட்சத்திரம் குறித்தும்,
‘சித்திரை அப்பன் தெருவிலே’ எனும் பழமொழி உண்டு.
இதனால் பயந்து, தகப்பனைக் காப்பாற்ற சித்திரையில்
பிறக்கும் பிள்ளையை தத்துக் கொடுக்கும் பழக்கமும்
தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவரில் காணப்படுகிறது. இது
அறியாமை என்பதே ஜோதிட வல்லுநர்களின் கூற்று. -
Advertisement - பிறந்த குழந்தை எந்த நட்சத்திரமாக
இருந்தாலும், நூற்றில் இரண்டு தகப்பன்மார்கள் வெவ்வேறு
காரணங்களுக்காக குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடலாம்.
இது அந்தத் தகப்பனின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஆகவே,
சித்திரையில் பிறக்கும் எல்லா குழந்தைகளின்
தந்தைமார்களுக்கும் இப்படித்தான் நேரிடும் என்று
பயமுறுத்துவது மூடத்தனம். சித்திரையின் முதல் இரண்டு
பாதங்கள் கன்யா ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள்
துலா ராசியிலும் அமையும். பொதுவான குணங்கள்: -
Advertisement - அழகிய தோற்றம், அன்போடு பழகும் தன்மை,
பேச்சுத் திறமை, ஆடம்பரத்தில் பிரியம், தற்புகழ்ச்சியில்
ஆர்வம், பொருள்களில் பற்று ஆகியவை இந்த
நட்சத்திரக்காரர்களின் பொதுவான இயல்புகள். சித்திரை
நட்சத்திரம் முதல் பாதம்: இதன் அதிபதி சூரியன். சிறந்த
கல்வியறிவு, திறமை, கடமையுணர்வு, கடும் உழைப்பு
இவர்களது இயல்புகள். துணிச்சல் குறைவானவர்கள்,

71
முடிவெடுப்பதில் குழப்பம் உள்ளவர்கள். மற்றவர்கள்
வழிகாட்டுதல் இருந்தால் இவர்கள் ஜெயிப்பார்கள். சித்திரை
நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதன் அதிபதி புதன்.
தெய்வபக்தி, நல்லொழுக்கம், நீதி-நேர்மை உள்ளவர்கள்.
தன்னம்பிக்கை குறைவு. குழப்பமான சிந்தனையால்,
இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.
சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதன் ஆட்சி கிரகம்
சுக்கிரன். ஆசாபாசம் மிக்கவர்கள். பிறருக்கு உதவும் சுபாவம்
மிகுதியாகக் காணப்படும். நல்லதையே நினைத்து,
நல்லதையே செய்ய விரும்புபவர்கள். குடும்பத்தை
நேசிப்பவர்கள். சித்திரை நட்சத்திரம் நான்காம் பாதம்: இது
செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்கள்
தைரியசாலிகளாகவும், நல்ல பேச்சாளர்களாகவும் திகழ்வர்.
வெற்றி அடையும் வெறியும் உண்டு. தலைமை தாங்கும்
இயல்புகள் உண்டு. நன்மை தரும் செயல்கள் அல்லது தீமை
பயக்கும் செயல்கள் எதுவானாலும் எடுத்துக்கொண்ட
காரியத்தைப் பிடிவாதமாக நடத்தி முடிப்பவர்கள். கோபமும்
ஆவேசமும் உள்ளவர்கள்.

சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -Nov


10, 2017, 09:51PM IST தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த
நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து
காணப்படும். இது ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது

72
போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே!
பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின்
மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித்
துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி
நட்சத்திரத்து நாளில்தான் சாத்தியமாகும் என்று ரஸகுளிகை
சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவான குணங்கள்: -
Advertisement - அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய
அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை,
தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள்.
ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம்
கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. இந்த
நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் துலா ராசியில்
அமையும். துலாக்கோல் போல் நல்லது- கெட்டதை
சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக்
கடைப்பிடித்து, வாழ்வில் உயர்பவர்கள். சுவாதி
நட்சத்திரம் முதல் பாதம்: இதன் ஆட்சிக் கிரகம் குரு.
புத்திசாலிகள். தைரியசாலிகள், நியாயவாதிகள், பேச்சுத்திறன்
உடையவர்கள், பல மொழிகளைக் கற்பார்கள். கவிதைத்
திறமை இருக்கும். அழகை ஆராதிப்பவர்கள். திட்டமிட்டுச்
செயல்படுபவர்கள். - Advertisement - சுவாதி நட்சத்திரம்
இரண்டாம் பாதம்: இதனை ஆட்சி செய்பவர் சனி. இந்த
பாதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பால் பொருளீட்டுவர்.
அதிகாரம் செய்வார்கள். சுயநலம் கொண்டவர்கள். சாதிக்கத்
துடிப்பவர்கள். சொத்து சேர்க்கவும் விரும்புவர். தலைமைப்

