Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 11

இந்தியாவில் சில முதன்மைகளுக்கு சொந்தக்காரர் விஜயலட்சுமி பண்டிட்!

ஆகஸ்ட் 18ம் தேதி 1900ல் பிறந்தார்  விஜயலட்சுமி பண்டிட். இவரது இயற்பெயர்


ஸ்வரூப் குமாரி. மோதிலால் நேரு-ஸ்வரூப ராணி தம்பதியினரின் மகளாவார்.
ஜவஹர்லால் நேருவின் தங்கை. நேருவை விட 11 வயது இளையவர்.

இந்தியாவில்  மந்திரி பொறுப்பு வகித்த முதல் பெண்மணி  இவர்தான்.


ஐ.நா.பொதுச்சபையின் முதல் பெண் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் அனேக இந்திய
பெண்களுக்கு ரோல் மாடலாகவும்  திகழ்ந்தவர்.

நம் நாடு விடுதலைப் பெற வேண்டும் என்று போராடிய பெண்களில் மிக


முக்கியமானவர் விஜயலட்சுமி பண்டிட். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடியவர்
என்ற பெருமைக்குரியவர்.

1921ம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்ற ரஞ்சித் சீத்தாராம் பண்டிட்  என்பவரை


திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது பெயரை வியலட்சுமி
பண்டிட் என்று மாற்றிக் கொண்டார்.அவர்களுக்கு ரீட்டா, நயன்தாரா, சந்திரலேகா
என்ற 3 மகள்கள் பிறந்தனர். இவர்களில் இருவர் நாவல் எழுதும் புலமை
பெற்றிருந்தனர்.
1932-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, ஒரு வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.  அதன் பிறகு
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால், 1942-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் நடந்த
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல் பெண் மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.
1953-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராக பணியாற்றினார். சுதந்திரம் பெற்ற பிறகு, அவர் பல நாடுகளுக்கு
இந்தியாவின் தூதுவராக இருந்தார். இந்தியாவின் சார்பாக ஐக்கிய நாடுகளின் சபையைச் சார்ந்த மனித உரிமை ஆணையத்திலும்
பணியாற்றியுள்ளார்.

1962ல் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பாெறுப்பேற்றார்.1964ல் ஜவஹர்லால் நேரு மறைந்தார்.அவருக்கு பதிலாக


மக்களவைக்கு உத்தரபிரதேசத்தின் பெல்பூர் தாெகுதியில் இருந்து தேர்வு  செய்யப்பட்டார்.ஆனால்  சிறிது காலத்திலேயே காரணம்
கூறாமல் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

1977ல் இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.அது இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடன
காலம். விஜயலட்சுமி பண்டிட் அப்போது இந்திரா காந்திக்கு எதிராக குரல் கொடுத்தார். எனவே அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற
முடியவில்லை. அதன்பிறகு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

டேராடூனில் உள்ள இல்லத்தில் அவர் ஓய்வுக் காலத்தை கழித்தார். அப்போது தனது வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். "த
ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் : ஏ பெர்சனல் மிமோயர்" என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியானது. இந்த நூலை எழுத
12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 1990ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி இயற்கை எய்தினார்.
சரோஜினி நாயுடு - இந்தியாவின் நைட்டிங்கேல்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஓங்கி
ஒலித்த பெண் குரல் சரோஜினி நாயுடு. அன்றைய கால கட்டத்தில்
முக்கியமான அரசியல் செயல்பாட்டாளராகவும் கவிஞராகவும் விளங்கினார்.

இவரது செயல்பாடுகள் குடியுரிமை, பெண் விடுதலையை நோக்கியே


இருந்தன. குறிப்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருந்தார்.
இவர் ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றே அழைக்கப்பட்டார்.

சரோஜினி அடிப்படையில் காந்தியின் வழியை


பின்பற்றினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில்
கலந்து கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல்
பெண் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப்


பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச
ஆளுநர் ஆனார். இவர் 'சுதந்திர இந்தியாவின் முதல்
பெண் கவர்னர்' என்ற பெருமையத் தட்டிச் சென்ற
முதல் இந்திய பெண்மணி ஆவார். சரோஜினி
நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில்,
மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.
காலவரிசை
1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

1905:  வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.

1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.


இந்திரா எனும் வரலாறு - 'வாழ்வு, சாவு எதைப் பற்றியும் கவலையில்லை'- 'இரும்பு பெண்மணி' இந்திரா
காந்தியின் வீர வரலாறு

நேருவின் மகள், நாட்டின் முதல் பெண் பிரதமர், இந்தியாவின் இரும்புப்


பெண்மணி, பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம் பிரிந்து தனி நாடாக
உருவாகக் காரணமானவர், நாட்டில் அவசர நிலையை
பிரகடனப்படுத்தியவர், தனது பாதுகாவலர்களாலே சுட்டுக்
கொல்லப்பட்டவர் என இந்திய அரசியலில் இந்திரா காந்தி ஏற்படுத்திய
சுவடுகளும் தாக்கமும் காலத்தால் அழியா வரலாறு.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, கமலா தம்பதியினரின் ஒரே


