Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 20

ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் மிகச்

சரியான ஒரு விடையை மட்டும் தெரிவு செய்து விடைத்தாளில் கருமையாக்குக.

பிரிவு A : செய்யுளும் மொழியணியும்

(கேள்விகள் 1-15)

1. கீழ்க்காணும் சூழலுக்குப் பொருந்திவரும் உவமைத் தொடர் யாது?


ஏன் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்? ஒற்றுமையாக இருக்கக்

கற்றுக் கொள்ள வேண்டும்.

____________________________________ இருக்கக் கூடாது.


A. பசுத்தோல் போர்த்திய புலி போல

B. எலியும் பூனையும் போல

C. காட்டுத் தீ போல

D. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

2. கோவில் வாயிற்கதவில் தொங்கிய சிறு சிறு மணிகள் _________________ என

ஒலித்தன.

A. கிலுகிலு C. கலகல

B. கிடுகிடு D. தடதட

1
3. கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

மாணவர்களாகிய நீங்கள் இளமை பருவத்தில் எண்களையும்

மொழியையும் அலட்சியம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால்,

A. ஔவியம் பேசேல் C. ஒப்புர வொழுகு

B. எண்ணெழுத் திகழேல் D. ஓதுவ தொழியேல்

4. கீழேயுள்ள படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

A. ஆழம் அறியாமல் காலை விடாதே

B. வெள்ளம் வருமுன்அணை போடு

C. அழுத பிள்ளை பால் குடிக்கும்

D. இளங்கன்று பயமறியாது

5. செய்யுளை நிறைவு செய்க.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்(கு) இள வேனிலும்


_____________________________________

2
_____________________________________

A. தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தாந்தருத லால்

B. நெல்லுக்கும் உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு

C. மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே

D. அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

6. தைப்பூசம் ______________________ இந்துக்களால் தைமாதத்தில்

கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருந்து வருகின்றது.

A. சுற்றும் முற்றும் C. அன்றும் இன்றும்

B. அங்கும் இங்கும் D. அல்லும் பகலும்

7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மன்னித்தல் பண்பைக் கூறும்

திருக்குறள்?

A. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொருத்தல் தலை

B. செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

C. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

3
ஞாலத்தின் மாணப் பெரிது

D. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

8. கீழ்க்காணும் காலியிடத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.


பாண்டிய நாட்டு அரசியார் அணிந்திருந்த வைரக்கிரீடம்

______________ எனக் கண்ணைப் பறித்தது.

A. தகதக C. மினுமினு

B. பளபள D. பளீர்பளீர்

9. ‘போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ எனும் செய்யுளின்

பொருளைத் தெரிவு செய்க.

A. ஒருவரைப் போகவிட்டுப் பின்னர் அவரைப் பற்றிய குறைகளைக் கூறித்

திரிதல்

கூடாது.

B. செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

C. தீயச்செயல்களைச் செய்பவரோடு நட்பு கொள்ளக்கூடாது.

D. யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக் கூடாது.

10. கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக

இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள

4
A. அழுத பிள்ளை பால் குடிக்கும்

B. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

C. அன்பான நண்பனை ஆபத்தில் அறி

D. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

11. சரியான இணையைத் தெரிவு செய்க.

செய்யுள் விளக்கம்

எழுத்தறிவித்தவன் அரசர்க்குரிய சிறப்பு நீதியோடு ஆட்சி


A.
இறைவனாகும் நடத்துதல் ஆகும்.

பிழையில்லாமல் பேசுவதே கற்ற


B. கல்விக் கழகு கசடற மொழிதல்
கல்விக்குச் சிறப்பு.

மன்னர்க் கழகு செங்கோன் பணக்காரர்களுக்குச் சிறப்பு,


C.
முறைமை சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல்.

கல்வியைக் கற்றுக் கொடுக்கும்


செல்வர்க் கழகு செழுங்கிளைத்
D. ஆசிரியர் கடவுளுக்கு நிகராகக் கருதப்
தாங்குதல்
படுகிறார்.

12. பின்வருவனவற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.

