Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 8

தொழில்நுட்பம் மற்றும் கல்வி தொடர்புத் துறை அமைப்பு

 Association for Educational Communication and Technology

தொழில்நுட்பக் கல்வி மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது.

 கற்பித்தலில் மேலாண்மை (Management in Teaching)

 கற்பித்தலை விரிவாக்கம் செய்தல் (Expanding the Teaching)

 கற்றல் வளமைகள் (Learning Resources)


1. கற்பித்தலில் மேலாண்மை
 கற்பித்தலில் மேலாண்மை என்பது நிர்வாகத்தையும்
ஆசிரியர்களையும் பணியாட்களையும் உள்ளடக்கியுள்ளது.

 ஓர் அமைப்பின் நிர்வாகத்துடன் தொடர்புடைய வரவு-செலவு,


பொருட்கள் வாங்குதல், வெளி அமைப்புகளுடன்
தொடர்புக்கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும்.

 ஆசிரியர்கள்
 பணியாட்கள்

 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது, கண்காணிப்பது,


வேலைத்திறனை மதிப்பீடு செய்வது ஆகியவை மேலாண்மையில்
அடங்கும்.
2.கற்பித்தலை விரிவாக்கம் செய்தல்
நோக்கம்: கற்றலில் எதிர்நோக்கும் சிக்கல்களை அடையாளம் கண்டு, தீர்வு
அளிப்பது.
 கற்பித்தலில் விரிவாக்கம் என்பது சில படிநிலைகளைக் கொண்டது.

1. கோட்பாடுகளின் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு,


சிக்கல்களைத் தீர்ப்பதாகும்.

2.கற்பித்தலுக்கான கருவிகளும் ஊடகங்களும் நோக்கங்களுக்கு ஏற்ப


தெரிவு- செய்யப்பட வேண்டும்.

3. நிர்ணயிக்கப்பட்ட கற்றல் நோக்கங்களுக்கு ஏற்ப கற்றல் கருவிகள்


(மென்பொருள் (software), வரைகலை (graphics), உரையாடல் (script),
படங்கள் (images) ஏனைய ஊடகங்கள்) உருவாக்கப்படவேண்டும்.

4. பயன்படுத்தும் முன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.


3. கற்றல் வளமைகள்

 கற்றல் வளமைகள் எனப்படுவது தகவல்களைச் சேகரித்து வைக்கும்


முறையையும் அத்தகவல்கள் மாணவர்களை எப்படி அல்லது எதன்
மூலம் சென்றடைகிறது என்பதையும் மையமாகக் கொண்டதாகும்.

 ஆசிரியர்கள் தகவல்களை, குறிப்புகளாக, புத்தகங்களாக, பதிவு


நாடாக்களாக, கற்றல் சிப்பங்களாக (module), செறிவட்டு
(CDRom), குறுந்தட்டு (CD) போன்றவற்றின் வழியாகப்
பரப்புகின்றனர்.

 ஆசிரியர்கள் தகவல்களை அனுப்புவதற்கு, கலந்துரையாடல் (குழு-


தனி), உரையாடல், பாடல், கதை, போன்றவற்றைப்
பயன்படுத்துகின்றனர்.
வகுப்பறையில் தொழில்நுட்பக் கல்வி

 வகுப்பறையில் தொழில்நுட்பக் கல்வி இரண்டு நிலைகளில்


பயன்படுகிறது. அவை:

1. கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குதல்.

2. உள்வாங்கும் சூழலை உருவாக்குதல்.


1. கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குதல்

 பயன்மிக்க கற்றல் சூழலை உருவாக்குவதிலும் மாணவர்களின்


ஆர்வத்தைத் தூண்டுவதிலும் முறையான தொழில்நுட்பக்கல்வி
பயன்படுகின்றது.

 மடிகணினி (laptop), காணொலி (video clips), படவில்லைகள்


(slides), நீர்மப்படிம உருகாட்டி (LCD) போன்ற தொழில்நுட்பத்
தொடர்பு கருவிகளின் பயன்பாடு, மாணவர்களின் கவனத்தை நன்கு
ஈர்க்கவல்லது. ஆர்வத்தையும் தூண்டும்.
2. உள்வாங்கும் சூழலை உருவாக்குதல்

 உள்வாங்கும் சூழலை உருவாக்க தொழில்நுட்பக் கல்வி பயன்படுகிறது.


அவை
 கூடிக்கற்றல் (மொத்தமாக)
 இணைந்து கற்றல் (சேர்ந்து படிப்பது)
 குழு முறை (3 – 7 வரை)
 தனிநபர் முறை (தனியாகப் படிப்பது) ஆகும்.

 மாணவரிடையே ஒத்துழைப்பையும் தனது குழுவின்பால்


பொறுப்புணர்ச்சியையும் ஊட்டும்.

 மாணவர்கள் எல்லோரும் ஒரு குழுவாகச் செயல்பட்டு,


கொடுக்கப்படும் சிக்கல்களைத் தீர்க்கின்றனர்.

 கொடுக்கப்படும் இடுபணியினை மாணவர்கள் செய்து


முடிக்கும் போது ஆசிரியர் அவர்களுக்கு ஊக்கமூட்டும்
வகையில் பரிசுகளோ புகழ்ச்சியோ அளிப்பார்.
நன்றி

You might also like