வாரிசான இந்திரா பிரியதர்சினி நவம்பர் 19, 1917 அன்று அலகாபாத்
நகரில் பிறந்தார். தனது தந்தையும், தாத்தாவும் (மோதிலால் நேரு) சுதந்திர
போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர்கள் என்பதால் இயல்பாகவே
இந்திராவின் ரத்தத்தில் தேசப்பற்று கலந்திருந்தது. பெரோஸ் காந்தியுடன்
இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டபோது, காதல் மலர்ந்ததை
அடுத்து, அவரை மணம் முடித்தார். இந்திரா-பெரோஸ் காந்தி தம்பதிக்கு
ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என 2 மகன்கள் பிறந்தனர்.
1947-இல் நாடு சுதந்திரம் பெற்று, 1952ஆம் ஆண்டு நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. முதல்
பிரதமராக இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு பதவியேற்றுக் கொள்ளவே, தந்தையின் அரசியல்
வாழ்க்அதைத்தொடர்ந்துகையை அருகிலிருந்து கற்றுக்கொண்டார். கணவர் பெரோஸ் காந்தி 1960ஆம் ஆண்டிலும்,
தந்தை நேரு 1964ஆம் ஆண்டிலும் காலமான பிறகு, முழு நேர அரசியலில் குதித்தார் இந்திரா.

நேரு மறைவிற்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவரது அமைச்சரவையில் இந்திரா காந்தி
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், லால்பகதூர் சாஸ்திரி திடீரென காலமாகவே
நாட்டின் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து, நாட்டின் 3வது
பிரதமராக, முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
1967, 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று பொதுத் தேர்தல்களிலும் இந்தியாவின் பிரதமர் பதவியை
அலங்கரித்தார். வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறையை ஒழித்தது, நிலச்
சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது,
சிக்கிம் பகுதியை இந்தியாவோடு இணைத்தது, வங்க தேசத்திற்கு படை அனுப்பி, அந்நாட்டிற்கு விடுதலையை பெற்றுத்
தந்தது, அணு ஆயுத சோதனை நடத்தி இந்தியாவை அணு ஆயுத பலம் வாய்ந்த நாடாக உலகிற்கு பிரகடனம் செய்தது,
வெளியுறவுக் கொள்கையில் புதிய பாதையை வகுத்தது என இந்திரா காந்தியின் 15 ஆண்டுகால ஆட்சியில் அவரது
சாதனைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அவசர நிலைப் பிரகடனம் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. ஆனால் தவறை உணர்ந்து
மன்னிப்பு கேட்கிற நேர்மையும், அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கிற தைரியமும் இந்திராவுக்கு
இருந்தது. தேர்தலில் தோல்விக்குப் பிறகும் மூன்றே ஆண்டுகளில் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்தார் அவர்.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 374 இடங்களில் மகத்தான வெற்றியடைந்தது. ஆனால்
அச்சமயத்தில் இந்திரா காந்தி புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் தனியாக காளிஸ்தான் கோரி
கிளர்ச்சி தொடங்கினார்கள். தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பெரிய சவாலாக அந்த இயக்கம் வளர்ந்து வருவதாக
கருதியது அரசு.

1984-ம் ஆண்டில் பொற்கோவிலில் ஆயுதங்களை குவித்துக்கொண்டு பதுங்கியிருந்த சீக்கிய பிரிவினைவாதிகளை ‘ஆபரேஷன் புளு
ஸ்டார்’ என்ற பெயரில் ராணுவத்தினர் பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கியதன் மூலம் சீக்கியத் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது.
ஆனால் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது சீக்கியர்கள் மத்தியில் சர்ச்சைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்திராவின் சீக்கியப் பாதுகாவலர்களால் அவரது உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரித்தது. உயிரையே இழக்க
நேர்ந்தாலும் மதத்தின் அடிப்படையில் தனது பாதுகாவலர்களை மாற்ற இந்திரா காந்தி மறுத்துவிட்டார். இச்சூழலில், பொற்கோயில்
தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்திரா காந்தியின் இரு சீக்கிய மெய்காவலர்களால் 1984ஆம் ஆண்டு அக்டோபர்
31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். தேசம் பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காக 66 வயதில் தனது உயிரையே அர்ப்பணித்தார்
இந்த 'இரும்புப் பெண்மணி'.
கிரண் பேடி

பிறப்பு மற்றும் இளம்வயது:

  கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜீன் 9ஆம் தேதி பஞ்சாப்


மாநிலம் அமிர்தசரஸில் பிரகாஷ் பெஷாவாரியா மற்றும்
பிரேம் லதா பெஷாவாரியா ஆகியோருக்கு
பிறந்தார்....சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் பள்ளிப் படிப்பு
முடித்தார்.1968 ஆம் ஆண்டு  அரசு மகளிர் கல்லூரியில
ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்..1970 ஆம்
ஆண்டில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல்
துறையில் முதுகலை பட்டம் பெற்றார்..1972 ஆம் ஆண்டில்
,கிரண்பேடி பிரிஜ் பெடிவை மணந்தார் மற்றும் அவருடன்
ஒரு மகள் இருக்கிறார்..1988 ஆம் ஆண்டில் டெல்லி
பல்கலைக்கழகத்தில் எல்எல்பி(LLB) பட்டம்
பெற்றார் ..1993ஆம் ஆண்டில் டெல்லி இந்தியா தொழில்
நுட்பக் கழகத்தில் (IIT) ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
சமூக சேவை:

