MODUL TING 4 JPN

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 24

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020

படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 1 :

கற்றல் தரம் : 2.3.11 – உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்

பதிலளிப்பர்.

கீழ்க்காணும் வாசிப்புப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்கு விடையளித்திடுக.

வேளாண்மையில் இயற்கை உரம் என்பது மண்ணூட்டப் பொருளாகக் கருதப்படுகிறது.

இஃது உயிரினங்களிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களாகும். உயிர்சார்

பொருள்களிலிருக்கும் 'நைட்ரஜன்' போன்ற ஊட்டப்பொருள்கள் நுண்ணுயிர்களால்

உருச்சிதைவுக்குட்பட்டு மண் வளத்தை அதிகரிப்பதனால் இயற்கை உரமாகிறது. இவை கரிம

அல்லது சேதனப் பொருள்கள் என்பதால் கரிம உரம் அல்லது சேதனப் பசளை எனவும்

அழைக்கப்படுகின்றன. மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளின் கழிவுப் பொருள்களும்

வைக்கோல், இலை, தழை போன்ற தாவரங்களின் கழிவுப் பொருள்களும் வேளாண்மையில்

இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை உரமிடுவதால் செடிகளுக்குத்

தேவையான ஊட்டச்சத்துக் கிடைப்பதுடன் மண்ணின் தன்மையும் பாதுகாக்கப்படுகின்றது.

விலங்குத் தொழுவங்களிலிருந்து பெறப்படும் கழிவுகள் தொழு உரம் அல்லது எரு

எனப்படுகின்றது. சான்றாக, மாட்டுச் சாணம், ஆட்டுப் பிழுக்கை மற்றும் சிறுநீர் போன்றவை

தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கவல்லவை. பயிர்கள்

மண்ணிலுள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சிச் செழிப்பாக வளர்கின்றன. இதனால், மண்ணின்

வளம் குறைய நேரிடும். இச்சிக்கலைக் களைவதற்காக வேறொரு பயிரை அந்த நிலத்தில்

பயிரிட்டு, அப்பயிர் வளர்ந்தவுடன் அவற்றை அதே நிலத்தில் உழுது, மண்ணுடன் கலப்பதன்

மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்க முடியும். பொதுவாக, 'நைட்ரஜன்' ஊட்டக்கூறு

அதிகமாகவுள்ள தாவரமென அவரை தாவரம் கருதப்படுகிறது. இத்தகை உரத்தைப்

பசுந்தாள் உரம் என்பர். தொடர்ந்து, கூட்டெரு என்பது மக்க வைக்கப்பட்ட உயிர்சார்

பொருள்களாலான உரமாகும். இதில் தொழு உரம், எரு மற்றும் பசுந்தாள் உரம் போன்ற

கரிம/சேதனக் கலவைகள் கலந்திருக்கும். மேலும், தாவர வித்துகளிலிருந்தும் விலங்குகளின்


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

கழிவுகளிலிருந்தும் அகற்றப்படும் நீரானது செறிவான கரிம/சேதன உரத்தை உற்பத்திச்

செய்யவல்லது.

சுருங்கக்கூறின், இயற்கை உரத்தினால் மண் வளத்திற்கும் மனிதனுக்கும் எந்தவொரு

பக்கவிளைவும் கிடையாது. ஆரோக்கியமான நல்வாழ்விற்கு இயற்கை உரத்தைப்

பயன்படுத்தி விவசாயம் செய்வோம்.

1. இயற்கை உரம் எனப்படுவது யாது?

2. இயற்கை உரம் எதிலிருந்து கிடைக்கப்பெறுகிறது?

3. இயற்கை உரத்தின் வகைகளை விளக்கத்துடன் குறிப்பிடுக.

4. விவசாயத்திற்கு இயற்கை உரம் சிறந்ததா; செயற்கை உரம் சிறந்ததா? -இது பற்றி உமது

கருத்து என்ன?

