BT Mid Term2015(Y6)

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 15

பிரிவு அ : செய்யுளும் மொழியணியும்

( கேள்விகள் : 1 -15 )

1. இளைத்தல் இகழ்ச்சி எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?

A துடிப்புடன் இல்லாது சோர்வடைந்து இருப்பது இழிவாகும்.

B எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.

C உடல் மெலிந்திருப்பவரைக் கேலி செய்வது இழிவாகும்.

D உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.

2. திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.

................................................................................
ஆகுல நீர பிற

(குறள் 34)
A அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

B மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

C அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

3. எதையும் இளவயதில் கற்பதே சாலச் சிறந்தது என்பதை விளக்கும் சரியான விடையைத்

தெரிவு செய்க.

A ஓதாம லொருநாளு மிருக்க வேண்டா

B இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து

C ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

1
D கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

4. கீழ்க்காணும் காலியிடத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

தமக்கு எதிராக அரசாட்சியைக் கைப்பற்ற தம் உடன் பிறந்த தம்பியே

சதித்திட்டம் தீட்டுகிறான் என்பதை அறிந்த குமண மன்னர்

________________ வேதனைப்பட்டார்.
A அனலில் இட்ட மெழுகு போல

B பசுத்தோல் போர்த்திய புலி

C வேலியே பயிரை மேய்ந்தாற் போல

D யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

5. கீழ்க்காணும் படத்திற்குப் மிகப் பொருத்தமான மரபுத்தொடர்களைத் தெரிவு செய்க.

A வெளுத்து வாங்குதல் / கண்ணும் கருத்தும் / கரைத்துக் குடித்தல்

B கங்கணம் கட்டுதல் / கண்ணும் கருத்தும் / முழு மூச்சு

C கரைத்துக் குடித்தல் / வெளுத்து வாங்குதல் / மனப்பால் குடித்தல்

D மனப்பால் குடித்தல் / கங்கணம் கட்டுதல் / முழு மூச்சு

6. கீழ்வரும் உவமைத்தொடருக்குப் பொருந்தும் கூற்று யாது?

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

A அனைத்துலக பொருளகத்தின் மேலாளர் மோசடி வழக்கில் சிக்கினார்.

B ஏழைச் குடும்பத்தில் பிறந்த குமணன் சிறந்த தொழிலதிபராகத் தேர்வானார்.

C சிறு சிறு கலைநிகழ்ச்சிகளில் அறிமுகமான அந்தப் பாடகர் இன்று உலகத்தர

கலைஞராகத் திகழ்கிறார்.

2
D இயல்பிலேயே ஓவியத்திறம் பெற்றிருந்த மணிமேகலை தோழியின்

வற்புறுத்தலால் ஓவியக் கல்லூரியில் சேர மனு செய்தாள்.

7. கீழ்க்காணும் விளக்கத்திற்கேற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க.

அமைதியாக இருப்பவரை வலிமையற்றவர் எனத் தப்பாகக் கருதி அவரை

வெல்ல முயன்றால் தீமையே வந்து சேரும்.

A ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு

B அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா

C தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்

வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்

D மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்

8. உடலினை உறுதி செய் – எனும் புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற கூற்றினைத் தெரிவு செய்க.

A துடிப்பு மிகுந்தவராகவும் சோர்வு இல்லாதவராகவும் திகழ சத்துள்ள

உணவுகளை உண்ண வேண்டும்.

B உடலுக்கு நலத்தைத் தருகின்ற ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை உண்ண

வேண்டும்.

C நலமாக வாழ நாம் நம்முடைய உடலினைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

D உடலினைப் பேண வேண்டுமானால் உறுதியான காரியங்களைச் செய்ய

வேண்டும்.

9. காலி இடத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் இலக்கியப் பணிக்குத் தமது குடும்ப

உறுப்பினர் மட்டுமின்றி அவர்தம் துணைவியாரும் __________________.


