Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

ஏ.பி.மகாபாரதி, இ.ஆ.ப.

, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர். பால்பண்ணை, தரங்கை சாலை,

மன்னம்பந்தல்,

மயிலாடுதுறை – 609 001

செல்லிடை : + 91 9443300955

தொலைபேசி(அ) : 04364-290 760

மின்னஞ்சல் : collr-myd@nic.in

நே.மு.ந.க.5844/2024/சி2 நாள்: .05.2024

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: ஊராட்சி நிர்வாகம் - மயிலாடுதுறை மாவட்டம் - குத்தாலம்

வட்டம் – குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் - இதர

திட்டப்பணிகள் - முறைகேடு நடந்துள்ளதாக வார

பத்திரிக்கை ஒன்றில் அவதூறு செய்தி வெளியீடு -

பத்திரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோருதல்

– தொடர்பாக.

பார்வை 1.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியத்தலைவர் அவர்களின்


: செயல்முறைகள் செ.மு.ந.க.எண்.1117/ஊவ 9/2024

நாள்:09.05.2024.

2.நவீனநெற்றிக்கண் மாத இதழ் நாள் 17.05.2024.

3.ஆய்வுகுழுவின் அறிக்கை, நாள்:10.05.2024.

4.மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.

******
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய

அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் இதர

திட்டப்பணிகளில் பிடித்தம் செய்யப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொகையை

அரசுகணக்கில் செலுத்துவது தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக “நவீன

நெற்றிக்கண்” என்கின்ற வார இதழில் 17.05.2024 நாளிடப்பட்ட பதிப்பில் GST தொகை

குறித்து அவதூறாக செய்தி வெளியிடப்பட்டது தொடர்பாக உண்மைத்தன்மை

அறிக்கையினை பணிந்து அனுப்புகின்றேன்.

பார்வை (1)-இல் காணும் செயல்முறை ஆணையின்படி மயிலாடுதுறை மாவட்ட

ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) தலைமையில் மாயிலாடுதுறை மாவட்ட

உதவி இயக்குனர்(தணிக்கை) மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

திட்ட இணை இயக்குனர் அலுவலக கணக்கு அலுவலர், ஆகியோரை கொண்ட சிறப்பு

அலுவல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு ஆய்வு குழு அலுவலர்கள் கடந்த 10.05.2024 அன்று ஆய்வு

மேற்க்கொண்டு கீழ்க்கண்ட ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தின் திட்டப் பிரிவில்

செயல்பாட்டில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து

கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, PMAGY மற்றும் JJM ஆகிய திட்டப்பணிகளில்

மேற்க்கொள்ளப்பட்ட செலவினங்கள் மற்றும் பட்டியல்களில் பிடித்தம் செய்யப்பட்ட


GST தொகை உரிய அரசு தலைப்பு கணக்கில் திட்டம் வாரியாக செலுத்தப்பட்ட

விபரங்கள் 10.05.2024 அன்று ஆய்வில் காணப்பட்டது என்றும் திட்டம் வாரியாக

பட்டியலிட்டு செலவு சீட்டு நகல் பெறப்பட்டது என்றும் 2022-2023 ஆம் ஆண்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பொருட்கூறு ஒதுக்கீடு (Material &

Skilled Wages Allotment) ரூ.9,78,38,000/- (ரூபாய் ஒன்பது கோடியே எழுபத்து எட்டு

லட்சத்து முப்பத்து எட்டாயிரம் மட்டும்) மற்றும் 2023-2024 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பொருட்கூறு ஒதுக்கீடு (Material & Skilled Wages

Allotment) ரூ.7,94,49,000/-(ரூபாய் ஏழு கோடியே தொன்னூற்று நான்கு லட்சத்து

நாற்பத்து ஒன்பதாயிரம் மட்டும்) ஆகும்.

