Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 2

சாதாரணமாக மற்றொருவர் விளையாட்டு வீரர்களோடு போட்டியிட்டு இறுதிநிலையை அடைந்தால்

சோகத்தில் ஆழ்ந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் மாணவனோ போட்டியில் இறுதி


நிலையை அடைந்திருந்தாலும், தான் வழக்கத்தைவிடக் குறைவான நேரத்தை எடுத்துக்கொண்டதை
எண்ணித் தன்னைத் தானே தேற்றிக்கொண்டான். இதுவே மாணவவனுக்கும் மற்றொருவருக்கும் உள்ள
வேறுபாடு ஆகும். இதற்குக் காரணம் , மாணவனிடம் இருக்கின்ற மனவுறுதி தான். அவனிடம் இருந்த
மனவுறுதி தான் அவனை இக்கட்டான சூழல்களைச் சமாளிக்கத் துணைபுரிந்தது.
மனவலிமை உடையவர், தம் வாழ்வில் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகளை
எதிர்கொள்வதற்கான சக்தியைப் பெற்று, துவண்டு போகாமல் இருக்க இயலும்.
விரும்பத்தகாத சூழல்களில் மனவலிமை உடையவர் தம் உணர்வுகளைச் சரியான வழியில்
வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவராக இருப்பார். மேலும் பிறரை எளிதில்
புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பதோடு நேர்மறையான எண்ணங்களைக்
கொண்டிருப்பவராகவும் விளங்குவார்.

You might also like