73
பண்பு மிகுந்தவர்கள். நல்ல நண்பர்களாகத் திகழ்வர். சுவாதி
நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதற்கும் அதிபதி சனி
பகவான்தான். இந்த பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்வம்
இருக்கும். ஆழமானவர்கள்; கோபமும் மூர்க்கத்தனமும்
உண்டு. அவசரமாகச் சிந்தித்து, அவசரமாக செயல்பட்டுத்
தவறிழைப்பார்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆனால்
பாசமும், கடமை உணர்ச்சியும் மிக்கவர்கள். சுவாதி
நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி குரு. நல்ல
நடத்தை, புகழைத் தேடும் உத்வேகம் உண்டு. மற்றவர்கள்
மெச்ச வாழ்வார்கள். நட்பு, உறவுகளிடம் பற்றும் பாசமும்
மிக்கவர்கள். ஆடம்பரத்தை விரும்புவார்கள். தெய்வ பக்தி,
கடமையுணர்வு மிக்கவர்கள். உழைத்து உயர்பவர்கள்.

விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -


Nov 10, 2017, 10:00PM IST இது முருகப்பெருமானின் அவதார
நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல்
அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது.
விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம்
பாதம் விருச்சிக ராசியிலும் அமையும். பொதுவான
குணங்கள்: - Advertisement - அறிவாளிகள், தெய்வபக்தி
உள்ளவர்கள், கடமை உணர்வுடன் செயலாற்றுபவர்கள்,
ஆடம்பரப் பிரியர்கள், பணம் சேர்ப்பதில் ஆவல்
கொண்டவர்கள், உணவு மற்றும் சிற்றின்பங்களில் ஈடுபாடு

74
கொண்டவர்கள், மனித நேயமும், நியாய உணர்வும்
உள்ளவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்கள். விசாகம்
நட்சத்திரம் முதல் பாதம்: இதன் அதிபதி செவ்வாய். இந்த
பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகளாகத் திகழ்வர். சொத்து
சுகம் மட்டுமின்றி, நட்பையும் சுற்றத்தையும் விரும்புவார்கள்.
கோபம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், பிடிவாதம், பிறரை
நம்பாமை ஆகிய குணங்களும் இவர்களிடம் உண்டு. -
Advertisement - விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதன்
அதிபதி சுக்கிரன். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள்
சுகவாசிகள். சுயநலம் மிகுந்தவர்கள். வாழ்க்கையை ரசித்து
வாழ்வர். உணர்ச்சிபூர்வமாகத் திகழும் இவர்கள், நல்ல
அறிவாளிகள். தன்னம்பிக்கையும், கலைகளில் ஈடுபாடும்
உண்டு. விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதன் அதிபதி
புதன். இதில் பிறந்தவர்கள் பக்திமான்கள். கணிதம்,
விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். திட்டமிட்டு
வாழ்பவர்கள். பிறரை நம்பமாட்டார்கள். உயர் பட்டங்கள்,
பதவிகளைப் பெறுவார்கள். புகழுடன் வாழ்வார்கள். விசாகம்
நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி சந்திரன். இதில்
பிறந்தவர்கள் பொருளீட்டுவதில் வல்லவர்கள். தாராளமாகச்
செலவு செய்வார்கள். குடும்பப் பாசம் மிக்கவர்கள். சுகமான,
ஆடம்பரமான, கௌரவமான வாழ்க்கை வாழ
விரும்புபவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும்.
பொதுவாழ்வில் ஈடுபாடு இருக்கும். புகழை நாடுபவர்கள்.