இந்நிலையில், மேற்படி புகார் தொடர்பாக குத்தாலம் வட்டாரத்தின் அனைத்து

திட்டக் கணக்குகளின் பதிவேடுகளை கடந்த 01.01.2023 முதல் 30.04.2024 முடிய

ரொக்கப்பதிவேடு, GST செலுத்து சீட்டுகள்(GSTR7) பதிவேடுகளின் அடிப்படையில் 2%

GST பிடித்தம் செய்யப்பட்ட விபரங்களுடன் ஒத்திசைவு செய்யப்பட்டதில் புகாரில்

தெரிவித்தபடி எவ்வித விதிமீறல்களும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது

எனவும் பிடித்தம் செய்யப்பட்ட GST தொகை அனைத்தும் உரியகாலத்தில் அரசுகணக்கு

தலைப்பில் செலுத்தப்பட்டது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

மேற்படி, குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி

அலுவலராக பணிபுரியும் திரு.வி.கஜேந்திரன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில்,


“என்னை பற்றியும், எனது பதவியினை பற்றியும் உண்மைக்கு புறம்பான தவறான

தகவல்களை நவீன நெற்றிக்கண் வார இதழின் 17.05.2024 நாளிட்ட பதிப்பிற்கு அளித்த

நபர்களை கண்டறிந்து அவர்கள் மீதும், தவறான தகவல்களின் அடிப்படையில் செய்தி

வெளியிட்ட நவீன நெற்றிக்கண் வார இதழ் மீதும் சட்டரீதியான நடவடிக்கை

மேற்கொண்டு எனக்கும் என் பதவிக்கும் ஏற்பட்ட களங்கத்தினை போக்கும் வகையில்

நீதி வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்” என கோரிஉள்ளார்.

மேலும் மேற்படி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி

அலுவலராக பணிபுரியும் திரு.ந.சசிகுமார் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது

பதவி மற்றும் பிரிவிற்கு தொடர்பில்லாதது எனவும் எந்த வகையிலும் எனக்கு

தொடர்பில்லாத என்னை பற்றியும், எனது பதவியினை பற்றியும் உண்மைக்கு புறம்பான

தவறான தகவல்களை நவீன நெற்றிக்கண் வார இதழ் பதிப்பகத்திற்கு அளித்த நபர்களை

கண்டறிந்து அவர்கள் மீதும், தவறான தகவல்களின் அடிப்படையில் செய்தி

வெளியிட்ட நவீன நெற்றிக்கண் வார இதழ் மீதும் சட்டரீதியான நடவடிக்கை

மேற்கொண்டு எனக்கும் என் பதவிக்கும் ஏற்பட்ட களங்கத்தினை போக்கும் வகையில்

நீதி வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் நவீனநெற்றிக்கண் வார இதழ் 17.05.2024 நாளிட்ட பதிப்பில்

வெளியிடப்பட்ட அவதூறு செய்தி தொடர்பாக 12.05.2024, 13.05.2024 மற்றும் 14.05.2024


ஆகிய தேதிகளில் தினகரன், தினத்தந்தி மற்றும் தினமலர் ஆகிய நாளிதழ்களில் மேற்படி

செய்தி உண்மைக்கு புறம்பானது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, “நவீன நெற்றிக்கண்” என்கின்ற வார இதழ் கடந்த பத்து ஆண்டுகளுக்கு

மேலாக அரசு அலுவலர்களை ஏதேனும் அவதூறான குற்றச்சாட்டுகளை தெரிவித்தும்

பிரசுரம் செய்தும் அரசு அலுவல் பணியினை செய்யவிடாமல் பணம் பறிக்கும்

செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என தெரியவருகிறது. இந்த

பத்திரிக்கையின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

இதனால் அரசு அலுவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியும், மேற்படி

அலுவலர்களிடம் பணம் பறித்திடும் நோக்கில் மிரட்டியும் வருகின்றனர் என

தெரியவருகிறது. எனவே “நவீன நெற்றிக்கண்” வார பத்திரிக்கையின் மீது நடவடிக்கை

மேற்க்கொள்ள கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் நம்பிக்கையுள்ள,

மாவட்ட ஆட்சித்தலைவர்,

மயிலாடுதுறை.

பெறுநர்:

திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப.,

கூடுதல் தலைமைச் செயலாளர்/,


முதலமைச்சரின் தனி செயலாளர்-I மற்றும் ஊரக வளர்ச்சி ஆணையர்,

மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம்,

தலைமை செயலகம்,

சென்னை – 600 009.

You might also like