5. நம் நாட்டின் விவசாயத் துறையில் இயற்கை உரத்தின் பயன்பாடு எவ்வாறு இருக்கிறது?

ஏன்?

பயிற்சி 2 :

கற்றல் தரம் : 3.4.23 - 220 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

மாணவர் கருத்து விளக்கக் கட்டுரை எழுதப் புகுமுன் சில கூறுகளைக் கருத்திற்கொள்வது

சிறப்பு. இக்கட்டுரையில் முன்னுரை, கருத்துகள் (4 / 5 கருத்துகள்), முடிவுரை இருத்தல்

வேண்டும். கருத்துகள் பல்வகையான துறை / மூலங்களிலிருந்து இருந்து எடுத்தாளப்படுதல்

சிறப்பு.(வரலாறு, அறிவியல், இலக்கியம் போன்ற ஏனைய துறை/மூலத்திலிருந்து கருத்துகள்)

மாணவர் இக்கட்டுரையை வாதக் கட்டுரை போன்றோ விவாதக் கட்டுரை போன்றே

எழுதுதல் கூடாது.

கல்வி
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுக. கொடுக்கப்பட்டுள்ள சட்டகத்தின்

அடிப்படையில் உங்கள் கட்டுரை இருக்கலாம். மாணவர் சொந்தக் கருத்துகளையும்

பயன்படுத்தி எழுதலாம்.

முன்னுரை

கல்வி என்பதன் பொருள்

கருத்து 1

கல்வியின் வரலாற்றுப் பின்னணி

கருத்து 2

கல்வியின் சிறப்பு

கருத்து 3

உலகம் / மலேசியக் கல்வி

கருத்து 4

கல்வியினால் ஏற்படும் நன்மைகள் / கல்லாவிடில் ஏற்படும் தீமைகள்

கருத்து 5

எதிர்காலக் கல்வி

முடிவு

மாணவரின் எழுதிய கருத்துகளைத் தொகுத்து முடிவுரை எழுதுதல் சிறப்பு.

பயிற்சி 3 :
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

கற்றல்பேறு : 5.4.5 - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும் என்பதை

அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் ஈறு (கடைசி எழுத்து) கெட்டு வரும்போது

அதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்கிறோம்.

எகா: பேசாத பையன் (பேசாத என்ற சொல்லின் ஈறு த. இந்த எழுத்து இல்லாமல்

போவதே ஈறு கெட்டு என்று சொல்லப்படுகிறது) அவ்வாறு ஈறு கெடும்போது

பயிற்சி 1: கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

1. பேசா + பேச்சு =

2. தூங்கா + குழந்தை =

3. மாறா + துன்பம் =

4. தீரா + செல்வம் =

5. பாடா + பாட்டு =

6. செய்யா + தொழில் =

7. கேளா + கவிதை =

8. இறவா + புகழ் =

9. அணையா + தீபம் =

10. வாடா + பூ =

11. காணா + காட்சி =

12. மாறா + குணம் =

13. எழுதா + பாடல் =

14. பதறா + காரியம் =

15. ஓயா + தொல்லை =

16. செல்லா + காசு =

17. அழியா + செல்வம் =


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

18. அறியா + பையம் =

19. தணியா + தாகம் =

20. தேடா + கல்வி =

பயிற்சி 4 :

கற்றல் தரம் : 3.3.6 - உரைநடையிலுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுவர்.

*குறிப்பு/விளக்கம்

இரண்டு அல்லது மூன்று சிறுபத்திகள் கொண்ட உரைநடை கொடுக்கப்படும்.

தொகுத்தலை 4 பத்திகளில் பிரித்து எழுத வேண்டும்.

(முன்னுரை, தெரிநிலைக் கருத்து, புதைநிலைக் கருத்து, முடிவுரை)

முன்னுரை - உரைநடையின் தலைப்பை எழுத வேண்டும்.

- 5/6 சொற்களில் ஒரே வாக்கியம் போதும்.

தெரிநிலையும் புதைநிலையும் சேர்த்து மொத்தமாக 5 கருத்துகள் எழுத வேண்டும்.