A தோள் கொடுத்தார் C செவி சாய்த்தார்

3
B கை கொடுத்தார் D வாரி இறைத்தார்

10. காலையில் தாமதமாகப் படுக்கையை விட்டு எழுந்த தேன்முல்லை _______________

பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றாள்.

A அரக்கப் பரக்க C கண்ணும் கருத்துமாகப்

B முழு மூச்சாகப் D கங்கணம் கட்டி

11. கீழ்க்காணும் சூழலில் இருவருக்குமே பொருந்திவரும் இரட்டைக் கிளவியைத் தெரிவு

செய்க.

இந்தப் பூச்சாடியை

உடைத்தவன்

I நறநற III திருதிரு

II சிடுசிடு IV பளார்பளார்

A I, II C II, III
B I, IV D III, IV

12. கீழ்க்காணும் படத்திற்கு மிகப் பொருத்தமான பழமொழிகளைத் தெரிவு செய்க.

I ஊருடன் கூடி வாழ்

II தனிமரம் தோப்பாகாது

III சிறு துறும்பும் பல்குத்த உதவும்

IV ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

A I, II, III C I, III, IV


B I, II, IV D II, III, IV

4
13. தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம்

போல... எனும் விளக்கத்தைக் கொண்ட செய்யுள் அடி எது?

A மாசில் வீணையும் மாலை மதியமும்

B வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்

C மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

D ஈசன் எந்தை இணையடி நிழலே

14. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்களுக்கேற்ற

இணைமொழிகளைத் தெரிவு செய்க.

புகழ் பெற்ற பின்னணிப் பாடகி பி. சுசிலாவின் பாடல்கள் எக்காலத்திலும்

கேட்பதற்கு இனிமையானவை என்பதில் ஐயமில்லை.


A அருமை பெருமை, அன்றும் இன்றும்

B அருமை பெருமை, அல்லும் பகலும்

C பேரும் புகழும், அன்றும் இன்றும்

D பேரும் புகழும், அல்லும் பகலும்

15. கீழ்க்காணும் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து

வரக்கூடிய ஏழு பிறப்புகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.


A ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

B கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்ற யவை

C தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

D கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

5
பிரிவு ஆ : இலக்கணம்

( கேள்விகள் : 16 – 30 )

16. சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

A மன்றம் B மண்றம் C மந்றம் D மன்ரம்

17. சரியான விடையைத் தெரிவு செய்க.

A மெய் எழுத்துகள் மொத்தம் மூன்று

B
உயிரெழுத்துகள் மொத்தம் மூன்று
C ஐந்து
வல்லின மெய்யெழுத்துகள் மொத்தம்
D உயிர்க் குறில் எழுத்துகள் மொத்தம் ஐந்து

18. கீழ்க்காணும் வாக்கியத்தில் கிரந்த எழுத்துகளைக் கொண்ட சொற்களை மட்டும் தெரிவு

செய்க.

தம் சிஷ்யர்கள் ஐவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்ததால் அந்த

மஹாகுரு அன்று வகுப்பு நடத்தவில்லை.


A சிஷ்யர்கள், ஐவருக்கு, ஜலதோஷம்

B சிஷ்யர்கள், ஐவருக்கு, மஹாகுரு

C சிஷ்யர்கள், மஹாகுரு, ஜலதோஷம்

D மஹாகுரு, ஐவருக்கு, ஜலதோஷம்

19. உயர்திணையை மட்டும் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

6
20. கீழ்க்காணும் கோடிடப்பட்ட சொற்களுள் பெயரெச்சத்தைக் காட்டும் சொல்லைத் தெரிவு

செய்க.

நூல் நிலையத்தில் தான் இரவல் வாங்கிய புத்தகம்


A B
காணாமல் போனதால் சரவணன் கவலைப் பட்டான்.

21. கீழ்க்காண்பனவற்றுள் சரியான பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A சிறுவன் தன் நண்பர்களுடன் திடலில் விளையாடினார்கள்.

B திடலில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மழையில் நனைந்தன.

C நேற்று பெய்த கனத்த மழையால் சிவாவின் வீடு வெள்ளத்தில் மூழ்கின.