1989 ஆம் ஆண்டில் கிரண் பேடி நவஜோதி இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்..இந்த
தொண்டு நிறுவனம் போதைப் பொருள் அடிமைகள்,பெண்கள் அதிகாரம் போன்ற பிற சமூக பிரச்சனைகள் சந்திதுவந்தன....இந்தியாவின்
விஷன் ஃபவுண்டேஷனைத் தொடங்கினார..அது போலிஸ் சீர்திருத்தங்கள் ,சிறை சீர்திருத்தங்கள் ,பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும்
கிராம்ப்புற மற்றும் சமூக வளர்ச்சிக்கீக பணியாற்றி வந்தார்.2011 ஆகஸ்ட் மாதம் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலமையிலான ஊழலுக்கு
எதிரான இந்தியாவில் கிரண் பேடி சேர்ந்தார்.அர்விந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து முக்கிய பிரமுகராக இருந்தார்.

சாதனை:
 மாணவப் பருவத்தில் கவிதை ஓப்பிதல் ,நாடகம்,விவாத மேடை,பல பரிசுகளை வென்றுள்ளார்..அமிர்தசரஸ் கல்சா மகளிர் கல்லூரியில்
விரிவுரையாளாராக 2ஆண்டுகள் பணியாற்றினார்.இந்தியா காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக 1972ல் பணியில் சேர்ந்தார்
டேராடூன் அடுத்து மசூரியில் காவல்துறை பயிற்சியைத் தொடங்கினார் அந்த பிரிவில் பயிற்சி பெற்ற 80பேரில் இவர் ஒருவர்தான் பெண்.

 சிறந்த டென்னிஸ் வீராங்களையும் கூட டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும்,தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள்,பதக்கங்களை
வென்றுள்ளார்.போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது வீதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே
கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர் இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன.காவல்
துறையினறுக்கு பல்வேறு வசதிகளைப் செய்துதந்தார்..20ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் சேவையாற்றியுள்ளார்..சர்வதேச அளவில்
பேரும் புகழும் பெற்றார்.ஐ.நா சபையின் சிவிலியன் போலிஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.போதை பொருள் தடுப்பு மற்றும்
ஓடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன்,நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.
கிரண்பேடி கடந்துவந்த பாதை:

  1970 ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் நகரில் பெண்கள் கல்சா கல்லூரியில் அரசியல்


விரிவுரையாளராகப் பணியாற்றினார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎஸ் அதிகாரி
ஆனார்.இந்த சேவையில் சேர்ந்த இந்தியாவில் முதல் பெண் அதிகாரியாவர்...இந்தியா போலிஸ்
சேவையில் பணிபுரிந்த இவர்,மிஸ்ராமில் உள்ள டி.ஜ.ஜி. போலிஸ்,சண்டிகரில் லெப்டினன்ட்
கவர்னரின் ஆலோசகரும்,நார்டோடிக் கட்டுப்பாடு ஆணையத்தின் பணிப்பாளரும் இருந்தார்
அவரது பணிக்காக ஐக்கிய நாடுகளின் பதக்கம் பெற்றார்..1993-1995 ஆண்டுகளில்
சிறைச்சாலைகள் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த போது ,தில்லி சிறை நிர்வாகத்தில் கிரண்
பேடி பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்...1994 ஆம் ஆண்டுக்கான ராமன் மாக்சேசே
விருது மற்றும் ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருது பெற்றார்.பிற வருடங்களுக்கு
பிறகு ,கிரண் பேடி போலிஸ்  சேவையில் இருந்து தன்னார்வமாக ஓய்வு பெற்றார்.

கிரண்பேடிஎழுதிய நூல்கள்:

நான் துணிந்தவள்,ஊழலை எதிர்த்து,தலைமையும் ஆளுமையும்,இந்தியா


காவல்துறை,பெண்களுக்கு அதிகாரம்,இதுஎப்பொழுதும் இயலும்,புரூம் குரூம் ஆகிய நூல்கள்
எழுதியுள்ளார்..
விருதுகள்:

• ஜனாதிபதி கல்லாண்ட்ரி விருது(1979)


• சிறந்த மகளிர் விருது(1980)
• மருந்து தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகான ஆசியா பிராந்தியம் விருது (1991)
• அரசாங்க சேவைகான மகசே விருது (1994)
• மிலிலா சிரோமணி விருது (1995)
• தந்தை மாசிஸ்மோ மனிதாபிமான விருது(1995)
• லயன் ஆஃப் தி இயர்(1995)
• ஜோசப் பீயிஸ் விருது (1997)
• இந்தியாவின் பெறுமை (1999)
• அன்னை தெரேசா மெமோரியல் தேசிய விருது (2005)

You might also like