75
அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -
Nov 10, 2017, 10:08PM IST வானத்தில் அமைந்துள்ள 3
நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு
மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம்
அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா
ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை
‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
உழைப்பையும் உயர்வையும் தரும் உத்தம நட்சத்திரம் இது.
விருச்சிக ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் தேவதை
சூரியன்; ராசி அதிபதி செவ்வாய். விருச்சிக ராசியைச்
சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில்
பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன்
காலம் 19 வருஷம். திருமணப் பொருத்தங்கள்
பார்க்கும்போது, அனுஷத்துக்கு மற்றெல்லா நட்சத்திரங்களும்
பொருந்தும் என்பார்கள். இது இந்த நட்சத்திரத்தின்
தனிச்சிறப்பு. - Advertisement - பொதுவான குணங்கள்: பசி
பொறுக்காதவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள். அன்பு,
பாசம், நேசம் மிகுந்தவர்கள். அதிகம் பேசமாட்டார்கள்.
உண்மையைப் பேசுபவர்கள். தர்ம சிந்தனை உள்ளவர்கள்.
புகழ் அடைபவர்கள். வெளிநாட்டில் வாழ்வதில் விருப்பம்
உள்ளவர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு; ஆனால்,
ஆழ்ந்த அறிவு உண்டு. அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம்: -
Advertisement - சூரிய ஆதிக்கம் உள்ளதால், புத்திக்கூர்மையும்,
வைராக்கியமும் மிகுந்திருக்கும். ஞாபக சக்தியும் உண்டு.

76
நூலறிவு பெறுவதில் ஆர்வம் இருக்கும். அனுஷம்
நட்சத்திரம் இரண்டாம் பாதம்: புதனின் ஆதிக்கம்
உள்ளவர்கள். அழகான தோற்றமும், கலையுணர்வும்
கொண்டவர்கள். அலங்காரத்தில் விருப்பமும், இசைக்
கருவிகள் வாசிப்பதில் வல்லமையும் உண்டு. பொறுப்பும்
பாசமும் உள்ளவர்கள். அனுஷம் நட்சத்திரம் மூன்றாம்
பாதம்: சுக்ர ஆதிக்கம் உள்ளவர்கள். பாசமும் நேசமும்
மிகுந்தவர்கள். குடும்பப் பொறுப்புகள் அறிந்து நடப்பவர்கள்.
உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பிறருக்கு உதவிசெய்து
மகிழ்பவர்கள். அனுஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன்
அதிபதி செவ்வாய். இவர்களின் வாழ்வில்
ஏற்றத்தாழ்வுகளும், தடை-தாமதங்களும் இருக்கும். தீவிர
முயற்சிக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும். தாழ்வு
மனப்பான்மை இருக்கும்.

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -


Nov 10, 2017, 10:11PM IST ‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை
போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான்.
விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில்
பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர
வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை
‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர். ‘கேட்டையில் பிறந்தவன்
கோட்டையும் கட்டுவான்; கேட்டையும்

77
விளைவிப்பான்’, ‘கேட்டையில் பிறந்தால், சேட்டனுக்கு
ஆகாது’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பழமொழி
என்பது ஒருவரது அனுபவத்தில் தோன்றிய வாசகம்தான்.
அதற்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. உதாரணமாக,
கேட்டை என்பது தமிழ்ச் சொல்; சேட்டன் என்பது
மலையாளச் சொல். சேட்டன் என்றால், சகோதரன் என்று
பொருள். எதுகை மோனையாக இருப்பதால் யாரோ,
எப்போதோ உருவாக்கிய வாசகம் இது. இதையெல்லாம்
உண்மையாகக் கருதி, பயப்படக்கூடாது. - Advertisement -
விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக இருப்பதால், இதில்
பிறந்தவர்கள் தங்கள் மனத்துக்குப் பிடித்ததை அவசரமாகச்
செய்வார்கள். இதனால் வாழ்வில் தவறுகள் ஏற்பட்டு,
பின்னர் வருந்தும் சூழல் ஏற்படும். இந்த நட்சத்திரக்காரர்கள்
தங்களுக்கென ஒரு வழிகாட்டியையோ குருவையோ
தேர்ந்தெடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால், பல
சிக்கல்களைத் தவிர்க்கலாம்; அல்லது, சமாளிக்கலாம்.
பொதுவான குணங்கள்: இனிய சுபாவமும், அழகான
தோற்றமும் கொண்டவர்கள். பொறுமைசாலிகள். ஏதேனும்
பாதிப்பு நேரும்போது பயம், பதற்றம், கோபம் ஆகிய
உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். சுகபோகிகள். பாசம்
இருந்தாலும், வெளிப்படுத்தத் தெரியாதவர்கள். பிறரது
அறிவுரையை விரும்பமாட்டார்கள். கேட்டை நட்சத்திரம்
முதல் பாதம்: - Advertisement - இந்த பாதத்துக்கு அதிபதி குரு.
அறிவு, திறமை, சாதிப்பதற்கான முயற்சி எல்லாம்