D சந்தையில் வியாபாரி வைத்திருந்த கூடைகளில் பழங்கள் இருந்தது.

22. கட்டத்தில் X எனும் இடத்தில் இருக்கவேண்டிய விடை யாது?

திணை பால்

உயர்திணை பெண்பால்
ஆடினாள்
காலம் எண்

இறந்தகாலம் X

A ஒருமை C தன்னிலை

B பன்மை D முன்னிலை

7
23. கீழ்க்காணும் வாக்கியங்களில் காணும் வினைமுற்றுகளைத் தெரிவு செய்க.

வேட்டைக்குச் சென்ற கண்ணப்பன் காடு மேடெல்லாம்

அலைந்து திரிந்தான். விலங்குகளைக் காணாமல் சோர்ந்து

A அலைந்து, திரிந்தான் C சோர்ந்து, திரிந்தான்

B அலைந்து, போனான் D திரிந்தான், போனான்

24. கீழ்க்காணும் வாக்கியத்திலுள்ள காலியிடத்துக்குச் சரியான இடைச்சொல்லைத்

தெரிவு செய்க.

பள்ளிப் பேருந்தைப் பெரும்பாலும் ஆண்களே

ஓட்டுகிறார்கள். _________________, சில இடங்களில்

பெண்களும் செலுத்துவதுமுண்டு.
A ஆகவே B எனினும் C அதற்காக D மேலும்

25. ஆய்த எழுத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியம் எது?

A அஃது பெரிய வீடு.

B இஃது ஔடதச் சிமிழ்.

C இஃது உறுதியான தூண்.

D அஃது அழகிய ஓவியம்.

26. சேர்த்தெழுதுக.

வேதம் + ஆகமம்

A வேதஆகமம் B வேதாகமம் C வேதியாகமம் D வேதமாகமம்

27. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது தவறான இணை?

A சினைப்பெயர் இலை
B இடப்பெயர் பூங்கா
C பொருட்பெயர் பம்பரம்
8
தொழிற்பெயர்
D ஆசிரியர்

28. சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

A அங்கேக் கொடு C அந்தப் பையன்

B அவ்வளவுப் பெரிய D இதுச் சரி

29. கொடுக்கப்பட்டுள்ள நேர்க்கூற்று வாக்கியத்திற்குச் சரியான அயற்கூற்று வாக்கியத்தைத்

தெரிவு செய்க.
“எனக்கு இப்போது பசிக்கிறது. தயைக் கூர்ந்து உண்ண

ஏதேனும் உணவு கொடுங்கள்,” என்றார் முதியவர்.

A தனக்கு அப்போது பசித்ததாகவும் உண்ண ஏதேனும் உணவு கொடுக்குமாறும்

முதியவர் வேண்டினார்.

B எனக்கு இப்பொது பசிப்பதால் உண்ண ஏதேனும் உணவு கொடுங்கள் என்று

முதியவர் வேண்டினார்.

C தனக்கு இப்போது பசிப்பதாகவும் உண்ண ஏதேனும் உணவு கொடுக்குமாறும்

முதியவர் வேண்டினார்.

D எனக்கு அப்போது பசித்ததால் உண்ண ஏதேனும் உணவு கொடுங்கள் என்று

முதியவர் வேண்டினார்.

30. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் குன்றாவினை வாக்கியம் எது?

A பெரியப்பா பேருந்தில் வந்தார்.

B பெரியம்மா பலகாரம் செய்தார்.

C அத்தை புன்னகை பூத்தார்.

D மாமா வேகமாக வந்தார்.

பிரிவு இ : கருத்துணர்தல் (படைப்பிலக்கியம்)

9
( கேள்விகள் : 31 – 35 )

கீழ்க்காணும் சிறுகதையை வாசித்து, தொடர்ந்து வரும் கேள்விகளுக்கு விடை காண்க.