- இந்த அடிப்படையில் (2 தெரிநிலை + 3 புதைநிலை / 3 தெரிநிலை + 2

புதைநிலை / 1 தெரிநிலை + 4 புதைநிலை / 4 தெரிநிலை + 1 புதைநிலை)


எழுதினால் போதும்.

- தெரிநிலைக் கருத்துகளை ஒரு பத்தியிலும், புதைநிலைக் கருத்துகளை அடுத்த

பத்தியிலும் எழுதவும்.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

தெரிநிலைக் கருத்து (isi tersurat)

- உரைநடையில் வெளிப்படையாகத் தெரியும் நேரடிக் கருத்தாக இருக்க வேண்டும்.

- உரைநடையின் வாக்கியங்களை/வரிகளை அப்படியே எடுத்து எழுதக்கூடாது.

புதைநிலைக் கருத்து (isi tersirat)

- உரைநடையில் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருக்கும் புதைநிலைக் கருத்தாக

இருக்க வேண்டும்.

- நேரடிக் கருத்தோடு தொடர்புடையதாய், நேரடிக் கருத்தின் பின்னணியில் தெரியும்

கருத்தாய் இருக்க வேண்டும்.


முடிவுரை - பரிந்துரை / விளைவு / சுய கருத்து / ஏற்புடைய முடிவு என ஏதேனும் ஒன்றை

ஒரே

வாக்கியத்தில் எழுதவும்.

* வாக்கிய இயைபுக்கு / கருத்துகளின் தொடர்புக்கு இடைச்சொற்கள் பயன்பாடு இருப்பின்

சிறப்பு.

* தொகுத்தல் / விடை 50 சொற்களில் (ஏறக்குறைய / சுமார்) இருப்பதை உறுதி செய்யவும்.

* தேவைக்கு மீறி எழுதினால் பிழைகளும் நேர விரையமும் ஏற்பட வாய்ப்புண்டு.

மாதிரிக் கேள்வியும் பரிந்துரைக்கப்படும் விடையும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடையை வாசித்து, அதன் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம்

நல்ல பாடல்கள், பக்தி, நன்னெறி, பண்பாடு ஆகியவை சிதறிப்போகாது சிறப்பாகத்

தந்ததுதான் அன்றைய தமிழ்த் திரைப்படம். இன்றைய தமிழ்த் திரைப்படங்களோ

எதிர்மாறான விளவுகளையே ஏற்படுத்தி வருகின்றன.

இன்றைய திரைப்படங்களில் கருத்தாழமிக்க பாடல்கள் மிகவும் அருகிவிட்டன. ஓரிரு

பாடல்களைத் தவிர மற்றவை விரசத்தைத் தூண்டுவதாகத்தான் இருக்கின்றன. இவ்வாறான


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பாடல்கள் இளையோரிடையே தீய சிந்தனைகளை ஊட்டி அவர்களைத் தீய செயல்களுக்கு

இட்டுச்செல்கின்றன என்றால் அது மிகையாகாது.

அடுத்து, நடிகர்களின் உடை பற்றி சொல்லும்போதே பலர் முகம் சுளிக்கின்றனர்! அன்றைய

திரைப்படங்களில் நமது கலை, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் உடைகள் அணிந்திருந்தனர்.

இன்றோ நாகரிகம் எனும் போர்வையில் நமது பண்பாட்டிற்கு ஒவ்வாத உடைகளே திரையில்

அதிகம் காணப்படுகின்றன. நடிகைகள் அங்கம் தெரியும் அரைகுறை ஆடைகளை அணிந்து

கொள்வதைக் காணும்போது மனம் வேதனைக்குள்ளாகிறது. நம்மினப் பெண்களும்

அதுபோல ஆடைகளை அணிந்துகொள்வது, நாளடைவில் நம் பண்பாட்டு உடைகள்

மறந்துபோகும் நிலை வருமோ என்னும் அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

முன்னுரை - இவ்வுரைநடைப் பகுதி இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் பற்றி

விவரிக்கிறது.

