Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 19

ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் மிகச்

சரியான ஒரு விடையை மட்டும் தெரிவு செய்து விடைத்தாளில் கருமையாக்குக.

பிரிவு A : செய்யுளும் மொழியணியும்

(கேள்விகள் 1-15)

1. கீழ்க்காணும் சூழலுக்குப் பொருந்திவரும் உவமைத் தொடர் யாது?


ஏன் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்? ஒற்றுமையாக இருக்கக்

கற்றுக் கொள்ள வேண்டும்.

____________________________________ இருக்கக் கூடாது.


A. பசுத்தோல் போர்த்திய புலி போல

B. எலியும் பூனையும் போல

C. காட்டுத் தீ போல

D. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

2. கோவில் வாயிற்கதவில் தொங்கிய சிறு சிறு மணிகள் _________________ என

ஒலித்தன.

A. கிலுகிலு C. கலகல

B. கிடுகிடு D. தடதட

1
3. கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

மாணவர்களாகிய நீங்கள் இளமை பருவத்தில் எண்களையும்

மொழியையும் அலட்சியம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால்,

A. ஔவியம் பேசேல் C. ஒப்புர வொழுகு

B. எண்ணெழுத் திகழேல் D. ஓதுவ தொழியேல்

4. கீழேயுள்ள படத்திற்குப் பொருத்தமான செய்யுள் எது?

அம்மா சொல்லாமலேயே

நான் வீட்டைச்

சுத்தப்படுத்தப் போகிறேன்.

A. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

B. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

C. ஏவா மக்கள் மூவா மருந்து

D. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

5. செய்யுளை நிறைவு செய்க.

மாசில் வீணையும் மாலை மதியமும்

2
வீசு தென்றலும் வீங்(கு) இள வேனிலும்
______________________________________________
______________________________________________

A. தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தாந்தருத லால்

B. நெல்லுக்கும் உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு

C. மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே

D. அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

6. தைப்பூசம் ______________________ இந்துக்களால் தைமாதத்தில்

கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருந்து வருகின்றது.

A. சுற்றும் முற்றும் C. அன்றும் இன்றும்

B. அங்கும் இங்கும் D. அல்லும் பகலும்

7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மன்னித்தல் பண்பைக் கூறும்

திருக்குறள்?

A. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொருத்தல் தலை

B. செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

3
C. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

D. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

8. கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க.

A. உடலினை உறுதி செய்

B. இளைத்தல் இகழ்ச்சி

C. ஐம்பொறி ஆட்சிகொள்

D. ஊண்மிக விரும்பு

9. ‘போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ எனும் செய்யுளின்

பொருளைத் தெரிவு செய்க.

A. ஒருவரைப் போகவிட்டுப் பின்னர் அவரைப் பற்றிய குறைகளைக் கூறித்

திரிதல்

கூடாது.

B. செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

C. தீயச்செயல்களைச் செய்பவரோடு நட்பு கொள்ளக்கூடாது.

D. யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக் கூடாது.

4
10. கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக

இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள

A. அழுத பிள்ளை பால் குடிக்கும்

B. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

C. அன்பான நண்பனை ஆபத்தில் அறி

D. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

11. சரியான இணையைத் தெரிவு செய்க.

செய்யுள் விளக்கம்

எழுத்தறி வித்தவன் அரசர்க்குரிய சிறப்பு நீதியோடு ஆட்சி


A.
இறைவனாகும் நடத்துதல் ஆகும்.

பிழையில்லாமல் பேசுவதே கற்ற


B. கல்விக் கழகு கசடற மொழிதல்
கல்விக்குச் சிறப்பு.

மன்னர்க் கழகு செங்கோன் பணக்காரர்களுக்குச் சிறப்பு,


C.
முறைமை சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல்.

கல்வியைக் கற்றுக் கொடுக்கும்


செல்வர்க் கழகு செழுங்கிளைத்
D. ஆசிரியர் கடவுளுக்கு நிகராகக் கருதப்
தாங்குதல்
படுகிறார்.

