விரும்பிடு விஞ்ஞானம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

விரும்பிடு விஞ்ஞானம்

வணக்கம். நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு விரும்பி விஞ்ஞானம் ஆகும்.

உலகத்தை ஆழ்வது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது.

விஞ்ஞானத்தின் விந்தையால் உலகம் சுருங்கி கைக்குள் அடங்கி விட்டது. நாளுக்கு நாள்

விஞ்ஞானத்தின் விந்தை வளர்ச்சி கண்டு வருகின்றது. விஞ்ஞானத்தின் விந்தையால் மனித

வாழ்வியலானது எண்ணற்ற மாற்றங்களும்⸴ முன்னேற்றங்களும் அடைந்துள்ளன. மேலும்,

கல்லை உரசித் தீயைக் கண்டுபிடித்ததிலிருந்து ஆரம்பமான மனிதனின் கண்டுபிடிப்புகள்

இன்று வானளாவிய ரீதியில் வளர்ந்து மண்ணுக்கும்⸴ விண்ணுக்கும் இடையில் விந்தைகள்

புரிகின்றன. தொடர்ந்து, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் கையடக்கத் தொலைபேசி⸴

கணினி⸴ வானொலி போன்ற கண்டுபிடிப்புகள் கல்வித் துறைக்கு பெரிதும்

பயனளிக்கின்றன. இவற்றின் மூலம் நவீன கல்வி முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு

மாணவர்களாகிய நமது அறிவாற்றல் விருத்தியடையச் செய்யப்படுகின்றது. மருத்துவத்

துறையில் இதன் பங்களிப்பானது போற்றுதற்குரியதாகும். குணப்படுத்த முடியாத

நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவ கருவிகள்⸴ உபகரணங்கள்⸴ சிகிச்சை

முறைகள் போன்றவை உதவுகின்றன. ஆகவே, விஞ்ஞானத்தின் விந்தைகள் யாவும்

வியப்பிற்குரியது. மனித வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து தவிர்க்க முடியாததுமாக

விஞ்ஞானம் இரண்டறக் கலந்துள்ளது. எனவே விஞ்ஞானத்தின் சரியான பாவனை⸴

சரியான திசையை நோக்கிய நகர்வு போன்றவை உலகில் தொடர்ச்சியான நிலவுகைக்கு

உறுதுணையாக அமையும். விஞ்ஞானத்தை விரும்பிடு! வாழ்க்கையில் உயர்ந்திடு!, என்று

கூறி உங்களிடமிருந்து விடை பெருகிறேன். நன்றி.

You might also like