78
இவர்களிடம் உண்டு. நல்லவர்கள், வல்லவர்கள் என்றாலும்,
உணர்ச்சிவசப்பட்டு அவசரமாகச் செயலாற்றி, அதனால்
ஏற்படும் விளைவுகளால் வருத்தம் அடைவார்கள்.
எப்போதும் எதையாவது யோசித்துக் குழப்பம் அடைவது
இவர்கள் வழக்கம். கோபம் அதிகமாக இருக்கும். மனத்தில்
பட்டதை பயமில்லாமல் வெளிப்படையாகச்
சொல்லிவிடுவார்கள். அதனால் பிறரால் அதிகம்
விரும்பப்படாதவராக இருப்பார்கள். ஆனால், இவர்கள்
நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள். கேட்டை நட்சத்திரம்
இரண்டாம் பாதம்: இதற்கு அதிபதி சனி. பொருளும் புகழும்
தேடுபவர்கள். உணர்ச்சிவசப்பட்ட செயல்களால், பல
தருணங்களில் பொருளையும் பணத்தையும் இழந்து
தவிப்பார்கள். கோபம் இருக்கும். குடும்பத்தை நேசிப்பவர்கள்.
தாராள மனப்பான்மை இருக்கும். தேக சுகத்தை
விரும்புபவர்கள். உடல் நலத்தில் கவனம் இல்லாதவர்கள்.
கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதற்கும் அதிபதி
சனி பகவானே! 2-ம் பாதத்துக்கு உரியவர்களுக்கான எல்லா
குணங்களும் இவர்களிடமும் இருக்கும். ஆன்மிகத் தேடல்,
கலைகளில் ஈடுபாடு இருக்கும். கேட்டை நட்சத்திரம்
நான்காம் பாதம்: முதல் பாதத்தைப் போல் இவர்களுக்கும்
அதிபதி குரு பகவான். நல்ல உடற்கட்டு, சுகபோகங் களில்
பிரியம் இருக்கும். இவர்களது வாழ்வில் ரகசியம்
மிகுந்திருக்கும். சாஸ்திர ஈடுபாடு, தெய்வபக்தி,
பேச்சுத்திறன், எழுத்துத் திறமை எல்லாம் இருக்கும்.

79
மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -Nov
10, 2017, 10:15PM IST அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல்
தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது.
தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள்
இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’
என்பர். ஆனால், ஏற்கெனவே சொன்னதுபோல்,
இதற்கெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை.
அதேபோன்று, ‘மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும்
சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த
ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார்
உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி,
மூலையில் உட்கார்ந்து விடுவார் எனும் பொருளில் அப்படிச்
சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே!
மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும்,
அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த
பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று
சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ
மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம்
காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை. - Advertisement -
பொதுவான குணங்கள்: தனுசு ராசியில் குருவை
அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற
பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள்.