திங்கட்கிழமை. காலை 9.00 மணி. ஆசிரியர் திரு. மாறன் கணிதப் பாடத்தை நடத்திக்

கொண்டிருந்தார். அவர் மிகவும் கண்டிப்பானவர். கவிக்குமாரின் மனம் பாடத்தில்

பதியவில்லை. முதல் நாள் வீட்டில் நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அவனுக்கு

ஒன்றும் புரியவில்லை. திடீரென்று ஆசிரியரின் உரத்த குரல் அவனின் சிந்தனையைக்

கலைத்தது.

“கவிக்குமார், இக்கணித வழிமுறையை வெண்பலகையில் செய்து காட்டு,” என்று

கூறினார். அப்போதுதான் கவிக்குமார் தன் நினைவுக்கு வந்தான். என்ன செய்வதென்று

தெரியவில்லை. அவன் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தான். அனைவரின் பார்வையும்

அவன் மீதே இருந்தது.

வேறு வழி தெரியாமல் தயங்கியவாறே வெண்பலகையை நோக்கிச் சென்றான். கணிதத்

தொடரை வெண்பலகையில் எழுதினான். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று

தெரியவில்லை. மௌனமாகத் தலை குனிந்தவாறு நின்றான். “உனக்கு இது கூட செய்யத்

தெரியாதா?” என்று ஆசிரியர் திரு. மாறன் உரத்த குரலில் கேட்டார். கவிக்குமார் தெரியாது

என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினான்.

“இக்கணிதத்தை நீ வீட்டில் செய்து பார்த்தாயா?” என்று மீண்டும் கேட்டார்.

கவிக்குமாரிடமிருந்து எந்தவொரு பதிலுமில்லை. மௌனமாக இருந்தான். “என்ன இது! உன்

கணித அறிவு இவ்வளவு மோசமாக இருக்கிறது. வகுப்பில் நான் கற்றுத் தரும்போது நீ

கவனிப்பது இல்லை. வீட்டிலும் மீள்பார்வை செய்வதில்லை,” என்று உரத்த குரலில் கூறி

பிரம்பை உயர்த்தினார். கண்களில் நீர் சேர விம்மியபடியே அவன் இடத்தில் சென்று

அமர்ந்தான். வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பது போன்ற

பிரமை. அவமானத்தால் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

10
பள்ளியில் ஓய்வு நேரத்தின் போது மற்ற மாணவர்கள் சிற்றுண்டிச்சாலைக்குச்

சென்றுவிட்டனர். கவிக்குமார் வாசிப்புக் குடிலில் அமர்ந்திருந்தான். “ஏன் கவி,

சாப்பிடவில்லை?” என்றவாறு அங்கு வந்தான் சங்கர். கவிக்குமார் ஒன்றும் கூறவில்லை. “கவி,

நீ கெட்டிக்கார மாணவன். ஆனால், சில நாட்களாக நீ பள்ளிப் பாடங்களைச் செய்வதில்லை!”

என்றான். கவிக்குமார் தன் நண்பனை ஏறிட்டுப் பார்த்தான்.

“கவி, ஆசிரியர் கொடுத்த பாடம் மிகச் சுலபமானது. நீ வீட்டில் மீள்பார்வை

செய்திருந்தால், அந்தக் கணித வழிமுறையைச் செய்திருக்க முடியும்,” என்றான். சிறிது நேர

மௌனத்திற்குப் பிறகு கவிக்குமார் தன் நண்பனிடம் வீட்டில் நடந்த சம்பவங்கள்

அனைத்தையும் கூறி முடித்தான்.

“கவி, இது எல்லா வீட்டிலும் நடக்கின்ற பிரச்சனை. அதுவும், இது பெரியவர்கள்

சம்பந்தப்பட்டது. நம்முடைய பிரச்சனையாக எடுத்துக்கொள்ள முடியாது,” என்றான் சங்கர்.

“ஆனால், என்னால் பாடத்தின் மீது கவனம் செலுத்த முடியவில்லையே!” என்றான்

கவிக்குமார். “சரி, என் வீட்டுக்கு வா. நான் உதவுகிறேன்,” என்றான் சங்கர்.

