Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

உடல் தூய்மை

' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதனை நாம்


அனைவரும் அறிந்திருப்போம். மனிதர்களாகிய நமக்கு உடல்நலம்
மிகவும் முக்கியம். உடல்நலம் நம் உயிரினும் மேலானது.
உடல்நலம் குன்றி உடல் மோசமாக ஆகிவிட்டால் உயிருக்கே
ஆபத்து. நோயற்ற வாழ்வும், சுகாதாரமும், நலமும் உடல்நலனுக்கு
அர்த்தமாகும். நாம் உடல்நலனுடன் இருப்பதே இறைவன்
நமக்களித்த சந்தோசம் மற்றும் வரமாகும். 'எனக்கு இந்த
வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை' எனும் வசன வரியைத்
தவிர்த்துவிட்டு இறைவன் நம்மை உடல்நலத்துடன் வைத்துக்
கொள்வதை எண்ணி சந்தோசம் அடைய வேண்டும்.
உடல்நலத்தைப் பாதுகாப்பதற்காகப் பல வழிமுறைகள் விரல்
நுனியில் உள்ளன.

முதலாவதாக, நமது அன்றாட நடவடிக்கையில் ஒன்றான


உணவுப் பழக்கத்தைக் கவனிக்க வேண்டும். நம் உணவில் நன்மை
மற்றும் தீமை என அனைத்தும் உள்ளன. நாம் உணவு உண்ணும்
போது சமசீர் உணவானது, உணவு கூம்பகத்தைப் பின்பற்ற
வேண்டும். உணவு கூம்பகத்தில் நமது உணவில் அதிகமாகச்
சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு முதல் குறைவாகச் சேர்த்துக்
கொள்ள வேண்டிய உணவு வரை அனைத்தும் வரிசையாக
இருக்கும். உதாரணத்திற்கு, எண்ணெய் சம்பந்தப்பட்ட
உணவுகளைக் குறைவாகவும் மாவு சம்பந்தப்பட்ட உணவுகளைக்
குறைவாகவும் உட்கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில்
கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து எனப் பல வகை
சத்துக்கள் உள்ளன. சத்துள்ள சமசீர் உணவு உண்பதனால் நமது
உடல் தெம்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல்நலம் குன்றாது
இருதோய் மூச்சு வரை வாழலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அடுத்ததாக, நம் உடல்நலம் குன்றாமலிருக்க உடற்பயிற்சி


முக்கிய பங்காற்றுகிறது. உடற்பயிற்சியை நாம் காலை மாலை என
இரு வேலைகளிலும் மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி
செய்வதனால் நாம் நமது உடலைக் கட்டுக்கோப்பாகவும்
அழகாகவும் பார்த்துக் கொள்ளலாம். நாம் உடற்பயிற்சி செய்வதால்
நமது உடலில் இருந்து வியர்வை எனும் கழிவுப் பொருள்
வெளியேறுகிறது. அதோடு, 'உடலினை உறுதி செய்' எனும்
மொழியணியைக் கருத்தில் கொண்டால், தானாகவே உடற்பயிற்சி
செய்வோம். உடற்பயிற்சி செய்தால் நமது உடலில் இரத்த ஓட்டம்
சீர் அடையும். ஆகவே, நாம் உடற்பயிற்சி செய்தால் நோய்
நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கலாம்.

அதற்கு அடுத்ததாக, உடல்நலத்துடன் இருக்க நாம் தீய வழிகளில்


நேரத்தை விரயம் செய்யக் கூடாது. உதாரணத்திற்கு, மது
அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருள் உட்கொள்ளுதல்,
பசை நுகர்தல் மற்றும் இன்னும் பல உள்ளன. இது போன்ற
செயல்களில் நாம் ஈடுபட்டால் உடல்நலம் குன்றி பல கொடிய
நோய்களின் விருந்தினராக ஆகிவிடுவோம் என்பதைப் புரிந்துக்
கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, புற்றுநோய், மாரடைப்பு,
இருதய நோய் மற்றும் இன்னும் பல. இது போன்ற நோய்கள் நம்
உயிருக்கு ஆபத்தை வரவழைக்கக் கூடியவை. நாம் தீய
செயல்களில் ஈடுபடுவதன் காரணம் கூடா நட்பும்
பெற்றறோர்களின் அன்பு மற்றும் அரவணைப்பின்மையும்தான்.
குடும்பத்தினரைத் தவிர்த்து நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள்
நற்பண்புகள் உள்ளவர்களாக இருப்பின், நாமும் ஒழுக்கமுடனும்
நற்பண்புடனும் மனம் சஞ்சலம் அடையாமலும் இருக்கலாம்
என்பதில் சிறிதும் இல்லை.