80
நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும்
மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த
நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால்,
இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம்
இருக்கும். ‘யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு
தலையாக இருப்பது மேல்’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை
கொண்டவர்கள். ஜாதக அம்சங்கள் உயர்வாக இருந்தால்,
பிறருக்கு உதவுவதில் நாட்டமும் தர்ம சிந்தனையும் அதிகம்
இருக்கும். உணர்ச்சிவசப்படுதலும், கோபமும் உண்டு. ஆழ்ந்த
தெய்வ பக்தியும், குடும்பத்தில் பாசமும் இவர்களது
சிறப்பான குணங்கள். இந்த நட்சத்திரக் காரர்களுக்கு கேது
தசை முதல் தசையாக அமையும். - Advertisement - மூலம்
நட்சத்திரம் முதல் பாதம்: செவ்வாய் இதன் அதிபதி.
சுதந்திரமானவர்கள். நினைத்ததைச் செய்து முடிக்க
விரும்புபவர்கள். பாசமுள்ளவர்கள். வாக்கைக்
காப்பாற்றுபவர்கள். பிடிவாதமும் கோபமும் உள்ளவர்கள்.
உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மூலம் நட்சத்திரம்
இரண்டாம் பாதம்: இதன் அதிபதி சுக்கிரன். எல்லாவற்றுக்கும்
ஆசைப்படுபவர்கள். கௌரவத்தை விரும்புபவர்கள். வீடு-
வாகன யோகம் உள்ளவர்கள். குடும்பத்தில் பற்றுள்ளவர்கள்.
சொன்னதைச் செய்பவர்கள்; செய்ய முடிந்ததை மட்டுமே
சொல்பவர்கள். ஓவியம், இசையில் ஈடுபாடு கொண்டவர்கள்.
மூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதன் அதிபதி புதன்.
அறிவாளி, திறமைசாலிகள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்

81
செய்து பொருளீட்டுபவர்கள். தெய்வ பக்தியும் ஆன்மிகத்
தேடலும் கொண்டவர்கள். நட்பு, காதல், பாசம் போன்ற
சிறப்பான குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதற்கும்
அஞ்சாத போராளிகள். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள்;
சாதனையாளர்கள்; கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு
கொண்டவர்கள். புதுமை விரும்பிகள்; நியாய உணர்வு
உள்ளவர்கள். கோபமும் உண்டு, குணமும் உண்டு. பேச்சு,
எழுத்தில் திறமை மிகுந்தவர்கள். மூலம் நட்சத்திரம்
நான்காம் பாதம்: இதன் அதிபதி சந்திரன். தலைமை தாங்கும்
குணம் உண்டு. உயர் பதவி மற்றும் பொருளீட்டுவதில்
ஆசை இருக்கும். அனைவரையும் நேசிப்பவர்கள். நல்ல
நண்பராகத் திகழும் இவர்கள் நேர்மையான எதிரியாகவும்
திகழ்வார்கள். பிடிவாதமும் கோபமும் உடையவர்கள்.
வாதத்திறமையும் கடமை உணர்வும் மிகுந்தவர்கள்.

பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh -


Nov 10, 2017, 10:18PM IST தனுர் ராசியில் அமையும் மற்றொரு
நட்சத்திரம் பூராடம். ‘பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும்
பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில்
ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை
‘அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். முழுமையான
நட்சத்திரமான இது, பெண்குணத்தைக் கொண்ட மனித
கணத்தை சேர்ந்தது. ‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’

82
என்றொரு வழக்கு சொல் உண்டு. அதாவது, பூராட
நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிக காலம் சுமங்கலியாக
இருக்கமாட்டார்கள் என்ற பொருளில் அப்படிச் சொல்வார்கள்.
இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
பூராட நட்சத்திரத்தில் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு
பயம் தேவையில்லை. எத்தனையோ பெண்கள் பூராடத்தில்
பிறந்து தக்க வயதில் திருமணமாகி, நல்ல குழந்தைச்
செல்வங்களுடன் வாழ்ந்துவருவதையும் நாம் காணவே
செய்கிறோம். - Advertisement - பொதுவான குணங்கள்:
பூராடத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திமான்கள்.
பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் வல்லமை
உள்ளவர்கள். எடுப்பான தோற்றம் உள்ளவர்கள்.
சாமர்த்தியசாலிகள். எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து
முடிவெடுப்பவர்கள். இவர்களால் தோல்வியைத் தாங்க
முடியாது. எனவே, தோல்வி நேராதவண்ணம் திட்டமிட்டு
செயலாற்றும் இவர்கள், மற்றவருக்கும் வழிகாட்டியாகத்
திகழ்வார்கள். பூராடம் நட்சத்திரம் முதல் பாதம்: -
Advertisement - பூராடம் முதல் பாத அதிபதி சூரியன். அபார
தன்னம்பிக்கை இவர்களின் பலம். எதையும் தான் செய்தால்
மட்டுமே சரியாக இருக்கும் என நம்புபவர்கள். அதற்கேற்ப,
எதையும் குறையின்றி தவறின்றி பூரணமாகச் செய்து
முடிக்க விரும்புவார்கள். உழைப்பாளிகள். நியாயம், நேர்மை
உள்ளவர்கள். எனினும், இவர்கள் 8 மணி நேரம் உழைத்தால்
6 மணி நேரத்துக்கான பலனே கிடைக்கும்! கடும் உழைப்பும்