தெரிநிலைக் கருத்து - அன்றைய திரைப்படம் நமக்குப் பயனான விசயங்களை நிறைய

தந்தது.(கருத்து 1) ஆனால், இன்றைய திரைப்படங்களோ எதிர்மாறான விளைவுகளையே

அதிகம் ஏற்படுத்துகின்றன. (கருத்து 2) தொடர்ந்து, இன்றைய திரைப்படங்களில்

கருத்தாழமிக்க பாடல்கள் மிகவும் அருகிவிட்டன. (கருத்து 3) மேலும், கருத்தில்லாப்

பாடல்கள் இளையோரைத் தீயவழிக்கு இட்டுச் செல்கின்றன. (கருத்து 4)அடுத்து, அன்றைய

திரைப்படங்களில் நமது கலை, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் உடைகள் அணிந்திருந்தனர்.

(கருத்து 5) ஆனால், இன்றோ நமது பண்பாட்டிற்கு ஒவ்வாத நாகரீக உடைகளையே

திரையில் அதிகம் காண்கிறோம். (கருத்து 6) தொடர்ந்து, நம்மினப் பெண்களும் அவ்வாறு

அணிவதால், நம் பண்பாட்டு உடைகள் நாளடைவில் மறந்து, மறைந்துபோகும். (கருத்து 7)

புதைநிலைக் கருத்து - அன்று நல்ல நல்ல திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். (கருத்து

1) இன்றோ அவ்வாறான படங்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது. (கருத்து 2) அதோடு,

இன்றைய திரைப்படங்களின் பெரும்பாலான பாடல்கள் மோசமாக உள்ளன. (கருத்து 3)

எனவே, அத்தகைய பாடல்கள் இளையோரை நல்வழிக்குக் கொண்டு செல்லவில்லை.


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

(கருத்து 4) அது தவிர, அன்றைய திரைப்படங்களில் பார்த்த நமது பண்பாட்டு உடைகளை

இன்று காண முடியவில்லை (கருத்து 5) இதனால், நம் பண்பாட்டு உடைகள் நாளடைவில்

மறையக்கூடும். (கருத்து 6)

முடிவுரை - ஆகவே, இன்றைய திரைப்படங்களைப் பார்ப்பதை நாம் குறைத்துக்கொள்ள

வேண்டும். (பரிந்துரை)

ஆகையால், இன்றைய திரைப்படங்களினால் நம் பண்பாடு சீரழிய

வாய்ப்புள்ளது. (விளைவு)

சுருங்கக் கூறின், இன்றைய திரைப்படங்கள் நமக்குப் போதிய பயனளிப்பதாக

இல்லை. (சுய கருத்து)

இதுகாறும், இன்றைய திரைப்படங்களால் சமுதாயத்திற்குப் பாதிப்பு அதிகம் எனத்

தெரிகிறது. (ஏற்புடைய முடிவு)

மாதிரி விடை - 1

இவ்வுரைநடைப் பகுதி இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் பற்றி விவரிக்கிறது.

அன்றைய திரைப்படம் நமக்குப் பயனான விசயங்களை நிறைய தந்தது. ஆனால், இன்றைய

திரைப்படங்களோ எதிர்மாறான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து,

இன்றைய திரைப்படங்களில் கருத்தாழமிக்க பாடல்கள் மிகவும் அருகிவிட்டன.

அன்று நல்ல நல்ல திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். இன்றோ அவ்வாறான படங்களைக்

காண்பது மிக அரிதாக உள்ளது.

ஆகவே, இன்றைய திரைப்படங்களைப் பார்ப்பதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும்.

(49 சொற்கள்)

*தெரிநிலைக் கருத்து - 3 + புதைநிலைக் கருத்து - 2

மாதிரி விடை - 2

இந்த உரைநடைப் பகுதி இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் பற்றி விவரிக்கிறது.


