Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 6

சிறு வயது முதலே தன் அக்காவின் ஆடைகளை அணிந்து கொண்டு

தன் அழகினை இரசித்துக் கொண்டு வந்தான் அர்தநாரி. இதனைக்


கண்ட அவனது அக்கா அவனிடம் பலமுறை வாக்குவாதங்கள்
செயததுண்டு. இருப்பினும், அவனது அம்மா அவனை ஒன்றும் குறை
சொல்லாது மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். உறவினர்களும்
அவனை வெறுத்து ஒதுக்கினர். ஒரு நாள், தன் அக்காவைப் பெண்
பார்க்க வரும் போது அர்தநாரி வீட்டில் இருந்தால் காரியம்
நிறைவேறாது என்று அவனது அப்பா எண்ணினார். உடனே அவனது
அம்மாவிடம் கூறி அவனைக் கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். தன்
அம்மாவே தன்னை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை
அவன் உணர்ந்தான். கோவிலிருந்து வீடு திரும்பியவன் அன்று
யாரிடமும் பேசவே இல்லை. அன்றிரவு தன் வீட்டை விட்டு
யாருக்கும் தெரியாது வெளியேறினான். மன உலைச்சலில் இரயில்
தண்டவாளத்தில் நின்று தன் உயிரை மாய்த்துக் கொள்ள
முயற்சித்தான். இருப்பினும், அது நிறைவேறாது போனது.
உடனே அந்த இரயிலிலே ஏறி எங்கே செல்வதென்று அறியாது பயணம்
செய்ய தொடங்கினான். இரயிலில் பரிசோதனையாளர் அவன் எங்கு அமர
வேண்டும் என்பதை ஏழனமாகக் கூறினார். அவ்விடத்தில் தன்னைப் போன்ற
பலரும் இருப்பதைக் கண்டு வியந்தான். அவர்களும் அவனைத் தங்களுள்
ஒருவராக இணைத்துக் கொண்டனர். அவர்கள் அங்கிருந்து கூத்தாண்டவர்
கோவில் திருவிழாவிற்குச் சென்றனர். திருவிழா முடிந்ததும் மீண்டும் தனது ஊர்
வழியாக வந்து கொண்டிருக்கும் வேளையில் சுடுகாட்டில் ஒரு பிணம் எறிந்து
கொண்டு இருப்பதைக் காண்கிறான். அவனது மனதில் பல எண்ணங்கள்
அலையாக பாய்ந்து செல்கின்றன. ஜன்னலின் இடுக்கில் இருந்த நாளிதழை
எடுத்துப் படிக்கையில் தனது புகைப்படம் ‘காணவில்லை’ என்ற தலைப்பின்
கீழ் இருப்பதைப் பார்க்கிறான். அடுத்தச் செய்தியாக தனது அம்மாவின்
புகைப்படம் ‘கண்ணீர் அஞ்சலி’ என்ற தலைப்பிந் கீழ் இருப்பதைக் கண்டு
அழுகிறான். எண்ணங்கள் தன் ஊரில் எறிந்து கொண்டிருந்த பிணத்தை நோக்கி
செல்கின்றன. இருப்பினும் தனது துக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாது,
இரயில் போகும் பாதையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவன்
தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
கரு
• தீண்டாமை

- திருநங்கைகளும் ஒரு வகை பாலினம்தான் என்ற பொது அறிவைக் கூட பெறாத


சில மனிதர்கள் இன்றும் அவர்களை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

- அக்காவைப் பெண் பார்க்க வரும் போது, அர்தநாரி வீட்டில் இருந்தால் நல்லதல்ல


என்று நினைத்து அவனது பெற்றோர்கள் அவனைக் கோவிலுக்கு அனுப்பி வைப்பர்.

- அந்தநாரியின் உறவினர்களும் அவனை எங்கு பார்த்தாலும் வெறுத்து ஒதுக்குவர்.


துணைக்கரு
• உணர்வுகளை மதித்தல்

- யாரும் அர்தநாரியின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாது, அவனை உதாசினப்படுத்திக் கொண்டே இருப்பர்.

• குழந்தைகளை அக்கறையோடு வளர்த்தல்

- அர்தநாரியின் பெற்றோர்கள் அவனது இந்த உணர்ச்சி மாற்றங்களை அறிந்து, அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும்.

• அனைத்து மனிதர்களையும் சரிசமமாக நடத்துதல்

- அர்தநாரியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பரிசோதனையாளர் அனைவரும் திருநங்கைகளையும் சரிசமமாக நடத்த


வேண்டும்.
நோக்குநிலை

• அகநோக்குநிலை

- சிறுகதையில் முதன்மை கதாபாத்திரமே கதையைக் கூறுவதாக


அமைந்துள்ளது.

- “எங்கள் குலதெய்வக் கோவில் இதுதான். அதனால்தான் அப்பா


எனக்கு அர்தநாரி என்று பெயர் வைத்தாக அடிக்கடி சொல்வார்.”
கதை மாந்தர்கள்
• நான் (அர்தநாரி) – முதன்மை

• அம்மா

• அப்பா

• அக்கா

• உறவினர்கள்

• கோவில் அர்ச்சகர்

• பரிசோதனையாளர்

• மற்ற திருநங்கைகள்

You might also like