83
போதுமென்ற மனமும் இவர்கள் வாழ்வை வளம் பெறச்
செய்யும். பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதன்
அதிபதி புதன். இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனமும்
இவர்களின் தனிச்சிறப்பு இறை வழிபாட்டில் ஈடுபாடு
உள்ளவர்கள். இனிமையான பேச்சு, கவர்ச்சியான தோற்றம்
கொண்டவர்கள். சகல சௌபாக்கியங்களும் இவர்களுக்குக்
கிடைக்கும். பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதன்
அதிபதி சுக்கிரன். ஆசை, பாசம், கோபதாபம், விரும்பியதை
அடைய நினைக்கும் ஆவேசம் – பிடிவாதம் ஆகியவை
இவர்களது குணங்கள். சில தருணங்களில் இவர்களின் இந்த
இயல்புகளே வெற்றிக்கு அடிகோலும். ஒழுக்கம், நேர்மை,
முன்ஜாக்கிரதை மிகுந்தவர்கள். எதிர்மறைச் சிந்தனைகள்
மிகும்போது, இவர்களின் இயல்பான தன்னம்பிக்கைக்
குறையும். பூராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன்
அதிபதி செவ்வாய். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள்.
பிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள். தலைமைப் பண்பு
மிகுந்திருக்கும். எப்போதும் தங்களின் தனித்தன்மையை
நிலைநாட்டுவதற்காக, பிறரை எளிதில் தங்களுடன் பழக
விடமாட்டார்கள். தங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும்
செய்ய தயங்காதவர்கள். செய்த தவறுகளையே மீண்டும்
செய்து அதனால் துன்பத்துக்கு ஆளாவர். பெரியோர்களின்
நல்லுரைகளும் உபதேசங்களும் இவர்களுக்குப் பிடிக்காது.
தங்களிடம் உள்ள குறைகளைத் தெரிந்துகொண்டு,

84
அவற்றைத் தவிர்த்து வாழ்ந்தால், எல்லா செல்வங்களும்
இவர்களை வந்தடையும்.

உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By Satheesh


-Nov 10, 2017, 10:22PM IST நான்கு கால்களைக் கொண்ட
கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு
நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால்
நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும்
சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள
விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல்
பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும்
அமைகின்றன. பொதுக் குணங்கள்: - Advertisement -
அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை,
வாய்மை மிகுந்தவர்கள். மனத்தில் பட்டதை சட்டென்று
வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும்
வேண்டாதவர்கள் ஆகிவிடுவர்.நல்ல தோற்றம், பேச்சுத்
திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை
இவர்களின் பொதுவான குணங்கள். உத்திராடம் நட்சத்திரம்
முதல் பாதம்: இதன் அதிபதி குரு. இவர்களிடம் சாஸ்திர
அறிவு மிகுந்திருக்கும். நல்லதைப் பிறருக்குச் சொல்வதில்
வல்லவர்கள்- நல்ல வழிகாட்டிகள். குரு பக்தி
கொண்டவர்கள். பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு
கொண்டவர்கள். - Advertisement - உத்திராடம் நட்சத்திரம்