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

இன்றைய திரைப்படங்களில் கருத்தாழமிக்க பாடல்கள் மிகவும் அருகிவிட்டன. மேலும்,

கருத்தில்லாப் பாடல்கள் இளையோரைத் தீயவழிக்கு இட்டுச் செல்கின்றன

அதோடு, இன்றைய திரைப்படங்களின் பெரும்பாலான பாடல்கள் மோசமாக உள்ளன. எனவே,

அத்தகைய பாடல்கள் இளையோரை நல்வழிக்குக் கொண்டு செல்லவில்லை. அதுதவிர, அன்றைய

திரைப்படங்களில் பார்த்த நமது பண்பாட்டு உடைகளை இன்று காண முடியவில்லை

ஆகையால், இன்றைய திரைப்படங்களினால் நம் பண்பாடு சீரழிய வாய்ப்புள்ளது.

(53 சொற்கள்)

*தெரிநிலைக் கருத்து - 2 + புதைநிலைக் கருத்து – 3

மாதிரி விடை - 3

இந்தப் பனுவல் இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் பற்றி விவரிக்கிறது.

இன்றைய திரைப்படங்களில் கருத்தாழமிக்க பாடல்கள் மிகவும் அருகிவிட்டன. மேலும்,

கருத்தில்லாப் பாடல்கள் இளையோரைத் தீயவழிக்கு இட்டுச் செல்கின்றன. அடுத்து, அன்றைய

திரைப்படங்களில் நமது கலை, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் உடைகள் அணிந்திருந்தனர். ஆனால்,

இன்றோ நமது பண்பாட்டிற்கு ஒவ்வாத நாகரீக உடைகளையே திரையில் அதிகம் காண்கிறோம்.

இதனால், நம் பண்பாட்டு உடைகள் நாளடைவில் மறையக்கூடும்.

சுருங்கக் கூறின், இன்றைய திரைப்படங்கள் நமக்குப் போதிய பயனளிப்பதாக இல்லை.

(54 சொற்கள்)

*தெரிநிலைக் கருத்து - 4 + புதைநிலைக் கருத்து - 1

மாதிரி விடை - 3

இவ்வுரைநடைப் பகுதி இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் பற்றி விவரிக்கிறது.


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

இன்றைய திரைப்படங்கள் எதிர்மாறான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன.

தொடர்ந்து, அன்று நல்ல நல்ல திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். இன்றோ அவ்வாறான

படங்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது. அதோடு, இன்றைய திரைப்படங்களின்

பெரும்பாலான பாடல்கள் மோசமாக உள்ளன. எனவே, அத்தகைய பாடல்கள் இளையோரை

நல்வழிக்குக் கொண்டு செல்லவில்லை.

இதுகாறும், இன்றைய திரைப்படங்களால் சமுதாயத்திற்குப் பாதிப்பு அதிகம் எனத் தெரிகிறது.

(50 சொற்கள்)

*தெரிநிலைக் கருத்து - 1 + புதைநிலைக் கருத்து – 4

பயிற்சிக்கும் முயற்சிக்கும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடையை வாசித்து, அதன் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு

'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை

வாய்மையால் காணப் படும்'


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

எனும் வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம்.

புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும்.

முதலில் நிலத்தில் விதை மட்டும் விதைத்தோம். தற்போது நெகிழி எனும் சாத்தானைச்

சேர்த்துப் புதைப்பதால் நிலத்தில் மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிட்டது. தொழிற்சாலை

கழிவுகளில் இருக்கும் நச்சு, மண்ணையும் நீரையும் ஒருசேர நாசமாக்குகிறது. நெகிழிப்

பைகளை மண்ணில் கொட்டுவதால், அது மக்க பல வருடம் ஆகின்றன. நிலத்தில்

புதையுண்ட நெகிழி முலம் வேளான்மை நிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க செடி, கொடிகள்

வளர்ச்சிச் தன்மையை இழக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி ஒரு நாளைக்குப் பயன்படுத்த குறைந்தது ஐந்து லிட்டர் நீர்

தேவைப்படும். அந்த நீர் ஆறு, ஏரிகள், குளம், மூலம் கிடைக்கிறது. அந்த நீர் இன்று

மாசுப்பட்டுள்ளது. இந்த நீரைக் குடிப்பது மூலம் குடல், தோல் நோய்களும் ஏற்படுகிறது.