A. அள்ளி விடுதல் – ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

B. ஆறப் போடுதல் – ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து விடுதல்

5
C. தட்டிக் கழித்தல் – ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

D. செவி சாய்த்தல் – உடன்படுதல்

13. கீழேயுள்ள திருக்குறளை நிறைவு செய்க.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் ________________ எனின்.

A. தொழார் C. தொழாஆர்

B. தொழாஅர் D. தொழஅர்

14. கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான பழமொழி யாது?

அமுதன்: சங்கரி ஒரு சிறந்த நடனமணி என்பதை மேடையில் நிறுபித்து

விட்டாள்.

அமுதா: இதில் வியப்பு அடைவதற்கு ஒன்றுமில்லை. அவளுடைய

A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

B. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

C. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

D. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

15. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்களுக்கேற்ற

இணைமொழிகளைத் தெரிவு செய்க.

புகழ் பெற்ற பின்னணிப் பாடகி பி. சுசிலாவின் பாடல்கள் எக்காலத்திலும்


6
கேட்பதற்கு இனிமையானவை என்பதில் ஐயமில்லை.
A. அருமை பெருமை, அன்றும் இன்றும்

B. அருமை பெருமை, அல்லும் பகலும்

C. பேரும் புகழும், அன்றும் இன்றும்

D. பேரும் புகழும், அல்லும் பகலும்

பிரிவு B : இலக்கணம்

(கேள்விகள் 16-30)

16. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்கள் குறிக்கும் பால்

வகையைத் தெரிவு செய்க.

வீட்டிற்கு வந்த திருடனைப் பார்த்து நாய்கள் குறைத்தன.

A. ஆண்பால் / ஒன்றன்பால் C. ஆண்பால் / பலவின்பால்

B. பலர்பால் / பலவின்பால் D. பலவின்பால் /

ஒன்றன்பால்

17. கீழ்க்காண்பனவற்றுள் சரியான பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. பறவை பறந்து வந்து மரக்கிளையில் அமர்ந்தது.

B. பறவைகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்ந்தன.

C. பறவை பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்ந்தது.

D. பறவைகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்ந்தது.

7
18. காலியிடத்திற்கு மிகப் பொருத்தமான இடைச் சொல்லைத் தெரிவு செய்க.

தேவி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். ____________________, விடா

முயற்சியுடன் கல்வி பயின்றதால் இன்று ஒரு பிரபல மருத்துவராக உள்ளாள்.

A. இருப்பினும் C. ஏனென்றால்

B. அப்படியென்றால் D. எனவே

19. கட்டத்தில் X எனும் இடத்தில் இருக்கவேண்டிய விடை யாது?

திணை பால்

உயர்தி பெண்பால்
ஆடினாள்

காலம் எண்

இறந்தகால X

A. ஒருமை

B. பன்மை

C. தன்னிலை

20. இடையின எழுத்துகளை மட்டும் கொண்ட விடையினைத் தெரிவு செய்க.

A. க, ச, ட, த, ப, ற C. ங, ஞ, ந, ம, ண, ன

B. ய, ர, ல, வ, ழ, ள D. ய, ற, ட, வ, ஞ, ல

21. வானில் தோன்றிய ___________ முழு நிலா அனைவரின் மனதையும்

அமைதியாக்கியது.

8
A. ஒரு C. அது

B. ஓர் D. அவை

22. வங்கியில் இருந்து கொண்டு வந்த சேமிப்புப் பணம் காணாமல் போனதால்

திரு.சந்திரன் _________________ புலம்பினார்.

A. அழுத C. அழுகின்ற

B. அழுது D. அழும்

23. சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

“ஆஹா பினாங்குத் தீவை இணைக்கும் பாலம் பார்ப்பதற்கு

அழகாகவும் கம்பீரமாகவும் உள்ளதே ”என்று வியந்து கூறினான்

அறிவுடைநம்பி.

A. , ! C. ! !
B. ! , D. ! .
24. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற விடையைத்

தெரிவு செய்க.

வாகனமோட்டிகள் அனைவரும் சாலை விதிமுறைகளை அறிந்திருக்க

வேண்டும்.