85
இரண்டாம் பாதம்: இதன் அதிபதி சனி. ஆசை மிகுந்தவர்கள்.
ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பவர்கள். பிறர்
கஷ்டங்களை உணராதவர்கள். அதிகாரம் செலுத்துவதில்
விருப்பம் மிக்கவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பழி வாங்கும்
இயல்புடையவர்கள். தோல்வியைத் தாங்க முடியாதவர்கள்.
உத்திராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதற்கும்
சனிபகவானே அதிபதி. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின்
குணங்கள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு. தீவிர பக்தி
செய்து, உலகியல் பலன்களையும் ஐஸ்வர்யங்களையும்
அடைய விரும்புபவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறரை
மதிக்கத் தெரியாதவர்கள். தங்களது இயல்புகளை
மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.
உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி குரு.
கருணையும், தர்ம சிந்தனையும் இவர்களது இயல்பு.
துணிச்சல் மிக்கவர்கள். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்
தீவிரமானவர்கள். தீமையை எதிர்த்துப் போராடுபவர்கள்.
பிறர் நலம் கருதி வாழ்பவர்கள்.

திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் By


Satheesh -Nov 10, 2017, 10:27PM IST ஸ்ரீமகாவிஷ்ணுவின்
நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக்
காரணமான மகாபலியைப் போற்றும் வகையில்,
ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை

86
சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர். திரிபுரத்தை
எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த
தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும்
சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம்
கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு
அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு
முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்து அசுர
சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு.
திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில்
அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. - Advertisement -
திருவோணம் நட்சத்திரம் முதல் பாதம்: செவ்வாய் இதன்
அதிபதி. இதில் பிறந்தவர்கள் சௌகரியத்தை விரும்புவர்.
தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பவர்கள்,
பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள். உடல்நலக் குறைவு
அவ்வப்போது ஏற்படும். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். -
Advertisement - திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:
சுக்கிரன் இதனை ஆட்சி செய்பவர். இவர்கள் சுகத்தை
விரும்புபவர்கள். திறமைசாலிகள். தலைமை தாங்கும்
இயல்பும், தெய்வபக்தி உள்ளவர்கள். பெரியோர்களை
மதிப்பவர்கள். திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:
புதன் இதன் அதிபதி. நிறைவான ஞானம், பக்தி
உடையவர்கள். யோகி போல வாழ்பவர்கள். தர்மம்
செய்வதிலும் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.
கோபம், குணம் இரண்டும் இருக்கும். திருவோணம்

87
நட்சத்திரம் நான்காம் பாதம்: சந்திரன் இந்தப் பாதத்தை
ஆட்சி செய்கிறார். இவர்கள் சௌகரியமும், சௌபாக்கியமும்
பெற்று வாழ்பவர்கள். பாசமும் நேசமும் மிக்கவர்கள்.
குடும்பத்தை நேசிப்பவர்கள். நட்பு மிக்கவர்கள்.
நியாயவாதிகள். உடனடிக் கோபமும் உடனடி சாந்தமும்
இவர்கள் இயல்பு.

அவிட்டம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்


கடமையில் ஆர்வம் கொண்டவராகவும்,
கம்பீரமானவராகவும், தைரியசாலியாகவும், செல்வாக்கு
மிக்கவராகவும், முன்கோபியாகவும், மனைவியை
நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

சதயம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலி


யாகவும்,
வசீகரனமானவராகவும், நட்புக்காக செயல்படுவராகவும்,
முன்யோசனை கொண்டவராகவும், ஒழுக்கமானவராகவும்,
திறமையாக செயல்படுபவராகவும், செல்வந்தராகவும்
இருப்பார்கள்.

பூரட்டாதி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலில்


ஆர்வம் மிக்கவராகவும், மன திடமானவராகவும்,

88
பலசாலியாகவும், சுகபோகியாகவும், பழக இனியவராகவும்,
குடும்பத்தை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்


பக்திமானாகவும், கல்வியாளராகவும், கடமையில்
ஆர்வமிக்கவராகவும், சாதுர்யமாகப் பேசுபவராகவும்,
ஆபரணப்பிரியராகவும் இருப்பார்கள்.

ரேவதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிரியை


வெல்பவராகவும், தைரியசாலியாகவும்,
நேர்மையானவராகவும், சுகபோகத்தில்
நாட்டமுடையவராகவும், பழக இனியவராகவும், தற்புகழ்ச்சி
விரும்புபவராகவும் இருப்பார்கள்.

89

You might also like