(இணையக் கட்டுரை - சில மாற்றங்களுடன்)

முன்னுரை

தெரிநிலைக்

கருத்து

புதைதிலைக்

கருத்து

முடிவுரை
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 5:

கற்றல் தரம் : 4.2.4 - நான்காம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன்

பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

அறிவு போலும் செல்லும் முடையா னுழை

அவ்வ யாளர் துறைவது தொடர்பு அசைவிலா

உலகம் பண்புடை ஊக்க அதர்வினாய்ச்

பயில்தொறும் துறைவது நூல்நயம்

உலகத்தோடு

மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்குவியலில் உள்ள சொற்களைத் தெரிவு செய்து

திருக்குறளை நிறைவு செய்து அதன் கருத்தையும் தெரிவு செய்து எழுதுக.

1. எவ்வ
_________________________________________________________________
_____________________________________________________________________
__

கருத்து : _____________________________________________________________
_____________________________________________________________________
__

2. நவில்தொறும்
_________________________________________________________
_____________________________________________________________________
__
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

கருத்து : _____________________________________________________________
_____________________________________________________________________
__

3. ஆக்கம்
_______________________________________________________________
_____________________________________________________________________
__

கருத்து : _____________________________________________________________
_____________________________________________________________________
__

பயிற்சி 6 :

கற்றல்பேறு : 2.2.6 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை வகைப்படுத்தி

ஒரு முடிவுக்கு வருவர்.

கொடுக்கப்பட்டுள்ள பனுவலை வாசித்திடுக.

கோறனி நச்சில் (வைரஸ்)

கோறனி 19 என்று பெயரிடப்பட்டுள்ள ‘நோவல் கொரோனா’ நச்சில் சீனாவின்

ஊஹான் மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது.

ஊஹானில் உள்ள அசைவ உணவுச் சந்தையில் இருந்த பாதிக்கப்பட்ட

விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாகச் சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விலங்கில் இருந்து இந்த நச்சில் மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளதாக

அந்நாட்டுத் தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஊஹான் மாகாணத்தில்


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

இருந்து பிற பகுதிக்குச் சென்றவர்கள் மூலமாகவும் இந்த நச்சில் உலகெங்கும்

பரவத்தொடங்கியுள்ளது.

கோறனி நச்சில் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாகப் பரவுகிறது எனச்

சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம்

இருந்து மற்றொரு மனிதருக்கு நச்சில் பரவும். கோறனி நச்சிலால்

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு

இருமலும் ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கும் வழிவகுக்கிறது. இந்த

நச்சிலால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக

உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதை ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

கோறனி நச்சிலைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்கக்கூடிய

நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை

கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, கோறனி நச்சில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத்

தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு. இதனால், கோறனி நச்சில்

பாதிப்புக்குள்ளான நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை

மேற்கொள்ளப்படுகிறது.

இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு

நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்குச் செல்ல

வேண்டும்.

மூக்கு, வாயை மறைக்கும் முகக்கவரி (மாஸ்க்) அணிந்து கொண்டு வெளியே

செல்வது நல்லது. மக்கள் சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை

எடுத்துக்கொள்வதோடு கூட்டமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க

வேண்டும்.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

எப்போதும் கைத்தூய்மி பயன்படுத்திக் கழுவுதல், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக

வைத்துக்கொள்ளுதல் அவசியம். மேலும், இருமல், தும்மலின் போது மூக்கையும்

வாயையும் துணியால் மூடிக்கொள்வது நலம் பயக்கும்.

பயிற்சி

1. கொடுக்கப்பட்ட வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை வகைப்படுத்துக.