சில வாரங்கள் கடந்தன. அன்று ஆசிரியர் திரு. மாறன் கவிக்குமாரை வகுப்பின் முன்

வருமாறு கூப்பிட்டார். அவன் பயத்தோடு எழுந்து சென்றான்.

“மாணவர்களே! இமாதச் சோதனையில் வகுப்பிலேயே சிறந்த புள்ளிகளைப் பெற்றவன்

கவிக்குமார். ஆகவே, அவனுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் கைத்தட்டுங்கள்,”

என்றார். கவிக்குமாருக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. ஆசிரியரின் கையிலிருந்த சோதனைத்

தாளை வாங்கினான். 99% என்றிருந்தது.

பள்ளி மணி அடித்தது. கவிக்குமார் வகுப்பை விட்டு வெளியே வந்தான். இறுதியாக

சங்கர் வந்தான். ஆசிரியரைப் பார்த்து, “கவிக்குமாரின் பெற்றோரிடையிலான பிரச்சனை

தீர்ந்துவிட்டது ஐயா. அதனால்தான் அவனால் முன் போல் பாடங்களில் சிறந்து விளங்க

முடிகிறது,” என்றான்.

11
31. கதையில் “வீட்டில் நடந்த சம்பவம்” என எதனைக் குறிப்பிடுகின்றனர்?

A பெற்றோர் கவிக்குமாரைத் திட்டியது.

B கவிக்குமார் பாடத்தில் பின் தங்கியது.

C கவிக்குமாரின் குடும்பப் பிரச்சனை.

D கவிக்குமாரின் வீட்டில் அனைவரும் மதிக்காதது.

32. வீட்டில் ஏற்பட்ட சம்பவத்தால் கவிக்குமாருக்கு ஏற்பட்ட விளைவுகள் யாவை?

I பாடங்களில் பின் தங்கினான்.

II மாணவர்கள் முன் தலைகுனிந்தான்.

III நண்பனின் வீட்டிற்குச் சந்தோஷமாக வந்தான்.

IV கணிதப் பாடத்தில் குறைந்த புள்ளிகள் பெற்றான்.

A I, II C II, III
B I, IV D III, IV

33. சங்கரின் நற்பண்பு யாது?

A பிறரை நேசித்தல்

B பெற்றோர்களிடம் மரியாதை செலுத்துதல்

C அறிவுரை கூறுதல்

D உதவும் மனப்பான்மை

34. சரியான கூற்றைத் தெரிவு செய்க.

I கவிக்குமார் பெற்றோர்களை மதிக்கும் பண்புடையவன்.

II ஆசிரியர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்

III சங்கர் வகுப்பில் மிகவும் கெட்டிக்காரன்.

IV கவிக்குமாரின் நண்பர்கள் உதவும் மனப்பான்மையைக் கொண்டவர்கள்.

A I, II C II, III
B I, IV D III, IV

35. சிந்தனையைக் கலைத்தது என்ற சொற்றொடரின் பொருள் யாது?

12
A கற்பனையைக் கலைத்தது

B எண்ணத்தைச் சிதைத்தது

C கனவைக் கலைத்தது

D நினைவைத் துண்டித்தது

பிரிவு ஈ : கருத்துணர்தல் (பல்வகை)

( கேள்விகள் : 36 – 40 )

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு

விடை காண்க.

திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்றுள்ள கருவூலம் திருக்குறள். அது,

தமிழ்ர்களின் வழிகாட்டி நூல். திருக்குறளுக்குப் பல அறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர்.

மாணவர்களுக்காகத் திருக்குறளை எளிமையாக விளக்கி எழுதிய அறிஞர்களுள் முத்தமிழ்

அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் (கி.ஆ.பெ.) அவர்களும் ஒருவராவார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறளில் உள்ள 'உயிரினும்' என்ற ஒற்றைச் சொல்லுக்கு அற்புதமான முறையில் விளக்கம்

தருகின்றார் கி.ஆ.பெ. அவர்கள்.