A. ஒருமை C. ஒன்றன்பால்

B. பன்மை D. அஃறிணை

9
25. கீழ்க்காணும் வாக்கியத்தில் நான்காம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள

சொல்லைத் தெரிவு செய்க.

அரசரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வீரர்கள் தீரத்துடன் போர்

A B C

செய்தனர்.

26. சரியான வேண்டுகோள் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. தம்பி இங்கே வராதே.

B. தம்பி என்னைத் தொந்தரவு செய்யாதே.

C. தயவு செய்து அண்ணனைத் தொந்தரவு செய்யாதே.

D. தம்பி இந்த இடத்தை விட்டுப் போய்விடு.

27. சேர்த்தெழுதுக.

கண் + இமை

A. கண்மை C. கணிமை

B. கண்ணிமை D. கட்டிமை

28. பிரித்தெழுதுக.

கைக்குட்டை

A. கைக்கு + குட்டை C. கை + குட்டை

10
B. கைக் + குட்டை D. கைக்கு + டை

29. நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

“ முகிலா, இன்று போய் நாளை வா” என்றார் முகுந்தன்.

A. இன்று போய் நாளை வருமாறு முகுந்தன் முகிலனிடன் கூறினார்.

B. இன்று சென்று நாளை வருமாறு முகிலன் முகுந்தனிடம் கூறினார்.

C. அன்று சென்று நாளை வருமாறு முகுந்தனிடம் முகிலன் கூறினார்.

D. அன்று சென்று மறுநாள் வருமாறு முகுந்தன்முகிலனிடம் கூறினார்.

30. கோடிடப்பட்டுள்ள விடைகளுள் சரியான வேற்றுமை உருபைக் கொண்டவை

எவை?

இன்று விளையாட்டுப் போட்டி தினம். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.


I
மாணவர்கள் நேர் ஓட்டப் போட்டியைப் பங்கெடுத்தனர்.
II
வெற்றியாளர்களுக்கு மாவட்டக் கல்வி அதிகாரியால் பரிசு
III
கொடுக்கப்பட்டது.

A. II , III

B. I , II

C. I , III

D. I , II , III

11
பிரிவு C: கருத்துணர்தல் (படைப்பிலக்கியம்)

(கேள்விகள் 31 – 35)

கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதையை வாசித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு

விடையளி.

சினம் கண்களைச் சிவக்க வைத்தது. அளவுக்கு மீறிய ஆத்திரம் முத்துவால்

எதுவும் செய்ய இயலவில்லை. எதிரே கையில் பிரம்புடன் காட்சியளிக்கும்

வகுப்பாசிரியர். பக்கத்தில் வீங்கிய கன்னத்துடன் நிமலன். சுற்றிலும் வேடிக்கை

பார்க்கும் மாணவர்கள். பூமி இரண்டாய்ப் பிளந்து தன்னை விழுங்கிவிட்டால் கூட

பரவாயில்லை போல் தோன்றியது. அவமானம், வேதனை, வெறுப்பு, குரோதம்

அனைத்தின் மொத்த உருவமாய் நின்றான் முத்து.

“ஏன் நிமலனை அடிச்சே? ”

முத்து அசையவில்லை.

“வா! தலைமையாசிரியர் உனக்குத் தகுந்த பரிசு கொடுப்பார்! ”

கோபத்துடன் அவனை இழுத்துக் கொண்டு பள்ளி அலுவலகம் நோக்கி

நடந்தார் வகுப்பாசிரியர்.

“சார், இவனைக் கொஞ்சம் விசாரிங்க! இவன் சக மாணவனைக் கன்னம்

வீங்கற மாதிரி அடிச்சுட்டான்! ” வகுப்பு ஆசிரியர் பொங்கினார்.

12
“சரி நீங்க விட்டுட்டுப் போங்க. நான் பார்த்துக்கிறேன்,” தலைமையாசிரியர்

அமைதியாகப் பதிலளித்தார்.

மீண்டும் தண்டனையா? எதற்கும் தயாரானான் முத்து.

“என்னப்பா நடந்தது? ஏன் உன் நண்பனை அடிச்சே? ”

முத்துவின் தோளை ஆதரவாகப் பற்றியபடி வினவினார் தலைமையாசிரியர்.