12. பின்வருவனவற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.

5
A. அள்ளி விடுதல் – ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

B. ஆறப் போடுதல் – ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து விடுதல்

C. தட்டிக் கழித்தல் – ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

D. செவி சாய்த்தல் – உடன்படுதல்

13. கீழேயுள்ள திருக்குறளை நிறைவு செய்க.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் ________________ எனின்.

A. தொழார் C. தொழாஆர்

B. தொழாஅர் D. தொழஅர்

14. கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான பழமொழி யாது?

அமுதன்: சங்கரி ஒரு சிறந்த நடனமணி என்பதை மேடையில் நிறுபித்து

விட்டாள்.

அமுதா: இதில் வியப்பு அடைவதற்கு ஒன்றுமில்லை. அவளுடைய

A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

B. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

C. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

D. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

15. கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற இணைமொழியைக் கொண்ட வாக்கியம் எது?

6
A. கலைவாணி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறாள்.

B. கலைவாணி ஆடை அணிகலன்களில் சிறந்து விளங்குகிறாள்.

C. கலைவாணி அருமை பெருமைகளில் சிறந்து விளங்குகிறாள்.

D. கலைவாணி ஆடல் பாடல்களில் சிறந்து விளங்குகிறாள்.

பிரிவு B : இலக்கணம்

(கேள்விகள் 16-30)

16. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்கள் குறிக்கும் பால்

வகையைத் தெரிவு செய்க.

வீட்டிற்கு வந்த திருடனைப் பார்த்து நாய்கள் குறைத்தன.

A. ஆண்பால் / ஒன்றன்பால் C. ஆண்பால் / பலவின்பால்

B. பலர்பால் / பலவின்பால் D. பலவின்பால் / ஒன்றன்பால்

17. கீழ்க்காண்பவற்றுள் சரியான பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. பறவை பறந்து வந்து மரக்கிளையில் அமர்ந்தது.

7
B. பறவைகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்ந்தன.

C. பறவை பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்ந்தது .

D. பறவைகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்ந்தது.

18. காலியிடத்திற்கு மிகப் பொருத்தமான இடைச் சொல்லைத் தெரிவு செய்க.

தேவி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். ____________________, விடா

முயற்சியுடன் கல்வி பயின்றதால் இன்று ஒரு பிரபல மருத்துவராக உள்ளாள்.

A. இருப்பினும் C. ஏனென்றால்

B. அப்படியென்றால் D. எனவே

19. சரியான விடையைத் தெரிவு செய்க.

P Q R

P Q R

A பொருட்பெயர் தொழிற்பெயர் காலப்பெயர்

B சினைப்பெயர் பொருட்பெயர் இடப்பெயர்

C சினைப்பெயர் பொருட்பெயர் தொழிற்பெயர்

D பொருட்பெயர் சினைப்பெயர் பண்புப்பெயர்

20. இடையின எழுத்துகளை மட்டும் கொண்ட விடையினைத் தெரிவு செய்க.

8
A. க, ச, ட, த, ப, ற C. ங, ஞ, ந, ம, ண, ன

B. ய, ர, ல, வ, ழ, ள D. ய, ற, ட, வ, ஞ, ல

21. வானில் தோன்றிய ___________ முழு நிலா அனைவரின் மனதையும்

அமைதியாக்கியது.

A. ஒரு C. அது

B. ஓர் D. அவை

22. வங்கியில் இருந்து கொண்டு வந்த சேமிப்புப் பணம் காணாமல் போனதால்

திரு.சந்திரன் _________________ புலம்பினார்.

A. அழுத C. அழுகின்ற

B. அழுது D. அழும்

23. சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

ஓ....... நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ

A. , ! C. ? .
B. ! ? D. ! .

24. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற விடையைத்

தெரிவு செய்க.