நான்காவதாக, நாம் உடல்நலத்துடன் வாழ மனமகிழ்


நடவடிக்கைகளில் பங்கு பெறலாம். உதாரணத்திற்கு, நாம் நமது
நேரத்தை இயற்கை வளமான செடி கொடிகளுடன் செலவு
செய்யலாம். நமது கவலைகளைச் செடி கொடிகளிடம் கூறி மனதில்
நிறைந்துள்ள பாரங்களை இறக்கி வைக்கலாம். இதனால், கவலை,
துக்கம், கண்ணீர், மன உளைச்சல்,மனக் கஷ்டம், மன பாரம் என
அனைத்தையும் ஒரே நொடியில் கண் சிமிட்டும் நேரத்தில்
மறந்துவிடலாம். நமது துன்பங்களைப் புரிந்துக் கொள்ள ஒரு
சிலரே உள்ளனர் காரணம் இப்புவியில் அனைவருக்கும் பல
பிரச்சனைகள் மற்றும் கவலைகள் உள்ளன. அது மட்டும்
இல்லாமல், நாம் குடும்பத்தினரோடு குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு
முறையாவது நேரத்தைச் செலவு செய்வதோடு மனம்விட்டுப் பேச
வேண்டும். அதோடு நமது குடும்பத்தினர், ஓவ்வொருவருக்கும்
இடையே புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே,
நாம் மனமகிழ் நடவடிக்கையின் மூலமாகவும் உடல்நலம்
குன்றாமல் சீரும் சிறப்புமாகச் சந்தோஷமாக, ஆரோக்கியமாக
வாழலாம் என்பதில் சிறிதும் கேள்விகள் இல்லை எனலாம்.

அடுத்ததாக, நாம் உடல்நலம் குன்றாமல் இருக்க குறைந்தபட்சம்


வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரைச் சந்தித்து உடல்
பரிசோதனை செய்ய வேண்டும். காரணம், நமக்கு ஏதேனும் நோய்
கண்டறியப்பட்டால் ஆரம்பத்திலேயே சிகிச்சைப் பெற்று குணம்
அடையலாம் அல்லது நோய்க்கான மருந்தைப் பெற்று நோயைக்
கட்டுப்படுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல், புதிதாக ஏதேனும்
நோய் கண்டறியப்பட்டால், மற்றவர்களுக்கு அந்நோய் ஏற்படும்
முன் அந்நோய்க்கான மருந்தைக் கண்டுப்பிடிக்க பல வாய்ப்புகள்
பிரகாசமாக உள்ளன. அதோடு, அந்நோய் பரவும் நோயாக இருப்பின்
நமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்மைச் சுற்றி
உள்ளவர்கள் என அனைவரையும் பாதிப்படைய செய்யும். கோவிட்-
19 நோயை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். காரணம்,
கோவிட்-19 நோய் இன்று வரை நம்மால் முற்றுப்புள்ளி வைக்க
முடியாமல் வேகமாகப் பரவிக் கொண்டே இருக்கிறது.

ஆகவே, சராசரி மனிதனாகிய நாம், நமது உடல்நலத்தைப்


பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் நமது உடல்நலத்தைக் கருத்தில்
கொண்டால் நோய் நொடியின்றி வாழலாம் என்பது உறுதி. நாம்
நமது உடல்நலத்தைப் பேண இதோடு மட்டும் இல்லாமல் இன்னும்
எண்ணிலடங்க வழிமுறைகள் உள்ளன. உடல்நலம் உயிரினும்
மேலானது என்பதை நினைவில் கொண்டு, நாம் செய்யும்
ஒவ்வொரு வேலையையும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
மாணவர்களாகிய நாம் உடல்நலத்துடன் இருப்பதைப்
பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். அதோடு, பள்ளியில்
உடற்கல்வி, நலக்கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில்
கட்டாயமாகக் கலந்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இது போன்ற
வழிமுறைகளைப் பின்பற்றி சிறப்பான மற்றும் ஆரோக்கியமான
உடல்நலத்துடன் வாழ வேண்டும்.
உளத் தூய்மை

மனிதன் உயர்வதற்கும் அவன் தாழ்வதற்கும் உள்ளம்தான் காரணம்.


நேர்மையான உள்ளம் கொண்டவன் நேரிய வழியில் செல்கின்றான்.
நற்பண்புகளையும் உயர்ந்த குணங்களையும் தன்னுள் உண்டாக்கி
கொள்கின்றான். நல்ல காரியங்களை விரும்பிச் செய்கின்றான். தீய
உள்ளம் கொண்டவன் நேர் எதிரானவன் அவனிடம் உயர் குணங்களையும்
நற்பண்புகளையும் எதிர்பார்க்க முடியாது. நேரிய வழியும் அதன் உயர்வும்
அவனுக்கு தெரியாது.

.மனிதன் நற்பண்புகளை உண்டாக்கி கொள்வதற்குத்தான் இறைபக்தி


மிகவும் அவசியம். பிறருக்கு உதவி செய்வதால் நற்குணங்களையும்
உயர் பண்புகளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும். இதனால், நம்
உள்ளத்தின் தூய்மையைப் பாதுகாக்க முடியும்.

தீய குணம் மனிதனின் விரோதி. உயிரைக் குடிக்கும் கொடிய விஷத்திற்கு


அதை ஒப்பிடலாம். தீய பண்புடையவன் அதன் கொடிய நச்சுப் பல்லுக்கு
இரையாகியே தீர வேண்டும்.

You might also like