Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 7

நண்பனுக்குக்

கடிதம் !
நட்புக் கடிதத்தின்
அமைப்பு
பெயர்
முகவரி

திகதி

விளிப்பு
சொல் ,

கருத்துகள் : நலம்
விசரித்தல்
நோக்கம்
கருத்து
1
கருத்து
2
கருத்து
3
முடிவு :
எதிர்பார்ப்பு
கையொப்ப
ம்
யாழினி த/பெ விமலன்.
175, தாமான் புத்ரா,
ஜாலான் புத்ரா,
03100,ஈப்போ, பேராக்.

21 மே 2018
அன்புள்ள நண்பன் முகிலனுக்கு,
வணக்கம். நண்பா, நீ நலமாக இருக்கிறாயா?
நானும் என் குடும்பத்தாரும் நலமாக
இருக்கின்றோம். அதே போல நீயும் உன் குடும்ப
உறுப்பினர்களும் நலத்துடன் வாழ இறைவனை
பிரார்த்திக்கிறேன்.

முகிலா, கடந்த வாரம் நானும் என்


குடும்பத்தாரும் என் தந்தையின் தோழர்
இல்லத்திற்கு நோன்பு பெருநாளைக் கொண்டாட
சென்றிருந்தோம். நோன்பு பெருநாளின் பொழுது
நான் பெற்ற அனுபவங்களையும் அந்தப்
பெருநாளின் சிறப்பையும் உன்னிடம்
பகிர்ந்துகொள்ளவே இந்த மடலை எழுதுகிறேன்.

முதலில், நாங்கள் சென்றவுடனே எங்களை


அவர்கள் அகமும் முகமும் மலர வரவேற்றனர்.
வீட்டின் அலங்காரம் என் கவனத்தை ஈர்த்தது.
வீட்டை வாழ்த்து அட்டைகள், வர்ண விளக்குகள்,
வர்ண துணிகள் போன்ற பொருட்களைக் கொண்டு
அலங்கரித்திருந்தனர்.

 
நண்பா அடுத்ததாக, என்னை மிகவும் கவர்ந்த

மற்றொரு சிறப்பு அவர்கள் அணிந்திருந்த

உடைகள்தான். ஆண்கள் “பாஜூ மலாயூவும்”

பெண்கள் “பாஜூ கூரோங்கும்” அணிந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரே வர்ணத்தில் உடை

அணிந்திருந்தனர். அந்தக் குடும்ப

உறுப்பினர்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை

அவர்களின் உடை வழி நான் தெரிந்து கொண்டேன்.

அடுத்து, நாங்கள் மிகவும் சுவையான

உணவுகளை உண்டோம். நாங்கள் “நாசி லேமாக்”,

“லக்சா”, “கெத்துப்பாத்” போன்ற

மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளை

உண்டோம்.
ஆருயிர் நண்பா, மற்ற
இனத்தவரின் பெருநாளைக்
கொண்டாடியதில் நான் மிகவும்
மகிழ்ச்சியடைந்தேன். நீயும் உன்
அனுபவத்தை அடுத்த கடிதத்தில்
பகிர்ந்து கொள்வாய் என்ற
எதிர்பார்ப்புடன் என் கடிதத்தை
முடித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்,
யாழு

You might also like