வாகனமோட்டிகள் அனைவரும் சாலை விதிமுறைகளை அறிந்திருக்க

வேண்டும்.

9
A. ஒருமை C. ஒன்றன்பால்

B. பன்மை D. அஃறிணை

25. கீழ்க்காணும் வாக்கியத்தில் நான்காம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள

சொல்லைத் தெரிவு செய்க.

அரசரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வீரர்கள் தீரத்துடன் போர்

செய்தனர்.

A B C D

26. அசரியான வேண்டுகோள் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. தம்பி இங்கே வராதே.

B. தம்பி என்னைத் தொந்தரவு செய்யாதே.

C. தயவு செய்து அண்ணனைத் தொந்தரவு செய்யாதே.

D. தம்பி இந்த இடத்தை விட்டுப் போய்விடு.

27. சேர்த்தெழுதுக.

கண் + இமை

A. கண்மை C. கணிமை

B. கண்ணிமை D. கட்டிமை

28. பிரித்தெழுதுக.

10
கைக்குட்டை

A. கைக்கு + குட்டை C. கை + குட்டை

B. கைக் + குட்டை D. கைக்கு + டை

29. நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

“ முகிலா, இன்று போய் நாளை வா” என்றார் முகுந்தன்.

A. இன்று போய் நாளை வருமாறு முகுந்தன் முகிலனிடன் கூறினார்.

B. இன்று சென்று நாளை வருமாறு முகிலன் முகுந்தனிடம் கூறினார்.

C. அன்று சென்று நாளை வருமாறு முகுந்தனிடம் முகிலன் கூறினார்.

D. அன்று சென்று மறுநாள் வருமாறு முகுந்தன்முகிலனிடம் கூறினார்.

30. கோடிடப்பட்டுள்ள விடைகளுள் சரியான வேற்றுமை உருபைக் கொண்டவை

எவை?

இன்று விளையாட்டுப் போட்டி தினம். பெற்றோர்கள் பள்ளிக்கு


வந்தனர்.
I
மாணவர்கள் நேர் ஓட்டப் போட்டியைப் பங்கெடுத்தனர்.
II
வெற்றியாளர்களுக்கு மாவட்டக் கல்வி அதிகாரியால் பரிசு
கொடுக்கப்பட்டது.
III

A. II , III

B. I , II

11
C. I , III

D. I , II , III

பிரிவு C: கருத்துணர்தல் (படைப்பிலக்கியம்)

(கேள்விகள் 31 – 35)

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியை வாசித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு

விடையளி.

12
குலவர்மன் எனும் ஒருவர் முன்னொரு காலத்தில் பொதிகை எனும் ஊரில்

வாழ்ந்து வந்தார். அவர் பல நூல்களையும் கற்றுப் பண்டிதர் ஆனார். அவரை

அவ்வூர் மக்கள் அனைவரும் போற்றி மதித்து வந்தனர். அவர் பேச்சாற்றலலிலும்

வல்லவரானார். அவரின் பேச்சு அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை உடையது.

சிறுது காலத்திலேயே அவருடைய புகழ் மற்ற ஊருக்கும் பரவத் தொடங்கிற்று.

ஒருநாள், பண்டிதர் குலவர்மன் பண்பூர் எனும் கிராமத்தில் சொற்பொழிவு

நிகழ்த்தச் சென்றார். எனினும், ஓர் ஆற்றைக் கடந்துதான் அக்கிராமத்தைச்

சென்றடைய வேண்டும். எனவே, பண்டிதர் பரிசல்காரனுக்காக ஆற்றோரம் காத்துக்

கொண்டிருந்தார். காத்துக்கொண்டிருந்த நேரம் பண்டிதர் ஏதோ யோசனையில்

மூழ்கியிருந்தார். பரிசல்காரனும் கரைக்கு வந்து சேர்ந்தான். பரிசல்காரனைக்

கண்டதும் சுயநினைவுக்குத் திரும்பி, பண்டிதரும் பரிசலில் ஏறினார்.

