Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 4

மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி,

ஜொகூர்

28.01.2021 தைப்பூசம். தைப்பூசம் தொடர்பாக நமக்குத் தெரிந்த விசயங்களை நினைவு கூர்ந்து பார்ப்போம்.

திருவிழாக்கள் நம் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமானவை. தமிழர் திருவிழாக்கள் அனைத்தும் பௌர்ணமியையொட்டி


வருபவை
பௌர்ணமி இரவில் விழித்திருந்து இறைவனை வழிபடுவது நம் மரபு
வைகாசி விசாகம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் உரியவை.
குறிப்பாகத் தைப்பூசம் சிவ வழிபாட்டுக்கும் முருக வழிபாட்டுக்கும் உகந்த நாள்.
தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில்
கொண்டாடப்படுகிறது .

தைப்பூசம் தமிழர்களின் பாரம்பரியத் திருவிழா. தை மாதம் அறுவடைக்காலம். மக்கள் தங்கள் வயல்களில் விளைந்த
விளைபொருள்களை முருகனுக்குச் சமர்ப்பிக்கும் பொருட்டுக் காவடி எடுத்துக்கொண்டுவந்து முருகனை வழிபட்ட
தினம் தைப்பூசம்.
தைப்பூச சிறப்புகள்
 தைப்பூசத்தன்று தான் உலகம் நீரிலிருந்து தோன்றியதாக நம்பிக்கை .

 தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி
கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார்.

 அசுரர்களை அழிக்க முருகனுக்குப் பார்வதி தேவி ஞான வேல் வழங்கியது இந்தத் தைப்பூசத் திருநாளில் தான்.
(அரக்கர்கள் –நம் மனதில்இருக்கும் தீய எண்ணங்கள்
வேல் - ஆழ்ந்த ,அகண்ட ,கூர்மையான அறிவு )

 தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத்
தரும் என்பர்.

 வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக்
குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர்
கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூசம் மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா , பிஜி,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும்
கொண்டாடப்படுகிறது.

தைப்பூசநாள் வழிபாடு, திருவிழா, காவடி இவற்றோடு கூடிய இனிய ஒரு கொண்டாட்டமாக மலர்கிறது .

தைப்பூசத்தன்று எடுக்கப்படும் காவடியின் தத்துவம், மனிதர்கள் ஞான வாழ்க்கை, உலக வாழ்க்கை இரண்டையும் சம
அளவில் கொண்டு சுமக்க வேண்டும். தனிப்பட்ட அகவாழ்வுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இறை வழிபாட்டுக்கும்
வழங்க வேண்டும் என்பதாகும்.

கொரோனா காலக்கட்டமான இப்பொழுது தைப்பூசத்தன்று வீட்டில் இறைவனை நினைத்துப் பிரார்த்தனை செய்து


கொள்வோம்.இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

You might also like