விழுப்பம் என்பதற்குக் குணம், நலன், புகழ், பெருமை, உயர்வு என்ற பல பொருள்

உண்டு எனத் தெளிவாகக் கூறுகின்றார். இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை

இரண்டு. ஒன்று, ஒழுக்கம்; மற்றது உயிர். ஆதலால், ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய

வள்ளுவர், போனால் திரும்ப வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறி

இருப்பது போற்றத்தக்கது என்கிறார் கி.ஆ.பெ. அவர்கள்.

'உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை' என்ற பலருடைய கருத்தைத்

திருவள்ளுவர் மறுக்கின்றார். உண்மையில் உயிரைவிட மேலான ஒன்று உள்ளது – அஃது

13
ஒழுக்கம் மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இதனைத்தான் 'உயிரினும்'

என்ற ஒற்றைச் சொல் தெரிவிக்கின்றது என கி.ஆ.பெ. விளக்கம் தருகின்றார். உயிருடைய

எவரும் உயர்ந்தவராகக் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக்

கருதப்படுவர். ஆதலின், உயிரைக் காப்பதை விட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு

என்பதைத்தான் திருக்குறளின் 'உயிரினும்' என்ற சொல், சொல்லாமல் சொல்வதாக மேலும்

அவர் விளக்குகிறார்.

மானம் இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை

ஏற்பட்டால் அந்த நிலையிலும் 'மானத்தை இழவாதே! மாறாக, உயிரை இழந்துவிடு' என்ற

உயர்ந்த நெறியை வள்ளுவர் உயிரினும் என்ற சொல்லில் ஆணித்தரமாக உணர்த்துகின்றார்.

ஒருவன் உயிரை இழந்து விட்டால் அதற்காக அழுது புலம்பும் துன்ப நிலை அவனுக்கு

ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கே அந்நிலை ஏற்படுகின்றது. ஆனால், அவன், ஒழுக்கத்தை

இழந்து விட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை பிறருக்கு ஏற்படுவதில்லை.

அந்நிலை அவனுக்கே ஏற்படும் என்ற சிறந்த கருத்தையும் வள்ளுவர் 'உயிரினும்' என்ற

அருஞ்சொல்லில் புதைத்துள்ளார் என்று கி.ஆ.பெ. விசுவநாதம் அழகுபடக் கூறுகின்றார்.

36. விழுப்பம் என்பதற்கு எது சரியான பொருள் அல்ல?

A ஒழுக்கம் C கீர்த்தி

B பண்பு D மேன்மை

37. திருவள்ளுவர் ஒழுக்கத்தை எதற்கு உவமையாகக் காட்டுகிறார்?

A சிறப்புக்கு C கூயிருக்கு

B பெருமைக்கு D கூயர்வுக்கு

38. ஒழுக்கத்தைப் பற்றித் திருவள்ளுவர் உணர்த்துவது யாது?

A அஃது உயிருக்கு நிகரானது

B போனால் திரும்பப் பெற முடியாதது

C தூயிரைப் போல காக்கப்பட வேண்டியது

14
D அஃதை இழந்தால் பிறருக்குத் துன்பம் நேர்வது.

39. உயர்ந்த பண்புடையோர் எதனைப் பொருட்டாகக் கருதமாட்டார்?

A உயிருக்காகப் பெருமை குறைவதை

B உயிருக்காக அழுது புலம்புவதை

C உயிருக்காக மானம் போவதை

D மானத்துக்காக உயிர் விடுவதை

40. புதைத்துள்ளார் என்னும் சொல்லின் பொருள் யாது?

A மறைத்துள்ளார்

B திணித்துள்ளார்

C மூடிவைத்துள்ளார்

D அடக்கியுள்ளார்

ஆக்கம், மேற்பார்வை, உறுதியாக்கம்,

................................. ........................................ ..........................................


(திருமதி க. சுசிகலா) (திருமதி க. தமிழரசி) (திருமதி சு.லோகாம்பாள்)

பாட ஆசிரியர் பாட மேம்பாட்டுக் பாடத்துறைத்


குழுத் தலைவர் துணைத் தலைமையாசிரியர்

15

You might also like