ஆற்றின் நடுவே பண்டிதர் தாம் கற்றறிந்த நூல்களின் அருமை

பெருமைகளைப் பற்றி ஆணவத்தோடு பேசிக் கொண்டு வந்தார். பரிசல்காரனும்

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண்போல தன்னுடைய பரிசலைச் செலுத்திக்

கொண்டே வந்தான். திடீரென்று பரிசல் எதிர்பாராமல் பரிசல்காரனுடைய

கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஒரு பாறை மீது உரசியது. அதனால், பரிசலில் துவாரம்

விழுந்தது. தண்ணீர் குபுகுபுவென உள்ளே புகுந்தது.

13
அதைக் கண்ட பண்டிதருக்குப் பயம் ஏற்பட்டது. பரிசல்காரன் பண்டிதருக்கு

நீச்சல் தெரியுமா என்று கேட்டான். பண்டிதர் தனக்கு நீச்சல் தெரியாது என மிகுந்த

பயத்தோடு கூறினார். பரிசல்காரனும் பண்டிதர் கற்றறிந்த நூல்களில் நீச்சல் அடிப்பது

பற்றி ஏதும் கூறப்படவில்லையா எனத் திகைப்போடு கேட்டான். பண்டிதர்

செய்வதறியாது விழித்தார்.

தனது ஆணவத்தை எண்ணி பண்டிதர் வெட்கமடைந்தார். பரிசல்காரனோ

பண்டிதரைத் தனது தோளில் சுமந்து ஆற்றைக் கடந்து அவரைப் பாதுகாப்பாகக் கரை

சேர்த்தான். பரிசல்காரன் செய்த உதவிக்கு நன்றி கூறிவிட்டுப் பண்டிதர் கிராமத்திற்குச்

சென்றார். அன்றுமுதல் பண்டிதர் தன்னுடைய ஆணவத்தை விட்டொழித்து கற்றது

கைமண்ணளவுதான் எனப் புரிந்து கொண்டார்.

31. பண்டிதர் குலவர்மன் எங்கே சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார்?

A. ஆற்றங்கரையோரம் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார்.

B. பரிசல்காரனுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார்.

C. பண்பூர் எனும் கிராமத்திற்குச் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார்.

D. தமது சொந்த ஊரில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

32. பண்டிதர் எதைப்பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டு வந்தார்?

A. தாம் கற்றறிந்த நூல்களின் அருமை பெருமைகளைப் பற்றி.

14
B. தமது ஊரின் அருமை பெருமைகளைப் பற்றி.

C. தமது சொந்த நூல்களின்அருமை பெருமைகளைப் பற்றி.

D. தம்முடைய சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றலைப் பற்றி.

33. பரிசலில் எப்படித் தண்ணீர் புகுந்தது?

A. பண்டிதர் அதிகமாகப் பேசியதால்.

B. பரிசலில் ஓட்டை விழுந்ததால்.

C. ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடியதால்.

D. பரிசல்காரன் பரிசலை ஆற்றில் செலுத்தியதால்.

34. பண்டிதருக்குப் பயம் ஏற்படக் காரணம் யாது?

A. பரிசலில் ஓட்டை விழுந்ததால்.

B. பரிசலில் தண்ணீர் புகுந்ததால்.

C. பண்டிதருக்கு நீச்சல் தெரியாததால்.

D. பரிசல்காரனுக்கு நீச்சல் தெரியாததால்.

35. ஆணவத்தோடு என்ற சொல்லுக்குப் பொருத்தமான வேறொரு சொல்

A. பெருமையோடு.

B. கோபத்தோடு.

C. செருக்கோடு.

D. மகிழ்ச்சியோடு.

15
பிரிவு D : கருத்துணர்தல் (பல்வகை)

(கேள்விகள் 36 – 40)

கீழ்க்காணும் செய்தியை வாசித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடையளி.