2. கோறனி நச்சில் தொற்று குறித்த தகவல்களை வகைப்படுத்தி ஒரு முடிவுக்கு

வந்திடுக.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 7 :

கற்றல் தரம் : 3.4.24 - 200 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர்.

மாணவர் வாதக் கட்டுரை எழுதப் புகுமுன் சில கூறுகளைக் கருத்திற்கொள்வது சிறப்பு.

இக்கட்டுரையில் முன்னுரை, கருத்துகள் (4 / 5 கருத்துகள்), முடிவுரை இருத்தல் வேண்டும்.

கருத்துகள் தலைப்பை ஒட்டியோ அல்லது வெட்டியோ எழுத வேண்டும்.

மாணவர் தலைப்பை ஒட்டி எழுதினால் அனைத்துக் கருத்துகளும் ஒட்டியே இருத்தல்

வேண்டும். தலைப்பை வெட்டி எழுதினால் அனைத்துக் கருத்துகளும் வெட்டியே எழுதப்பட

வேண்டும். இக்கட்டுரையை ஒட்டியும் வெட்டியும் எழுதுதல் கூடாது. ஒரு சில மாணவர்

இத்தவற்றைச் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னியல் வணிகத்தால் நன்மையே ஏற்படுகிறது

மேற்கண்ட தலைப்பில் வாதக் கட்டுரை எழுதுக.

மாணவர் பாடநூலில் தொகுதி 5 இல் உள்ள கருத்துகளைத் துணையாகக்கொண்டு

இக்கட்டுரையை எழுதலாம்.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 8 :

கற்றல் தரம் : 5.4.6 - பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை,

உவமைத்தொகை ஆகியவற்றில் வலிமிகும் என்பதை அறிந்து

சரியாகப் பயன்படுத்துவர்.

இடுபணி 1 - சொற்குவியலில் உள்ள சொற்களை அவற்றின் தொகைக்கு ஏற்ப

வகைப்படுத்தி எழுதுக:

மலைத்தோள் கமலக்கண்ணன்

முத்துப்பல் தாமரைப்பூ

தங்கத்தேர்
வாழைக்கனி

வட்டத்தொட்டி

மார்கழித்திங்கள்
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

புதுக்குடம்

பண்புத்தொகை இருபெயரொட்டுப் உவமைத்தொகை

பண்புத்தொகை

இடுபணி 2 - கீழ்க்காணும் சொற்களை அவற்றின் தொகையுடன் சரியாக

இணைக்கவும் :

முத்துப்பல் *

ஆடித்திங்கள் *
பண்புத்தொகை

பொய்ப்புகழ் * இருபெயரொட்டுப்

பண்புத்தொகை
வட்டக்கோடு *
உவமைத்தொகை
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பவளப்பல் *

வெள்ளித்தேர் *

வாழைப்பழம் *

வெள்ளைச்சேலை *

இடுபணி 3 - கொடுக்கப்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுக :

அ) சிறப்பு + செய்தி =

ஆ) கலை + பொருள் =

இ) சாரை + பாம்பு =

ஈ) கறி + குழம்பு =

பயிற்சி 9:

கற்றல் தரம் : 3.4.22 - 220 சொற்களில் நேர்காணல் எழுதுவர்.


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

கோறனி நச்சிலின் தாக்கம் மலேசியாவையும் விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக

சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நோர் இசாம் அவர்களை நேர்காணல் செய்யப்

பணிக்கப்பட்டுள்ளீர். அந்நேர்காணலை எழுதுக.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு நேர்காணலைத் தயார் செய்க.