இதுவரை அடக்கி வைத்திருந்த வேதனை யாவும் மடை திறந்த வெள்ளம் போல்

பிரவாகம் எடுத்தது. துக்கம் கண்ணீராகப் பீறிட்டது. தேம்பித் தேம்பி அழத்

தொடங்கினான்.

“நிமலன் என் கலர் பென்சிலைத் திருடிவிட்டான் சார். அவனோடன்னு

சொல்லி சாரும் அவன்கிட்டேயே கொடுத்திட்டாரு. நான் சொன்னதை அவர் நம்பல.

கோவத்துல அதப் பிடுங்கி அல்லூர்ல வீசிட்டேன். அது தண்ணீல நனைஞ்சி வீணாப்

போச்சு. அதுக்கு அவன் என் கன்னத்தில் அறைஞ்சான். பதிலுக்கு நான் அவனை

அடிச்சேன். அவ்வளவுதான் சார்! ஆனா, வகுப்பாசிரியர், டீச்சர்.... எல்லாருமே...

என்னதான் ஏ...ஏசறாங்க...!” வார்த்தைகள் விம்மலாகச் சிக்கிச் சிதறின.

“சரி..., சரிப்பா...! அழாத...! அழாத...! அம்மா அப்பா என்ன செய்யறாங்க? ”

“ரெண்டு பேருமே செத்துட்டாங்க சார். இப்ப தாத்தாவோடதான் இருக்கேன்.

தாத்தா ஜாகா வேல செய்யறாரு.”

“அந்தக் கலர்பென்சில் உண்மையிலேயே உன்னுடையதுதானா? அதை நான்

எப்படிப்பா நம்பறது? ”

13
“சத்தியமா என்னோடதான் சார்! தாத்தா கொடுத்த பத்து இருவது காசுல,

சாப்பிடாம பட்டினி கிடந்து கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவச்சு வாங்கினது சார்!

தாத்தாவால மறுபடியும் ஒரு கலர்பெசில் வாங்கிக் கொடுக்க முடியாது சார்!” அழுகை

விசும்பலாக மாறியது.

தலையாசிரியருக்கு இப்போது பல விஷயங்கள் புரியத் தொடங்கின.

“சரிப்பா, அழாதே...! நீ வகுப்புக்குப் போ. உனக்கு ஏதும் பிரச்சனைனா

என்கிட்ட வா. யாரையும் அடிக்காதே... என்ன புரிஞ்சதா? ”

முத்துவின் அழுகை நின்றது. தோள்பட்டையில் தன் முகத்தைத் துடைத்துக்

கொண்டான். “இனிமே யாரையுமே அடிக்க மாட்டேன் சார், மன்னிச்சுருங்க... சார்! ”

வகுப்புக்குத் திரும்பிய முத்து பெருமிதத்துடன் தன் இருக்கைக்குச் சென்று

அமர்ந்தான். அழுதுகொண்டே வரவேண்டியவன் அமைதியாக வந்ததைக் கண்டு

அனைவரின் புருவங்களும் ஆச்சரியத்தால் உயர்ந்தன.

மறுநாள் முத்துவைத் தலைமையாசிரியர் அழைப்பதாக அலுவலகப்

பணியாளர் வந்து கூப்பிட்டார். எதற்காக அழைக்கிறாரோ என்ற குழப்பத்துடன்

தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்தான் முத்து.

“வா, முத்து, நேற்று நீ உண்மை பேசியதால் உனக்கு ஒரு பரிசு தரப்

போகிறேன்,” என்றவாறு கலர்பென்சில் பெட்டி ஒன்றை அவனிடம் நீட்டினார்.

முத்துவின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. இவ்வளவு அழகான கலர்பென்சில்

எனக்கா? மகிழ்ச்சியால் மனம் குதூகலித்தது.

14
“ரொம்ப நன்றிங்க சார்! ”

ஓய்வு நேரத்திற்குப் பின் தலைமையாசிரியர் வழக்கப்படி பள்ளி வளாகத்தைச்

சுற்றி வந்தார். முத்துவின் வகுப்பைக் கடக்கும்போது அவனும் நிமலனும் அருகருகே

அமர்ந்து அந்தக் கலர்பென்சிலைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது

அவர் முகத்தில் புன்முறுவல் பூத்தது...

31. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு யாது?

A. நட்பு

B. தீர்வு

C. தீர்ப்பு

D. தண்டனை

32. முத்து ஆசிரியர் முன் நொந்து நின்றதற்கான காரணம் என்ன?

A. தான் நிமலனை அடித்ததால்

B. தான் கூறியதை ஆசிரியர் நம்பாததால்

C. தன்னை ஆசிரியர் கண்டித்து விட்டதால்

D. தன்னைத் தலைமையாசிரியரிடம் இழுத்துச் சென்றதால்

33. இக்கதையில் வரும் தலைமையாசிரியர் எத்தகைய பண்புடையவர்?

A. உதவும் மனப்பான்மை கொண்டவர்

B. மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்

15
C. பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பவர்

D. மாணவரிடத்தில் கண்டிப்பானவர்

34. தலைமையாசிரியர் புன்முறுவல் பூத்ததற்குக் காரணம் யாது?

A. முத்து நிமலனை மன்னித்து விட்டது.

B. முத்து போன்ற ஏழை மாணவனுக்கு உதவி புரிந்தது.

C. முத்து கொடுத்த அடியை நிமலன் மறந்து விட்டது.

D. முத்து தான் கொடுத்த கலர்பென்சிலைப் பெற்றுக் கொண்டது.

35. கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களின் சூழலுக்கு ஏற்ற பொருள் தருக.

உனக்குத் தகுந்த பரிசு கொடுப்பார் உனக்கு ஒரு பரிசு தரப் போகிறேன்

A வெகுமதி ஆலோசனை

B தண்டனை வெகுமதி

C ஆலோசனை கண்டிப்பு

D கண்டிப்பு வெகுமதி

16
பிரிவு D : கருத்துணர்தல் (பல்வகை)

(கேள்விகள் 36 – 40)

கீழ்க்காணும் விளம்பரப் பகுதியை வாசித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு

விடையளி.

17
36. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

A. மலேசிய இலக்கியப் பண்ணையில் C. புத்தகப் பெருவிழாவில்

B. புத்ரா வாணிப மையத்தில் D. கோலாலும்பூரில்

37. கிராமியப் பாடல்களைச் சேகரிக்க விரும்புபவர் எந்த நிகழ்வில் கலந்து

கொள்வர்?

A. கவிதைக் களம் C. நாட்டுப்புறப் பாடல்கள்

B. சங்கீதப் புரட்சி D. யாரும் பார்க்காத வானம்

38. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

இந்தக் கூற்று எந்த அவையில் அநேகமாக இடம்பெற்றிருக்கலாம்?

A. சங்கீத மேடையில்

18
B. சொற்பொழிவில்

C. நாடக மேடையில்

D. பாடல் அரங்கில்

39. இப்புத்தகப் பெருவிழா யாரால் நடத்தப்படுகிறது?

A. புத்தகப் பதிப்பகத்தினரால்

B. ம.இ.கா. தலைமையகத்தினரால்

C. புத்ரா வாணிக மையத்தினரால்

D. மலேசிய இலக்கியப் பண்ணையினரால்

40. புத்தகப் பெருவிழாவிற்கு வருகை புரியவிரும்புவோர் தேர்ந்தெடுக்க

வேண்டிய பொருத்தமான நேரம் எது?

A. காலை மணி 10.00 க்குள்

B. இரவு மணி 9.45 க்கு

C. இரவு மணி 9.45 க்குள்

D. இரவு மணி 10.00 க்கு

ஆக்கம், மேற்பார்வை, உறுதியாக்கம்,

................................. ............................... ....................................


(திருமதி க. சுசிகலா) (திருமதி க.தமிழரசி) (திருமதி சு.லோகாம்பாள்)

பாட ஆசிரியர் பாட மேம்பாட்டுக் பாடத்துறைத்


குழுத் தலைவர் துணைத் தலைமையாசிரியர்

19
20

You might also like