கோலாலம்பூர் – ஏப்ரல் 18

நேற்று மாலை தலைநகர் லெம்பா பந்தாய், பந்தாய் டாலாம் பகுதியில் கனத்த

மழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பந்தாய் டாலாம் குடியிருப்பு

வாசிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மாலை 5.00 மணி முதல் பெய்த

கனத்த மழையால் கோலாலம்பூர் – கிள்ளான் கூட்டரசு நெடுஞ்சாலையில்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையில் பல வாகனங்கள் பழுதடைந்து நின்றன. போக்குவரத்துப் போலீசார்

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டனர். இருந்த போதிலும், அநேக

வாகனங்கள் பழுதடைந்ததால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த

இயலவில்லை. வாகனமோட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பலருடைய

அலுவல் அன்றைய தினம் பாதிக்கப்பட்டது.

16
பந்தாய் டாலாம் புறம்போக்குக் குடியிருப்பு வாசிகள் பல்வேறு சிரமங்களை

எதிர்நோக்கியதாகத் திரு.இராமன் என்பவர் கருத்துரைத்தார். அங்கு நீரின் மட்டம்

சுமார் 2 அடி வரை உயர்ந்தது. இதனால், வீட்டிலுள்ள பொருள்கள் சேதமுற்றதாக

அவர் தெரிவித்தார். மேலும், அங்குள்ள மக்கள் வீட்டிலிருந்து வெளியேற

முடியாமலும் அவதிப்பட்டனர் என்று அவர் கூறினார்.

ஜாலான் சைட் புத்ரா குடியிருப்புப் பகுதியிலும் இதே நிலை ஏற்பட்டதாக

திரு.கதிரேசன் என்பவர் தெரிவித்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

வாகனங்கள் பெரும்பாலும் சேதமுற்றன. சில பகுதிகளில் மின்சாரத் தடையும்

ஏற்பட்டது.

இத்திடீர் வெள்ளம் இரவு சுமார் 10 மணி அளவில் படிப்படியாக வடியத்

தொடங்கியது. இருப்பினும், மின்சாரத் தொடர்பு நள்ளிரவு மணி வரை

கிடைக்கவில்லை எனப் பலர் புகார் கூறினர். இதுபோன்ற பிரச்சனை மீண்டும்

வராமல் இருப்பதற்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என

இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

36. இச்சம்பவம் எங்கு நடைபெற்றது?

A. கிள்ளான் C. புத்ரா ஜயா

B. கோலாலம்பூர் D. கோம்பாக்

37. இவ்வெள்ளத்தில் பாதிக்கப்படாத பகுதி எது?

17
A. லெம்பா பந்தாய் C. கிள்ளான்

B. பந்தாய் டாலாம் D. ஜாலான் சைட் புத்ரா

38. இத்திடீர் வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன?

A. கனத்த மழையால்

B. வாகனங்கள் பழுதடைந்ததால்

C. போக்குவரத்து நெரிசலால்

D. நீர்த் தேக்கங்களால்

39. கனத்த மழையின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?

A. நீர்மட்டம் உயர்ந்ததால்

B. வாகனங்கள் பழுதடைந்ததால்

C. திடீர் வெள்ளம் ஏற்பட்டதால்

D. குடியிருப்பு வாசிகள் வெளியேறியதால்

40. வெள்ளம் சுமார் எத்தனை மணி அளவில் வடியத் தொடங்கியது?

A. மாலை மணி 5.00 க்கு

B. நள்ளிரவு மணி 12.00 க்கு

C. இரவு மணி 10.00 க்கு

D. காலை மணி 7.00 க்கு

18
ஆக்கம், மேற்பார்வை, உறுதியாக்கம்,

....................... ........................... ................................


(குமாரி வ.பூரணி) (திருமதி க.தமிழரசி) (திருமதி சு.லோகாம்பாள்)

பாட ஆசிரியர் பாடப் மேம்பாட்டுக் பாடத்துறைத்


குழுத் தலைவர் துணைத் தலைமையாசிரியர்

19

You might also like