 நோய் பற்றி கேள்விப்பட்டதும் அவரின் மனநிலை

 நோயைத் தடுப்பதற்காக அரசாங்கத்திடம் முன்வைத்த பரிந்துரைகள்

 இதனைத் துடைத்தொழிக்க மக்கள் மேற்கொள்ள வேண்டியவை

 இதுவரை அடைந்த வெற்றிகள்

 இந்நிலைமை முடிவுக்கு வருமென்ற எதிர்ப்பார்ப்பு

உரையாடலைத் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

 சூழல்

 அறிமுகம் - முகமன் இருத்தல்

 இருவர் பேசுவதாக அமைந்திருத்தல்

 இருவருமே கருத்துகளைப் பேசுவதாக இருத்தல்

 ஒருவர் குறைந்தது இரு முறையாவது பேசியிருத்தல்

 உரையாடலுக்குரிய குறியீடுகளும் உணர்ச்சிகளையும்

வெளிப்படுத்தியிருத்தல்

 உரையாடலுக்குரிய துறைசார்மொழியில் எழுதியிருத்தல்

 விடைபெறுதல் - முடிவு இருத்தல்

குறிப்பு : பாடநூல் பக்கம் 24 – 26 காண்க


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 10 :

கற்றல் தரம் : 4.5.4 - நான்காம் படிவத்திற்கான உவமைத்தொடர்களையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இடுபணி 1 - கொடுக்கப்பட்ட உவமைத்தொடருக்கு ஏற்ற பொருள் எழுதுக.

வெந்த புண்ணில் வேல்

பாய்ச்சியது போல

நல்ல மரத்தில் புல்லுருவி

பாய்ந்தது போல

நீர்மேல் எழுத்துப் போல

யானை வாயில் அகப்பட்ட

கரும்பு போல

இருதலைக் கொள்ளி எறும்பு

போல

ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை / பாதிப்பு

ஏற்படுவது உறுதி

நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு

விளைவித்தல்
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

எந்தப் பக்கமும் சாரமுடியாத இக்கட்டான நிலை

துன்பத்துக்குமேல் துன்பம்

நிலையாமை

இடுபணி 2 - சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரை எழுதுக.

அன்பும் பண்பும் மிக்க கபிலன் தன் கல்விப் பயணத்தைத் தொடர வெளியூருக்குச்

சென்று படிக்கும் வேளையில் புதிய நண்பர்களின் சேர்க்கையால் தவறான

பழக்கத்திற்கு அடிமையாகி குண்டர் கும்பலுடன் இணைந்தான். இப்பொழுது

கபிலனின் நிலை _____________________________ ஆகிவிட்டது.

தாயின் மறைவிற்குப் பின் தந்தை படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் தற்போது

தன் வேலையும் பறிப்போனதால் நண்பனின் மனநிலை _______________________

ஆனது.

தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் கிருமி பரவலால் மனித குலம் பெரும்

பாதிப்பை அடைந்து வருகிறது இதனால் மனிதர்களின் நிலை

____________________________ ஆகிவிட்டது.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

அண்ணன் மருத்துவத்துறைதான் படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

அப்பாவோ அண்ணனை அரசு வழங்கிய பொருளாதாரத் துறையைத் தேர்ந்தெடுக்கக்

கட்டாயப்படுத்தினார். இவர்களின் பிடிவாதத்தைச் சமாளிக்க முடியாத அம்மா

_______________________ தவித்தார்.
அவன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஒவ்வொரு நாளும் பணத்தை இழந்து மீண்டும்

சூதாட்டம் பக்கம் போகமாட்டேன் என்று அடிக்கடி தன் தாயிடம் உறுதி கூறுவான்.

ஆனால், அவன் மீண்டும் மீண்டும் சூதாட்டத்திற்குச் செல்வதால் அவனின்

வெந்த புண்ணில்
உறுதிமொழி வேல் பாய்ச்சியது
______________ போல
ஆனது. நீர்மேல் எழுத்துப் போல

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

இருதலைக் கொள்ளி எறும்பு போல யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

இடுபணி 3 - கற்ற உவமைத்தொடர்களைக் கொண்டு வாக்கியம் அல்லது

சூழல் அமைக்கவும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

நீர்மேல் எழுத்துப் போல

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

இருதலைக் கொள்ளி எறும்பு போல

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல


MODUL BAHASA TAMIL PDP TINGKATAN 4 PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 4 – கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

You might also like